Mar 4, 2017

பேஸ்புக் பினாத்தல்கள் 3

பிசாசு:

அதிமுக அடிமைகளுக்கும், இயக்குனர் மிஸ்கினுக்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது. இரண்டு தரப்பினருக்கும் கால்கள் தான் மிக பிடித்தமான விஷயம். கால்கள் இல்லாமல் இரண்டு பேராலும் எதுவும் செய்ய முடியாது.

தனக்கு கால்கள் இல்லை என்பதை ஜெயலலிதாவால் ஜீரணிக்க முடிந்திருந்தாலும், கால்கள் இல்லாத அம்மாவை அடிமைகளே ஏற்று கொள்ள மாட்டார்கள். அதனாலேயே அவர் இறந்திருக்கலாம். தாங்கள் விழுந்து கிடக்க, ஒரு ஜோடி கால் மட்டுமே அவர்களுக்கு அவசியம். முகம் முக்கியமில்லை இந்த முண்டங்களுக்கு.

மிஷ்கினின் சில படங்களுக்கும், தற்போதைய நிகழ்வுகளுக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

நந்தலாலா -
தன் அம்மாவை தேடி போகும் மன நலமற்ற அடிமையின் முடிவில்லாத பயணம்.

பிசாசு -
தன் கண் முன்னே இறந்து போய், ஆத்மா சாந்தி அடையாமல், தன் கூடவே இருந்து ஆவியாய் அலைந்து கொண்டிருக்கும் பெண்மணியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் நாயகன். கடைசியில் அது யார் என்று தெரிய, பெரிய அதிர்ச்சியாய் முடிகிறது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -
ஒண்ட வந்த ஓநாய்கள், யார் உறவும் இல்லாத ஆட்டுக்குட்டியை(???) ஏமாற்றி கொன்று, அதன் காலை வெட்டி சூப் செய்து குடிக்கும் கொடூரமான கதை.வெகுநாளாயிற்று என்று சப்வே சென்றேன் இன்று. பச்சை தமிழனாய் இருந்தும், பன்னாட்டு கம்பெனியின் பர்கர் சாப்பிட்டு, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாவத்திற்கு, வரும் வழியில் இளநீர் குடித்து பரிகாரம் செய்து விட்டேன்.
நவ் பீலிங் நிம்மதி.
நாட்டு மாட்டை காப்போம். வந்தேறி மாடு - The Immigrant Cow வை விரட்டுவோம்.
உண்மை தமிழன் மட்டும் இதை ஷேர் செய்யவும்.போன மாதம் காவல் துறையின் அராஜகத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பொங்கி எழுந்த குமார், தற்போது தியேட்டரில் சிங்கம் 3 படம் பார்த்து சிலிர்த்து கொண்டிருக்கிறார்.
"த்தா! போலீஸ்னா சிங்கம் டா!"


சந்திரமுகி to நீலாம்பரி

நடந்து கொண்டிருக்கும் சினிமாத்தனமான பரபரப்பான காட்சிகளை பார்த்த விளைவு, சின்னம்மா தன் தோல்வியை ஒப்பு கொண்டு சிறைக்கு போகாமல் இருக்க, துப்பாக்கியால் சுட்டு கொண்டு தன் உயிரை மாய்த்து கொள்வாரோ என்றெல்லாம் நேற்று ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனை போல தாறுமாறாய் யோசித்து கொண்டிருந்தேன்.

இப்போதும் அம்மாவின் கல்லறைக்கு போய் சபதம் எடுத்து கொண்டு சின்னம்மா ஓங்கி அடித்ததை பார்க்கும் போது, நான்கு ஆண்டுகள் கழித்து நீலாம்பரியாய் வெளிவந்து பன்னீரை, பழிவாங்க போவதாகவே தெரிகிறது. அவருக்குள் இருக்கும் வலி மறக்காமல் இருக்க, நான்கு ஆண்டுகள் அதை பற்றியே நினைத்து கொண்டு கட்டிய புடவை, ஜாக்கெட்டுடன் குளிக்காமல் கொண்டையை அவிழ்த்து விட்டு, எந்த பார்வையாளரையும் பார்க்காமல் இருக்க போகிறார். அதுவரை அந்த கொண்டையை போட போவதில்லை. சாப்பாடு, தண்ணி மட்டும் குடித்து கொண்டு இருக்க போகிறார். அதையும் எடுபிடி பழனிசாமி எடுத்து சென்றால் தான் சாப்பிடுவார்.

