Nov 28, 2011

மயக்கம் என்ன - ஒய் திஸ் கொலவெறி? (நமீதா விமர்சனம்)2003 ஆம் வருடம். நான் இன்ஜீனியரிங் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

ஹாஸ்டல் டிவியில், சன் டிவி டாப் டென்னில் காதல் கொண்டேன் படத்தின் ஒரு கிளிப்பிங் ஓடிக் கொண்டிருந்தது. தனுஸ் டஸ்ட்டரால்(Duster) அடித்த சாக்பீஸ் முகத்துடன் கணித பார்முலாவை சால்வ் செய்ததை கண்டு எல்லோரும் வாயை அடைத்து போகும் காட்சி என்னை பிரமிக்க வைத்தது.

அடுத்த நாள் மதியம் முதன் முறையாக காலேஜ் கட் அடித்துவிட்டு தனியாக அந்த படத்திற்கு போனேன். நச்சென்ற திரைக்கதை. மிரட்டலான நடிப்பு, கட்டிபோடும் இசை.

இன்று வரை என் முதல் பேவரைட் தமிழ் படம் 'காதல் கொண்டேன்'. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் செல்வராகவன் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தின் அளவுகோலை செல்வராகவனின் எந்த படமும் எட்டவில்லை. 

அதில் இரண்டு மூன்று பாடல்களை 'யுவன்' அவர்கள் ஹாலிவுட்டில் இருந்து சுட்டது வேறு விஷயம். இவரது முதல் ஆல்பம் ஆனா "Blast" கூட ஒரு பாட்டின் ஆரம்ப பிட் இசை "My Wife is a Gangster 1" படத்தின் பின்னணி இசையில் இருந்து சுடப்பட்டிருக்கும். Youtube -இல் சென்று "yuvan sankar raja copycat" என்று அடித்து Search செய்து பாருங்கள். இன்னும் நிறைய தெரியும். He is my favourite though.


"என் கேவலமான ரசனை" பற்றி கெட்ட வார்த்தைகளில் கமெண்ட்களை(Comment) வாங்கி கொண்டு இந்த விமர்சனத்தை எழுத விழைவது என் ஆதங்கத்தை வெளிப்படுத்த மட்டுமே.

ஆனால் செல்வராகவனின் மேலுள்ள நம்பிக்கையை முற்றிலும் போகவைத்தது "மயக்கம் என்ன". 

The worst film ever made by selvaragavan என்று சொல்லலாம். இவரது படத்தில் வரைமுறையை உடைத்து காண்பிப்பதன் மூலம் மட்டுமே தன்னை அடையாள படுத்திக் கொள்கிறார். வரைமுறையை உடைப்பது பிரச்சினை இல்லை. ஆனால் அழகாய் உடைக்க வேண்டும். காதல் கொண்டேனில் அது சரியாக கையாளப் பட்டிருக்கும்.

ஆனால் இங்கு திரைக்கதை, சரியான காஸ்டிங்(Catsting) இது இரண்டுமே மிஸ்ஸிங். ஓட்டையில் திரைக்கதை.

அப்பர் மிடில் கிளாஸ் நண்பர்களின் வாழ்கையை பிரதிபலிக்க விரும்பினால் அதற்கான காஸ்டிங் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக தனுசும், தனுசின் நண்பனும் சுத்தமாக அந்த ரோலுக்கு ஒத்து வரவில்லை. சரி அதை நடிப்பிலாவது சரிகட்ட முயற்சிக்கலாம். ஆனால் அதுவும் ஒத்து வரவில்லை. பின் எப்படி நம்புவது?

"Please pretend that Dhanush and his friend are upper middle class"
என்று ஒரு Slide -ஆவது போட்டிருக்கலாம்.

தன் நண்பர்களிடம் தன் Dating Friend -யை அறிமுக படுத்தும் காட்சியில் தனுஸ் பேசும் வசனங்கள் அடிமட்ட ரசிகனுக்கு சிரிப்பை வரவழைக்க கூடியது போல் எழுதப் பட்டுள்ளது.

