Mar 4, 2017

பேஸ்புக் பினாத்தல்கள் 3

பிசாசு:

அதிமுக அடிமைகளுக்கும், இயக்குனர் மிஸ்கினுக்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது. இரண்டு தரப்பினருக்கும் கால்கள் தான் மிக பிடித்தமான விஷயம். கால்கள் இல்லாமல் இரண்டு பேராலும் எதுவும் செய்ய முடியாது.

தனக்கு கால்கள் இல்லை என்பதை ஜெயலலிதாவால் ஜீரணிக்க முடிந்திருந்தாலும், கால்கள் இல்லாத அம்மாவை அடிமைகளே ஏற்று கொள்ள மாட்டார்கள். அதனாலேயே அவர் இறந்திருக்கலாம். தாங்கள் விழுந்து கிடக்க, ஒரு ஜோடி கால் மட்டுமே அவர்களுக்கு அவசியம். முகம் முக்கியமில்லை இந்த முண்டங்களுக்கு.

மிஷ்கினின் சில படங்களுக்கும், தற்போதைய நிகழ்வுகளுக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

நந்தலாலா -
தன் அம்மாவை தேடி போகும் மன நலமற்ற அடிமையின் முடிவில்லாத பயணம்.

பிசாசு -
தன் கண் முன்னே இறந்து போய், ஆத்மா சாந்தி அடையாமல், தன் கூடவே இருந்து ஆவியாய் அலைந்து கொண்டிருக்கும் பெண்மணியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் நாயகன். கடைசியில் அது யார் என்று தெரிய, பெரிய அதிர்ச்சியாய் முடிகிறது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் -
ஒண்ட வந்த ஓநாய்கள், யார் உறவும் இல்லாத ஆட்டுக்குட்டியை(???) ஏமாற்றி கொன்று, அதன் காலை வெட்டி சூப் செய்து குடிக்கும் கொடூரமான கதை.வெகுநாளாயிற்று என்று சப்வே சென்றேன் இன்று. பச்சை தமிழனாய் இருந்தும், பன்னாட்டு கம்பெனியின் பர்கர் சாப்பிட்டு, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாவத்திற்கு, வரும் வழியில் இளநீர் குடித்து பரிகாரம் செய்து விட்டேன்.
நவ் பீலிங் நிம்மதி.
நாட்டு மாட்டை காப்போம். வந்தேறி மாடு - The Immigrant Cow வை விரட்டுவோம்.
உண்மை தமிழன் மட்டும் இதை ஷேர் செய்யவும்.போன மாதம் காவல் துறையின் அராஜகத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பொங்கி எழுந்த குமார், தற்போது தியேட்டரில் சிங்கம் 3 படம் பார்த்து சிலிர்த்து கொண்டிருக்கிறார்.
"த்தா! போலீஸ்னா சிங்கம் டா!"


சந்திரமுகி to நீலாம்பரி

நடந்து கொண்டிருக்கும் சினிமாத்தனமான பரபரப்பான காட்சிகளை பார்த்த விளைவு, சின்னம்மா தன் தோல்வியை ஒப்பு கொண்டு சிறைக்கு போகாமல் இருக்க, துப்பாக்கியால் சுட்டு கொண்டு தன் உயிரை மாய்த்து கொள்வாரோ என்றெல்லாம் நேற்று ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனை போல தாறுமாறாய் யோசித்து கொண்டிருந்தேன்.

இப்போதும் அம்மாவின் கல்லறைக்கு போய் சபதம் எடுத்து கொண்டு சின்னம்மா ஓங்கி அடித்ததை பார்க்கும் போது, நான்கு ஆண்டுகள் கழித்து நீலாம்பரியாய் வெளிவந்து பன்னீரை, பழிவாங்க போவதாகவே தெரிகிறது. அவருக்குள் இருக்கும் வலி மறக்காமல் இருக்க, நான்கு ஆண்டுகள் அதை பற்றியே நினைத்து கொண்டு கட்டிய புடவை, ஜாக்கெட்டுடன் குளிக்காமல் கொண்டையை அவிழ்த்து விட்டு, எந்த பார்வையாளரையும் பார்க்காமல் இருக்க போகிறார். அதுவரை அந்த கொண்டையை போட போவதில்லை. சாப்பாடு, தண்ணி மட்டும் குடித்து கொண்டு இருக்க போகிறார். அதையும் எடுபிடி பழனிசாமி எடுத்து சென்றால் தான் சாப்பிடுவார்.