இதுநாள் வரை சந்திரமுகியை பார்த்த தமிழகம், இனி நீலாம்பரியை பார்க்க போகிறது. அதற்கு நான்கு வருடம் காத்திருக்க வேண்டும். அதுவரை பன்னீர்செல்வம், நீலாம்பரியின் வீட்டில் உள்ள வேலைக்காரியுடன் டூயட் பாடி, குடும்பம் குட்டியாய் சந்தோசமாய் இருக்கலாம்.

நான்கு வருடம் கழித்து, குளித்து புது ஜாக்கெட் பச்சை புடவை அணிந்து, கொண்டை போட்டு புல் மேக்கப்புடன் சிறையிலிருந்து பவுடர் பங்கஜமாய் பழிவாங்க வருவார்.

பன்னீருக்கான சிச்சுவேஷன் பாடல் இப்போ இது தான்.

ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ வெக்கம் போனதே
உள்ளுக்குள்ள ஞானம் ஊறுதே
உண்மையெல்லாம் சொல்ல தோணுதே.

வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே.
அட தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழ தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல?


Just by seeing the cinematic scenes happening in real for the past few months, as an average tamil cinema fan, I thought, instead of going to jail, Cinnamma Saskikala would shoot herself with a gun and die. But she takes vow at Amma shrine before go to jail. I was proven wrong. A revenge story begins here.

See, these days how politicians keeping the common man more interested in politics than cinema.

Good days ahead.


Those who like and share the 'PROUD INDIAN' post within two seconds are the one, most likely beating the other NON PROUD Indians who are not standing up for the national anthem at Cinema theatre.


That moment, when you come out of theatre after watching a thriller movie, but outside there are more twist and exciting scenes are happening which thrills you much better than the movie.
And you feel, you wasted 120 Rs.  😼😜

#D16 #AdheKangal


வனித்த வரையில், முதலாளியம்மா தன் வீட்டில் உள்ளவர்களின் பெருமைகளையும், வேலைக்காரி தன் குடும்ப பிரச்சினைகளையும் பேசி பரிமாறி கொள்கிறார்கள்.சே+அட்டைஒரு பேஷனுக்காக சே.குவேராவின் டீ சர்ட்டுகளை அதிகம் அணிந்து இளைஞர்கள், போராளியான அவரை ஒரு பேஷன் மாடலாகவே  மாற்றிவிட்டார்கள். துரைப்பாக்கம் டோல் கேட் அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்கு பெயரே "சே பேஷன்ஸ்". கம்பீரமாய் பேனரில் புகை விட்டுக் கொண்டிருக்கிறார் சே.

சே பெயரில் ஒரு சலூன் ஆரம்பித்தாலும், இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன்.

'சே' யை கூகுளில் தேடினால், அவர் புகை பிடிக்கும் போட்டோ தான் அதிகம் வருகிறது. அவரது 'தம்' நண்பர் பிடல் காஸ்ட்ரோவும் அப்படி தான். இவர்கள் இருவரும் அதிகம் புரட்சி செய்தார்களா? இல்லை புகைப்பிடித்தார்களா? எனும் அளவுக்கு நமக்கு சந்தேகம் வருகிறது.

ஸ்டைலாக புகைப்பிடிப்பது போல் இருக்கும் இவரது போட்டோ, தமிழக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால்,  இந்த டீசர்ட்டுகளை எதிர்த்து "ராமதாஸ் அன்ட் சன்ஸ்" கம்பெனி அறிக்கை விட முன் வர வேண்டும்.

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டை படத்தில், புகை பிடிப்பது போல இருக்கும் அவரது படத்துக்கு கீழே சிறிய எழுத்தில் "புகைப் பிடிப்பது, புற்று நோயை உண்டாக்கும் " என்று போடவும் தமிழக அரசு ஆணை இட வேண்டும். செயின் ஸ்மோக்கர்கள் புத்தகம் படிக்க மாட்டார்களா?

இங்கு, சமீபத்தில் இலக்கிய உலகில் நடந்த "அட்டைப்பட" சர்ச்சையை முன் வைக்கிறேன்.

