Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sep 24, 2011

எங்கேயும் எப்போதும் - நமீதா விமர்சனம்
"வண்டியை வேகமா ஓட்டாதிங்க"

இதுதான் கதையின் உட்கரு, வெளிக்கரு எல்லாம். தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்திருக்கும் விபத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி படமாக இதை எடுத்துக் கொள்ளலாம். எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி விளம்பரத்தில் திரையுலக பிரபலங்கள் வந்து அட்வைஸ் செய்வது போல இந்த படத்தில் அஞ்சலி அனன்யா மற்றும் பலர் நடித்து அதை வலியுறுத்துகிறார்கள். ஒரு குறும்படமாய் எடுக்கவேண்டியத்தை நீட்டி பெரும் படமாய் எடுத்திருக்கிறார்.

முக்கால்வாசி கதைகள் பஸ்ஸில் நடக்கும் ஒரு படத்துக்கு, பிண்ணனி இசை என்பது பெரும் பலமாய் இருக்க வேண்டும். ஆனால் இந்த படம் முழுதும் கனாக் காலங்கள் சீரியலுக்கு போடும் இசையை போலவே இருப்பது துரதிஷ்டம். படத்தின் திரைக்கதையும் கனாகாலங்கள் சீரியலில் சிரிப்பை மூட்டுவதற்காக திணிக்கப்படும் திரைக்கதையை போலவே உள்ளது. உதாரணம், Lavazza காபி ஷாப் சீன்கள்.

இதில் இரு காதல் கதைகள். அனன்யாவுக்கும் சாராவுக்கும் உள்ள காதலாவது ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இடையேயான காதல் காட்சிகள் காமெடி ட்ராக்காக உபயோக படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஜெய் பையனுக்கு நடிக்கவே தெரியவில்லை. கிளைமேக்சில் காட்டும் பெர்பார்மன்சை படம் முழுதும் காட்டுகிறார். ". யாரோ தெரியாத்தனமாக "நீ விஜய் மாதிரி இருக்க" ன்னு சொல்லிட்டாங்க. அதை நம்பி இன்னமும் நடித்து கொண்டு இருக்கிறார் அப்பாவியாய். இவரை ஹீரோவாக நினைத்து பார்க்கவே முடியவில்லை.

படம் முழுதும் அஞ்சலி சொல்றதை எல்லாம் வாய் பொத்தி ஒழுங்கா கேட்கும் இவர், "எப்படி நடிக்கறது?" என்பதையும் அஞ்சலியிடம் கேட்டு நடித்திருக்கலாம். ஜெய்யின் பெற்றோர்கள் அவரை கூத்துப்பட்டறைக்கு ரெண்டு வருஷம் அனுப்பிவிட்டால் நலம். சரவ் மற்றும் அனன்யாவின் நடிப்பு கவருகின்றன.

அஞ்சலி பற்றி, அய்யோ என்ன சொல்வது?
அவரது கண்களும் வாயும் போட்டி போட்டு கொண்டு பேசி நடிக்கின்றன. இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்து பாராட்டலாம். இவரது காதாப்பாத்திரத்தை இயல்புக்கு மீறி வடிவமைத்து இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வைக்கின்றன. இவரை சரியாய் பயன் படுத்தினால் சிம்ரனுக்கு அடுத்து ஒரு "நடிகை" தமிழ் சினிமாவுக்கு கிடைக்கலாம்.

அங்காடிதெரு அஞ்சலிக்கு

படம் முழுதும் அங்காங்கே நாலு முழம் மல்லிகை பூவை வாங்கி நம் காதில் சுத்திவிடுகிறார் இயக்குனர். அதை பஸ்ஸில் உள்ளவர்கள் மல்லிகை பூவை வாங்கும் சீன் மூலமாக குறிப்பாய் உணர்த்தியதே இயக்குனரின் திறமை.

நமீதா டச்: எங்கேயும் எப்போதும், ஒரு கமர்சியல் சீரியல்

ஒரு இயக்குனரின் முதல் படம் என்று சொல்லுவதற்கு பெரிய அளவில் எதுவும் இல்லை. படம் முடிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்து என் பைக்கை எடுத்து வேகமாய் தொண்ணூறில் விரட்டினேன் சந்தோசமாய்.

டிஸ்கி: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹிட்சுக்காக மட்டுமே உபயோக படுத்தப்பட்டுள்ளது.


Jul 17, 2011

தெய்வ திருமகள் - நமீதா விமர்சனம்
இயக்குனரின் மதராசபட்டினம் படத்தால் கவரப்பட்டு காண சென்றேன் தெய்வ திருமகள். மதராசப்பட்டினம், டைட்டானிக் படத்தை இன்ஸ்பிரேசனாக வைத்து எடுத்திருந்தாலும், அதன் நேர்த்தியான திரைக்கதை மற்றும் எமி ஜாக்சனின் அழகு மற்றும் நடிப்பு அதை கண்டுகொள்ளாமல் பார்க்க செய்தது. விக்ரமும் அப்படியே நம்பி அவர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பார்.

ஆனால் தெய்வ திருமகள் "ஐ ஆம் சாம்" படத்தை முக்கால்வாசி அப்படியே உருவி எடுக்கப் பட்டிருக்கிறது. அதன் ட்ரைலர் பார்த்தாலே புரியலாம். இப்படத்தின் திரைக்கதையை பார்த்தால், மதராசப்பட்டினம் படத்தின் திரைக்கதையை இவர் எழுதியிருப்பாரா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது.  நல்லவேளை நான் இன்னும் ஒரிஜினல் படம் பார்க்க வில்லை. இல்லையென்றால் என்னால் இந்த படத்தை கடைசி வரை பார்த்திருக்க முடியாது. விக்ரமின் ஹேர் ஸ்டைல் கூட ஒரிஜினல் படத்தின் ஹீரோவை போல உள்ளது.

தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு சொந்த சரக்கு தீர்ந்து விட்டதை சமீப காலமாய் வரிசையாய் வரும் ஆங்கில படத்தின் காப்பி கொட்டைகளே உதாரணம். அந்த வகையில் வேங்கையை காப்பி அடிக்காமல் சொந்தமாய் எடுத்திருக்கும் ஹரி வைரமாய் மிளிர்கிறார்.

எனக்கு விமர்சனம் எழுதும் போது அவ்வளவாய் கதை சொல்ல பிடிக்காது. இந்த படத்திற்கு அதை சொல்வதும் தேவை இல்லாதது.

விக்ரமின் நடிப்பு கதைக்கு ஏற்றார் போல நடிக்காமல், அவார்டுக்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறார். அடுத்த உலக நாயகன் ;-) கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு ஒரு அவார்ட் கொடுத்திருங்கப்பா! பாவம்.

அந்த குட்டி பெண்ணின் அழகையும், சந்தானத்தின் காமெடியையுமே அதிகமாய் நம்பியிருக்கிறார் இயக்குனர். இது சத்தியமாய் குழந்தைகளுக்கான படமில்லை.

தெய்வ திருமகனா? தெய்வ திருமகளா? என்று இந்த படத்தின் தலைப்பை மையப் படுத்தி பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு தெரியவில்லை பிரச்சினை தலைப்பில் இல்லை என்று.

இதில் இந்த விசிலடிச்சான் பன்றிகளின் அலம்பல் வேறு. அடுத்த முறை போகும் போது அவர்கள் வாயில் கட்டையை எடுத்து கொண்டு போய் சொருகி விட வேண்டும்.

தொப்புள் காட்சி, ஆபாசம் இல்லாமல் எடுப்பது குடும்ப படம் என்றால், குடும்ப படம் என்ற ஒரே காரணத்துக்காக படத்திற்கு போக விருப்பப் பட்டால் போகலாம்.

படத்திற்கு போகும் போது மறக்காமல் ஒரு கர்ச்சீப் எடுத்துட்டு போங்க. கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரே உணர்ச்சி திருவிழா நடக்கிறது. இயக்குனருக்கு சன் டீவில ஒரு ப்ரைம் ஸ்லாட் ஒதுக்கி கொடுத்தால் சிறப்பாய் ஒரு சீரியல் எடுக்கக் கூடிய ஒளிவட்டம் தெரிகிறது.


நமீதா டச்: தெய்வ திருமகள், பரிதாபமான கோலம்.

Apr 27, 2011

கோ - நமீதா திரை விமர்சனம்.

