May 24, 2011

20 Minutes to Heaven (ஆபாயில்)

எனக்கு வாழ்க்கைல பிடிக்காதது இரண்டு. பணமும், புகழும். நூறு பாலோவர்ஸ் கடந்து விட்டேன் என்று சொல்வது எனக்கு பெருமையாய் இல்லை. 

ஏனென்றால் வெட்டியாய் எழுதி பொழுதை கழிக்கிறேன் என்று மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதுதான். சச்சினை எனக்கு பிடிக்காது என்றாலும் சச்சினைப் போல, தொண்ணூறில் இருந்து நூறு பாலோவர்ஸ் வருவதற்குள் நிறைய காலம் ஆகி விட்டன. பிளாக் எழுதுவது மதுவை போல அதிக போதை தரக்கூடியது. அதிலும் பின்னூட்ட ஊறுகாய் தொடர்ந்து கிடைத்தால் நீங்கள் காலி. இட்லிவடை மாதிரி, பிரேக் நியூஸ்சை கூட தனி போஸ்டாய் போடா வேண்டி வரும். 

உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்களும் ஒரு பிளாக் எழுதுங்கள். ஆனால் பிளாக் எழுதி பெண்களை மடக்கி விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதிர்கள். இன்டர்நெட் கபேக்கு போறவங்கல்லாம் உங்க ப்ளாக் தான் படிப்பாங்க என்று தயவு செய்து தப்பு கணக்கு போட வேண்டாம்.

வெட்டியாய் வீட்டில் உட்கார்ந்து பிளாக் எழுதுவதை விட ஒரு பெண் பின்னால் வெட்டியாய் சுற்றலாம். ஆங்கிலோ இந்தியன் பொண்ணு பின்னால பன்னாடை மாதிரி சுத்திய பையனுக்கு எல்லாம் தேசிய விருது கொடுத்துட்டாங்க. ஆனால் ஆஸ்திரேலியா போய் தீவிரவாதியை மடக்கி பிடித்த கேப்டனுக்கு மாநில விருது கூட கிடைக்காதது அசிங்கம்.பொண்ணுங்க கிடைக்கிறாங்களோ இல்லையோ, போஸ்ட்ல மேட்டர் எழுதறதுக்கு நம்ம பசங்க தான் மாட்றாங்க. இப்படி தான் நான் ஒவ்வொருத்தனையும் மிரட்டி கொண்டு உள்ளேன்.திகாலை சரியாக மூன்று மணி இரண்டு நிமிடம் இருக்கலாம். என் அலைபேசி "அய்யய்யோ என் நெஞ்சு அலையுதடி" என்று அலறியது. இன்டர்நேஷனல் நம்பர். கனடாவில் இருந்து ஒரு பெண் வாசகர். தேர்தல் முடிந்து ரொம்ப நாள் ஆகுது. ஆனால் இன்னும் தேர்தலைப் பற்றி என்னோட கருத்தை ஏதும் ஏன் சொல்லவில்லை என்றும் மிகவும் வருத்தப்பட்டார். என் கருத்தை அறியாமல் அவர் உறங்க முடியவில்லை எனவும் கூறினார். காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு என் கருத்தை பதிவு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன்.

மே 13-ம் தேதி அதிமுக கொளுத்திய வெடிச் சத்தம் என்னைப் போலவே பொது மக்கள் பலரையும், தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை முழுதும் புத்தாண்டிற்கு வெடித்திருக்காமல் மே 13-ம் தேதி வரை வைத்திருந்திருக்கலாம் என எண்ண வைத்தது. ஜெயலலிதாவையே ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொல்ல வைத்தவர் தன்னலமற்ற பெருந்தலைவர் கலைஞர்.


கனிமொழி ஜெயிலுக்கு போய் ரொட்டி சாப்பிடறது மகிழ்ச்சியா இருந்தாலும், ரஜினி வீட்டுக்கு போய் சூப் குடிக்காதது தமிழ் குடிமக்களுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் கலைஞருக்கு அதுவே தலைகீழாய் இருக்கலாம். 

விஜயகாந்த் மட்டும் இப்போது "தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்ற பஞ்ச டயலாக்கை தள்ளி வைத்துவிட்டு, வடிவேலுவை மன்னித்து அவர் கூட ஒரு படம் நடித்தால் அடுத்த தேர்தலில் அவர் கட்சி இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெரும். கொஞ்ச நஞ்சம் இருக்கிற திமுக ஓட்டும் விஜயகாந்துக்கு தான்.

தேர்தல் முடிவுக்கு பிறகு நம்ம டாக்டர் விஜய் ஒரு பேட்டி கொடுத்தார்.


"நான் சொன்னதுக்காக ஒட்டு போட்டு அதிமுகவை வெற்றி பெற வாய்த்த அத்தனை பொதுமக்களுக்கும் நன்றி"

இதனால யாருக்கு கேவலம்? மக்களுக்கா? இல்லை ஜெயலலிதாவுக்கா? இல்லை டமில் கலைஞருக்கா?

நல்லவேளை நான் அதிமுகவுக்கு ஒட்டு போடவில்லை.