என்னை பொறுத்த வரை புத்தகத்தின் அட்டைப்படம், அதன் கருத்தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்

புகை பிடிப்பதற்கும், புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அது படிக்க போகும் வாசகனை திசை திருப்பாதா?
சே-வின் கையில் இருக்கும் சுருட்டை எடுத்து விட்டு, ஒரு உடை வாளையோ, குறுந்துப்பாக்கியையோ(Short Gun) கொடுப்பது தானே பொருத்தமாகும். இல்லையெனில் புரட்சி தலைவர் விஜயகாந்தைப் போல சே-வின் கண்ணை சிவக்கவாவது வைக்க வேண்டும். அட்டையை பார்க்கும் போதே, புரட்சி உணர்வு தூண்டப் பட வேண்டும்.

பள்ளிக்கூடம் படிக்கையில், எனக்கு அடுத்த வகுப்பில் படிக்கும் எனது சகோதரியின் பாட புத்தகத்தையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்த நேரிடும். பெரும்பாலும் அட்டையே இருக்காது. சில முறை, பொருளடக்கமும். அதனால் அறிவியல் தேர்வுக்கு, வரலாற்று புத்தகத்தை எடுத்து சென்று பெயிலான துயர வரலாற்றுச் சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன.

அதனால் தான் சொல்கிறேன், அட்டைப்படம் முக்கியம். அட்டை அதை விட முக்கியம்.


Feb 10, 2017

கிச்சன் கிங்

கீற்றுவில் வெளியான எனது பதிவு
ஆண்களில் பெரும்பாலானோர், கல்யாணத்துக்கு முன்னரே நன்கு சமைக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள். வரன் தேடுகையில், சமையல் கலையை 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' ஆக்டிவிட்டியில் போட்டு கொள்ளலாம். பெண் பார்க்கும் படலத்தின் போது "பையனுக்கு சமைக்கத் தெரியுமா?" என்று நேரடியாகக் கேட்க முடியாமல், "பையன் ஹோட்டல்ல 'தான்' சாப்பிடுறாரா?" என்று அழுத்திக் கேட்டு சாமார்த்தியமாய் பதில் வாங்கி விடுகிறார்கள் பெண் வீட்டார். மேலும் "எங்க பொண்ணு சமையல் கட்டுக்குள்ளே தண்ணி குடிக்க மட்டும்தான் வருவா" என்று சொல்லிவிட்டு பெருமை பொங்க சத்தமாய் சிரிக்கிறார்கள். சமையலும், 'சமையல் மந்திரமும்' ஆண்கள் தான் கற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். கொஞ்சம் தெரிந்தாலும், எதுவுமே தெரியாதது போல் தான் நடிப்பார்கள்.

வேளச்சேரி கிராண்ட் மாலுக்கு எதிரில் இருக்கும் 'அப்பா சுட்ட தோசை' என்ற ரெஸ்ட்டாரெண்டே தற்போது சூழ்நிலை மாறி விட்டது என்பதைக் கண்கூடாக உணர்த்துகிறது.

ஆனால் நான், கடலைப் பருப்புக்கும், துவரம் பருப்புக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத அப்பாவி. சமையல் ஷோ, எனக்கு பாகற்காய். கிச்சன் சூப்பர் ஸ்டார் கூட, அதில் வரும் தக்காளி பிகர்களுக்காக தான் பார்த்திருக்கிறேன். கடைசி வரை கிரிஜாஸ்ரீக்காக 'சமையல் மந்திரம்' பார்த்த அனுபவம் மட்டுமே இருந்ததால், திருமணத்திற்குப் பிறகு என் மனைவி 'விம் பார்' யை என் கையில் கொடுத்து, இந்த கருப்பு எம்ஜியார் குண்டாவெல்லாம், வெள்ளை எம்ஜியார் போல பளபளவென்று மின்னவேண்டும் என்று சொல்லி விட்டாள். தினமும் அவள் சமைத்தவுடன், ஆபிஸ் கிளம்புவதற்குள் பாத்திரத்தை எல்லாம் கழுவி விட்டுச் செல்ல வேண்டும். எங்களுக்குள் சிறு ஊடல் வந்தால், அன்று வேண்டுமென்றே கழுவாமல் சென்று அவளுடன் 'அறப்போர்' செய்வேன். இரவு வீட்டுக்கு வந்து எண்ணையில் போட்ட கடுகாய் வெடிப்பாள். இரவு 'ஒத்துழையாமை போராட்டம்' நடத்துவாள்.