சில படங்களை திரை அரங்குகளில் பார்க்க முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்படுவோம். அதே போல் சில படங்களை பார்த்துவிட்டு எதோ ஒரு காரணங்களால் விமர்சனம் எழுத முடியாமல் போனாலும் வேதனையான விஷயம். ஆனால் படத்தை பார்க்கவும் முடியாமல் விமர்சனமும் எழுத முடியாமல் போய் எனக்கு மன கஷ்டத்தை  தந்த சமீபத்திய இரு படங்கள். நமது பாசத்திற்கு உரிய தமிழ் தாத்தா உரைநடை எழுதிய மன்னிக்கவும் கதை வசனம் எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர்.

சரி இனி கோ.இந்த படத்தின் கதை?...என்ன என்று கேட்பவர்களுக்கு, ஆஸ்காருக்கு நாமினேட் ஆகி இருக்கும் இந்த படத்தின் கதையை இன்னும் தெரியாமல் உலவி கொண்டு இருக்கிறீர்களா?

ஒரு மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பொது மக்களும் ஊடகங்களும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை மற்ற விசயங்களோடும் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் அரசியல்வாதியும்,  அரசியல் கட்சியும் தமிழகத்தின் எந்த ஒரு அரசியல்வாதியையோ அரசியல் கட்சியையோ குறிப்பிடுபவன அல்ல என்று மட்டுமே இங்கு நாம் எடுத்து கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் இது போல நடந்து கொண்டு இருக்கலாம்.

பொதுவாக கே.வி. ஆனந்தின் பட ஹீரோக்கள் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் சூர்யாவை போல ஓவர் ஆக்டிங் செய்து வந்த வழியே திரும்பி ஓட வைப்பார்கள். அயனில் முதலில் வரும் ஏர்போர்ட் காட்சிகளில் சூர்யா காட்டும் ஆக்டிங் பார்த்த பிறகு அந்த படத்தின் கதை எனக்கு என்ன என்று தெரியாமல் போனது. இதிலும் ஜீவா அதை செவ்வனே ஒரு கேமராவோடு செய்கிறார்.

கனாகண்டேன் படம் மட்டும் விதிவிலக்கு. கனாகண்டேன் படம் போல இது ஒரு எதார்த்தமான படமாக இருக்கும் என்று நம்பி போனேன். ஆனால் முதல் சீனில் பேங்கில் கொள்ளைஅடித்து விட்டு செல்லும் நக்சல்களை ஜீவா பைக்கில் வீலிங் செய்து கொண்டே சுற்றி சுற்றி படம் எடுக்கும் காட்சியின் மூலமாக இது எதார்த்த படம் இல்லை, இது ஒரு மசாலா படம் தான் என்று சொல்லி நம் முகத்தில் சாணியை கரைத்து அடிக்கிறார் இயக்குனர்.

ஜீவா தின அஞ்சல் என்ற பத்திரிக்கையின் போட்டோகிராபர். கழுத்தில் கட்டிய சாமி தாயத்து போல எப்போதும் கேமராவை கழுத்தில் இருந்து கழட்டாமலே சுற்றுகிறார். பியாவும், கலை உலகத்திற்கு அர்பணிக்கப்பட்ட ராதாவின் வாரிசு கார்த்திகாவும் அதில் பணியாற்றும் அழகான நிருபர்கள். ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கை ஆபிசில் இப்படி எல்லாம் அழகாய் மாடர்னாய் நிருபர்கள் இருப்பாங்களா? என்று தினசரி பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் கனவான்கள் பொறாமையில் பாப்கார்னை கொறித்துக் கொண்டே படம் பார்க்கிறார்கள். பத்திரிக்கை ஆபிஸ் செட்டிங் அப்படியே நிறைய ஹாலிவுட் தரம்.

ஜீவாவின் அம்மாவும் அப்பாவாக வரும் பட்டிமன்ற பேச்சாளரான ராஜாவும் அப்படியே சங்கரின் சிவாஜி டைப் பெற்றோர்கள். ராஜா அவர்கள் பட்டிமன்றத்தில் அருமையாக பேசுவார் என எங்க தாத்தா சொல்லுவாரு.

ஜீவா எந்த பெண்ணையும் தொட்டதில்லை என்றாலும் கூட பியா இவரை தொடும் பொது எறும்பை தட்டிவிடுவது போல தட்டிவிட்டு போய்கொண்டே இருக்கிறார் ராமபிரானாக. தமிழ் கலாசாரத்தில் வாழும் இப்படி ஒரு "இளைஞனை பார்ப்பது மிகவும் கஷ்டம்".கார்த்திகா, நூலை போல சேலை. கண்ணும் இன்ன பிறவும் அழகு. ரஜினி தாத்தாவுக்கும் கமல் தாத்தாவுக்கும் புது இளமொட்டு ரெடி. ஆனால் ரஜினியும் கமலும் பீல்டில் இருக்கிறவரைக்காவது இவர் நிலைத்திருக்க வேண்டும் என்பது எனது அவா. கார்த்திகாவின் மகள் வரும் வரை அவர்கள் பீல்டில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

பாடல் காட்சிகளில் வரும் மலை பகுதிகளிலும், கார்த்திகாவின் இடுப்பு பிரதேசங்களிலும் மனதை லயிக்க வைக்கிறது கே.வி.யின் கேமரா.

பியா தனக்கு எவ்வளவு ரேட் வரும் என்று ஜீவாவை கேட்கும் காட்சியிலும், ஒரு சின்ன பையனிடம் சட்டையை திறந்து காட்டும் காட்சியிலும் இயக்குனரின் முற்போக்கு சிந்தனையை பாராட்டியே ஆக வேண்டும். எனக்கும் பியாவின் ரேட் இதுவரை தெரியவில்லை. ஆனால் ஜீவாவிடம் பியாவுக்கு "ஐ லவ் யு" சொல்ல மட்டும் முடியாமல் போவதற்கு பியாவின் வெட்கம் மட்டுமே காரணம் என்று இயக்குனர் அடித்து சொல்கிறார்.

பியாவுக்கு வரும் முதல் பாட்டு வரும் இடத்திலும், இரண்டாவது பாதியில் வரும் "வெண்பனியே" பாட்டு வரும் இடத்திலும் புகழ் பெற்ற எடிட்டர் கத்தரிக்கோல் கண்னழகன் ஆண்டனி தூங்கி உள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. வீணாய் போய்டும்ன்னு பந்தியில வச்சுட்டாங்க.

முதல் பாட்டில் பெண்களின் இடுப்பை கிராபிக்ஸால் மறைத்துவிட்டு, அடுத்த காட்சியில் சில உழைக்கும் வர்க்கத்து பெண்கள் தெருவில் ஆடும் பொது மட்டும் அவர்கள் இடுப்பை தெளிவாக காமிப்பது என்ன ஒரு பாகுபாடு? என்று என் நண்பன் குமுறி கொண்டே படம் பார்த்தான். அதுவே பின்னால் நிறைய பாடல்களில் கார்த்திகாவின் இடுப்பை பார்த்த பின்பு ஒருவாறாக அவனின் குமுறல் அடங்கியது.

இந்த படத்தை வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் ஒரு உண்மையான பிசினஸ்மேன். இவரின் தொழில் பக்தி உன்னதமானது. பொரிக்கடலை விற்பதில் லாபம் வரும் என்றால் கருணாநிதியின் குடும்பம் பொரிக்கடலை வியாபாரமும் செய்யும் என்று நடிகர் விஜயின் அப்பா கூறியாதாக எங்கேயோ படித்தது உண்மையிலே மிகையல்ல, சிறுமையாகவே தோன்றுகிறது.

ஆனால் கே.வி.ஆனந்த அவர்கள் ஒருவகையில் புத்திசாலி என்பதையும் நாம் ஒப்பு கொள்ள கடமைப் பட்டு இருக்கிறோம்.

நமிதா டச்: கோ - போடாங்கோ!

டிஸ்கி:   ஒருமுறை பார்க்க கூடிய சுமாரான இந்த படத்தின் மீதான என் கோபத்திற்கு காரணம் இயக்குனர் நமீதாவையும், அவர் செந்தமிழையும், சிறு வயதில் சிரமப்பட்டு படித்த கெமிஸ்ட்ரியையும் நக்கல் அடித்ததே.