அது போல தான் குருவாய் நினைக்கும் மாதேஷ் என்ற Wild Life போட்டோகிராபரிடம் தன்னை அறிமுக படுத்த விழையும் போது "The way of speaking and the way of behaving" எப்படி இருக்க வேண்டும்? துளியாவது Gentle ஆக இருக்க வேண்டாமா?

அந்த காட்சியில் தனுஸ் பேசுவது 

"சார், சார் பிச்சை போடுங்க சார்" என்று கெஞ்சி கேட்பது போல் உள்ளது.

அதிலும் அந்த நாயை போல செய்வதெல்லாம் utter crap.

முதல் பாதி முழுவதும் தனுசின் நண்பன் மோசமாக இருப்பதால் மட்டுமே அவனின் நண்பி தனுசிடம் காதல் கொள்வது போல இருப்பதற்கு திரைக்கதை, காஸ்டிங் மற்றும் வசனம் எல்லாம் துணை புரிகின்றன.

தனுசின் நண்பன் நாயகியை பிடித்து நடனம் ஆடும் காட்சியை பார்க்கையில், லைட் பாய்யை பிடித்து காஸ்டிங் பண்ணியது போல இருந்தது.

சாதாரண தினக் கூலி வேலை செய்யும் ஒருவன் கூட தன் காதலியை இப்படி தானாக வழிய போய் விட்டுகொடுக்க மாட்டான்.

படத்தில் நிறைய சிரிப்பை மூட்டுவது போல காட்சிகள் இருந்தாலும் கடைசியில் தனுஸ் குடுமி வைத்துக் கொண்டு வரும் காட்சி தான் உண்மையாகவே சத்தம் போட்டு சிரிக்க வைக்கின்றது. இது கிட்ட தட்ட விஜய் போக்கிரியில் போலிஸ் டிரஸ் போட்டு கொண்டு வருவதற்கு நிகரான காமெடி.

படத்தில் சில நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதற்காக படத்தை பார்க்கும் கொடுமை அதிகம்.

எந்த ஒரு படமும் Genre விலிருந்து முற்றிலும் விலகி காணப்பட்டால் அது spoof வகையாகவே மாறிவிடும். அதற்கு சமீபத்திய உதாரணம் "ஏழாம் அறிவு"

நமீதா டச்: மயக்கம் என்ன, It's definitely a Spoof


Spoof movie பார்க்கும் மனநிலையில் சென்றால் நிச்சயம் என்ஜாய் செய்யலாம்.

ரொம்பநாளாக நான் தனுசின் "ஒய் திஸ் கொலவெறி" பாட்டில் மயக்கமாகி கிடந்தேன். இந்த படம் வந்து லேசாய் தட்டி மயக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டது.

இதே போல கீழே உள்ள வீடியோவும் உங்களை மயக்கத்தில் இருந்து விடுவிக்கும்.


Nov 23, 2011

Seducing Mr Perfect - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)


தலைப்பை வைத்து இந்த படம் கொஞ்சம் கில்மாவாக இருக்கும் என்று என்று ஆசைப் பட வேண்டாம். அழகான காதல் + நகைச்சுவை கலந்த அட்டகாசமான கதை. கொரியன் மூவி lovers மிஸ் பண்ணவே முடியாத/கூடாத படம்.

சாதரணமாய் கொரியன் பட வசனங்களில் நீங்கள் கொஞ்சமான ஆங்கில வார்த்தைகளை கூட கேட்பது கடினம். "Hello", "Thank You" என்பதற்கு கூட அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. கொரியன் மக்களுக்குக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக பட்ச தூரம். இதை வைத்து 2003-இல் "Please Teach Me English" என்ற சுமாரான காமெடி படம் கூட வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

안녕 = An nyoung = Hello, informal
안녕하세요 = An nyoung ha seh yo = Hello, formal
여보세요 = yaw bo seh yo = Hello on a telephone

கொரியன் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், ஒரு முறைக்கு முந்நூறு முறை யோசியுங்கள். இந்த மொழியை பேச முயற்சி செய்தால் உங்கள் வாயும், எழுத முயற்சி செய்தால் உங்கள் கைகளும் சுளுக்க கூடும்.

அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்க நீங்கள் அதிகம் பொறுமையை வளர்த்து கொள்வது அவசியம். அவர்கள் பேசுவதை கேட்பது சிலருக்கு (எனக்கு) இன்பத்தையும், சிலருக்கு (என் நண்பனுக்கு) வெறுப்பையும் கொடுக்கும்.

ஆனால் இந்த படத்தில் நாயகனுக்கு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கேரக்டர் என்பதால், அவருக்கு கொரியன் மொழி புரிந்தாலும் பேசத் தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இந்த படம் வெளியான போது கொரியன் மக்கள் ஆங்கில வசனத்தை புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.

இனி படத்தின் கதை.

நாயகி (Min-Joon) -க்கு உண்மையான காதல் மீது அபார நம்பிக்கை. தன் காதலனுக்கு Gifts, Greetings Card என்று கொடுத்து தன் உண்மையான அன்பை பலவாறு வெளிப்படுத்தும் கேரக்டர். ஆனால் அவளுக்கு அமையும் ஒவ்வொரு காதலர்கள் அவளை dump செய்து விட்டு கழட்டி விட, அவள் உண்மையான காதலை தேடி தேடி அலைகிறாள்.

நாயகன் (Robin Heiden) நாயகிக்கு முற்றிலும் மாறான, உண்மையான காதல் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லாமல் "Its a Game. It has more Rules" என்று பேசும் கேரக்டர்.

இவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். நாயகி காதல் தெய்வீகமானது என்று சொல்வதை நாயகன் மறுக்கிறார். நாயகி, உண்மையான காதல் கண்டிப்பாக இருக்கிறது என்று விடா பிடியாய் சொல்ல, நாயகன் அப்போது "வேண்டுமானால் என்னை, நீ காதலிக்க வைத்து விடு" என்று கேட்க, நாயகி நாயகனை Seduce செய்ய நிறைய டெக்னிக்குகளை கையாள்கிறார்.

அதில் நாயகி வெற்றி பெற்று, நாயகனுக்கு உண்மையான காதலை மண்டையில் அடித்து புரிய வைத்தாரா? அல்லது தோற்று விட்டு தாடி வளர்க்க முடியாமல் கஷ்டப் பட்டாரா?

விடையை கீழேயுள்ள torrent -யை டவுன்லோட் செய்து பாருங்கள்.

முதல் லிங்க்:  (1.37 GB) - You have to register
இரண்டாவது லிங்க்: (1.65 GB)

நாயகி சுமாரான பிகர் என்றாலும், நடிப்பில் அவ்வளவு கியூட். Hero is a very Handsome guy. படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பெட்ரோல் குண்டு போல பற்றி கொண்டு எரியும்.


நமீதா டச்: Seducing Mr Perfect - Get Seduced

டிரைலர் இங்கே.

Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

Related Posts:

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

My Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)
Nov 15, 2011

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

கொரியன் சினிமாக்களில் ரொமாண்டிக் காமெடி வகையாறா(Genre) படங்களை அடிச்சுக்கவே முடியாது. அதிலும் இந்த படம் கொஞ்சம் அதிரடியான ரொமாண்டிக் காமெடி வகை.

இது முதல் பார்ட். இதன் இரண்டாம் பாகம் பெரிய அளவுக்கு இருக்காது. இந்த படத்தை நிறைய பேர் பார்த்திருக்கலாம். இந்த விமர்சனம் ரொம்ப நாளாக என் Draft-ல் கும்பகர்ண தூக்கம் தூங்கி கொண்டிருந்தது. இப்போது தான் தட்டி எழுப்பி விட்டுள்ளேன்.

கொரியன் படங்களில் "My" என்று ஆரம்பிக்கும் நிறைய படங்கள் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்திருக்கிறது.

My Sassy Girl
My Wife is a Gangster Series
My Boss My Teacher
My Girl and I

என்று இன்னும் நிறைய.Tutor என்றால் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லி தருகிறவர்கள். உங்களுக்கே தெரியும் பணக்காரங்க மட்டும் தான் Tutor -யை "வச்சுக்க" முடியும். 

நாயகன் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹை ஸ்கூலில் படிக்கும் இவருக்கு அட்டகாசமாய் fight செய்ய வரும். இவரின் அதிரடியான fast மூவ்மேன்டினால் எதிரிகளை அழகாய் பந்தாடுபவர்.