அம்மா ஆட்சிக்கு பிறகு, தமிழ் நாட்டு ரவுடிகள் எல்லோரும் "திருட்டு ரயில்" பிடித்து ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்களாம். பேரரசு படங்களில் ரவுடிகளாய் நடித்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடியது தான் இங்கே பிரச்சினையே. தற்போது தன் படத்தில் வில்லனாய் நடிக்க ஆள் இல்லாமல் பேரரசு கோடம்பாக்கத்தில் அலைந்து வருகிறார். அதனால் வில்லன் கேரக்டரில் தானே நடிப்பதாய் தனக்கு "நெருக்கமான" நடிகைகளிடம் சொல்லி வருகிறாராம். அந்த படத்தில் அவரே ஹீரோவாய் நடிப்பதாயும் வதந்திகள் வலம் வருகின்றன.

அப்புறம் இன்னொரு ஆள் கூட தமிழ் நாட்டை விட்டு ஓடி டெல்லியில் டென்ட் அடித்து தங்கி வருகிறார். அவர்


ரு இளமையின் நீரூற்றை (Fountain of youth) தேடி போவதுதான் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் நான்காவது பாகத்தின் கதை. அதில் நாயகி, சாகப் போகின்ற அவருடைய அப்பாவை (வில்லன்) காப்பாற்ற அதை தேடி போவார். அவர்களுக்கு இரண்டு வெள்ளி கிண்ணங்கள் கிடைக்கும். அதில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அடுத்த கிண்ணத்தில் தண்ணீரோடு கடற்கன்னியின் கண்ணீரும் கலந்து இருக்க வேண்டும். இரண்டாவது கிண்ணத்தில் (கண்ணீர் உள்ளது)  இருப்பவற்றை குடிப்பவர்க்கு, முதல் கிண்ணத்தில் இருக்கும் (தண்ணீர் உள்ளது) குடிப்பவறது மீதி ஆயுளும் கிடைக்கும். படத்தின் இறுதியில் நாயகியும் அவருடைய அப்பாவும், இருவருமே சாகும் தருவாயில் இருப்பார்கள். அப்போது அவர்களில் இருவரில் ஒருவர் தான் இரண்டாவது கிண்ணத்தில் உள்ளதை குடித்து உயிரோடு இருக்க முடியும். கடைசியில் யார் தன் உயிரை விட்டு கொடுத்தார்கள் என்பது தான் கதை.

அது போல ஒரு சமயத்தில் கனிமொழியும் கருணாநிதியும் இருந்தால் என்ன செய்வார்கள். யார் விட்டு கொடுப்பார்கள்?

ஒரு க்ளு. தற்போது உள்ள நிலைமையில் ஒருவர் மட்டுமே தன் உயிரை தியாகம் செய்ய முன் வருவார்.

அவர் யார்?


ரு நாள் தொலைக்காட்சியில் "மதராசப்பட்டினம்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கிளைமாக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதில் வயதான நாயகி, நாயகனின் கல்லறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அப்போது தன் பேத்தி வந்து அவரது தோளை தொட அப்படியே சரிந்து விழுவார். அவசர அவசரமாய் ஹாஸ்பிட்டல் எடுத்து செல்வார்கள். பரிசோதித்த டாக்டர் சொல்லுவார் "அவர் இறந்து 20 நிமிடம் ஆகிறது". உடனே அடுத்த காட்சியில் சொர்க்கத்தில் இருக்கும் நாயகனோடு நாயகி ஓடி சென்று கட்டி பிடிப்பார். 

இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?

இன்னுமா பதில் தெரியாமல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருக்கிறீர்கள்?

சொர்க்கத்திற்கு செல்ல 20 நிமிடம் தான் ஆகும்.

ண்பர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றால் இப்போதெல்லாம் பேச்சுலர் பார்ட்டி ஒன்றை கொடுத்தாக வேண்டும். அப்படிதான் கடந்த வாரம் என் நண்பன் பிரகாஷ் ஒரு ரெஸ்டாரென்ட்டில் டின்னர் பார்ட்டி வைத்தான். நாங்கள் பனிரெண்டு பேருக்கு மேல் இருந்தோம். பொதுவாக கல்லூரி தேர்வில் தெரியாத கேள்வியை கண்டும் காணாமல் பழைய காதலியை போல விட்டுவிடும் நம் மக்கள் மெனு கார்டில் தெரியாத அயிட்டங்கள் அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட அளவிலா ஆர்வம் கொண்டுள்ளனர்.

பக்கத்துக்கு டேபிளில் இரு நவ யுவதிகள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனத்தை பெற ஒருவன் தட்டில் ஸ்பூன் வைத்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தான். இன்னொருவன் நாகரிகம் கருதி தந்தூரி சிக்கனை கூட சாப்டாக பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து ஆறாயிரத்துக்கு மேல் பில் வந்தது. எங்கள் வயிறு நிறைந்தது.


"மன்மதன்" சொம்பு நடித்த வானம் படம் தவறுதலாய் பார்க்க நேர்ந்தது. ஹீரோயிச படங்களை விடுத்தது அவர் ஆஸ்கார் அவார்டுக்கு தகுதியான படங்களில் தற்போது தொடர்ந்து அவர் நடித்து வருவதாக மக்கள் ஆரவாரப் படுகிறார்கள். பன்றி சாக்கடை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்தாலும் பன்றிக்கு பெயர் மாறாது. படம், நிறைய சமுதாயப் பிரச்சினைகளை அலசுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கு நடக்கும் வெவ்வேறு பிரச்சனை, அதனால் ஏற்படும் விளைவுகளால் எப்படி பாதிக்கிறார்கள்?

