Showing posts with label கொரியன். Show all posts
Showing posts with label கொரியன். Show all posts

Nov 23, 2011

Seducing Mr Perfect - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)


தலைப்பை வைத்து இந்த படம் கொஞ்சம் கில்மாவாக இருக்கும் என்று என்று ஆசைப் பட வேண்டாம். அழகான காதல் + நகைச்சுவை கலந்த அட்டகாசமான கதை. கொரியன் மூவி lovers மிஸ் பண்ணவே முடியாத/கூடாத படம்.

சாதரணமாய் கொரியன் பட வசனங்களில் நீங்கள் கொஞ்சமான ஆங்கில வார்த்தைகளை கூட கேட்பது கடினம். "Hello", "Thank You" என்பதற்கு கூட அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. கொரியன் மக்களுக்குக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக பட்ச தூரம். இதை வைத்து 2003-இல் "Please Teach Me English" என்ற சுமாரான காமெடி படம் கூட வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

안녕 = An nyoung = Hello, informal
안녕하세요 = An nyoung ha seh yo = Hello, formal
여보세요 = yaw bo seh yo = Hello on a telephone

கொரியன் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், ஒரு முறைக்கு முந்நூறு முறை யோசியுங்கள். இந்த மொழியை பேச முயற்சி செய்தால் உங்கள் வாயும், எழுத முயற்சி செய்தால் உங்கள் கைகளும் சுளுக்க கூடும்.

அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்க நீங்கள் அதிகம் பொறுமையை வளர்த்து கொள்வது அவசியம். அவர்கள் பேசுவதை கேட்பது சிலருக்கு (எனக்கு) இன்பத்தையும், சிலருக்கு (என் நண்பனுக்கு) வெறுப்பையும் கொடுக்கும்.

ஆனால் இந்த படத்தில் நாயகனுக்கு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கேரக்டர் என்பதால், அவருக்கு கொரியன் மொழி புரிந்தாலும் பேசத் தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இந்த படம் வெளியான போது கொரியன் மக்கள் ஆங்கில வசனத்தை புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.

இனி படத்தின் கதை.

நாயகி (Min-Joon) -க்கு உண்மையான காதல் மீது அபார நம்பிக்கை. தன் காதலனுக்கு Gifts, Greetings Card என்று கொடுத்து தன் உண்மையான அன்பை பலவாறு வெளிப்படுத்தும் கேரக்டர். ஆனால் அவளுக்கு அமையும் ஒவ்வொரு காதலர்கள் அவளை dump செய்து விட்டு கழட்டி விட, அவள் உண்மையான காதலை தேடி தேடி அலைகிறாள்.

நாயகன் (Robin Heiden) நாயகிக்கு முற்றிலும் மாறான, உண்மையான காதல் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லாமல் "Its a Game. It has more Rules" என்று பேசும் கேரக்டர்.

இவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். நாயகி காதல் தெய்வீகமானது என்று சொல்வதை நாயகன் மறுக்கிறார். நாயகி, உண்மையான காதல் கண்டிப்பாக இருக்கிறது என்று விடா பிடியாய் சொல்ல, நாயகன் அப்போது "வேண்டுமானால் என்னை, நீ காதலிக்க வைத்து விடு" என்று கேட்க, நாயகி நாயகனை Seduce செய்ய நிறைய டெக்னிக்குகளை கையாள்கிறார்.

அதில் நாயகி வெற்றி பெற்று, நாயகனுக்கு உண்மையான காதலை மண்டையில் அடித்து புரிய வைத்தாரா? அல்லது தோற்று விட்டு தாடி வளர்க்க முடியாமல் கஷ்டப் பட்டாரா?

விடையை கீழேயுள்ள torrent -யை டவுன்லோட் செய்து பாருங்கள்.

முதல் லிங்க்:  (1.37 GB) - You have to register
இரண்டாவது லிங்க்: (1.65 GB)

நாயகி சுமாரான பிகர் என்றாலும், நடிப்பில் அவ்வளவு கியூட். Hero is a very Handsome guy. படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பெட்ரோல் குண்டு போல பற்றி கொண்டு எரியும்.


நமீதா டச்: Seducing Mr Perfect - Get Seduced

டிரைலர் இங்கே.

Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

Related Posts:

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

My Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)
Nov 15, 2011

My Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)

கொரியன் சினிமாக்களில் ரொமாண்டிக் காமெடி வகையாறா(Genre) படங்களை அடிச்சுக்கவே முடியாது. அதிலும் இந்த படம் கொஞ்சம் அதிரடியான ரொமாண்டிக் காமெடி வகை.