ஸ்கூலில் உள்ள இன்னொரு கேங்குடன் (Gang) அடிக்கடி fight செய்து பொண்ணுகளை கவர்வதில் வல்லவரான இவரை பாடங்கள் மட்டும் ஏனோ கவருவதில்லை. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து சாதனை படைத்தது கொண்டிருக்கிறார் நம் நாயகன்.

நாயகி, யுனிவெர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழை குடும்பத்து பெண். இவருடைய அம்மா சிக்கனை fry பண்ணி விற்கும் தொழில் செய்கிறார். நாயகி அருகில் உள்ள சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்து சம்பாதித்து அந்த வருமானம் மூலம் படிக்கிறார்.

அந்த பசங்க செய்யும் குறும்புகளுக்காக அவர்களை அடித்து விடுவதால் அடிக்கடி டியூசன் வேலையும் போய்விடுகிறது.

படத்தின் முதல் சீனிலேயே, பிஞ்சிலே பழுத்த இரண்டு குட்டி பசங்க, ஹீரோயின் உட்கார்ந்திருக்கும் டெஸ்க்குக்கு கீழே டார்ச் அடித்து அவர் போட்டிருக்கும் பாண்டீஸ்சின் (Panties) கலர் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்தால் யார் தான் அடிக்க மாட்டார்கள்?

நாயகியின் அம்மாவுக்கு ஒரு பணக்கார நண்பி இருக்காங்க. அவர் தான் நாயகனின் அம்மா. நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே வயசு தான்.

நாயகன் நன்றாக படித்து பாஸ் ஆக வேண்டும் என்று தன் பணக்கார நண்பி கேட்டு கொள்வதால் நாயகனுக்கு பாடம் சொல்லி தர நாயகியின் அம்மா நாயகியிடம் சொல்கிறாள். அப்படி சென்றால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன் செமெஸ்டர் பீஸை கட்டிவிடலாம் என அவளும் சம்மதிக்கிறாள்.

நாயகன் ஒழுங்காக கையையும் காலையும் கட்டிக்கொண்டு நாயகியிடம் பாடம் கற்றாரா? இல்லை நாயகிக்கு நாயகன் ரொமான்ஸ் பாடம் கற்று கொடுத்தாரா? டியூசனில் என்னென்ன கூத்து நடக்கிறது?

டோர்ரென்ட் டவுன்லோட் செய்து கண்டு மகிழுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு பிடிக்கும்.

முதல் லிங்க்    (1.37  GB)
இரண்டாவது லிங்க் (700 MB)

நமீதா டச்:   My Tutor Friend , Lovely.

ட்ரைலர் இங்கே:Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
Nov 1, 2011

சென்னையில் ஒரு மழைக்காலம் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)சென்னை பெங்களூருவாக மாறி விட்டது.

இங்கிருக்கிற பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அழகாவும், மாடர்ன் ஆகவும் மாறிவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.

அதிகமாய் மழை பெய்வதால், பகலிலேயே குளிர்கிறது.

வெய்யில் காலத்திலேயே சாயங்காலம் வெளியே சென்று சூடாய் நாலு பஜ்ஜியை உள்ளே தள்ளி, தண்ணியை குடிக்கும் நம்ம ஆட்களுக்கு இப்போது சொல்லவே வேண்டாம்.

இந்த குளிரில் ஆபிஸ் போகவே தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

பாதை எல்லாம் பள்ளமாக மாறி பருவ பெண்ணை பார்க்கும் வயசு பையனை போல அசிங்கமாக பல்லிளிக்கிறது. மழை காலம் முடிந்த பிறகு அம்மாவிடம் மனு போட்டு, இன்னொரு உள்ளாட்சி தேர்தல் நடத்த சொல்ல வேண்டும்.

Shoe போட்டு கொண்டு ஆபிஸ் செல்பவர்களின் நிலைமை படு திண்டாட்டம். சில இடங்களில் முட்டியளவு தண்ணீர் நிற்கிறது. பாவாடை அணிந்திருந்தால் எளிதாய் தூக்கி பிடித்துக்கொண்டு கடந்து விடலாம்.