மனிதனுக்கு மட்டுமே பிறந்தவுடனே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்பதை சொல்ல, அனுஷ்கா விபச்சாரி வேடத்தில் நடிப்பதை பார்க்கின்ற மனக்கஷ்டம் ஒன்றே போதுமானது. ஆனால் நம் நடிகர்கள் எப்படி மனநலம் குன்றிய வேடங்களில் நடித்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார்களோ, அது போல நடிகைகளும் விபச்சாரி வேடங்களில் உண்மையாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.

   என்ன வாழ்க்கைடா இது?


ரத்தச்சரித்திரம் போன்ற படங்களில் சூர்யா நடிக்கும் போது, அந்த கதையின் கேரக்டர் ஆனா தாதாவை நேரில் சந்தித்து அவரிடம் டிப்ஸ் கேட்டு அதன்படி தத்ரூபமாய் நடித்ததாகவும், படம் வெளிவந்த பிறகும் அந்த கேரக்டரில் வாழ்வதாகவும் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுப்பார்கள். அது போல இந்த படத்துக்கும் விபச்சாரிகளை சந்தித்து டிப்ஸ் வாங்கி இருப்பார்களோ? இதைப் பற்றி பேட்டியில் ஏன் யாரும் வாய் திறப்பதில்லை? நம் நாட்டில் தாதாவுக்கு இருக்கும் மரியாதை கூட விபச்சாரிக்கு இல்லை என்பது வருத்தமான விஷயம். தாதாவை விட விபச்சாரியாய் இருப்பது கேவலம். கொலை செய்வதை விட விபச்சாரம் செய்வது மிகப் பெரும் குற்றம்.


சாதி மதங்கள் அணிந்து ஏன் மக்கள் அவதிப் படுகிறார்கள்? சாதி, மதம் என்பது ஆடையைப் போல தான். அணிந்தால் வேறுபாடு தெரியும். அவிழ்த்து எறியும் போது தான் நிர்வாணத்தைப் போல அழகாய் இருக்கும்.

பொன்மொழி:

ரேப் செய்பவனை விட ரேப் செய்துவிட்டு கொலை செய்பவன் மிக கொடூரமானவன்.

எவ்வளவு சுயநலம்!!!May 23, 2011

கண்டேன்... நொந்தேன்... - நமிதா விமர்சனம்

ஞாயிற்று கிழமை மதியம் Pirates of the Caribbean நான்காவது பாகம் பார்த்துவிட்டு வீட்டில் சென்று ஐ.பி.எல் சனியனை பார்த்து தொலைந்திருக்கலாம். ஆனால் சூப் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என வடபழனியில் பைக்கில் சென்று கொண்டிருந்த என்னையும் என் நண்பனையும் விதி இழுத்து சென்று கண்டேன் என்ற திரைக் காவியத்தை வடபழனி பங்கஜம் திரை அரங்கில் காண வைத்தது.நானோ காருக்கு அடுத்து வெளியாகி, மக்களிடம் வரவேற்ப்பை பெற்றிருக்கும் டாடாவின் (TCS) படைப்பு. ;-) ஆனால் இந்த படத்தை வைத்து டாடா நிறுவனத்தின் தரத்தை மதிப்பிட்டால் அதற்கு TCS நிர்வாகம் பொறுப்பல்ல. படத்தின் கதை மற்றும் இதர அம்சங்களை தெரிந்து கொள்ள படியுங்கள் இங்கே.

படம் ஆரம்பித்து இருபது நிமிடத்திற்கு மேல் தான் intro ஆகிறார் படத்தின் ஹீரோ சந்தானம். ஹீ ஹீ. சைடு கேரக்டரில் சந்தனு என்ற துணை நடிகர் வலம் வருகிறார். உண்மையாலுமே சந்தானம் தான் தன் இரண்டு கைகளாலும் முதலில் இருந்து தொங்கி போன படத்தை கடைசி வரை தூக்கி நிறுத்துகிறார். காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற வெற்றிகளுக்கு பிறகு தனுசின் கால்ஷீட்டை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு இயக்குனர்களை கண்டுபிடித்து கதை செய்தார்கள். அது போல இந்த படத்திற்கும் சந்தானத்தின் கால்ஷீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் கதை பண்ணி இருக்கலாம். ஹீரோக்காக கதை செய்வது போய் காமெடியனுக்காக கதை செய்கிறார்கள்.மொத்தத்தில் பாஸ் (என்கிற பாஸ்கரன்) ஆக முயற்சி செய்து பெயில் ஆகி இருக்கிறார்கள்.

எதிர்பார்த்த படியே படத்தில் சந்தனு TCS கம்பெனியில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஆக வேலை செய்கிறார். படத்தில் லாஜிக் என்பதை சூடம் மாதிரி கூட காண்பிக்கவில்லை. நான் எப்படி போட்டோகளால் இந்த பதிவை நிரப்பி வைத்திருக்கிறேனோ அதே மாதிரி கண்ட பாட்டுகளையும் (உன்னை கண்டேனே பாட்டு மட்டும் ஓகே.), சண்டைகளையும் போட்டு நிரப்பி வைத்திருக்கிறார்கள்.

ஹீரோயினுக்கு திரையில் தந்த முக்கியத்துவத்தை பார்த்தால், நிறைய ஸ்டோரி டிஸ்கசன் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது.

கிரேசி மோகன் டைப்பில் லாஜிக் இல்லாமல் காமெடியையே பிரதானமாக வைத்து திரைக்கதை செய்திருந்தால் ஓரளவு வெற்றி பெற்றிருக்கலாம். படத்தை வெற்றி பெற செய்ய இன்னும் ஒரு வழி இருக்கிறது. 

