Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sep 21, 2012

Dirty Rainரோட்டின் ஓரமாய்
ஒதுங்கி நின்று
லேசாய் தூக்கி பிடித்து
அடர் மஞ்சள் நிறத்தில்
சிறு-நீர் துளிகளை
சட சடவென்று தரையில்
பரவலாய் சிதறடித்துக் கொண்டிருந்தன
சோடியம் விளக்கு கம்பங்கள்,
நள்ளிரவு கன மழையில்.

******************************

ட்டென்று பிடித்த
கன மழையில்
ஒதுங்க இடமில்லாமல்
நனைந்து விட்டிருந்த
அவள் சுடிதாருக்குள்
அப்பட்டமாய் தெரிந்தன,
முழுக்க நனைந்து விட்ட அவள் முலைகள்
பிராவினால் போட்டிருந்த முக்காடு.

******************************

ஜோடியாய்
தொடர் மழையில்
தொப்பலாய் நனைந்து,
யாரும் பார்க்காத போது
கை தொட்டு உரசி
சல்லாபித்து கொண்டிருந்தன,
கொடியில் கிடந்த
அவள் ரவிக்கையும்
என் சட்டையும்.

*******************************

டு சாமம்
காட்டு வழி பாதையை
தனியே கடக்கையில்,
திடீரென வந்து என்னை பிடித்த
பேய் மழையில்
நடுங்கி போனேன்.
அடுத்த நாள் காலை எனக்கு
'பயங்கர' குளிர் ஜுரம்.


பின் குறிப்பு:

இந்த கவிதைகளை நான் எழுதியதிற்கு, நேற்றிரவு பெய்த மழையை தான் நீங்கள் திட்ட வேண்டும். Don't Blame me!!
Aug 7, 2012

அனுகிரகம்

மித வெப்பம்
இதமான காற்று
ஈரப் பதம்
சுரக்கும் நீரூற்று
பழாச்சுளைகள்

நான் உயிர் வாழ
தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது
உன் செவ்வாயில்.

என் உ'தட்டை' தரையிறக்க 
உன் அனுமதிக்காக
மட்டுமே
காத்துக் கொண்டிருக்கிறேன்.


--dedicated to curiosity rover


Jan 1, 2012

ஒளியோவியம்

அறையில் வண்ண மயமான
ஆடம்பர மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி
காற்றில் தள்ளாடும் மெழுகுவர்த்தியை போல
எதிரில் அமர்ந்து அழகாய் பேசி கொண்டிருக்கிறாள்.
அவளை பார்த்து கொண்டு
எரியாமல் உருகி கொண்டிருக்கிறேன் நான்.

மின்சாரம் நின்று போய்
விளக்கு அணைந்து விட்டது.

இப்போது
இன்னும் பிரமாண்டமாய்
ஒளிர்கிறது
அவள் முகம்.
Jul 13, 2011

தெய்வீக காதல்அவள் எனக்கு இல்லை என்று
தெரிந்த பின்னும்
தினம் தினம் அவளை பார்க்கும்
மரண அவஸ்தை
தாங்க முடியவில்லை.

எங்கேயாவது அடிபட்டு
செத்தொழியட்டும் அவள்.

Jul 6, 2011

விழிக்கும் இரவுகள்தினமும் இரவில் 
சீக்கிரம் உறங்க வேண்டும்
என்ற நினைப்பை 
சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு 
என் மூளையில் நிரம்புகிறது
உன்னை பற்றிய சிந்தனைகள்.

பூனைகள் கலவி கொள்ள
அழைப்பு விடுக்கும் சத்தங்கள் 
தொல்லை கொடுத்து
உன் நினைவை கலைக்கின்றன.
அவைகளை விரட்டி விட்டு
தலையோடு போர்த்தி 
உடல் வளைத்து நெளித்து 
மண் புழு போல
மீண்டும் உன் நினைவுகளுக்குள்
புதைந்து கொள்கிறேன்.

மெல்ல நகரும் நிலவு
சொல்லி நகரும் இரவு
நீளும் வானம்
தீரா இரவு.
Jun 24, 2011

உயிர் தின்னும் தேவதை
உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு.
கிளைகளை விரிக்கும்  
ஒற்றையடி பாதைகள் 

எனக்கு பின்னே அவள் வந்து கொண்டிருக்கிறாள்.