Dec 17, 2010

மந்திர புன்னகை - நமீதா விமர்சனம்இயக்குனர்கள், நடிகர்களாக மாறுவது தமிழ்நாட்டுல வெரி ஓல்ட் பேஷன். அதை பின்பற்றி திருபழனியப்பன், மன்னிக்கவும். 'கரு'பழனியப்பன் அவர்கள் நடித்த மந்திர புன்னகை படத்தின் போஸ்டர் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தை பார்க்கும் எண்ணம் என்னை விட்டு ரொம்ப தூரம் போய் கொண்டு இருந்துச்சு. சரி விடுங்க. சாதாரண மக்கள் நம்மளுக்கே நாம ஒரு ஹீரோ அப்படிங்கற நினைப்பு அடிமனசுல ஆழமா இருக்கும். அப்படிங்கும்போது திரைத் துறைல இருக்கிற ஒரு இயக்குனர் அப்படி நினைக்கிறது தப்பு இல்ல. ஆனா மத்தவங்கள நினைக்க வைக்கருது தான் தப்பு. என்ன சொல்லவர்றேன்னு புரியலையா? (எனக்கும்தான்)

படம் ரிலீஸ் ஆகி நிறைய நாள் ஆனதுனால் படத்தோட கதை நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். கதை தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

படத்தோட ஒரிஜினல் ஹீரோ வசனம் தான். ஒவ்வொன்னும் ரசிக்க கூடியது. ஆனா அதுவே ஓவர் டோஸ் ஆக போயிடுச்சு. படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டருமே "நான்  நீன்னு" போட்டி போட்டுக்கிட்டு வசனத்தை பங்கு போட்டு பேசி இருக்காங்க. தான் படத்திற்காக எழுதிய டயலாக் வேஸ்டாக போய்ட கூடாது அப்படிங்கறதுக்காக இயக்குனர் நிறைய இடங்களில் வசனங்களை கதாபத்திரங்களின் வாயில் வலிந்து திணித்து இருக்கிறார்.

படத்தோட ஹீரோ, நம்ம  கருபழனியப்பன் அவருக்கு தண்ணி அடித்து கொண்டு  குட்டியோட ஜாலியாக பொழுதுபோக்கற மாதிரி ஒரு கேரக்டர் என்பதிற்காக, படம் முழுவதும் தாடி வச்சுக்கிட்டு மூஞ்சு கழுவாம நம்ம விஜய டி. ராஜேந்தரின் தவ புதல்வன் மாதிரியே வந்து நமக்கு சரக்கு அடிக்காமலேயே வாந்தி வர்ற மாதிரி பீலிங் உண்டாக்குகிறார். டூயட் கூட தாடியோட தான் பாடுறார். இவருக்கும் ஹீரோயினுக்கும் வர்ற ரெண்டு பாட்டுக்கு பதில் கம்முன்னு ஹீரோயினுக்கு மட்டும் ரெண்டு சோலோ சாங் கொடுத்து இருக்கலாம். இவர் சொல்ற கருத்தெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா கிடைக்கறவங்களை எல்லாம் புடிச்சு கருத்து சொல்லி மிகவும் கஷ்டப் படுத்தறார். கருத்துபழனியப்பன்.

மனசில் பட்ட எதையுமே கூச்சபடாம சத்தம் போட்டு பேசுற கேரக்டர் என்பதாலும் படம் முழுவதும் கருவண்டு மாதிரி பயங்கரமா நம்ம காதுக்குள்ள வந்து கத்தி கத்தியே பேசி வலிக்க வைக்கிறார். இவருக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் என்பதற்காக, பேச்சு போட்டியில் சொல்கிற மாதிரி எல்லோரையும் சுத்தி உட்கார வச்சு மூச்சு விடாம கவிதைகளை ஒப்பிக்கிறார்.

இவர் நிறைய "ரேட்டு"களோடு என்ஜாய் பண்ணி இருக்கிற மாதிரி சொன்னாலும், படத்துல ஒரே ஒரு ரேட்டத்தான் (சன் மியூசிக் பிகரு) காமிக்கறாங்க. இன்னும் ரெண்டு மூணு ரேட்ட காமிச்சு இருக்கலாம். ஒருவேளை நடிக்க வைக்க ரேட்டு(சம்பளம்) பத்தலையோ என்னவோ?

விஜய் டீ.வி "நீயா? நானா?"வில் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை விளம்பரம் போடுற மாதிரி இவரு குவார்ட்டர் அடிக்கறத அடிக்கடி காமிக்கிறாங்க. விஜய் டீ.வில போடுற சைனீஸ் டப்பிங் படத்தில் தண்ணி அடிக்கிற சீன் வரும் போது "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு" அப்படின்னு கீழே ஓட விடுவாங்க. அதுமாதிரி இந்த படத்துக்கும்  போட்டங்கன்னா, படத்துக்கு வர்ற சப்டைட்டில் விட இது மிஞ்சிடும். குவார்ட்டர் பாட்டில் அல்லது பிஸ்லேரி பாட்டில் இப்படி படம் முழுவது ஏதோ ஒரு பாட்டில கைல வைச்சுகிட்டே சுத்துறாரு. முடியல!

இப்போ இவர் ஹீரோவாகவும் இனி தொடர்ந்து நடிப்பேன்னு ஊர் முழுதும் உரக்க மைக் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கார். நல்லதோ? கெட்டதோ? நடக்கட்டும்.


"பூனை ஒரு தடவை பாலை ருசி பார்த்துடுசுன்னா, அது மறுபடியும் மறுபடியும் பால் கலசங்களை உருட்ட ஆரம்பிச்சிடும்"ஹீரோயின் மீனாட்சி, இவங்களுக்கு ஆப்டான ரோல். ஆனா இவங்க முகத்த பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இவங்களோட முன்னழகுதான் முன்னுக்கு வருது. இந்த படத்தின் மூலமாக இவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சீக்கிரம் முன்னுக்கு  வரவேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

இசை எப்படின்னு, கரிக்டா தெரியல. டவுன்லோட் பண்ணுன பைல் சரியா இல்ல.

தனக்கு ஒரு ஓரளவு ஹிட் படத்தை கொடுத்த இயக்குநருக்காக, கெஸ்ட் ரோல்ல கொஞ்ச நேரமே வந்தாலும், நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் 'அனுபவிச்சு' நடிச்சு இருக்கார். இந்த மாதிரி கெஸ்ட் ரோலுக்கு சம்பளம் வாங்காமலே நடிக்கலாம். அதே மாதிரி சிநேகாவ கூட அந்த "ரேட்டு" ரோல்ல நடிக்க வச்சு இருக்கலாம். டைரக்டர் மிஸ் பண்ணிட்டார்.

சும்மா காமெடிக்காக படத்தை ஒட்டி எழுதி இருக்கேன். ஆனா படத்தை ஒரு தடவை பார்க்கலாம். கருபழனியப்பனோட கருந்தாடி பார்க்க பயமாக இருந்துச்சுன்னா நைட்ல பார்க்காமல், பகல்ல பாருங்க.

நமீதா டச்: மந்திர புன்னகை, மர்ம புன்னகை.


Nov 9, 2010

வ-குவார்ட்டர் கட்டிங் - நமீதா திரை விமர்சனம்

இந்த தீபாவளிக்காவது சரக்கு அடிக்காம இறேண்டான்னு எங்கம்மா கேட்டு கொண்டதால, பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து வ-குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு போனேன். படம் பார்த்து கொஞ்சமாவது மப்பு ஏறுச்சா? பார்ப்போம்.சவுதிக்கு அடுத்தநாள் அதிகாலை சென்னைல இருந்து பிளைட் ஏற போற நம்ம ஹீரோ சிவாவுக்கு அன்னிக்கு சாயங்காலம் தான் தெரியுது, சவுதிக்கு போனா சரக்கு அடிக்கமுடியாது பொண்ணுங்களோடு மஜா பண்ண முடியாதுன்னு. இதனால கடைசியா இங்க ஒரு சரக்கு அடிச்சிட்டு தான் போகணும்னு முடிவு பண்ணி டாஸ்மாக் டாஸ்மாக்கா அலையும்போது தான் தெரிய வருது தேர்தல் வரும் காரணத்தினால் டாஸ்மாக் மூணு நாளைக்கு அடைப்பு. சரக்கையும் உலக அழகி ஐஸ்வர்யாவையும் காமித்து ரெண்டுல எது வேணும்ன்னு கேட்டா கூட சரக்கு தான் வேணும் சொல்ற அளவுக்கு பைத்தியம். இன்னிக்கு நைட்டுக்குள்ள எப்படியாவது சரக்கு அடிச்சே ஆகணும்ன்னு தன் அக்காவின் புருசனாக போகும் சரணை இழுத்து கொண்டு ஓடி நாயாய் அலைந்து குவார்ட்டர் அடிச்சு மட்டையாகி எப்படி சவுதிக்கு பேக்கப் ஆகிறார் அப்படிங்கறது தான் கதை.