இந்த படத்தை ஒவ்வொரு TCS employee -யும் கட்டாயம் பார்த்திருந்தால் மட்டுமே, இந்த வருடம் Salary உயர்வு அவர்களுக்கு உண்டு என்று அறிவிக்கலாம்.


May 17, 2011

பஞ்ச பாண்டவர்களுக்கு உதவிடுங்கள்

வீட்டு ஓனர்களும், வீட்டு புரோக்கர்களும், எனது ரூம் நண்பர்களும், மற்ற ஏனையவர்களும் மன்னிக்கவும். இது முழுதும் நகைச்சுவைக்கே.


நியூ ஏஜ் பாண்டவர்கள் ஆகிய நாங்கள் ஐந்து பெரும் ஐ.டி துறையில் அமெரிக்கர்களுக்கு அடிமை வேலை சொகுசாய் செய்கிறோம். இந்த பாண்டவர்களில்,

தருமன் Onsite -இல் தாய்நாட்டை விட்டு வனவாசம் இருக்கிறார்.
அர்ஜுனன் எப்போதும் அடுத்த வீட்டு ஆண்டிக்கு அம்பு விட்டு கொண்டிருப்பார். தினமும் செல்லும் ஜிம்மிலும் அம்புகளின் அட்டகாசம் தானாம்.
பீமருக்கு பீட்சா என்றால் பெரும் இஷ்டம். உருளை கிழங்கில் பண்ணிய அயிட்டம் என்றால் சாப்பிட்டு உருண்டு கிடப்பார்.
நகுலன் அனுஷ்காவின் இடுப்பை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார். "சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழியில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
சகாதேவன் சனிக்கிழமை ஆனால் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு குப்புறப் படுத்து விடுவார்.தன் மகளின் குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று வீட்டு ஓனர் இணங்கி கேட்டு கொண்டதால் இப்போது இருக்கும் வீட்டை காலி பண்ண சம்மதித்து விட்டோம்.

வாடகைக்கு அடுத்த வீடு தேடும் போது தான் தெரிந்தது சென்னையில் காலி வீடுகளை விட, வீட்டு புரோக்கர்கள் அதிகம் என்று. நாங்கள் சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் உலவி புரோக்கர் உதவி நாடாமல் வீட்டை பிடிக்க முயற்சி செய்தோம். Owner என்று search செய்து பொன் பண்ணினால், மறுமுனையில்

"சொல்லுங்க சார் நான் வீட்டு புரோக்கர் பேசறேன்".

"அட நீங்களா?" நயன்தாராவிடம் பேசியது போல் ஒரே இன்ப அதிர்ச்சியில் நான்.

போங்கடா! பொறம்போக்குகளா!

நிறைய ப்ரோக்கர்கள் Owner என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு பார்த்து கொடுப்பதற்கு அவர்கள் சுலபமாய் கேட்பது ஒரு மாத வாடகை. நானும் புரோக்கர் வேலையை பகுதி நேரமாக செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

டூவீலர் எடுத்துச் சென்று வீடு வீடாக Tolet போர்டு பார்த்து தேடலாம் என்றால், ஒவ்வொரு வீட்டின் கேட்டிலும் எண்ணற்ற "No Parking" மற்றும் "Contact for Plumper Service" விளம்பர பலகைகள் அடித்துபிடித்துக் கொண்டு இடம் பிடித்துள்ளன. இதற்குள் Tolet போர்டை தேடி கண்டு பிடிப்பது, பத்து வருடத்திருக்கு முன் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தமிழ் நாளிதழில் கண்டு பிடிப்பது போல வெகு சிரமமான விசயமாய் இருக்கிறது.

எப்படியாவது வீடு மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஆசை ஆசையாய் புரோக்கர்களையும் நாடினோம். மாமுல் போலீஸ்காரர்கள் போல ப்ரோக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஏரியா இருக்கின்றது. நாம் ஒருவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டால், அவர் நம்மை இன்னொருவரிடம் அழைத்து செல்கிறார். அந்த இன்னொருவர், இன்னொருவரிடம் பேசி (குழப்பமா இருக்கா?) கடைசியாக வீட்டையும் ஓனரையும் கண்ணில் காண்பிக்கிறார்கள். அது கிட்டதட்ட கேங்க்ஸ்டர் படங்களில் ஒவ்வொரு அல்லக்கையையும் பார்த்து, பேசி முன்னேறி கடைசியில் வில்லன் தாதாவை சந்திப்பது போல் உள்ளது.

வீட்டு ஓனர்களும் வில்லன்களை போன்றே பேசியும், கேள்வி கேட்டும் பயமுறுத்துகிறார்கள். நானெல்லாம் என்ஜீனியரிங் நுழைவு தேர்வில் கூட ஆப்சன் (Option) உள்ள கேள்விக்கு மட்டுமே பதில் எழுதினேன். அதுவும் கணிதத்தில் உள்ள Probability என்பதை உபயோகித்துதான். Probability எனக்கு அருமையாக வரும் என்று நினைத்து விடாதிர்கள். Probability -க்கும் பென்சில் ரப்பர் தான் (dice) பேருதவியாய் இருந்தது. குழப்பம் வேண்டாம், நான் தருமனில்லை.


ஒரு வீட்டை வைத்திருந்தால், என்ன ஒரு ஆணவம்?
அதிலும் பேச்சுலர்கள் என்றால் மரியாதை அதிகம் கொடுத்து பேசுகிறார்கள்.

"எத்தனை பேரு?" (நாங்க என்ன அதுக்கா(சாப்பிடறதுக்கு) வர்றோம்?