உருண்டு திரண்ட அனகோண்டா விழிகள்.
உயிருடன் விழுங்கப்பட்டு
விடும் அச்சத்தில்
மூச்சிரைக்க வேகமாய் நடக்கிறேன்.

இருளின் பயத்தை கொடுக்கிறது
அவள் கண் மையின் கருமை.

காற்றை கிழிக்கும் அவள் பேய் சிரிப்பில்
கரைபுரண்டோடும் நீரோடையின் 
சப்த நாடியும் அடங்கி போகிறது.

நடுநிசி இரவை விட, நடுபகலே 
அடுத்த அடி நகர விடாமல் 
பயமுறுத்துகிறது.

எந்தவொரு இடத்தை பார்த்தாலும் 
அவள் அங்கு நின்று கொண்டிருப்பதாய் 
ஒரு மாயை.

நீரில் விரல் எரியும் குளிரில்  
இழுத்து போர்த்திய போர்வைக்குள்
அனல் அலையாய் பரவுகிறது.

ஒரு நேரத்தில் 
மரணமும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு
என நம்ப தொடங்குகிறேன்.
ஆபத்தை நோக்கி என் கால்கள்
மெதுவாய் முன்னேறுகின்றன

என்னுடன் வந்த நிறைய பேர் இறந்திருக்க கூடும்.
நான் இறந்துவிட்டேனா?
இன்னும் தெரியவில்லை.Apr 20, 2011

நகுலன் என்றொரு அழகன்

என் அக்கா பையனுக்கு,கன்னி ராசிதான்
இந்த கண்ணனுக்கு
கணக்கில்லை
பின்தொடரும் இளங் கன்னிகளுக்கு.


வேட்டையாடுவதில் மாவீரன்
இவனை கண்டாலே
நடுநடுங்கும்
சிங்கம் புலி கரடி (பொம்மை)கள்.


இவன் கை பட்டு
கவிழவே காத்திருக்கின்றன
சரியாக மூடப்படாத
பலசரக்கு டப்பாக்கள்.

நிற்கவே நேரம் இருக்காது
எந்நேரமும் இவன் பின்னாலேயே
ஓட வைத்துக் கொண்டிருப்பான்
பாட்டியையும் தாத்தாவையும்.

பார்க்கும் அநேக நேரம் 
பூனையை இவன் துரத்திக் கொண்டிருப்பான்.
சில நேரம் பூனை 
இவனை துரத்திக் கொண்டிருக்கும்.

Related post :  The Good Stranger: கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்

 


Jan 28, 2011

கடவுளுக்கு வேலை இல்லை - தண்டர் கவிதைகள் 2சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணங்களை
பதுக்கி வைத்திருக்கும் வெள்ளை மனங்களை
மக்களிடம் காட்டிக் கொடுக்க வேண்டாம்.
தமிழக கடல் பகுதிக்குள்
மீன் பிடிக்க அனுப்புங்கள்.
கூடுதலாய் ஒரு ஐந்து லட்சம்
அவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

கோடி கோடியா கொள்ளையடிக்கிறாங்க.
ஆனா ஒரு கோடி மேல போட்டு எரிக்க கூட 
உடம்பு கிடைக்க மாட்டேங்குது.

அமெரிக்காவுக்கு போனால் தான்
அவன் ஆன்மீகவாதி.
ஊழல் செய்தால்தான்
அவன் அரசியல்வாதி.
உடனடி சட்டம் இயற்றப்பட வேண்டும்
நாடாளுமன்றத்தில்.

அரசு அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல
நாட்டுல உயிரோடு உள்ளவனுக்கெல்லாம் போனசு
இலவச சரவெடிகளோடு
இனி வர போகுது
தேர்தல்
இதுதாண்டா உண்மையான தீபாவளி.

புதுமண தம்பதிகளுக்கு மட்டுமல்ல
கெழடு கட்டைகளுக்கும்தான்
அழகா மடிச்சு கொடுப்பாங்க 
வெத்தலைல பணம்.
நாக்கும்  சிவக்கும்
நாடும் சிறக்கும்.