கதாநாயகன் சிவா இந்த கதைக்கு சரியான தேர்வு. ஏன்னா அவரு சாதாரணமா பேசும் போதே நாக்கு குளறி குளறி சரக்கு அடிச்சு மாதிரி தான் பேசுவாரு. இதில் கோவை பாஷையை குளறி எடுக்கிறார். குண்டு சரணுக்கு இது தான் கடைசி படம். காரணம் இப்போ ரீசெண்டா ஒரு பேட்டியில பார்க்கும் போது ரொம்ப ட்ரிம் ஆகிவிட்டார். நல்ல நடிப்பு. என் சார் ஒல்லி ஆனிங்க? ஹீரோவா நடிக்கிற ஆசை வந்துடுச்சா? (பசு மாடு பல்லியா மாறிடுச்சு.)

எஸ்.எஸ் மியூசிக் லேகாவுக்கு படு லூசுதனமான, படிப்பு ஏறாத மக்கு பொண்ணு கேரக்டர். அதை ரொம்ப சிறப்பா செய்து இருக்கார். படம் ஆரம்பிக்கும் போது கற்பூரம் காமிக்கிற மாதிரி இவர சில சீன்ல காமிச்சிட்டு அப்புறம் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி தான் திரும்பவும் கொண்டு வர்றாங்க. காமெடி படம் அப்படிங்கறதால வில்லன்களும் காமெடிதான் பண்றாங்க.


இசை ஓகே ரகம். ஜி.வி பிரகாஷ் அவர்கள் Step Up ட்ராக் மியூசிக் ஒன்றை உருவி பின்னணி இசையில் கோர்த்துள்ளார்.

படம் ஆரம்பித்து பத்து நிமிசத்திற்கும் மேலாக படு மொக்கையாக ஆரம்பித்தாலும் போக போக தம் கட்டி விடுகிறது. குறும் படமாக எடுக்க பட வேண்டிய ஸ்டோரி லைன் என்றாலும் இன்னும் கொஞ்சம் நேரம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை இன்னும் நிறைய சேர்த்து இருக்கலாம். படத்திற்கு பலமே டயலாக்ஸ், ஒளிபதிவு மற்றும் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புமே.

சரக்கு அடிக்காத பல "உத்தமபுத்திரர்களுக்கு"  இந்த படம் பிடிக்காமல் போயிருந்தாலும், குவார்ட்டர் அடித்து பழக்கம் இல்லாத எனக்கு (ஒன்லி பியர்) ஓரளவுக்கு பிடித்திருந்தது. ஒரு தடவை தியேட்டரில் பார்த்து டைம் பாஸ் பண்ண கூடிய படம்.


நமீதா டச் : வ-குவார்ட்டர் கட்டிங் : மப்பு ஏறுச்சா? லைட்டா....

Oct 27, 2010

ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி - ஒரு இனிய அனுபவம்ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி அப்படிங்கற தலைப்ப பார்த்த உடனே நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரியாம அவசர அவசரமா லிங்க்க கிளிக் பண்ணி உள்ள வந்திருந்திங்கன்னா, நீங்க

  • உலக படமான எந்திரனை இன்னும் பார்க்கவில்லை. (இது மட்டும் கலாநிதி மாறனுக்கு தெரிஞ்சுது, இதுக்கு தனியா உங்க மேல கேசு போட்டு லீகலா நடவடிக்கை எடுப்பார்)
(அல்லது)
  • ஆறாவது படிக்கும் போதே செக்ஸ் புக்கை தமிழ் புக்குக்கு நடுவுல வச்சு படிச்சு சங்க தமிழ் வளர்த்த சங்க பிரபுவாக இருக்கலாம். (எந்திரன் படத்தை பார்த்தும் உலக அழகி ஐஸ்வர்யாவை கடித்த ரங்கூஸ்கியையும் சுத்தமாய் மறந்து, குஜாலான மேட்டருன்னு நினைச்சு தெரியாம உள்ள பூந்துட்டிங்க)

இது ரெண்டுல எது உண்மைன்னு பின்னூட்டத்துல மரியாதையா சொல்லிடுங்க. இல்ல நானா கண்டு பிடிச்சேன், அப்புறம் ரங்கூஸ்கிய ஏவி விட்டு, கடிச்சு கடிச்சு விளையாட சொல்லுவேன்.

சரி மேட்டருக்கு வர்றேன். (ஹைய்! உண்மையாலுமே மேட்டரு தானா?)

நைட்டு ஆனா, படுத்து கண்ணா மூடினாலும் தூங்க முடியல. முழிச்சி இருந்தாலும் தூக்கம் வரல. என்னது, யாருமேலாவது லவ்வு வந்திருச்சான்னு கேட்கிறிங்களா? அதுதான் நமக்கு காலைல எந்திருச்சா வர்ற உச்சா மாதிரி அடிக்கடி வருதே. அப்புறம் வேறென்ன?

சென்னைல இந்த ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்க முடியல. உலக அழகிய கடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான. அத விட்டுட்டு நீயும் ஒரு உலக அழகன்தான் அப்படின்னு என் காதுல வந்து கொய்யுன்னு கத்திகிட்டே கடிச்சு டார்ச்சர் பண்ணுதுங்க. இதுல அடிக்கடி நீங்க ரொம்ப நல்லவர்ன்னு வேற பாராட்டு. சரி, நானும் என்னை உலக அழகன்னு சொன்னதுக்காக எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

பொருத்தது போதும்ன்னு பொங்கி எழுந்து போர்த்தினாலும், "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்துல ஜெனிலியாவுக்கு போடுறமாதிரி ஒரு பெரிய ஊசியா போட்டு மறுபடியும் ஒரே பாராட்டு தான். நானும் கலைஞர் வீட்டுக்கு வழி காமிச்சு, "அவுர போய் பாராட்டுங்க. உங்க கூட்டத்துக்குன்னு தனியா ஒரு இடம் பரிசா கொடுத்து, பட்டாவும் போட்டு கொடுப்பாரு" அப்படின்னு சொன்னாலும் காதுலையே வாங்க மாட்டேன்குதுங்க. மார்கழி மாசமே இன்னும் வரல அதுக்குள்ள தினமும் காதுல ஏகப்பட்ட பஜனை. இனிமேல் கொசுக்கடிய பத்தி இந்த மாதிரி கவிதை எல்லாம் சத்தியமா எழுத மாட்டேன்.

சரி மேல மொட்டை மாடில போய் தூங்கலாமன்னு யோசிக்கும் போது, வீட்டுல படுத்தாவே ஜன்னல் வழியா தூக்கி கீழ போட்டு கொன்னுரும். மொட்டை மாடின்னா சும்மா விடுமா? அழகா தூக்கிட்டு போய் கீழ தள்ளி முட்டைய உடைச்சு ஆபாயில் போடுற மாதிரி, மண்டைய உடைச்சு இருக்கிற எல்லா ரத்தத்தையும் குடிச்சிட்டு போயிடும்.

பகல்ல கடிக்கிற கொசுவினால் தான் சிக்கன் குனியா வருது அப்படின்னுட்டு  (அப்போ, சிக்கன் அதிகமா சாப்பிடரதனால இல்லையா?) நீ என்னை நல்லா கடிச்சுக்கோ சொல்லி காலை விரிச்சு படுக்க முடியுமா என்ன?

சென்னைல இது மழை சீசன்னு சொல்லாம, ரங்கூஸ்கி சீசன்னு சொல்லலாம். பல்லி, பாம்புன்னு வச்சு அனகோண்டா மாதிரி பெரிய பெரிய ஹாலிவுட் படமெல்லாம் எடுக்கறாங்களே, இந்த கொசுவ வச்சு யாரும் படம் எடுக்க மாட்டாங்களா? ரங்கூஸ்கி மாதிரி பெரிய சைஸ் கொசுவெல்லாம் சேர்ந்து மனுசங்கள கடிச்சு நிமிசத்துல கொல்ற மாதிரியும், கடைசியா ஹீரோ வந்து காட்ஸிலா படத்துல வர்ற மாதிரி, கொசு முட்டை இடற இடத்தை கண்டு பிடிச்சு எல்லா கொசுவையும் குட்டியோடு சேர்த்து கொல்ற மாதிரி படம் எடுத்தாலாவது நமக்கெல்லாம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்.

