Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Jul 16, 2010

எமியின் ஏக்கத்தில் (மதராசிபட்டினம் ஸ்பெஷல்)தினமும் உன் நினைவுகளை ஏற்றி
திரியும் கழுதையாகவே மாறி போனேன்.

"மறந்துட்டியா" அப்படின்னு நீ சொன்னத
என்னால மறக்கவே முடியல.

நீ  கழுதைய தூக்கி கொஞ்சினதில் இருந்து
ரோட்டுல போற கழுதையெல்லாம் 
ரொம்ப அழகாவே தெரியுது.
சில சமயம் என் பழைய காதலியை விட.

இரவும் பகலும்
நீயே தான் ஆளுகிறாய் என்னை.
சுதந்திரத்தை மட்டும் கொடுத்து விடாதே!
உனக்கு அடிமையாகவே இருந்து விட்டு போகிறேன்
என் காலம் முழுதும். 


Jul 13, 2010

கண்டுபிடித்து தாருங்கள் என் காதலியை

 

இன்னும் எத்தனை நாள் தான்
உன் பேச்சில்
நான் உறைந்து போவதாயும் 
உன் முத்தங்களில்
உயிர் கரைந்து போவதாயும்
உன் வெட்கங்கள்
என்னை கொள்ளை கொண்டதாகவும் 
கற்பனையாய் எண்ணிக் கொண்டு
கவிதைகளை வெளி வரச் சொல்லி
கட்டாயப் படுத்துவது?

எங்கே இருக்கிறாய்?
உனக்காய் எழுதிய கவிதைகளை
காண்பிக்கப்பதற்க்காக என்னுடைய
கவிதை நோட்டின் தாள்கள்
காற்றில்
பட படத்து கொண்டிருக்கின்றன. 

வார இறுதி நாட்களில்
கடற்கரைக்கு சென்று
உனக்கும் சேர்த்து
மணல் வீடு கட்டி வைத்து
காத்து கொண்டிருக்கிறேன்.

பேருந்து நிறுத்தங்களில்
திருவிழா கூட்டங்களில்
காபி விடுதிகளில்
இன்னும் இதர இடங்களில்
உன்னை தேடி கொண்டு இருக்கிறேன்
திசை காட்டி கருவி இல்லாது
சுற்றி கொண்டிருக்கும்
ஒரு மாலுமியாக.

Jul 7, 2010

அந்நியாய ஆசைகள்

 
மிகவும் பிடித்தமான
கவிதை ஒன்றை
வாசிக்கும் போதெல்லாம்,
அதன் சொந்தகாரனாக
நானே
இருக்க ஆசை படுகிறேன்.

அதுவே
அழகான ஆன்டிகளை பார்க்கும் போதும்.

Jul 1, 2010

பெண்ணாகிய பேனா

 
 
கண்ணுக்கு மையிட்டு
கவிழ்த்துகின்ற பார்வையாலே
கதையொன்று எழுதுகிறாய்
காகிதமாய் நான் மாற.

பார்க்கும் பார்வைகளை
அழுத்தமாய் பார்க்காதே
ஈர்க்கும் உன் (இ)மையால்
என் இதயம் உய்த்து விடும்.

என் வாழ்கையின் அர்த்தங்களை
வரிகளாய் எழுதுகிறாய்
என்று எண்ணிதான்
காற்றில் பட படத்திருந்தேன்.

முழுதாக முடிக்கும் முன்னே
எடுத்து எறிந்தாய்
என்னை
முள்ளை போலே

காரணங்கள் யாது என்றேன்
கதையில் சிறு மாற்றங்கள் என்றாய்.
வலி கொண்டு உணர வைத்தாய்,
அவை கண்கள் அல்ல
முட்கள் என்று.

அத்தனைக்கும் ஆசை படுஅத்தனைக்கும் ஆசை படு 
ஜத்குரு ஜாக்கி வாசுதேவ் சொன்னார்.

ஒன்றுக்கு தான் ஆசை பட்டேன்
எதிர் வீட்டு அங்கிள் 
அடிக்க வருகிறார்.Jun 30, 2010

நிறங்களின் அரசிஉன்னை பார்த்து பழகிய நாள் முதலே
பல வண்ணங்களால்
எனது உலகையே  
கலகம் செய்தாய்.

நீல நிறங்களால்
வான் நீலத்தையும் நீர்த்து போக செய்தாய்.
பச்சை நிறங்களில்
பசுமை புரட்சி செய்தாய்.
மஞ்சள் நிறத்தால்
சூரியனையும் சுருங்க வைத்தாய்.
சிவப்பு நிறத்தால்
எரிமலையை குமுற வைத்தாய்.
இன்னும் பல
பெயர் அறியபடாத நிறங்களில்
மலர்களை மதி
மயங்க வைத்தாய்.