இதைத் தவிர, காய்கறி நறுக்குவது, தேங்காய் துருவித் தர சொல்வது என ஒரு மருமகளைப் போல வேலை வாங்குவாள். ஒரு பக்கம் கண்ணை கசக்கிக் கொண்டு நான் வெங்காயம் வெட்டி கொண்டிருக்கும் போது, அவள் அந்தப் பக்கம் மாமியார் கணக்காய் சீரியல் பார்த்து கண்ணு வேர்த்துக் கொண்டிருப்பாள். அவ்வப்போது குக்கர் விசில் எண்ணும் வேலையும் கொடுக்கப் படும். புத்தகம் எழுதி, புக்கர் விருது வாங்கும் கனவையெல்லாம் தேங்காயைப் போல இரண்டாய் உடைத்து விட்டாள். 'வீட்டுச் சாப்பாடு' எனும் ஒரே காரணத்திற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன்.

திருமண பந்தத்தின் உன்னதமே, இருவரின் நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, பரஸ்பரம் உதவி செய்து கொள்வது தான். இப்படியாக எனக்கு அவள் சமையலைக் கற்றுத் தர, அவளுக்கு நான் சமையல் மந்திரத்தைக் கற்றுத் தந்தேன்.

மந்திரம் வேலை செய்து அவள் ஊருக்குச் சென்ற பின், கற்றுக் கொண்ட வித்தையெல்லாம் மொத்தமாக இறக்க முடிவு செய்து கிச்சனுள் நுழைந்தேன். சிறு வயதில் எக்ஸாமுக்கு செல்லும் முன் சரஸ்வதி சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகச் சொல்வார்கள். மனப்பாடம் செய்தது மறந்து விட்டால், 'சரசு' கூட இருந்து பிட் எடுத்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கை. அது போல நான் தினமும் அடுப்பை ஆன்  செய்யும் முன் அந்த அன்னபூரணி தெய்வத்தை வணங்கி விட்டு தான் தொடங்குவேன். அன்னபூரணியின் அருளில் தினமும் நன்றாகவே சமைப்பதாகத் தோன்றியது. என் வீட்டு ஓனர் அவ்வப்போது எட்டிப் பார்த்து "ஏன்டி, இந்த தம்பி சமைக்கும்போது எப்புடி வாசம் வருது! நீ ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கியா?" என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்பார். இந்தப் பெரிசு நம்மைக் கலாய்க்கிறதா? என்று சந்தேகமாய் இருக்கும். அதனால், ஒருநாள் சமைத்ததில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். இப்போதெல்லாம் அந்த ஓனர் என் சமையலில் மூக்கை நுழைப்பதில்லை. சாதாரணமாய்ப் பேசும் போது கூட, ஆங்கிலப் படத்தில் வருவது போல, முகம் கொடுக்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு "என்னப்பா ஆபிசுக்குக் கிளம்பிட்டியா?" என்று கேட்கிறார்.

தற்போது, மனைவி ஊரிலிருந்து வரட்டும் என்று காத்திருக்கிறேன்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு, நளபாகம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. தோழர், உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


Dec 27, 2016

Naked truth - ஆபாயில்

History says Men are better teacher. I strongly defy that.

Men should not shame and blame over-sized girls wearing leggings. They are just reminding the truth that eyes were not only created to see beautiful things (thighs), but also to see terrible things.

Boys do have a destructive weapon against leggings. Low waist pant.

Sometime unluckily it "Back"fires within own group. A recent study confirms that no of people lost their eyesight due to leggings and low waist pant are more or less same. It’s a war. Anyway, women wins the war all the time as they have the extra weapon "Sleeveless".

Women are always ahead when it comes to revealing the inner and outer beauty. And those weapons become norms to them. They use it in work place, temple and everywhere. God only knows what could be the next weapon hiding in their stock pile.

They are going towards the state of nothing, just like saints who throws everything to find the holiness. It’s a journey for them to find the true meaning of life. Naked is truth.

P.S:
Men do not oppose exibism, rather they encourage it as long as it does not hurt their eyes.


~ஆடையில்லாத உண்மை~

கடந்த கால வரலாறு ஆண்கள் தான் சிறந்த ஆசான்கள் என்கிறது. ஆனால் அதை நான் பலமாக மறுக்கிறேன்.