இந்த மாதிரி நேரங்களில், நமது அரசு கிரியேடிவ் ஆன போட்டிகள் நிறைய வைத்து பரிசு கொடுத்து மக்களை குஷி படுத்தலாம்.

  • ஒரு பள்ளத்தில் கூட விடாமல் வண்டியை ஓட்டுவது.
  • ரோட்டில் உள்ள பள்ளத்தை தாண்டும் Long Jump. 
  • தேங்கி உள்ள நீரில் நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டி.

இன்னும் என்ன மாதிரி போட்டி வைக்கலாம்? என நீங்களும் கமெண்டில் சொல்லலாம்.

நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சென்னையில் வாழ முடியும்.

ஆனால் இந்த கொட்டும் மழையில், சிட்டியில் சில பேர் மட்டுமே சந்தோசமாய்  வண்டியோட்டி செல்ல முடியும்.

அவர்கள் ஆட்டோகாரர்கள்.தமிழ் சினிமாவில் பாட்டே இல்லாமலும், ஒரே ஒரு பாட்டுடனும் நிறைய படங்கள் வந்து விட்டது.

தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வர தம் கட்டி முக்கி கொண்டிருக்கும் இயக்குனர்களாக அறியப் படும் செல்வராகவன், முருகதாஸ் போன்றோர் ஏன் இன்னும் தயங்குகிறார்கள்?

இன்னும் எத்தனை நாளுக்கு தான் கூடுவாஞ்சேரியில் கனவு கண்டு நியூயார்க்கில் போய் டூயட் பாடுவது? பின்னால் வெள்ளையர்களை சேர்த்து கொண்டு ஆடும் பாலிவுட் காய்ச்சல் இன்னும் "விடாது கருப்பாய்" கோலிவுட்டை தொடர்கிறது.

சமீப காலங்களில் திரையரங்கில் பாடல் வரும் போதெல்லாம், "ஐயோ பாட்டு போட்றாதிங்க" என்று மக்கள் அலறும் சத்தம் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நம் இயக்குனர்கள் இதை கேட்காமல் ஜடமாக இருப்பது ஆச்சர்யம் இல்லை. பாட்டு ஷூட் செய்வதற்கு  பின்னால் எக்கச்சக்க சௌகரியங்கள் இருக்கின்றன. இதை விட்டு கொடுத்தால், அடுத்தவன் பைசாவில் ஆம்லெட் சாப்பிட முடியாது அல்லவா!

படம் முடிந்தவுடன் பாடல்களை தனியாய் போடலாம். இஷ்டம் உள்ளவர்கள் பார்க்கட்டும். மற்றவர்கள் தம் அடிக்கட்டும்.டெக்னாலஜி வளர்ந்த நாடுகள் எடுக்கும் Sci-Fi படங்களை மட்டுமே நம்மால் நம்ப முடிகிறது. அமெரிக்காவில் 4G, Automatic driving, வீடுகளில் உள்ள செக்யூரிட்டி கன்ட்ரோல் என்று பல விதங்களில் அவர்கள் நமக்கு ஒரு decade முன்னதாக போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் இன்னும் 2G ஊழலே முடியவில்லை.

நம் நாட்டில் தற்போது என்ன காலாச்சாரம், டெக்னாலஜி உள்ளது என்று அறிந்து அதை வைத்து படம் எடுத்தால் தான் ஒரிஜினலாக இருக்கும்.

நம்மூரில் முக்கால்வாசி ட்ராபிக் சிக்னல்கள் Manual ஆகத்தான் Operate செய்யப் படுகின்றன. அப்படி இருக்கையில் நம் நாட்டில் உள்ள ட்ராபிக் சிக்னல்களை ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டு ஹாக் (Hack) செய்வது போன்று படத்தில் காண்பிப்பதை பார்க்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தான் சிரிக்க தோன்றுகிறது. திரையரங்கில் பார்க்கையில் அப்படி செய்ய முடியாது என்பதும் வருத்தம்.நம் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். சயின்ஸ் வளர்ந்த பிறகு Sci-Fi  படங்களை எடுங்கள். அதுவரை உங்கள் அறிவு திறமைகளை எங்கேயாவது பரணில் ஒளித்து வையுங்கள். அல்லது மதுரையை சுற்றியோ அல்லது தென்காசியை சுற்றியோ பனைமரத்தடியில் கேமராவை தூக்கி சென்று படம் எடுத்து கொண்டிருங்கள்.