"எந்த கம்பனில வேலை செய்றீங்க?" (மன்னாரன் கம்பனின்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அதிலும் MNC கம்பனி என்று சொன்னால் தான் மதிப்பு.)

"நான்வெஜ் சாப்பிடுவீங்களா?" (இல்லைங்க சார்! நான்வெஜ் ஜோக் மட்டும் சொல்லுவேன்)

எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டு வாடகை எவ்வளவு என்று கேட்டால், ஏலம் விடுவது போல பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம். வாரணம் ஆயிரம் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள். வேலை இல்லாதவர்கள் தங்க வீடு தேட வேண்டும் என்றால், ஹோம் லோன் மாதிரி "Home Rent Loan" என்ற ஒன்றை வங்கிகள் அறிமுகப் படுத்த வேண்டும்.
இங்கு எனக்கு வேறு ஒரு சிந்தனையும் அடிமனதில் இருந்தது. இந்த பசங்களோடு எத்தனை நாள் தான் தங்குவது?

Sharing with Girls!

அமெரிக்காவில் உள்ளது போல் பெண்களோடு ரூம் ஷேர் பண்ணி தங்க முடியுமா என்றொரு நப்பாசை. வெப் சைட்டுகளில் தேடி பார்த்தால், "We need two female roommates to share our room" என்று அண்டர்லைன் செய்து விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்திய கலாச்சாரம் கடைபிடிக்கும் பெண்கள். இந்த ஜென்மத்தில் கனவில் கூட இது நடக்காது. அடுத்த ஜென்மத்துல நாயாய் பிறக்க வைத்தாலும் அமெரிக்காவில் பிறக்க வை கடவுளே!

புரோக்கரை கூட்டிட்டு போய் வீட்டை பார்த்தாலும், ஆளாளுக்கு சொல்லும் ஒரு காரணத்தால் அந்த வீடு பிடிப்பதில்லை.

"தண்ணி சரி இல்லை" (ரெகுலரா டாஸ்மாக் போகிற நானே அமைதியா இருக்கேன்)

"நடக்க ரொம்ப தூரமா இருக்கு" (காண்டாமிருகம் பின்னாடி துரத்திட்டு வருதுன்னு நினைச்சிட்டு ஓடுங்க. தூரம் தெரியாது.)

"ஏரியா பசுமையாவே இல்லை" (சென்னையில் சுற்றி கொண்டிருக்கிற எருமை மாடே இதை பற்றி கவலை படுவதில்லை என்று சொன்னால், பசுமை=பிகர்கள் என்று அர்த்தம் சொல்கிறான் அவன்)

"வீட்டு ஓனருக்கு வயசுக்கு வந்த பொண்ணு இல்லை" (வயசுக்கு வந்தா நீ குடிசை கட்ட போறியா? வீட்டு ஓனருக்கு பொண்ணு இருந்தா, கரெக்ட் பண்ணி வீட்டோட செட்டில் ஆகிடலாம் என்கிற அல்ப கனவு.)


மொத்தத்தில் ஐந்து பேருக்கும் ஒத்து போகிற பாஞ்சாலி மாதிரி ஒரு வீடு வேணும். அது போல ஒரு வீடு கிடைக்க பொறுமை மிக அவசியம். சத்ய ஜித்ரே 1957 -இல் இயக்கிய "பதர் பாஞ்சாலி" (Pathar Panchali) என்ற பெங்காலி படத்தை உட்கார்ந்து நான்கு முறை பார்த்தால் அந்த பொறுமை நமக்கு கிட்டலாம்.May 4, 2011

நாளை கண்டிப்பாக ஒரு முத்தம்
 
இந்த ஐ.பி.எல். போட்டிகளில் பத்து அணிகள் மற்றும் குறைந்த பட்சம் தினம் ஒரு போட்டி இருப்பது சற்றே பார்ப்பவர்களை சோர்வு அடைய செய்தாலும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலன்ஜர் அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டும் வெகு சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஷேன் வார்னேவும், சித்தார்த் மல்லையாவும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றவுடன் தத்தம் காதலிகளுக்கு கொடுக்கும் ஆவேச முத்தம் தான் காரணம். இது தான் உண்மையான Post Match Presentation. அதனால் Post Match Presentation இல் சிறந்த முத்தம் கொடுப்பவர்களுக்கு, Kisser of the Match அவார்ட் ஒன்று கொடுப்பது சரியானதே. என்ன ஒரு கொடுமை இந்தியாவில்? பணக்கார சித்தார்த் மல்லையாவுக்கு கூட தன் காதலிக்கு பொது இடத்தில் முத்தம் கொடுக்க ஒரு காரணம் வேண்டி உள்ளது. அப்போ, ஏழை காதலர்கள் எம்மாத்திரம்? இங்கே நான் பொது இடம் என்று குறிப்பிடுவது உதட்டை அல்ல. என்னதான் இவர்களின் அணி வீரர்கள் ஒற்றுமையாய் விளையாடி வெற்றி பெற்றாலும், இவர்கள் இதழ்கள் மட்டும் அவ்வப்போது ஆவேசமாய் சண்டை போட்டு கொள்கின்றன.நாளை நடைபெறும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு நீங்கள் சென்றால், டிக்கெட் வாங்கிய காசுக்கு கண்டிப்பாக ஒரு முத்தம் பார்க்கலாம். இரு அணிகளும் Points Table இல் முறையே ஐந்து மற்றும் ஆறாவதாக இருக்கின்றன காரணத்தால் நாளை ஏதோ இரு உதடுகளுக்கு கடும் சண்டை நடை பெறும் என பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.
ப்ரீத்தி ஜிந்தா தந்த முத்தம் - ஆபாயில்