இது முதல் பார்ட். இதன் இரண்டாம் பாகம் பெரிய அளவுக்கு இருக்காது. இந்த படத்தை நிறைய பேர் பார்த்திருக்கலாம். இந்த விமர்சனம் ரொம்ப நாளாக என் Draft-ல் கும்பகர்ண தூக்கம் தூங்கி கொண்டிருந்தது. இப்போது தான் தட்டி எழுப்பி விட்டுள்ளேன்.

கொரியன் படங்களில் "My" என்று ஆரம்பிக்கும் நிறைய படங்கள் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்திருக்கிறது.

My Sassy Girl
My Wife is a Gangster Series
My Boss My Teacher
My Girl and I

என்று இன்னும் நிறைய.Tutor என்றால் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லி தருகிறவர்கள். உங்களுக்கே தெரியும் பணக்காரங்க மட்டும் தான் Tutor -யை "வச்சுக்க" முடியும். 

நாயகன் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹை ஸ்கூலில் படிக்கும் இவருக்கு அட்டகாசமாய் fight செய்ய வரும். இவரின் அதிரடியான fast மூவ்மேன்டினால் எதிரிகளை அழகாய் பந்தாடுபவர்.

ஸ்கூலில் உள்ள இன்னொரு கேங்குடன் (Gang) அடிக்கடி fight செய்து பொண்ணுகளை கவர்வதில் வல்லவரான இவரை பாடங்கள் மட்டும் ஏனோ கவருவதில்லை. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து சாதனை படைத்தது கொண்டிருக்கிறார் நம் நாயகன்.

நாயகி, யுனிவெர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழை குடும்பத்து பெண். இவருடைய அம்மா சிக்கனை fry பண்ணி விற்கும் தொழில் செய்கிறார். நாயகி அருகில் உள்ள சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்து சம்பாதித்து அந்த வருமானம் மூலம் படிக்கிறார்.

அந்த பசங்க செய்யும் குறும்புகளுக்காக அவர்களை அடித்து விடுவதால் அடிக்கடி டியூசன் வேலையும் போய்விடுகிறது.

படத்தின் முதல் சீனிலேயே, பிஞ்சிலே பழுத்த இரண்டு குட்டி பசங்க, ஹீரோயின் உட்கார்ந்திருக்கும் டெஸ்க்குக்கு கீழே டார்ச் அடித்து அவர் போட்டிருக்கும் பாண்டீஸ்சின் (Panties) கலர் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்தால் யார் தான் அடிக்க மாட்டார்கள்?

நாயகியின் அம்மாவுக்கு ஒரு பணக்கார நண்பி இருக்காங்க. அவர் தான் நாயகனின் அம்மா. நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே வயசு தான்.

நாயகன் நன்றாக படித்து பாஸ் ஆக வேண்டும் என்று தன் பணக்கார நண்பி கேட்டு கொள்வதால் நாயகனுக்கு பாடம் சொல்லி தர நாயகியின் அம்மா நாயகியிடம் சொல்கிறாள். அப்படி சென்றால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன் செமெஸ்டர் பீஸை கட்டிவிடலாம் என அவளும் சம்மதிக்கிறாள்.

நாயகன் ஒழுங்காக கையையும் காலையும் கட்டிக்கொண்டு நாயகியிடம் பாடம் கற்றாரா? இல்லை நாயகிக்கு நாயகன் ரொமான்ஸ் பாடம் கற்று கொடுத்தாரா? டியூசனில் என்னென்ன கூத்து நடக்கிறது?

டோர்ரென்ட் டவுன்லோட் செய்து கண்டு மகிழுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு பிடிக்கும்.

முதல் லிங்க்    (1.37  GB)
இரண்டாவது லிங்க் (700 MB)

நமீதா டச்:   My Tutor Friend , Lovely.

ட்ரைலர் இங்கே:Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
Aug 18, 2010

My Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)நான் முதன் முதலாக முழுமையாக பார்த்த கொரியன் படம் இது தான். இதற்கு முன் My wife is a Gangster படத்த HBO வில் கொஞ்சம் பார்த்த அனுபவம். ஆனால் My Little Bride பார்த்த பிறகு எனக்கு கொரியன் படங்களின் மேல் கன்னாபின்னா காதல் வந்துவிட்டது.