அப்படி ஒரு படம் கொசுவ வச்சு மிகவும் பிருமாண்டமா கொஞ்சம் காமெடி கலந்து எடுக்க, நம்ம சங்கர தவிர எனக்கு யாரும் தெரியல. எந்திரன்ல வந்த அந்த சின்ன கொசு சீனை பார்த்த, பக்கத்துல இருந்த ஒரு மூணு வயசு குழந்தை சிரிச்சு சிரிச்சு அதுக்கு கண்ணுல தண்ணியே வந்திடுச்சு (ஒருவேளை அது அழுதுகிட்டு இருந்ததோ?).


டிஸ்கி: 
இந்த பதிவு ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்காமல் இரவு இரண்டு மணிக்கு எழுந்து எழுதப்பட்டு, அனைத்து ரங்கூஸ்கிகளுக்காகவும் டெடிகேட் செய்யப்பட்டது.
இந்த பதிவு எழுதிகிட்டு இருக்கும் போது பக்கத்துல படுத்திருந்த என் பிரெண்டு கேட்டார் "ஏசி இருந்தா கொசு வராதுல?" ஆமாய்யா, கொசுக்கு குளிர் அடிச்சு போய் போர்வை போர்த்தி படுத்து தூங்கிடும். போய்யா யோய்!

Sep 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - நமீதா திரை விமர்சனம்

என்னன்னே தெரியல இப்ப நான் போய் பார்க்கிற படமெல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கு. தமிழ் சினிமா இப்போ சிரிப்பு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாக நிறைய நகைச்சுவை படங்களாக வர துவங்கி இருக்கு. அந்த வரிசையில் சிவா மனசுல சக்தி படத்தோட இயக்குனரோட அடுத்த படம் "பாஸ் என்கிற பாஸ்கரன்."ஹீரோ ஆர்யா, இவரை "பாஸ்" என்று எல்லோரும் கூப்பிட்டாலும், அரசு கலை கல்லூரில படிச்சப்ப எழுதுன நிறைய பரிட்சையில் "பாஸ்" ஆகாததனால் ஏகப்பட்ட அரியர்ஸ் வச்சுக்கிட்டு ஒவ்வொரு வருசமும் கஷ்ட(பிட்டு வச்சு) பெயிலாகி பெயிலாகி எழுதறார். (பெயில் என்கிற பெயில்கரன்).
இப்படியே எந்த வேலைக்கும் போகாம வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்திகிட்டு இருந்தாலும், சலூன் கடை வச்சு மத்தவங்களுக்கு முடி வெட்டி வேலை செய்து கிட்டு இருக்கிற தன்னோட நண்பன் சந்தானத்தை டார்ச்சர் பண்ணி படுத்தி எடுக்கிறார். ஆர்யாவோட அண்ணனுக்கு கல்யாணம் ஆக, அவருக்கு வர்ற பொண்டாட்டியோட தங்கையான ஹீரோயின் நயன்தாரா மேல இவருக்கு காதல் பச்சக்குன்னு வந்துடுது.

உடனே போய் தன்னோட அண்ணிகிட்ட நயனதாராவ பொண்ணு கேட்க, தண்டச்சோறா இருக்கிற உனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முடியும்ன்னு சொல்லி மூஞ்சில காரி துப்பாம அசிங்க படுத்திடறாங்க. தன்னோட அண்ணன், நயன்தாராவோட அப்பா, இப்படி எல்லோருமா சேர்ந்து மேலும் அவமான படுத்த, இவரும் ஆவேசத்தோட வீட்டை விட்டு வெளிய போய் அண்ணாமலை ரஜினி மாதிரி சீக்கிரம் பணக்காரனாகும் 'முடி'வோடு சந்தானதோட சலூன்ல செட்டில் ஆகிறார். என்ன பண்ணி பெரிய ஆள் ஆகலாம் அப்படின்னு யோசிக்கும் போது, தன்னை மாதிரி பிட்டு வச்சு பெயில் ஆன பத்தாம் வகுப்பு பசங்களுக்கு எல்லாம் டுடோரியல் சென்டர் ஆரம்பிச்சு அவர்களை பாஸாக்கி தானும் எப்படி வாழ்க்கைல முன்னேறுகிறார் என்பது தான் கதை.

ஆர்யா நடிப்பில் அசத்துகிறார். காமெடியும் இயல்பாய் வருகிறது. ஆனாலும் கிளைமாக்ஸ்ல வர்ற ஜீவா காமெடில இவரையும் மிஞ்சி விடுகிறார். ஹீரோயின் நயன்தாரா எப்பவும் போல ஏதோ ஒரு பவுடர மூஞ்சில பூசிகிட்டு ஏதோ நடிக்கிறார். இவங்கள பார்த்தாலும் ஏதும் மூடு வரல. இவங்கள பத்தி எழுதவும் மூடு வரல.ஆனா படத்துல ஆர்யாவில் இருந்து ஜீவா வரைக்கும் சூப்பர் பிகருன்னு அடிக்கடி சொல்றாங்க. ஒருவேளை அவங்க பிகருன்னு சொல்றது முகத்தை பார்த்து இல்லையோ?"தலதளபதி" சந்தானத்துக்கு போஸ்டர் விளம்பரத்துல அதிகமாக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி படத்துலயும் ஹீரோயின விட அதிகமான காட்சிகளில் வருகிறார். நன்கு வயிறு வலிக்க  சிரிக்கவும் வைக்கிறார். கூட நடிக்கிற ஹீரோவையே பயங்கரமாக கிண்டல் பண்றது கவுண்டமணிக்கு அப்புறம் சந்தானம் தான். இவர் வர்ற சீன் எல்லாமே கைதட்டல் தான். படத்துல வர்ற அந்த கடன்காரனோட மகனா வர்ற குண்டு பையனும் நல்ல நடிச்சிருந்தான். கமல், பரத், விஜய் இப்படி படத்தில் நிறைய நடிகர்களை கிண்டல் பண்ணி இருக்காங்க.

இசை யுவன். "யார் அந்த பெண் தான்" பாட்டு மற்றும் பின்னணி ஓசை ஓகே. மத்தபடி பெரிய அளவுக்கு ஏதும் இல்ல. இது இயக்குனருக்கு ஒரு நல்ல படமாக அமைந்திருக்கலாம். யுவனுக்கு அல்ல.

படத்தோட ஆரம்பத்துல ஆர்யா அரிவால எடுத்துகிட்டு வில்லன தொறத்துவார். அதுக்கு கடைசில ஏன்னு காமிச்சு இருப்பாங்க. சான்சே இல்ல.
கண்டிப்பாக சந்தோசமா குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

நமீதா டச் : பாஸ், Pass ஆகிட்டான்.
Sep 5, 2010

பலே பாண்டியா - நமீதா திரை விமர்சனம்சரி இந்த படத்தோட விமர்சனம் பார்த்துட்டு போலாம்ன்னு பார்த்தா, நிறைய பேர் சிந்து சமவெளி படத்துக்கு தான் அதிகமா விமர்சனம் போட்டு இருந்தாங்க. நீங்க பள்ளிகூடத்துல சிந்து சமவெளி நாகரிகத்த பத்தி படிச்சு இருக்கலாம் (படிக்காதவங்க இங்க படிச்சு மனப்பாடம் பண்ணுங்க). ஆனா இந்த சினிமா சமவெளி ஒரு அநாகரிகம் என்று பரவலாக சொல்றாங்க (இந்த மாதிரி எல்லாம் படம் எடுத்து, சின்ன புள்ளைங்க மனசுல சாரி, பெரியவங்க மனசுல நஞ்சை விதைக்காதிங்க). அதனால நானும் அநாகரிகம் கருதி பலே பாண்டியா படத்துக்கு வண்டிய கிளப்பினேன்.

சரி படத்தோட ரிசல்ட் என்ன? இவரு பலே பாண்டியனா? இல்ல, பல்பு கொடுக்குற பாண்டியனா?

ஹீரோ பாண்டியன் (விஸ்ணு) எது செஞ்சாலும், துரதிஷ்டம் Vodafone dog மாதிரியே கூட பாலோவ் பண்ணிகிட்டே வருது. ஒரு கட்டத்துல வெறுத்து போய் நிறைய தடவ சாக முயற்சி பண்ணி, அதுவும் துரதிஷ்ட வசமாக முடியாம போகிறது. இதனால இவர் ஒரு பெரிய தாதாகிட்ட பத்தாயிரம் ரூபாய் கொடுத்து தன்னை கொல்ல சொல்லி வற்புறுத்துகிறார். அவரும் அதுக்கு சம்மதிச்சு பாண்டிய கொல்ல ஜாதகம் பார்த்து ஒரு நல்ல நாள் குறிச்சிடறார். இதுக்கு நடுவுல இவர் ஹீரோயின் பியாவ சந்திச்சு இவரது வாழ்க்கை மாற, இவர் செத்தாரா? இல்லையா? கடைசியா என்ன நடக்குது அப்படிங்கறத ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் காமெடியா  சொல்லி இருக்காங்க. கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.
 