எனக்கு இரவில் சீக்கிரம் உறங்க செல்வதும் காலையில் சீக்கிரம் எழுவதும் மிக இயலாத காரியம். இங்கு (இந்தியாவில்) நான் தினமும் எழுவதற்கு முன் ஐரோப்பா கண்டமே எழுந்து பரபரப்பாய் வேலை பார்த்து கொண்டு இருக்கும். இரவில் பருவப் பிரச்சனைகளால் என்னால் எளிதில் உறங்க முடிவதில்லை. தப்பாக எண்ண வேண்டாம். இது வாலிப பருவ கோளாறு இல்லை, கோடைப் பருவம். அதிலும் பகலில் சென்னை வெயில் "என் உச்சி மண்டையில சுர்ருங்குது". பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்க வேண்டியதில்லை. பஞ்சை மட்டும் வைத்தால் போதும். குபீரென்று பற்றி எரியும்.

தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு இருப்பதால் மக்களுக்கு எந்நேரமும் வியர்வை குளியல் தான். மிக்சி, கிரைண்டர், ஆடு மாடு பன்றி இவற்றிற்கு பதிலாக எந்த ஒரு கட்சியாவது கடந்த தேர்தல் அறிக்கையில் இலவசமாய் ஏசி கொடுப்பதாய் சொல்லியிருந்தால் மக்களிடம் அது வரவேற்ப்பை பெற்றிருக்கும். ஒருநாள் தற்செயலாய் என் நண்பனிடம் இன்டர்நெட் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, புல்ஷிட்(bullshit) என்று திட்டிவிட்டான். அவனிடம் சொன்னேன் "தயவு செய்து புல்ஷிட் பற்றி கேவலமாய் பேசாதே. ஒருவேளை இந்த தேர்தலில் ஜெயலலிதா வென்று முதல்வராகி, எனக்கு ஒரு பசுமாடு இலவசமாய் கிடைத்தால் அதன் சாணத்தை நான் தான் அள்ளவேண்டும்"

இப்போதெல்லாம் தினமும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதால், கனவிலும் ஐ.பி.எல். வந்து தொலைக்கிறது. அப்படிதான் ஒரு நாளில் மூன்று கனவுகள் தொடர்ச்சியாக வந்தது. முதல் கனவில் நான் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது போலவும், நான் சிறப்பாய் விளையாடியதற்க்காக ப்ரீத்தி ஜிந்தா அவர்கள் என்னை கட்டி பிடித்து முத்த மழையில் நனைப்பது போலவும் ஒரு அருமையான கனவு (ப்ரீத்தி "ஜிந்தாபாத்"). அதில் சிறந்த ஆட்டகாரருக்கான பரிசாக எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கும், அதிக விலையில் விற்பதால், அதில் நிரப்பி ஓட்ட நூறு லிட்டர் பெட்ரோலும் கொடுக்கிறார்கள்.

இரண்டாவது கனவில் நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறேன். எதிர்பார்த்ததை போல சிச்சரும் போருமாக விளாசுகிறேன். அரங்கம் அதிர மக்கள் என் பெயரை வாய் பிளந்து கூவி கொண்டு இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண் தன் அண்டர்வேருக்கு சற்று மேலாக என் பெயரை பச்சை குத்தி இருந்ததை டிவி கேமரா போகஸ் பண்ண, அரங்கத்தில் உள்ள பெரிய திரையில் மக்கள் அதை கண்டு மகிழ்ந்தார்கள். ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றதால் ஷில்பா ஷெட்டியும் என்னை முத்த மழையில் முக்கினார். ஆனால் மூன்றாவது கனவு ஆரம்பித்து சிறிது நேரத்திலே திடீரென்று கலைந்து வந்துவிட்டது. அந்த கனவில் மும்பை அணிக்காக அட்டகாசமாய் விளையாடி கொண்டிருந்தேன்.

விழிப்பு வந்து அதற்கு பிறகு தூங்க முடியவில்லை. காலை ஆறு மணி இருக்கும். பல் துலக்கி விட்டு வெளியே வந்து கடையில் தேநீர் அருந்திவிட்டு அப்படியே நடந்தேன் கொஞ்ச தூரம். மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். கடைக் காரர்கள் மார்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி மூட்டையை சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். பேப்பர் போடும் பையன் ஒருவன் மிதிவண்டியை வேகமாய் மிதித்து சென்று கொண்டிருந்தான். ஒரு ஏழை தாத்தா சாலை ஓரம் உள்ள குப்பையை கலைத்து வேண்டியதை மட்டும் பொறுக்கி கொண்டிருந்தார். குப்பைதானே அது அங்கே தானே கிடக்க போகிறது யார் எடுக்கப் போகிறார்கள்? என்று நினைத்தால், நாம் செல்வதற்குள் வேறு யாரோ பொறுக்கி சென்றிப்பார்கள். காலை நேரம் எவ்வளவு முக்கியமானது என்று இவர்களுக்கு மட்டுமே தெரியும். நடந்து சென்று கொண்டிருக்கும் போது கீழே அடிபட்டு இறந்து கிடந்த ஒரு பெருச்சாளியை பார்த்தேன். அதை பார்த்த போது நாட்டில் நிறைய ஊழல் பெருச்சாளிகள் உயிருடன் உண்டு கொழுத்து சுற்றி வருவது என் நினைவுக்கு வந்தது.