இறுதியாக கரிய நிறத்தால்
என்னை முழுதாக
இருளில் மூழ்கடித்தாய்.

நிறங்கள் அற்று  நான். 
Jun 29, 2010

நிலவல்ல நீ


 
நீ நிலவென்று
யார் சொன்னது?
பார்க்கும் போது
கண் கூச வைக்கிறாய்.

நிலவே சொல்லும் 
சுட்டெரிக்கும்
சூரியன் தான் நீ.
Jun 28, 2010

ஒருமுறை சாக ஆசை படுகிறேன்காதல் என்பது
சொர்க்கமா?
நரகமா?

நானும்
ஒருமுறை சாக
ஆசை படுகிறேன்
விடை அறிய!

Jun 25, 2010

கல்லூரி பேருந்து


 
கல்லூரி பேருந்து 
உன் நிறுத்தம் 
வருவதற்கு முன்பே 
ஏறி அழகாய் அமர்ந்து கொள்கிறாய்
என் நினைவில்.

நீ வராத நாட்களில்
கல்லூரி பேருந்து
கரும் புகையை கக்கிக் கொண்டு
என் உடலை ஏற்றி செல்லும்
ஓர் சவ ஊர்தியாய்
உருமாற்றம் கொள்கிறது.

உனை காணும் நோக்கிலே
தினமும் கல்லூரி வருவதால்
வருடா வருடம்
தவறாமல் பெறுகிறேன்
வருகை பதிவேட்டில்
நூறு சதவிகிதம்.

நீ இருக்கும் வரை
கல்லூரி பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள்
சிறிதும்
என் கவனம் ஈர்ப்பதில்லை.
Apr 30, 2010

முதலை கண்ணிஎன் காதலை சொல்ல
ஒவ்வொரு முறையும்
கண்ணாடியின் முன் நின்று
மனதிற்குள்ளும்
சத்தம் போட்டும்
பேசி சரி பார்த்த
வார்த்தைகளை எல்லாம்
அப்படியே விழுங்கி
கொன்று தீர்க்கின்றன
உன் முதலை கண்கள்.

நீ
அழகில் அகலிகையாய்
பக்கம் நெருங்கையில்
அகழியாய்!

Apr 27, 2010

நீ வராத நாட்களில்...

                                                                                         

வகுப்பறையில் நுழைந்ததுமே
தானாக உன் இருக்கையிலே
விழும் என் கண்கள்
நீ இல்லாத நிலை உணர
வகுப்பறை கடிகாரமும்
சில நொடிகள் நின்று போகின்றன
என் இதய துடிப்போடு.

கடைசி மணி அடிக்கும் வரை
கண் திறந்தே வேண்டுகிறேன்
வகுப்பறையில் மாட்டியிருக்கும்
காலண்டர் தெய்வங்களை.

வருகை பதிவேட்டில்
கடைசி பெயர் அழைக்கும் வரை
வாசலையே வெறிக்கின்றேன்
என் நாள் கடத்தும்
உன் பாதங்களுக்காய்.

இன்னும் நம்பிக்கை தளராமல்
"நீ வரும் பேருந்து தாமதம்",
"உன் நண்பனுக்கு உடல் நலம் சரி இல்லை
மருத்துவமனைக்கு கூட சென்றிருக்கிறாய்"
என்றெல்லாம்
காரணங்களை தேட சொல்லி
என் கற்பனையை
விரட்டுகிறேன்.

இதெல்லாம் பொய்த்து விட்டதாய்
உணர்ந்த
சில நிமிட நேரங்களில்
இருட்ட தொடங்கிவிடுகின்றன
என் பொழுதுகள்.

காத்திருக்கிறேன் உன் விழி சேர்க்கும்
அடுத்த விடியலுக்காக!
Dec 8, 2009

முத்தங்களுக்கு வேண்டும் முன்னுரிமை


 
உன் பார்வையின்
பராக்கிரமம் பற்றியே
பறை சாற்றும்
என் கவிதை நோட்டின்
நடு நடுவே
உன் முத்தங்களுக்காகவும்
சில பக்கங்கள்
விட்டு வைக்கிறேன்.

இனி பார்வைகளை
சிறுகதை ஆக்கி
முத்தங்களை
தொடர்கதையாய் எழுதுவோம்.