ஹீரோ விஸ்ணு இந்த கதைக்கு சரியான தேர்வு. இவ்வொரு முறையும் லக் இல்லாம இவருக்கு நடக்கிற விஷயம் எல்லாமே சிரிப்பு சர வெடிகள்.
பியா, அழகான சுருட்டை முடி குட்டி பிசாசு. குட்டி பொண்ணுக்கு குட்டை பாவாடை தான் அப்படின்னு இயக்குனர் சொல்லி இருப்பார் போல. கலைவாணர் விவேக் ஆங்கிலோ தமிழர் கேரக்டர்ல வந்து, அவர் பங்குக்கு அதகள படுத்தறார். அதுவும் அந்த ஒரு ரூபா அரிசி காமெடிக்கு தியேட்டரே அதிர்ந்தது.

ரவுடிகளாக வர்ற எல்லோருமே நல்லா பண்ணி இருந்தாங்க. படத்தில் வர்ற  அரசியல்வாதி ஒரு தடவ ஜாலியா குட்டிங்களோடு இருக்கும் போது அதை வீடியோ எடுத்து ஹீரோயினோட அப்பா வெளியிடபோறேன்னு சொல்லி மிரட்டுவாரு. அதுக்கு அந்த அரசியல்வாதி சொல்லுவாரு "பிரிண்ட் நல்லா இருந்துச்சுன்னா பார்த்துட்டு திருப்பி அனுப்பிச்சிடு. மிரட்டாத".

இசை பாடகர் தேவன் ஏகாம்பரம். மிகவும் சுமார் ரகம். என் பக்கத்துல உட்காந்திருந்த பெரியவர் ஒவ்வொரு தடவ பாட்டு போடும் போதும் என்னை பார்த்து "தம்பி பாட்டு முடிச்சவுடனே என்னை எழுப்பி விடு" அப்படின்னு சொல்லிட்டு தூங்கிகிட்டே இருந்தாரு. உண்மையாலும் பாட்டு மட்டும் இல்லைனா படம் நல்லா இருந்திருக்கும். இவர் பாடகர் அப்படிங்கறதனாலயோ என்னவோ இசையை விட பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.

இன்னும் இந்த தமிழ் சினிமால எத்தனை நாளைக்கு தான் இந்த பாட்டு வைக்கற கலாச்சாரம் இருக்குமோ தெரியல. என் பையன் பொறக்கறதுக்குள்ள பண்ணலைனாலும் பரவாயில்லை எனக்கு பேரன் பேத்தி பொறக்கறதுக்குள்ளவாவது இத நிப்பாட்டிகோங்க.

இயக்குனர் சித்தார்த் முதல் படத்துலையே நல்லா பண்ணி இருக்கார். வசனமும்
அருமை. வாழ்த்துக்கள் சித்தார்த்.

மதராசப்பட்டினம் படத்திற்கு அடுத்து, கல்பாத்தி அகோரம் சகோதரர்களின் இன்னுமொரு சிறந்த படைப்பு "பலே பாண்டியா".

நமீதா டச் : பலே பாண்டியா, கலக்கிட்ட.

Sep 1, 2010

நான் மகான் அல்ல - நமீதா திரை விமர்சனம்

இந்த வாரம் முழுதும் எதுவுமே எழுத யோசிக்க முடியல. சின்ன வயசுல கடவுள் கிட்ட நல்லா படிக்கணும்ன்னு வேண்டுகிற மாதிரி, இப்ப பதிவு எழுத ஏதாவது தீம் கிடைக்கணும்ன்னு வேண்டணும் போல.
படத்தோட தலைப்பை பார்த்து முதலில் ஒரு வித்தியாசமான கதை அம்சம் உள்ள படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனா படத்துல நினைத்த மாதிரி கதை அம்சம் இல்லைனாலும், திரைக்கதை அம்சமாக இருந்துச்சு.

தன்னோட பிரெண்டோட கல்யாணத்துல காஜல் அகர்வால பார்த்து சைட் அடிச்சு, லவ் பண்ணறாரு ஹீரோ கார்த்தி. இதற்கு இடையில கஞ்சா அடிச்சிகிட்டு காலேஜ் படிக்கிற ஒரு நாலு பசங்க, நிறைய பொண்ணுங்கள ரேப் பண்ணி கொன்னுகிட்டு இருக்காங்க. அந்த மாதிரி ஆகுற ஒரு கொலைக்கு, கால் டாக்சி டிரைவர் ஆக வேலை செய்யுற கார்த்தியோட அப்பா சாட்சி ஆக மாற, அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடறாங்க. உடனே இதை எல்லாம் மன்னிக்க நான் மகான் அல்ல ( படத்தோட தலைப்புக்கு சம்பந்தம் வந்துடுச்சா? )  என சொல்லி கார்த்தி, கத்தி இல்லாம புறப்பட்டு போய் அந்த பசங்க எல்லோருக்கும் பாடை கட்டறது தான் கதை.


தெலுங்குல "மகதீரா"வும், "ஆர்யா 2"  படமும் பார்த்ததில் இருந்து, காஜல எனக்கு நிறையவே பிடிச்சிருச்சு.  மிகவும் அழகான, அவ்வளவு பெரிய கண்ணு (கீழ இருக்கிற படத்த பாத்துட்டு கண்ணு மட்டும் தானா அப்படின்னு கேட்க கூடாது). "கோலிகுண்டு கண்ணு, கோவப்பழ உதடு" பாட்டு இவங்களுக்கு மிகவும் பொருத்தமா இருக்கும். இப்பவெல்லாம் காஜல் தான் தினமும் என் கனவுல வந்து கஜல் பாடறாங்க. ஹி! ஹி!கார்த்தி துரு துருன்னு ஜாலியான கேரக்டர். காமெடி பண்றதுல விஜய்க்கு போட்டியா ( ;-) வர நிறைய சான்ஸ். இவருக்கு நல்ல நல்ல படமா அமையுது. காதல், சண்டைன்னு கலக்குறாரு. அதுவும் அவங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் பழிவாங்க புறப்பட்டு போகும் போது, அவரோட அண்ணன் மாதிரி இவரும் சிங்கம்ன்னு நிரூபிக்கிறார்.

யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. யுவன் பாடுன "கண்ணோடு காதல் வந்தால்" பாட்டு அசத்தல். "ஒரு மாலை நேரம்" பாட்டு படத்துல வரல. நானும் எங்கடா இடைவேளைக்கு அப்புறம் ஹீரோயினோட முகத்த ஒரு தடவ காமிச்சு, இந்த பாட்ட போட்டுருவான்களோ அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன். பரவால்ல அந்த மாதிரி டைரக்டர் ஏதும் think பண்ணலை.

படத்தோட முதல் பாதி காதல் ரொமான்ஸ், காமெடின்னு சூப்பரா போகுது. இரண்டாவது பாதி முழுதும் பழி வாங்கும் படலம். அதிக வன்முறை. அந்த பசங்க வர்ற சீன் எல்லாமே படு பயங்கரமா இருக்கு. பிரெண்டோட காதல், அவனோட காதலியையே கற்பழித்து கொல்றது, இது எல்லாமே இப்போ நம்ம நாட்டுல நடக்கிறத வெளிப்படுத்துற காட்சிகள்.

அதனால் குழந்தை குட்டிகளோட படம் பார்க்க போனிங்கன்னா, இடை வேளைக்கு அப்புறம் உங்க குழந்தைகளுக்கு ரெண்டு பாப்கார்ன் பாக்கெட் வாங்கி கொடுத்து கூட்டி கிட்டு வந்துருங்க.

இந்த படம் படு மொக்கையாக போய்ட்டா, இந்த மாதிரி படத்த பார்க்க நானும் மகான் அல்ல என்று நமீதா டச் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா படம் எஸ்கேப் ஆகிடுச்சு. அதனால,

நமீதா டச் : நான் மகான் அல்ல, இனிது இனிது இடைவேளை வரை.டிஸ்கி: நமீதா பெயரை ஹிட்ஸ்க்காக மட்டுமே உபயோக படுத்தியுள்ளேன். இதை தவிர, சத்தியமாக எனக்கும் நமீதாவுக்கும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை.