 
னிதர்களாய் பிறப்பது அரிது என்று ஔவையார் பாடியிருக்கிறார். ஆனால் மனிதனாய் வாழ்வது மிக அரிதாய் படுகிறது. ஆளும் வர்க்கமும், பணக்காரர்களும் மட்டுமே தங்களின் அரிதான மானிட பிறப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. நம்மூர் அரசியல்வாதிகள், எப்போதும் பரபரப்பாய் ஊழல் செய்வார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள். அமைச்சரோ முதல் அமைச்சரோ அவசர அவசரமாய் ஊழல் செய்ய சாலையில் செல்லும் போது நாம் கடுமையான ட்ராபிக்கில் நாம் அவதி பட்டு அவர்கள் செல்ல வழிகொடுக்க வேண்டும். டாக்டர் அன்புமணி அவர்கள் கேப்டன் தோனி இனி மதுபான விளம்பரத்தில் நடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகம் காசு கொடுத்தால் தோனி அவர்கள் வைக்கிங் பனியன் ஜட்டி விளம்பரத்திலும் நடிப்பார். மேலும் கலைஞர் விட்டு கொடுத்தால் கலைஞரின் காப்பி கொட்டை (காப்பீட்டு திட்டம்) விளம்பரத்தில் கூட நடிப்பார்.


ழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்தும் போராட்டத்தை வினவு போன்ற சில கம்யூனிச(?) வலைப்பூக்களும் கம்யூனிச வாதிகளும், இதை நடுத்தர வர்க்கத்தின் நோகாமல் நொங்கு தின்னும் போராட்டம் என்றும், மொன்னையான மெழுகுவர்த்தி போராட்டம் என்றும் தாழ்வாக பேசுகிறார்கள். ஐ.டி கம்பனியில் வேலை செய்யும் மகான்கள் பொழுது போக்காய் இதில் பங்கு கொண்டார்கள் என்று எள்ளல் பேசினார்கள். எதுவுமே ஆரம்பித்தவுடன் மிகச் சரியாய் வந்துவிடாது. தனக்கென்று விளைவுகள் அதிகமானால் மட்டுமே தேச பக்தியும் சரி, விளையாட்டும் சரி தீவிரம் அடையும். கடந்த வாரம் கூட IAC (India Against Corruption) -யின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் மெரீனா கடற்கரையில் நடந்தது. நிறைய சிறுவ சிறுமியர்கள் முதல் அனைத்து வயதினரும் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு போராட்டத்துக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே போகிறது. சில பேர் அவர்களுக்கு வேலை ஏதும் இல்லாத போதும், தூக்கம் கெடாமல் உள்ள போதும் மட்டுமே இது போன்ற போராட்டங்களில் பங்கு பெற நினைக்கிறார்கள். அது போன்ற சில பேர் என் ரூமிலும் காணப்பட்டார்கள்.

கடற்கரை சாலையில் இன்னும் நிறைய மக்கள் நடந்து கொண்டும் ஓடி கொண்டும் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஊழலில் பங்கு இருக்கும் அரசியல்வாதியின் குடும்பமாய் இருக்கலாம். நிறைய அங்கிள்களும் ஆண்டிகளும் நாட்டின் பிரச்சினையை விட தங்கள் தொப்பையின் பிரச்சினையையே பெரிதாக எண்ணி அதை தீர்க்க ஓடி கொண்டிருந்தார்கள்.

அதில் சில பணக்கார அங்கிள்கள் விதவிதமான வெளிநாட்டு நாய்களோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நாய் புசுபுசுவென மயிர்களோடு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு நிறைய சலவாய் ஊற்றி கொண்டே சென்று கொண்டிருந்தது. அதன் தலையில் மட்டும் ஒரு பக்கெட்டை மாட்டி விட்டிருந்தால், அது சிறிது தூரம் செல்வதற்க்குள்ளே பக்கெட் நிரம்பி வழிந்திருக்கும். ஏன் இவர்கள் நாய்களோடு ஓடுகிறார்கள்? என்று சிந்தித்தேன். ஒருவேளை தனியாக ஓடினால் சோம்பேறித்தனப்பட்டு நின்று விடுவார்கள். அதனால் கட்ட வண்டியை போல அவர்களை நிற்காமல் இழுத்துக் கொண்டு ஓடவே நாய்கள் அவசியம் ஆகிறது. ஆனால் அதில் ஒரு நாய்க்கு கூட தொப்பை இல்லை. 


னக்கு பொதுவாகவே அறிவுரை சொல்லும் "உன்னால் முடியும் தம்பி" (You Can Win, Who Moved My Cheese?) போன்ற மோட்டிவேசன் புத்தகங்களை படிக்கவே பிடிப்பதில்லை. அப்படியே நீங்கள் படித்தாலும் கற்பூரம் மாதிரி கொஞ்ச நேரத்துக்கு தலை முதல் பாதம் வரை உற்சாகம் கொழுந்து விட்டு எரியும். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அணைந்து விடும். ஆனால் ஊருக்கு உபதேசம் பண்ண எனக்கு நிறைய பிடிக்கும். ;-)