எவ்வளவோ பண்ணிட்டோம்
இதை பண்ண மாட்டமா?
இன்னும் ஒரு சத்தியம்.

எல்லாம் இனிதே அமைதியாக நடந்து முடிந்தது
ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும்
திறம்பட செயல்பட்ட
தேர்தல் கமிஷன்.

உண்ண உணவிற்கு
இலவச அரிசி திட்டம்.
உடுத்த உடைக்கு
இலவச வேட்டி சட்டை வழங்கும் விழா.
இருக்க உறைவிடத்திற்கு
இலவச வீடு வழங்கும் திட்டம்.
சாகாம உயிரோடு இருந்து இதெல்லாம் அனுபவிக்க
கலைஞர் காப்பிட்டு திட்டம்.
இதுக்கு மேல இலவச கலர் டிவி.
அத்தியாவசிய  தேவைக்கு மேல்
அதிகமாகவே கெடைக்குது.
நாட்டுல இன்னும் எதுக்குடா சாமிய கும்புடுறீங்க?

சிறுவயதில் படித்திருக்கலாம்.
எனவே மறந்துவிடாது
உரக்க படியுங்கள் ஒருமுறை.
"மக்களை கொண்டு மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவது மக்களாட்சி".
Jan 10, 2011

'பின்'நவீனத்தவள்.அவள் எனக்கு முன்னே 
போய் கொண்டிருந்தாள்.

அவளுக்கு முன்னே
போய் பார்க்க தூண்டியது
அவள் பின்னழகு.

அழகிய பிகர்
என்றாவது நினைத்திருந்திருப்பேன்.
கடைசியில் அவள்
திரும்பாமலே இருந்திருக்கலாம்.Dec 14, 2010

வளை'வில்' சிக்கிய விழிகள்
அம்பைப் போல
உன் கண்களை நேராய் 
பார்த்து தான் பேசுகிறேன்.
ஆனாலும் என் பார்வைகளை
அனாசயமாக
வில்லாய்
வளைத்து விடுகின்றன
உன் வளைவுகள்.
Nov 21, 2010

கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்.
இன்று ஒரு நாள் மட்டும்
நிலவை விட்டுவிட்டு
பூமியில் நட்சத்திரங்கள்.டிஸ்கி: ஏன் இந்த தலைப்பு அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒன்னும் இல்லீங்க. என் அக்கா பையன் கார்த்திகை தீபத்தை இப்படிதான் சொல்றான். பையனுக்கு கன்னி ராசி அதனாலதான். ஹி! ஹி!Nov 18, 2010

மழையும் மழை சார்ந்த இடங்களும் (சென்னை ஸ்பெஷல்)வறட்சி காலத்தில் 
வற்றிப்போன ஆற்றின் உள்ளே
படகு போல ஒவ்வொன்றாய்
ஆக்கிரமித்து குடியேறிய 
வீடுகளில் வசிக்கும் குழந்தைகள்
ஒவ்வொரு மழை காலத்திலும்
காகித கப்பல் செய்து விளையாட அவசியமில்லை.
அவர்கள் வீடுகளே கப்பலாய் மிதக்கும்
ஆற்றின் பதில் ஆக்கிரமிப்பில்.

------------------------------------------------------------------

காளான் டிஷ் மழைவிட்ட பின்
அபார்ட்மென்ட் மொட்டை மாடியில்
சென்று பார்த்தால்
எண்ணற்ற டிஷ் காளான்கள்.

------------------------------------------------------------------

ஒவ்வொரு மழைக்கு பின்னும்
போடப்படும் தார் ரோடுகள்
தார் ஏடுகளாய்
அடுத்த மழையில்.

------------------------------------------------------------------

போகும் வழியெல்லாம்
சாலையெங்கும்
நிரம்பி வழிகிறது 
மாநகராட்சியின் 
மழைநீர் சேகரிப்பு திட்ட குழிகள்.

Nov 16, 2010

என் தூரத்து காதலிஅழகான ஆண்களே
உன் அருகில் நிற்கத் தயங்கி
தள்ளி நிற்க,
பல அடி தூரத்தில் நான்.