"ஷேர் ஆட்டோவுக்கு லெக்கின்ஸ் போட்ட மாதிரி" என்று பெருத்த உடல் கொண்ட பெண்கள் லெக்கின்ஸ் அணிவதை ஆண்கள் கிண்டல் செய்ய கூடாது. கண்கள் அழகான பொருட்களை ரசிப்பதற்காக மட்டும் படைக்கப் படவில்லை. குரூரமானவற்றை காண்பதற்கும் தான் என்பதை அவர்கள் ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள்.

ஆண்களிடமும் லெக்கின்சுக்கு போட்டியாக ஒரு பேரழிவு ஆயுதம் இருக்கிறது. லோ ஹிப் பேண்ட். ஆனால் இது சில சமயம் "பின்" நோக்கி தாக்கி தனது இனத்தையே அழிக்கிறது. அண்மையில் நடந்த ஆராய்ச்சியின் படி, லெஃகின்ஸால் கண் பார்வை இறப்பவர்களின் எண்ணிக்கையும், லோ ஹிப் டிரவுசர்களால் பார்வை இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய சமமாக இருக்கிறது.

இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பெரும் போர். "ஸ்லீவ்லெஸ்" என்ற கூடுதல் ஆயுதம் வைத்திருப்பதால் பெண்கள் இதில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.

உள் அழகு மற்றும் வெளியழகை வெளிக்காட்டுவதில் பெண்கள் ஆண்களை விட வேகமாய்  செயல்படுகிறார்கள். அதற்கு இந்த ஆயுதங்கள் அவர்களுக்கு பக்க பலமாய் இருக்கின்றன. அதை அவர்கள் பணியிடங்களில், வழிபாட்டு தளங்களில் என எங்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஆயுத கிடங்கில் மறைந்து இருக்கும் அடுத்த ஆயுதம் எதுவென கடவுளுக்கு தான் தெரியும்.

சாது ஒருவன் முற்றத்தையும் துறந்து விட்டு முக்தி நிலையை அடைவதை போல, பெண்கள் எதுவுமில்லாத ஒரு நிலையை நோக்கி முன்னேறி செல்கிறார்கள். இது அவர்களுக்கு வாழ்வின் உண்மையான அர்த்தத்தை கண்டடையும் ஒரு பயணம். கடைசியில் உண்மை வெளிவந்தே தீரும். அது வரை ஓய மாட்டார்கள்.

ஆதிவாசிகள் ஆடை இல்லாமல் இருப்பதின் காரணமும் இதுதான்.. ஆடை என்பதே பொய் தான். உண்மை அலங்காரமற்றது, ஆடை இல்லாதது!
பெண்கள் எப்போதும் உண்மையையே பேசி திறந்த புத்தகமாய் இருப்பதும் இதனால் தான். :-P

ஆண்கள் ஆடை விஷயத்தில் மூடி கொண்டு இருப்பதால் தான் அதிகம் பொய்யர்களாய் இருக்கின்றனர்.

பி.கு:
பெண்கள் தங்கள் அழகை வெளிக்காட்டுவதை ஆண்கள் எப்போதும் குறை சொல்ல மாட்டார்கள். தங்கள் கண்களை இழக்காத வரை அதை முடிந்த அளவு வரவேற்கவே செய்வார்கள். ஏனென்றால், ஆண்கள் பேஷிக்கலி பண்டமெண்டல்ல்லி ஜொல்லுஸ்.


சில படங்கள் நடித்த பின் விஷால், மிர்ச்சி சிவா, சுந்தர் சி, சசி குமார், ஸ்ருதி ஹாசன் போன்றவர்களை கூட ஹீரோக்களாக ஒத்து கொள்ள முடிகிறது. ஆனால் இத்தனை படங்கள் பார்த்த பின்னும் இந்த ஹன்சிகாவை தான், ஹீரோயினாக ஒத்து கொள்வதில் ரொம்ப கஷ்டமாக உள்ளது.

எப்படி கோயம்பேட்டில் பூசணிக்காய் விக்கும் ஆண்டியை போல் இருக்கும் இவருக்கு இத்தனை படங்கள் புக் ஆகிறது?