தினமும் ஒரு கொரியன் படம் டவுன்லோட் பண்ணி பைத்தியம் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க வீட்டுக்கு யாராவது பிரெண்ட்ஸ் வந்தால்  கூட, சாப்பாடு சாப்பிடறாங்களோ இல்லையோ ஒரு கொரியன் படம் பார்க்காமல் வெளிய போக முடியாது (என்னோட பதிவுக்கு ஓட்டு போடாமலும் வெளிய போக முடியாது).

கூட இருக்கின்ற பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் என்னுடன் சேர்ந்து கொரியன் மொழி பேச ஆரம்பிச்சுட்டாங்க. கம்பெனியில் என்னை ஆன் சைட்டுக்கு அனுப்புவதாக சொல்லியபோது கூட தென் கொரியாவாக இருந்தால் தான் போவேன் என்று அடம் பிடிச்சிருக்கேன்.

கடந்த புட்பால் உலக கோப்பை மேட்சில் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அர்ஜென்டினா, பிரேசில் அப்படின்னு சப்போர்ட் பண்ணி கொண்டிருக்க, நான் தென் கொரியா டீமுக்கு தான் சப்போர்ட் செய்தேன்.


ரொமாண்டிக் காமெடி சினிமாவில் கொரியன்ஸ் படத்தை அடிச்சுக்க முடியாது. கொரியன் படங்கள பார்க்கும் போது கொஞ்சம் தமிழ் படம் பார்க்கிற உணர்வு வரும் (கேவலமாக இருக்கும் என்று தப்பாக நினைத்து விட வேண்டாம்).

 • குடும்ப உறவுகளுக்கு உள்ள பாசம்,
 • காதல்ல உருகி செத்து சுண்ணாம்பு ஆகறது,
 • உப்பு மூட்டை தூக்கிட்டு போறது.
 • காதலியோ காதலோனோ இறந்து விட்டால் பீல் பண்ணி சாகறது
என்று தமிழ் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும்.

இந்த படம் பார்த்தால் உங்களுக்கு புரியும். கொரியன் மொழில 500 தமிழ் வார்த்தைகள் இருக்கிறதாம். செம்மொழி மாநாட்டில் யாரோ சொன்னதாக தகவல். அம்மா அப்பாவை அவர்களும் "அம்மா" "அப்பா" என்று தான் சொல்கிறார்கள். தாத்தாவை, அப்புச்சி என்றே சொல்கிறார்கள்.

இதனால் நம் தமிழ் இயக்குனர்கள் கொரியன் படத்தை டவுன்லோட் பண்ணி கதை உருவாக்குறாங்க. அப்படி நம்ம மோதி விளையாடு இயக்குனர் சரண், 100 days with Mr Arrogant என்ற படத்துல இருந்து தான் ரொமாண்டிக் சீன்களை சுட்டு தன்னோட மூளைய யூஸ் பண்ணி "மோதி விளையாடு" என்ற ஒரு மாபெரும் காவியத்தை படைத்துள்ளார்.

அட என்னமா யோசிச்சிருக்கு பய புள்ள!! அந்த படத்தை நம்ம ரீமேக் புகழ் ராஜா மாதிரி அப்படியே எடுத்து இருந்தால் கூட ஓரளவு ஓடி இருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது தான் நாம ஏன் டைரக்டர் ஆக கூடாது? என்று ஆபிஸ்ல Blog படிச்சுகிட்டே யோசிக்கிறேன். (ஆபிஸ்ல வேலையே செய்யறதே இல்லையா? என்றெல்லாம் இடையில் கேட்க கூடாது. அப்புறம் கதையில் Flow விட்டு போய்டும்). சரி சரண் சாரோட இன்னொரு நாளைக்கு மோதி விளையாடலாம்.

அப்படி இன்னொரு சொதப்பல் தான் "சிக்கு புக்கு".
படம் பார்க்கணும்ன்னு நினைக்கறவங்க, இதை படிக்கறதை நிறுத்திட்டு அப்படியே பேக்அப் பண்ணிகோங்க.

இனி, இந்த படத்தோட கதைக்கு போவோம். நாயகி Boeun ஸ்கூல் படிக்கிற பொண்ணு. இவங்களோட உண்மையான பேரு Moon Geun Young. உண்மையாகவே அந்த நிலா மாதிரி அவ்வளவு அழகு. (என்னை பொறுத்த வரைக்கும் அழகான பொண்ணுங்க எது பண்ணினாலும் அழகாதான் இருக்கும். கொட்டாவி விடும் போது கூட).