ப்பானில் நிலநடுக்கம் வந்ததிற்கு நம்மில் நிறைய பேர் அனுதாபம் சொல்லியிருப்போம். அவர்கள் அத்துணை கஷ்டத்திலும் யாரிடமும் உதவி கோரவில்லை. அதிகபடியான உழைப்பே, அவர்களுக்கு அதிகமான பணத்தையும் கொடுக்கும். இந்தியா தன்னிடம் எது அதிகம் உள்ளதோ அதை அந்த நாட்டிற்கு தரலாம். அப்படி பார்த்தால் பணம், பொருளை தவிர நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடிவது எதுவென்றால் மக்கள் தொகை மட்டுமே. அதுபோல நிலநடுக்கம் ஜப்பானிற்கு பதிலாக இந்தியாவில் வந்திருக்கலாம். நிலநடுக்கத்தில் இறந்தாலும் ஜப்பானியனாக இறக்க வேண்டும். ஆனால் டால்பின்கள் கொல்லப்படும் போது மனிதர்கள் இயற்கையால் சாவது தப்பில்லை. உயிர் என்பது பொதுவானது.கர் புறத்தில் காணப்படும் அப்பார்ட்மென்ட் புறாக்கள் எங்கு போய் முட்டையிடும் என்று வெகு நாளாய் யோசித்திருக்கிறேன். போன மாதம் ஒருநாள் காலையில் எழுந்து பால்கனிக்கு சென்று பார்த்த போது அங்கு பயன்படுத்தப் படாத துடைப்பம் ஒன்றில் ஒரு புறா இரண்டு முட்டையை விட்டு  என் சந்தேகத்தை தீர்த்தது. அதுவும் சென்னை போன்ற மரங்கள் இல்லாத ஊரில் மனிதர்கள் இல்லாத வீடும், அதிகம் புழங்காத பால்கனியும் மட்டுமே அதற்கு குஞ்சு பொரிக்கும் இடங்கள்.நானும் என் கேமராவில் அந்த புறா முட்டை விட்டதில் இருந்து, குஞ்சு பொரித்து, குஞ்சு பெரிதாகி பறந்து சென்றது வரை சுட்டு தள்ளினேன். ஆனால் அது போன பிறகும் அந்த புறா குஞ்சுகள் என் மனதை விட்டு அகலவே இல்லை. ஏனென்றால் அவைகள் பால்கனி முழுதும் அவ்வளவு அசிங்கம் செய்து விட்டு போயிருந்தது. சரி முடிந்தது இனி ஏதும் பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்தேன். சரியாக ஒரு வாரம் கழித்து அதே இடத்தில இன்னும் இரண்டு முட்டைகள் உதித்திருந்தது. என்ன கொடுமைடா என்று திரும்பி மறுபுறம் பார்த்தேன். அங்கு ஒரு முட்டை சற்று பெரிய அளவில் புறா முட்டை போல் அல்லாமல் தனியாக அனாதையாக கிடந்தது. அது காக்கா முட்டையோ இல்லை குயில் முட்டையாகவோ இருக்கலாம் என்பது என் சந்தேகம்.  உடனே நான் தனியே கிடந்த பெரிய முட்டையை எடுத்து அந்த இரண்டு சின்ன முட்டையோடு சேர்த்து வைத்தேன்.

இதற்கு முன்னால் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பெண் புறா, மற்ற கர்ப்பிணி புறாக்களிடம் சொல்லி இருக்கலாம், அந்த வீட்டுகாரர் ரொம்பபபப நல்லவர் என்று. அதற்கு பிறகு அந்த புறா மூன்று முட்டையையும் சேர்த்து அடைகாத்து வந்தது. இப்போது அந்த இரண்டு சின்ன முட்டைகள் உடைந்து குஞ்சு வெளிவந்து விட்டது, அந்த பெரிய முட்டையை தவிர. என் நண்பன் வினோத்துக்கு முட்டை வறுவல் என்றால் மிகவும் இஷ்டம். குளித்து முடித்தவுடன் பால்கனிக்கு சென்று உள்ளாடையை காயப் போடும்போதெல்லாம் அந்த பெரிய முட்டையை ஒற்றை கண்ணாலே பார்ப்பான். நானும் அந்த பெரிய முட்டை எப்போது உடைந்து எந்த குஞ்சு வெளிவரும் என்று மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த பெண் புறாவின் துணையும் கூட அவ்வாறு எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆண்டவா! தேவையில்லாமல் சந்தேகத்தால் ஒரு குடும்பம் பிரிய நான் காரணமாகி விடக் கூடாது.

பாமாவுக்கும் ஒசாமாவுக்கும் நல்ல பெயர் பொருத்தம் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஒபமா ஆட்சியில் ஒசாமா சாவாரா? ஆனால் ஒசாமாவுக்கு கடந்த சனி பெயர்ச்சி பலன்கள் சரியாக இல்லை என்று கணித்து சொல்லியிருக்க, தமிழ் நாளிதளின் ஆஸ்தான ஜோதிடர் யாரையாவது ஒசாமா அருகில் வைத்திருந்திருக்கலாம். இந்திய பிரதமர் மண் மோகன் சிங்  ஒசாமாவை கொன்ற அமெரிக்காவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இவருக்கு தெரிந்தது பாராட்டு, கண்டனம் மற்றும் கவலை தெரிவிப்பது மட்டுமே. மும்பை தாக்குதலில் சிறையில் உள்ள கசாப்புக்கு இந்திய அரசாங்கம் சிக்கன் பிரியாணி கொடுத்து செல்லம் கொஞ்சி கொண்டிருக்கிறது. சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் குறைவாய் இருக்கிறதென்று கசாப் புகார் சொல்லி இருப்பதாய் நம்பத் தாகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.