தான் நினைத்த கதைக்கு சரியான டெக்னாலஜி இல்லை என்ற காரணத்தினால் பத்து வருடத்திற்கு மேலாக காத்திருந்தாரே அவதார் இயக்குனர் ஜேம்ஸ் காமருன், அவர் என்ன முட்டாளா?

சும்மா மொக்கையாக எதோ எழுதி, ஹிட்ஸ் வரவேண்டும் என்ற காரணத்திற்க்காக, அந்த பதிவை உடனடியாக வெளியிடும் என்னை போலவே, நம் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டில் பெண் தேடும் படலம் மும்முரமாய் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அஷ்டம சனி அந்த சனி இந்த சனி என்று என் அப்பா கோவில் கோவிலாய் என்னை அலைகழிக்கும் போதெல்லாம் எனக்கு கடவுளின் மேல் வெறுப்பு அதிகரிக்கிறது.

போன வாரம் என் அப்பா எனக்கு கால் செய்து "ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கு. பொண்ணு எஸ்.ஐ ஆக வேலை பார்க்குது. ஓகே வா?" அப்படின்னு கேட்டார்.

எனக்கு "ராமன் தேடிய சீதை" படத்தோட கிளைமாக்ஸ் ஞாபகம் வந்தது.

"வேண்டாம்ப்பா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று சொல்லிவிட்டேன்.

இப்போது தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ராமன்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீதையை கண்டுபிடிப்பதற்குள் அவர்களுக்கு நடிகர் சேரனின் வயசு ஆகிவிடுகிறது. எங்கள் ரூமில் நாங்கள் மூன்று ராமன்கள்.

என்னுடைய சீதை எங்கே இருக்கிறாளோ? தெர்ல.இங்கிருந்து Onsite செல்லும் நம் IT யில் பணி புரியும் ஆண்கள் சில பேர் அங்கு சென்றதும் பெண்களாகி விடுகிறார்கள். கிட்டதட்ட Onsite என்பது அவர்களுக்கு புதுசாக கல்யாணம் ஆகி செல்லும் மாமியார் வீடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு சந்தோசத்தையும் பயத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது.

அவர்கள் பொதுவாய் செய்யும் வேலைகள் சில, 
  • சாப்பாடு செய்வது, பாத்திரம் கழுவுவது
  • அழுகை சீரியல், தமிழ் மொக்கை படங்கள் ஒன்று விடாமல் பார்ப்பது.
  • இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் கால் செய்து, கதற கதற மொக்கை போடுவது
  • அடிக்கடி குடும்பத்தினருக்கு கால் செய்து, குசலம் விசாரிப்பது.

வாசல் தெளித்து கோலம் மட்டும் போட முடியாது அவர்களால்.Oct 31, 2011

ஏழரை அறிவு - நமீதா விமர்சனம்ஏழாம் அறிவு இசை வெளியிட்டு விழாவில் அதன் இயக்குனர் முருகதாஸ்,

"இந்த படம் வந்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு கர்வம் வரும். அந்த கர்வம் தலைக்கேறி நீங்கள் இறந்து விடவும் வாய்ப்புண்டு" என சொன்னார்.

அப்போதே என் நரம்புகள் எல்லாம் புடைத்து லேசாய் ஒரு கர்வம் என் மனதுக்குள் நெளிந்தது.

அதனால் தீபாவளி அன்று குளித்து முடித்ததும் அம்மா செய்த லட்டுகளில் இரண்டை எடுத்து அவசர அவசரமாய் வாயில் போட்டு கொண்டு சத்யம் தியேட்டரை நோக்கி ஓடினேன். தமிழர் மறந்த பெருமையை அறிய பத்து ரூபாய் டிக்கெட் ஒன்றை வாங்கி கொண்டு உள்ளே சென்றேன்.