Aug 20, 2010

இனிது இனிது - நமீதா திரை விமர்சனம்உதயம் தியேட்டருக்கு நான் மகான் அல்ல படத்திற்கு போய் டிக்கெட் கிடைக்காததால் இந்த படத்திற்கு போனேன். (ப்ளாக்ல ஏகப்பட்டது கிடைக்குது... காசு மட்டும் கொடுத்திங்கன்னா, பைக்க நிறுத்தி ஸ்டாண்ட் போடுறதுக்குள உங்க பாக்கெட்ல டிக்கெட் இருக்கும். போலீஸ் எல்லாம் இருக்காங்களா?. ஆனா இதுவும் ஒரு வகைல நம்மள மாதிரி காசு அதிகமா இருக்கிற ஆளுங்களுக்கு ஓகே தான்.  வரிசைல நின்னு வாங்க வேண்டியது இல்ல). தெலுங்கில் மூன்று வருடத்திருக்கு முன் ஹிட்டான  ஹேப்பி டேஸ் படத்தின் ரீமேக் என்பதால் சரி என்று கொஞ்சம் எதிர்பார்த்து போன படம். எதிபார்ப்பை நிறைவு செய்ததா?

பன்னிரெண்டாவது முடித்து விட்டு கல்லூரி சேரும் பசங்களும் பொண்ணுகளும் எப்படி படித்து காதலித்து இறுதியில் கல்லூரியை முடித்து சந்தோசமான நினைவுகளோடு சோகமாக வெளிய வர்றாங்க என்பதுதான் கதை. படத்தில் அஞ்சலா ஜவேரியை (உள்ளம் கொள்ளை போகுதே ஹீரோயின்) தவிர எல்லோரும் புது முகங்கள் தான். ஜோடியோடு சுத்தி கொண்டிருக்கும் அல்லது சுத்த போகிற இளவயதினர் மட்டுமே ரசிக்க கூடிய படம் அதுவும் மிகவும் பொறுமையோட உட்கார்ந்து பார்த்தால்.

பொதுவாகவே நாம் கல்லூரியை விட்டு வெளியே வரும் பொழுது எல்லோரிடமும் ஆட்டோ கிராப்  நோட்ட மற்ற மாணவர்கள் கிட்ட கொடுத்து நம்மள பத்தி எழுத சொல்லி வாங்குவோம். அந்த மாதிரி நோட்டுல இருக்க வேண்டிய மேட்டர ஹீரோ தன் வாய் வலிக்க வலிக்க படம் பூராவும் சொல்லிகிட்டே வர்றாரு. இந்த மாதிரி சப்ஜெக்ட் எடுக்கும் பொழுது நிறைய சுவாரசியமான காட்சி அமைப்புகளோடு நேர்த்தியான வசனத்துடன் அழகாய் நகைச்சுவையோடு  சொல்லி இருக்க வேண்டும். இதில் முக்கால்வாசி அதர பழசான சீன்கள். புதிதாய் ஏதும் இல்லை. இதுல நாலு ஜோடிகள் லவ் பண்றாங்க. எல்லாரும் காலேஜ் வர்றாங்க, ராகிங் பண்றாங்க, லவ் பண்றாங்க, ஆடுறாங்க, பாடுறாங்க, ஏதோ மொக்க போடுறாங்க, கடைசியா farewell பார்ட்டில பீல் பண்றாங்க....றாங்க...றாங்க...றாங்...றாங்க....றாங்ககிட்ட தட்ட கல்லூரில படிக்கிற எல்லோருமே ஏதோ காமெடி பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க. அதுல விமல்ங்கற கதாபாத்திரத்தில் வரும் பையன் மட்டுமே சிறிது சிரிக்க வைக்கிறார்.

மெயின் கதாபாத்திரத்தில் வர்ற ஹீரோவும் ஹீரோயினும் ஒன்னா பழகுறாங்க, பைக்ல போறாங்க, ஏதோ ஐடியா கொடுக்குறாங்க. குரூப் ஸ்டடின்னு ஹீரோயினோட வீட்டுல போய் படிக்கிறாங்க. ஆனா லவ் மட்டும் இல்ல. அப்படி  இருக்கும் போது ஹீரோ ஹீரோயின் கிட்ட ஏதோ பேனா, பென்சில் கேட்கற மாதிரி கிஸ் வேணும்ன்னு கேட்கறாரு. அதை ஹீரோயினோட அப்பா தற்செயலாய் பார்த்து விட, உடனே ஹீரோயின் இது பிரெண்ட்ஷிப் மட்டும் தான் அவன் ஏதோ தப்பா கேட்டுட்டான் அப்படின்னு சொல்லி ஹீரோவ போய் அவங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்க சொல்லறாங்க. அதுக்கு ஹீரோ மன்னிபெல்லாம் கேட்க முடியாது. நீ ஏதோ என் பிரெண்டுங்கறதுனால கிஸ் கேட்டேன் அப்படின்னு சொல்ல ரெண்டு பேரும் பிரிஞ்சிடறாங்க. எந்த கிஸ்ஸால பிரிந்தார்களோ அந்த கிஸ் பண்றதுக்காகவே திரும்பவும் சேர்ந்துடுறாங்க.

அந்த குரூப்ல இன்னொரு பையன் சீனியர் பொண்ண விரும்புறார். இன்னொரு பொண்ணோட காதலி அவனுக்கு தெரியாமையே நிறைய பசங்க கூட சுத்துற ஆளு. இது மாதிரி ஏதேதோ நடக்குது. VIT போன்ற கல்லூரில வேணா படத்துல காமிக்கற மாதிரி நடக்கலாம். ஆனா இதுக்காக கிஸ் பண்றத மிகவும் ஆச்சர்யத்தோட பேசறது ரொம்ப ஓவர்.மினி உதயம் தியேட்டர்ல இருக்கறதே கொஞ்சம் சீட்டு தான் (மொத்தம் பத்து வரிசை(rows) தான் இருக்கும்). அதுல கால் வாசி தான் நிரம்பியது. இடைவேளைக்கு அப்புறம் படத்தோட ஹீரோவும் மற்ற சில பேரும் வந்து சில சீட்டுகளை நிரப்பினாங்க. எனக்கு ஓர சீட்டு. ஏதோ பக்கத்துக்கு தியேட்டர்ல இருந்து படம் பார்க்கிற மாதிரி உணர்வு.

என் கூட வந்து இருந்த பிரெண்டுக்கு படம் பிடிச்சு இருந்தது. உங்களுக்கு கேர்ள் பிரெண்டு இருந்து கூட்டிட்டு போனிங்கன்னா, படத்த பார்த்தும் டைம் பாஸ் பண்ணலாம். படம் புடிக்காம போனாலும் டைம் பாஸ் பண்ணலாம் ( பேசிகிட்டு......... ஹி! ஹி!......... வேற ஏதும் தப்பா நினைக்கலையே? ).


நமீதா டச்: இனிது இனிது, பெயர் மட்டுமே.
Aug 16, 2010

வம்சம் - நமீதா திரை விமர்சனம்.பசங்க படத்த தியேட்டர்ல போய் பார்க்க முடியாம போனதற்கு மிக வருத்தமும் அதிக குற்ற உணர்வும் எனக்கு இருந்துச்சு. ஆனா இந்த படத்த தியேட்டர்ல போய் பார்க்க அவ்வளவு விருப்பம் இல்ல. இப்பவெல்லாம் காசு இருந்தா யாரு வேணா ஹீரோ. என்ன பண்ணறது? இப்படியே பார்த்தா எந்த படத்துக்கும் போக முடியாது. ஒரு வகையில மசாலா ஹீரோ கூட்டத்துக்கு நடுவுல, யார வச்சு வேணா எடுத்து ஒரு படத்த ஹிட் பண்ண முடியும்னு டைரக்டர் சவால் விட்ட மாதிரியும் இருக்கலாம். என் பிரெண்டு சுனைனாவுக்காக தான் படத்துக்கு வந்தான். நான் பசங்க படத்துக்காகவும், டைரக்டர் பாண்டியராஜ்க்காகவும் தான் போனேன்


இருந்த எதிர்பார்ப்ப டைரக்டர் ஓரளவுக்கு நிறைவேத்தி இருக்கார். முதல் படத்துக்கு பிறகு ஒரு வித்தியாசமான ஆக்க்ஷன் படம் கொடுத்திருக்கார். ஆனா சுனைனா அசத்திட்டாங்க. தாவணில ரொம்ப கியூட். நல்ல முக பாவனை. துரு துருன்னு அருமையான நடிப்பு. இயக்குனர் ஹரிக்கு அடுத்து ஒரு தாவணி போடுற அழகான ஹீரோயின் கிடைச்சாச்சு. ஹீரோக்கு கிராமத்து ரோல்ங்கறதால ஒத்து போகுது. சிட்டி சப்ஜெக்டுக்கு கஷ்டம். இதுக்கு வேற பிரபல நடிகர் நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்காது.