தூரத்தில் இருந்தாலும்   
குறி தவறாமல்
உன் கண்கள் நடத்தும்
இரட்டை ஏவுகணை தாக்குதல்.

விலகவும் முடியவில்லை
நெருங்கவும் திரணியில்லை 
சிக்கித் தவிக்கிறேன்
தப்ப முடியாத  மாய வலையில்.Oct 14, 2010

எமியும், அக்டோபசும்

அடுத்த ஜென்மத்திலாவது
நீ என்னை காதலிப்பாய் என்று
ஆக்டோபஸ் பால்(Paul)
ஆருடம் சொன்னால்
சற்றும் நேரம் தாழ்த்தாமல் 
இப்போதே தற்கொலை செய்து கொள்வேன்
அவசர அவசரமாய்.Sep 6, 2010

கடவுளின் ஆசை - தண்டர் கவிதைகள் 1.சிட்டியெங்கும் அடுக்கடுக்காய்
ஆடம்பர மால்கள்.
கலர்கலராய் ஆடைகள், ஆபரணங்கள்.
வெள்ளையில் போதாது 
வாங்குவதற்கு தேவை
கறுப்பில் பணங்கள்.

எந்திரன் பட ரிலீஸ் ஆனா
டிக்கெட் கிடைக்குமா? 
எதிர்பார்ப்பில் தமிழ் குடிமக்கள்.
தியேட்டர் கிடைக்குமா?
கலக்கத்தில் மற்ற பட தயாரிப்பாளர்களும்,
பிட்டு பட தயாரிப்பாளர்களும்.
இனியாவது கற்று கொள்ளுங்கள்
மடையர்களே 
கழக தயாரிப்பில் இணைந்து வெளியிட.

பார்கிங் கொறைஞ்சது
பத்து ரூபா.
டிக்கெட்டு வித்த விலையில
பாப்கார்ன் பாக்கெட்டு.
குடும்பத்தோடு தியேட்டர்
போன போஸ்டர் பாத்துட்டு
திரும்பி வந்துடலாம்.


இருட்டாய் கிடந்த
ஏழைகளின் குடிசைகளை
வண்ண தொலைகாட்சிகளால்
மிளிர வைத்த
தமிழக அரசு,
இன்னும் ஒளி சேர்க்க
டி.வி.டி பிளேயர்
இலவசமாய் தர முன் வருமா?

ஆட்சியை பிடிக்க கவலையில்லை
கொடுத்த காசுக்கு
வஞ்சகமில்லாமல் 
ஓட்டு போட
நாட்டில் உண்டு
பல கோடி சத்திய சீலர்கள்.

அடுத்த தேர்தல்ல
ஐம்பது காசுக்கு
அரை கிலோ பருப்பு
வழங்கும் திட்டம் வந்தால் போதும்
ஒரு ரூபா அரிசி வாங்கி
சாதம் வடிச்சு
சாப்பிட
சாம்பாரும் ரெடி.

ஏழை எளியவர்கள் உட்பட
எல்லோருடைய வாழ்க்கையும்
செம்மையாக இருக்க,
தமிழ் மட்டும் தான் மிச்சமாய் இருந்தது.
அதற்கும்
மாநாடு நடத்தி
மகிழ்வித்தாயிற்று.

மானாட மயிலாட
பார்க்க முடியல
கரண்டு  அடிக்கடி கட்டாகி போகுது.
விலைவாசி எகிறி போச்சு.
மாசமாசம் குடும்பம் நடத்த
கடன் வாங்க
எது கட்டுபடியாகும்?
அதுக்கு 
ஆக்டோபசதான் கேட்கணும் 
கந்து வட்டியா? மீட்டர் வட்டியா?
இப்போ 
நமக்கு மட்டுமில்ல
தமிழ்நாட்டுக்கே ஏழரைதான்.