படம் ஆரம்பித்தது. போதி தர்மரை பற்றி விளக்கி கொண்டே ஒரு டாகுமெண்டரி ஓடியது. சூர்யா காவி வேட்டியை கட்டி கொண்டு பாவாடை சாமியார் போன்ற தோற்றத்தில் எதோ சித்து வேலைகளை செய்து கொண்டிருந்தார்.  தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு சொக்கியது. முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தால், ஜடையை எல்லாம் கட் செய்துவிட்டு தாடியை ட்ரிம் செய்து பேண்ட் சர்ட் அணிந்து, வாரணம் ஆயிரம் கெட்டப்பில் சூர்யா ஒரு டிவி சேனலுக்கு, தான் தினமும் மஞ்சள் போடுவதால்தான் தன் முக அழகு கூடியது என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

சரி எதோ சொல்ல வர்றார்ன்னு நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்தால் படத்தை முடிச்சிட்டாங்க. ரொம்ப நேரம் தூங்கி எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டோமா? தமிழர் பெருமையை பற்றி தெரியாம இன்னிக்கு வீட்டுக்கு போக கூடாதுன்னுட்டு அடுத்த ஷோவில் ஒரு டிக்கெட் எடுத்து மறுபடியும் வந்து உட்கார்ந்தேன்.

இந்த தடவையும் தூங்கிட கூடாதுன்னு பக்கத்தில் இருக்கிறவரிடம் சொல்லி அடிக்கடி என்னை கிள்ளிக் கொண்டே இருக்க சொன்னேன்.

டாகுமெண்டரி முடிந்து அயன் பாதியாகவும் வாரணம் ஆயிரம் பாதியாகவும் படம் போனது. நடுநடுவில் மானே, தேனே, டி.என்.ஏ என்று ஷ்ருதி உளறி கொண்டிருந்தார்.

ஒரு Genre விலிருந்து இன்னொரு Genre விற்கு திடீர் திடீரென தாவுவது நம் ஆட்களால் மட்டும் முடியும் காரியம்.

கொஞ்ச நேரம் வரலாற்று படம்
கொஞ்ச நேரம் விஜய் படம்.
கொஞ்ச நேரம் Sci - Fi


எல்லா பாடல்களிலும் நாயகி ஷ்ருதியை விட சூர்யாவே திறந்த மார்புடன் அதிகம் கவர்ச்சி காட்டுகிறார். பெண் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க "சூர்யாவின் அதிரடி கவர்ச்சியில் ஏழாம் அறிவு" என்று நாளிதழில் விளம்பரம் கொடுக்கலாம். சோகப் பாட்டுக்கெல்லாம் நன்றாக விஜய் மாதிரி டான்ஸ் ஆடுகிறார்.

இன்னும் இருபத்தி நாலு மணி நேரங்களில் 
இன்னும் நாலு மணி நேரங்களில்
இன்னும் இரண்டு நொடிகளில் 

என்று ஏழாம் அறிவு படத்திற்கு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுவது போல இவர்கள் Count Down போட்ட அலம்பல்கள் சாதாரண பாமரனால் கூட ஜீரணிக்க முடியாது.

அவனவன் அவதார் போன்ற படங்களை எடுத்து அமைதியாக வெளியிடுகிறான். ஆனால் இந்த கொசுக்கள் ஒரு படத்தை எடுத்து விட்டு வந்து நம் காதில் போடும் சத்தங்கள் தாள முடியவில்லை.

முருகதாஸை ராக்கெட்டுடன் கட்டி செவ்வாய்க்கு அனுப்பி, அங்கு வாழும் வேற்றுகிரக வாசிகளுக்கு (?) தமிழரின் பெருமையை உணர்த்த செய்யலாம்.

நமீதா டச்: ஏழாம் அறிவு - தமிழர்களுக்கு ஏழரை.

இப்படத்தின் மூலம் இயக்குனர் நோக்கு வர்மம் செய்து நம்மை கொல்கிறார்.

அவசியம் மிஸ் பண்ணாமல் இந்த படத்தை பாருங்கள். நாம் மறந்து போன தமிழ் உணர்வை நம்முடைய டி.என்.ஏ வை தூண்டி விடுவதன் மூலம் மீண்டும் கொண்டு வந்து இயக்குனரும் தயாரிப்பாளரும் கல்லா கட்டுகின்றனர்.