தமிழ் ரசிகர்கள் எல்லோரும் நயன்தாரா நயன்தாரா என்று வாயை பொளந்து கொண்டிருக்க, இன்னும் கொஞ்ச நாளில் சத்தமில்லாமல் நயனை விட அதிக படம் முடித்து விடுவார் போலிருக்கிறது. முயல் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கண்ணு முழிச்சு பார்க்கும் போது, ஆமை நடந்து போய் ஜெயிச்ச கதை தான் நியாபகத்திற்கு வருகிறது. ஜெர்சி மாட்டை போல சிவப்பாக இருந்தாலும், சந்தேகமே இல்லாமல் கோலிவுட்டின் கருப்பு குதிரை இவர்.S3 (பாயிலர் அலர்ட்)

இந்த பதிவு, சிங்கம் 3 டீசர் பார்த்து பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்தவர்களுக்காக சமர்பிக்கப் படுகிறது.சிங்கம் 3 வழக்கம் போல ஆக்சன் அதிரடி படம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது. ஆக்சன் படமென்று மக்களை நம்ப வைப்பதற்காக, ஹரி கொஞ்சம் செலவு செய்து டீசர் வெளியிட்டிருக்கிறார். படத்தில் சூரி, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி என இத்தனை பேர் இருப்பதை வைத்தே கொஞ்சம் யூகிக்கலாம்.

ஆமாம், இது பக்கா ரொமான்டிக் காமெடி மூவி. இயக்குனர் பேரரசுவை போல, ஹரியும் படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றி, "யாரும் நெனச்சு பாக்கலைல? கர்ச்சீப்ல கண்ணை துடைச்சு கிட்டே, குலுங்கி குலுங்கி சிரிச்சு பீல் பண்ற மாதிரி, ஒரு ரொமான்டிக் காமெடி படம் கொடுப்பேன்னு யாரும் நெனச்சு பாக்கலைல?" என்று பன்ச்சை தெறிக்க விட்ட பின் தான் டைட்டில் கார்டே வருகிறது.

இம்முறை ஸ்ருதி ஹாசனை சேர்த்து கொண்டு, முதன் முதலில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் செய்திருக்கிறார். கதையில் அனுஷ்கா, சூர்யா, ஸ்ருதி ஹாசனுக்கிடையே ஒரு அருமையான முக்கோண காதல் கதை உள்ளது.
குழந்தை பிறப்பை வழக்கம் போல தள்ளிப் போட்டு விட்டு, துரை ஸ்டேஷனில் ஓவர் டைம் பார்க்க, தினமும் பேஸ்புக்கில் காலம் கழிக்கிறார் அனுஷ்கா.

அப்போது ஃபேக் அக்கௌன்ட் வைத்து பேஸ்புக்கில் பிகர்களை மடக்கும் ஸ்ருதிஹாசனிடம் சாட்டிங்கில் மாட்டுகிறார். தனிமையில் வாடும் அனுஷ்க்காவை மெல்ல மெல்ல பேசி பேசியே வழிக்கு கொண்டு வருகிறார். அதற்கு சாருவின் சாட் ஹிஸ்டரியிலிருந்து சில குறிப்புகள் எடுத்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் Auto login ஐ தெரியாமல் ஆன் செய்து வைத்திருந்த அனுஸ்காவின் பேஸ்புக்கை தற்செயலாக பார்த்து கொண்டிருந்த துரை சிங்கத்திற்கு, ஹாசனிடமிருந்து "Hi Dear, What are you wearing now?" என்று மெசேஜ் வர, உடனே தான் அணிந்திருந்த நண்டு மார்க் லுங்கியை (விளம்பரம்) குனிந்து பார்த்து விட்டு, பின் அது தனக்கு அனுப்பிய மெசேஜ் இல்லை என்று தெரிந்து அலர்ட் ஆகிறார்.

படத்தில் ஹாசனுக்கும், அனுஷ்காவுக்கும் ஒரு மஜாவான டூயட் இருக்கிறது, ஒரு நீளமான லிப் கிஸ் உட்பட. கடைசியில் அனுஷ்கா யாருக்கு என்பதில் துரை சிங்கத்துக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் இடையில் பெரிய பைட்டே உண்டு. மொத்தத்தில் கொரியன் பட தரத்தில் நிறைவான சந்தோசத்தை கொடுக்கும் பீல் குட் குடும்ப மூவி.

சிங்கம் 2 - விமர்சனம்