ஹீரோவுட அப்பா ஒரு ரவுடி. அவர் இறந்ததக்குபுறம் ஹீரோவுட அம்மா அவர எந்த வம்பு தும்புக்கும் போகம நல்ல படியா வளர்த்துறாங்க. ஆனா சுனைனாவ பார்த்து காதலித்த பிறகு அவருக்கும் வில்லனுக்கும் பிரச்சனை வர எப்படி சண்டை போட்டு அவரோட வம்சத்துக்கு மரியாதை வாங்கி தர்றாரு அப்படிங்கறதுதான் கதை.பசங்க மாதிரியே இதுலயும் காதல் காட்சி படு ரொமாண்டிக். புறா விடு தூது மாதிரி இங்க மாடு விடு தூது. கஞ்சா கருப்புக்கு பூனை விடு தூது. கஞ்சா கருப்பு குடும்ப கட்டுப்பாடு அதிகாரியாக 'நடிச்சு' இருக்கார். கஞ்சா கருப்ப நடுவுல வச்சு ஹீரோவும் ஹீரோயினும் பயாலஜிகல் டெர்ம்ல ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசறது செம கலக்கல். செல்போன் சிக்னல் கிடைக்காததனால் மரத்தோட உச்சியில் ஏறி ஒவ்வொரு தடவையும் ஏறி பேசறது சான்சே இல்ல. படு காமெடி. இதுக்கு மேல நம்ம ஊரு செல் போன் கம்பனிகள கேவலப் படுத்த முடியாது.

பசங்க படத்துல வந்த 'புஜ்ஜுமா' குட்டி பையன் இதுல சின்ன வயசு ஹீரோவா நடிச்சு இருக்கான். அப்புறம் பக்கோடா, குட்டிமணி மற்றும் மங்களம் ஒரு சீனுக்கு வர்றாங்க. பசங்க படத்துல வாத்தியாரா நடிச்ச ஜெய பிரகாஷ் இதுல வில்லனா எதார்த்தமான நடிப்பு.

Inception படத்துல கனவுக்குள்ள கனவு வர்ற மாதிரி, இதுல பிளாஷ்பேக்குக்குள்ள பிளாஷ் பேக். படம் இரண்டாவது பாதில கொஞ்சம் மெதுவா போகுது. பாடல்கள் மிகவும் சுமார் ரகம். பின்னணி இசை பல இடங்களில் ஓகே. சில இடத்துல காதுக்குள்ள வண்டு வந்து கத்தற மாதிரி படு இரைச்சல்.

திருவிழா காட்சிகளை நிஜ திருவிழாவை போலவே எடுத்து இருக்காங்க.
மொத்ததுல படத்த ஒரு தடவ பார்க்கலாம். 

நமீதா டச் :  வம்சம், விருத்தி ஆகலாம்.

Jul 5, 2010

கள்வாணி - நமீதா திரை விமர்சனம்
துபாய்ல இருந்து அப்பா (இளவரசு) அனுப்புகின்ற பணத்தில் ஊரில் வெட்டியாக சுற்றிக்கொண்டு செலவு செய்து கொண்டிருக்கிற நம்ம ஹீரோ 'பசங்க' பட விமல். பக்கத்து ஊர்ல இருந்து ஸ்கூல் படிக்க வர்ற வில்லனோட தங்கை புது முக ஹீரோயின் ஓவியா. இந்த ரெண்டு ஊருக்கும் எப்புவும் காய்தான் (சண்டை). இதற்கு இடையில் ஹீரோவிற்கு ஹீரோயின் மேல லவ்வு வந்து கடைசியில் 
எப்படி தாலி கட்டுகிறார் என்பது தான் கதை. உண்மையாகவே படு வித்தியாசமாக யாரும் நினைச்சி பார்க்காத வகையில் தாலி கட்டுவார் (ஹீரோயினே நினைச்சு பார்க்கலை).

படம் நெடுக காமெடியை கலந்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுதும்
மக்கள் சிரிச்சிகிட்டே தான் இருக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு கதை பயங்கர விறுவிறுப்பாக நித்தி மேட்டர் மாதிரி சர்ர்ன்னு பத்திகிட்டு போகுது. நாமளும் பக்கத்துக்கு சீட்டு பருவ சிட்டோடு சேர்ந்து கதையோடு ஒன்றி விடுவது நிஜம்.

முதல் தடவை பார்க்கும் பொழுது சில சீரியஸ் ஆன சீன்கள் வந்தால் கூட கொஞ்ச நேரத்துலையே எதாவது காமெடியை போட்டு சிரிக்க வச்சுடறாங்கப்பா. 


ஹீரோவோட அம்மா சரண்யா ('நாயகன்' நாயகி), ஓவ்வொரு தடவையும் தன் மகன் தப்பு பண்ணும்போது "அவனோட நேரம் தான் அவன் அப்படி பண்ணிக்கிட்டு இருக்கான். இந்த ஆவணி போய் ஆவடி வந்தா, டாப்ல வந்துருவான்னு பட்டிகாட்டு ஜோசியர் சொன்னார்" என்று வசனம் பேசிக்கொண்டே இருப்பார்.


ஆனால், படம் ஆரம்பித்தில் இருந்து கடைசி வரைக்கும் விமல் டாப்லேயே இருக்கிறார். தெனாவெட்டான பேச்சு, பரட்டை தலைன்னு RX100 பைக்கை எடுத்துக்கிட்டு சுத்துவதுமாக பட்டையை கிளப்பியிருக்கிறார். புது முகம் ஹீரோயின் நடிப்பு ஓகே.

"பஞ்சாயத்து"ங்கர கேரக்டர்ல வர்ற கஞ்சா கருப்பு, நீண்ட நாளுக்கு அப்புறம் அவரு அழுது நம்மை சிரிக்க வைக்கிறார். மொத்த களவாணி பசங்களும் சேர்ந்து அவரை தொல்லை பண்ணி சாக அடிக்கறாங்க. அவரு செத்துட்டார்ன்னு ஊர் முழுதும் காரில் ரேடியோ வைத்து அறிவிப்பது நல்ல காமெடி.

E=mc2 மாதிரி ஐன்ஸ்டீன்க்கு போட்டியாக ஒரு சமன்பாட்டை டைரக்டர் கண்டுபிடித்து அதை சமனும்(derive) செய்கிறார். இனி பள்ளிக்கூட பசங்க எல்லாம் இதை யூஸ் பண்ணாம இருந்தால் சரி. 


ஒயின் ஷாப்ல மெனு எடுக்கறது, 
மினி பஸ்ல சைக்கிள தூக்கி வச்சுக்கிட்டு தப்பிக்கறது,
ஹீரோயினுக்கு வீட்டு பாடம் எழுதாதிலிருந்து தப்பிக்க ஐடியா கொடுக்கறது


என சின்ன சின்ன விஷயங்கள் நிறைய நன்றாக பண்ணியிருக்கார் இயக்குனர்.

பாட்டெல்லாம் சம்மர்ல வர்ற மழை மாதிரி வர்றதும் தெரியாம போறதும் தெரியாம லேசாக நனைச்சிட்டு போகுது. டம்ம டும்மா பாட்டு கதாபாத்திரங்களோடு சேர்ந்து நம்மளையும் தட்ட வைக்கின்றது. 


கிளைமாக்ஸ் ஜாலி கொண்டாட்டம். மக்கள் end டைட்டில் முடிஞ்சு ஸ்க்ரீன் மூடுகின்ற வரைக்கும் பார்த்துவிட்டு தான் கிளம்பறாங்க. கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்க சின்ன வீடு, பெரிய வீடு எல்லாத்தையும் கூட்டிட்டு போங்க.

நமீதா டச்: கள்வாணி மச்சான் மனச கள்வாண்டுட்டான்.

டிஸ்கி: கடைசி வரைக்கும் தலைப்பை தவிர எங்கடா நமீதாவொட ஒரிஜினாலிட்டி காணோம்ன்னு பார்க்கறீங்களா?. நிறைய பேர் ஹிட்ஸ் வர்றதுக்காக சாரு பேர யூஸ் பண்ணுவது போல, நான் நமீதா பெயரை யூஸ் பண்ணியுள்ளேன். இதற்கு நமீதாவிடம் இருந்து ஹிட்ஸ் வராமல் இருந்தால் சரி.