நாயகன் Sangmin காலேஜ் பைனல் இயர். இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா வளர்ந்தவங்க. நிலாவுட (நாயகி) தாத்தா நாயகனின் தாத்தாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தின் படி அவங்க வீட்டில் இரண்டு பேரின் விருப்பம் இல்லாமலே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். நிலாவின் அம்மாவிற்கும் இதில் சுத்தமா இஷ்டம் இல்லை.

கல்யாணம் முடிந்து இரண்டு பேரும் தனி குடித்தனம் போய், நிலா பள்ளிக்கூடத்துக்கும், நாயகன் கல்லூரிக்கும் போகிறார்கள். நிலாவுக்கு அவங்க ஸ்கூலில் படிக்கிற ஒரு பேஸ்பால் பிளேயர் மேல் காதல். அந்த பேஸ்பால் பிளேயர் மீது நிறைய பொண்ணுங்களுக்கு காதல். நிலாவோட நெருங்கிய தோழிக்கும்.

இதற்கு இடையே நாயகன் தன்னோட காலேஜ் internship-க்காக நிலாவின் ஸ்கூலுக்கு ஓவிய டீச்சராக வர, அங்கே இருக்கிற ஒரு லேடி டீச்சர்க்கு நாயகன் மேல ஒரு "இது" வருது. கடைசியில் நிலாவுக்கு எப்படி நாயகன் மேல் காதல் வந்து சுபம் போடறாங்க என்பதுதான் கதை.

படத்துல ஒவ்வொரு கதா பாத்திரமும் அவ்வளவு அருமையாக  நடித்திருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை சிரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான் உங்கள் வேலை.

படத்தில் வரும் சுவாரஸ்யங்கள் சில.
 • நாயகனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க அவரோட அப்பா, தண்ணி அடிச்சிட்டு கார் கண்ணாடியை உடைக்கிறது.
 • நிலா ஹனிமூனுக்கு போகாமல் எஸ்கேப் ஆகி அவங்க வீட்டுக்கு முன்னால வந்து நின்று கொண்டிருக்கும் போது நாயகன் வந்து நிலாவோட கழுத்துல கைய வச்சு இழுத்துட்டு போறது.
 • நிலாவோட அம்மா சின்ன பெண்ணான நிலாவை நினைச்சு அடிக்கடி புலம்பிகிட்டே இருக்கறது.
 • நாயகனும் நிலாவும் வீட்டில் சமைச்சு சாப்பிட்டு விட்டு, அந்த பாத்திரத்த கழுவுவதற்கு நம்ம ஊரில் "சாட் பூட் த்ரீ" போல ஒன்றை சொல்லி நாயகன் நிலாவை மாட்ட வைப்பது.
 • நாயகன் அவர் பிரெண்ட்ஸ் கூட பாரில் இருக்கும் போது நிலாவுக்கு கால் பண்ணி அதட்டி அங்க வர சொல்லி கலாய்கிறது.
 • நிலா கண்ணாடிய பார்த்து ஒரு எக்ஸ்பிரஸ்சன் கொடுப்பாங்க பாருங்க. You would love it.(கீழ இருக்கிற வீடியோவில் வரும் பாருங்க.)
 • நிலாவுக்கு loft sided butt ன்னு அவ தம்பி ஓட்டறது. நாயகன் நிலாவை உப்பு மூட்டை தூக்கிட்டு போகும் போது butt ஒரு பக்கமாக இழுக்குதுன்னு கலாய்ப்பது. கடைசியாக நிலாவோட தம்பிக்கு loft sided ball ன்னு அவனோட காதலி கழட்டி விட்டுட்டான்னு அவன் அழறது.
 • நிலா ஒரு பாரில் கரோக்கே (karaoke) பாட்டுக்கு ஆடுவது படு சூப்பர். வரிகளை கவனித்து பார்த்தால் அருமையாக இருக்கும். இந்த பாட்டுதான் என்னோட தற்போதைய ரிங்டோன்.
  
                                இந்த படத்தை எல்லோரும் பார்த்து விட்டு பைத்தியம் பிடித்து கொரியன் படங்களை தேடி தேடி அலைய வாழ்த்துக்கள்.

இந்த படத்தின் டோர்ரென்ட் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.

நமீதா டச்: My Little Bride, Celebrate her.