சகல விதமான
ஆசைகளும் நிறைவேறி
சுக போகமாய் வாழ்ந்திட
இறைவனை தேடி போய்
கும்பிட்டால்,
கடவுளுக்கே
கலைஞரின் பேரனாகதான்
ஆசையாம்!!!Aug 25, 2010

அனிச்சை செயல்
உன்னை பார்த்த உடனேயே
ஆரம்பித்துவிடுகின்றன,
எனது அங்கங்கள்
தங்களை அழகாய் காட்டிக் கொள்வதற்கு.
Aug 6, 2010

உயிர் எழுத்துக்களை மெய்யாக்கினாய்.ழகழகாய் மையிட்டு
யிரமாயிரமாய் கவிதைகள் எழுதுகின்றன கண்கள்.

தழுக்கு தீட்டும் சாயங்களில்
ர்க்கவில்லை வானவில் நிறங்கள்.

தடு சொட்டும் தேன் துளிக்கு
ர்வலமாய் எறும்பு கூட்டங்கள்.

டுத்துரைக்க எத்தனையோ!
ற்ற இறக்கங்கள் கச்சிதமாய்.

ம்புலனும் உன் வசம்தான், என்னை அடிமையாகவே மாற்றிவிட்டாய்

ப்பிட்டு கொள்ளவே திரணியில்லை
ரமாய் நின்று பூக்கும் மலர் செடிகள்.

ஒளவியம் கொள்ள வைக்கும் பேரழகு            (ஒளவியம் - பொறாமை)
றிணையாய் மாறி போக வைக்கும் எவரையும்.Aug 4, 2010

பிறந்த நாள் பரிசுகாதலியின்
பிறந்த நாளுக்கு பரிசளிக்க
அழகிய ஆடை தேடி
கடை முழுதும் பார்வையிட்டேன்.

பொம்மைகள் அணிந்த
ஆடைகளே மனதை லயிக்க
வேறு வழியில்லாமல்
நிர்வாணப் படுத்தினேன்
இரண்டு மூன்று
பொம்மைகளை.

அன்று இரவு
அவளையும்.
  


Jul 26, 2010

காதல் அரக்கிகாதல் அரக்கி
உன் கனவுகள் பொறுக்கி
கவிதைகள் கோர்க்கிறேன்...
காலையில் எழுந்து  

நிலவை தின்னும்
சூரியன் வெறுக்கிறேன்...


சூரியன் எண்ணம்
வெயிலாய் கருக
பகலில் நிலவாய்
பவனி வந்தாய்...


சினம் கொண்ட சூரியனின் 
புற ஊதா கதிர்கள் 
உன் புறங்கள் ஊடுருவ 
அம்மை போட்டு 
நிலவில் களங்கம்...

இனி கவலை வேண்டாம்.
நிழல் மேகமாய் உனை
பின் தொடர்வேன் 
உன் பாதையெங்கும்.
உனக்கு வியர்க்கும் பொழுது
மழையாய் பொழிவேன்
உன் மேனி எங்கும்...Jul 20, 2010

அங்காடிதெரு அஞ்சலிக்குஆடி மாசம் காத்தா வந்து 
அடி மனச சாச்சு புட்டலே.

கத்தரிகோல் கண்ணால
என் நெஞ்ச
பிட்டு துணியா கிழிச்சு புட்டலே.

ராத்திரி நீ கனவுல வந்தாலே
கொசுக்கடி கூட
சுகமாத்தான் இருக்குதுலே.

ஒவ்வொரு சேலையையும்
நீ வச்சு காமிக்கையில
பக்கத்துலையே நின்னு 
பார்த்து ரசித்திடவே
துணிக்கடை பொம்மையா
மனசு மாற துடிக்குதுலே.

தை, ஐப்பசி மாசம் கணக்கு இல்ல
உன்ன பாக்க வர்றதனால
வாரா வாரம்
எனக்கு பொங்கல் தீபாவளிதான்லே.

இந்த கனிய, கனிய வைக்க
கால் கடுக்க காத்திருப்பேன்லே
எம்புட்டு வருஷம் ஆனாலும்.டிஸ்கி : "எமிய பத்தி மட்டும் எழுதி புட்டலே, என்ன பத்தியும் எழுதுலே" ன்னு நம்ம கனி நேத்து ராத்திரி கனவுல வந்து கேட்டதால இந்த கவிதை.