நாம் சேர்ந்து கழிக்கும்
நிமிட நேரங்களில்
பார்வைகளையே அதிகமாய்
பரிமாறி கொள்கிறோம்.
இனி,
முத்தங்களுக்கும்
வேண்டும் முன்னுரிமை.

சீக்கிரம் உன் முத்தப் படையுடன்
முன்னேறி வா!
நம் வெட்கக் கோட்டையை
தகர்த்தெறிந்து    
பார்வைகளை சிறை வைப்போம்.
Nov 27, 2009

இதழ் செய்த தவறு

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
தாங்கள் பேச வேண்டிய வார்த்தைகளை
விழிகளை விட்டே பேச வைக்கும்
நம் இதழ்களை கொஞ்சம்
கடுமையாய் 
தண்டிப்போம்
வா!


டிஸ்கி : இதன் ஆங்கில பதிப்பு இங்கே.
Dec 4, 2008

இரண்டாவது காதல்


 
மீண்டும் கவிதை எழுதுகிறேன்.
முகப்பருக்களின் மறுவிளைச்சல்.
பிறந்துவிட்டது
என் இரண்டாவது காதல்.
என் கல்லறை வாசகம்

வருடத்தில் ஒரு முறையாவது
நீ என்னை நினைக்க வேண்டும்
என்பதற்காகத்தான்
உன் பிறந்த நாளில் என்
இறந்த நாள்.
Sep 28, 2008

தனிமையின் ராஜாங்கம்
இரவின் பிள்ளை நான்
நிலவைத் தேடுகிறேன்

அழகின் பஞ்சத்தில் என்னை
கடவுள் படைத்தான்
கள்ளிப் பூக்களாய்
தனிமை என் இடம்தான்

நீரின் அருகாமையா?
சற்றே ஒதுங்குகிறேன்
என் உருவம் தெரிவதனால்

கண்ணாடியை வெறுக்கிறேன்
என்னை அழகாய்க் காட்டுவதில்லை

இயற்கையை வைத்துக்
கவிதைகள் எழுதுகிறேன்
செயற்கைத்தனமாய் காதல் கவிதையும்

உண்ட அவசரத்தில்
உறங்கச் செல்கிறேன்
கனவிலாவது காதல் கிட்டுமென்று

நிழற்படம் எடுக்கையில்
சரி பார்த்தே நிற்கிறேன்
அழகாய் இருந்ததாய்
இதுவரை சரித்திரம் இல்லை

காதல் கைகூடாது
ராசிபலன்களின்
வாழ்நிலை அறிக்கைகள்

தனிமை என் ராஜாங்கம்
விளையாடுகிறேன் சதுரங்கம்
ராணி இல்லாமல்.
Sep 11, 2008

அடக்கமில்லை என் ஐம்புலன்களுக்கு


 
உன் பார்வைக்கு
அலையும் என் கண்கள்

உன் குரல் வேண்டி
கேளாவிரதம் இருக்கும் என் செவிகள்

உன் வாசத்திற்கு
வசமாகும் என் நாசி

உன் முத்தத்தை
வாய் விட்டுக் கேட்கும் என் இதழ்

உன் தோள் உரசி
நடக்கத் துடிக்கும் என் தோல்

என் செய்வேன்?

என் ஐம்புலன்களுக்கு அடக்கமில்லை.
யாம் உணர்ந்தேன் பராபரமே!
மின்னல் வந்தபின் தான்
இடி விழும் என்று அறிவேன்.

அதை உணர்ந்தேன் 
இன்று அவள் பார்த்த 
மின்னல் பார்வையில்
என் இதயத்தில் இடி விழுந்தபோது.
Sep 2, 2008

காதலி சொல் மிக்க மந்திரம் இல்லைஅம்மா அப்பா
அக்கா தங்கை
என யார் திட்டியும்,
என் நகக்கண் சிவந்தும்,
நகம் கடித்தலை விடாத என் பற்கள்
நீ சொல்ல நிறுத்தி விட்டது
தன்னை தானே கடித்(ந்)துக் கொண்டு.

Aug 19, 2008

என்று வெல்வேன்??அழகிய புருவம்
ஆனது வில்லாய்.
அசைகின்ற விழிகள்
அம்புகள் கிடங்கு.

நீ அடிக்கடி தொடுக்கும்
பார்வை அம்புகளின்
ஈர்ப்பு விசைகள்
என் இதயத்தை நோக்கி.

பதினெட்டு முறைக்கு மேல் தோற்றுவிட்டேன்
இருந்தும் தென்படவில்லை
கஜினி முகம்மது கண்ட சிலந்திப் பூச்சி.