இதுநாள் வரை சந்திரமுகியை பார்த்த தமிழகம், இனி நீலாம்பரியை பார்க்க போகிறது. அதற்கு நான்கு வருடம் காத்திருக்க வேண்டும். அதுவரை பன்னீர்செல்வம், நீலாம்பரியின் வீட்டில் உள்ள வேலைக்காரியுடன் டூயட் பாடி, குடும்பம் குட்டியாய் சந்தோசமாய் இருக்கலாம்.

நான்கு வருடம் கழித்து, குளித்து புது ஜாக்கெட் பச்சை புடவை அணிந்து, கொண்டை போட்டு புல் மேக்கப்புடன் சிறையிலிருந்து பவுடர் பங்கஜமாய் பழிவாங்க வருவார்.

பன்னீருக்கான சிச்சுவேஷன் பாடல் இப்போ இது தான்.

ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ வெக்கம் போனதே
உள்ளுக்குள்ள ஞானம் ஊறுதே
உண்மையெல்லாம் சொல்ல தோணுதே.

வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே.
அட தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழ தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல?


Just by seeing the cinematic scenes happening in real for the past few months, as an average tamil cinema fan, I thought, instead of going to jail, Cinnamma Saskikala would shoot herself with a gun and die. But she takes vow at Amma shrine before go to jail. I was proven wrong. A revenge story begins here.

See, these days how politicians keeping the common man more interested in politics than cinema.

Good days ahead.


Those who like and share the 'PROUD INDIAN' post within two seconds are the one, most likely beating the other NON PROUD Indians who are not standing up for the national anthem at Cinema theatre.


That moment, when you come out of theatre after watching a thriller movie, but outside there are more twist and exciting scenes are happening which thrills you much better than the movie.
And you feel, you wasted 120 Rs.  😼😜

#D16 #AdheKangal


வனித்த வரையில், முதலாளியம்மா தன் வீட்டில் உள்ளவர்களின் பெருமைகளையும், வேலைக்காரி தன் குடும்ப பிரச்சினைகளையும் பேசி பரிமாறி கொள்கிறார்கள்.சே+அட்டைஒரு பேஷனுக்காக சே.குவேராவின் டீ சர்ட்டுகளை அதிகம் அணிந்து இளைஞர்கள், போராளியான அவரை ஒரு பேஷன் மாடலாகவே  மாற்றிவிட்டார்கள். துரைப்பாக்கம் டோல் கேட் அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்கு பெயரே "சே பேஷன்ஸ்". கம்பீரமாய் பேனரில் புகை விட்டுக் கொண்டிருக்கிறார் சே.

சே பெயரில் ஒரு சலூன் ஆரம்பித்தாலும், இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன்.

'சே' யை கூகுளில் தேடினால், அவர் புகை பிடிக்கும் போட்டோ தான் அதிகம் வருகிறது. அவரது 'தம்' நண்பர் பிடல் காஸ்ட்ரோவும் அப்படி தான். இவர்கள் இருவரும் அதிகம் புரட்சி செய்தார்களா? இல்லை புகைப்பிடித்தார்களா? எனும் அளவுக்கு நமக்கு சந்தேகம் வருகிறது.

ஸ்டைலாக புகைப்பிடிப்பது போல் இருக்கும் இவரது போட்டோ, தமிழக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால்,  இந்த டீசர்ட்டுகளை எதிர்த்து "ராமதாஸ் அன்ட் சன்ஸ்" கம்பெனி அறிக்கை விட முன் வர வேண்டும்.

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டை படத்தில், புகை பிடிப்பது போல இருக்கும் அவரது படத்துக்கு கீழே சிறிய எழுத்தில் "புகைப் பிடிப்பது, புற்று நோயை உண்டாக்கும் " என்று போடவும் தமிழக அரசு ஆணை இட வேண்டும். செயின் ஸ்மோக்கர்கள் புத்தகம் படிக்க மாட்டார்களா?

இங்கு, சமீபத்தில் இலக்கிய உலகில் நடந்த "அட்டைப்பட" சர்ச்சையை முன் வைக்கிறேன்.

என்னை பொறுத்த வரை புத்தகத்தின் அட்டைப்படம், அதன் கருத்தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்

புகை பிடிப்பதற்கும், புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அது படிக்க போகும் வாசகனை திசை திருப்பாதா?
சே-வின் கையில் இருக்கும் சுருட்டை எடுத்து விட்டு, ஒரு உடை வாளையோ, குறுந்துப்பாக்கியையோ(Short Gun) கொடுப்பது தானே பொருத்தமாகும். இல்லையெனில் புரட்சி தலைவர் விஜயகாந்தைப் போல சே-வின் கண்ணை சிவக்கவாவது வைக்க வேண்டும். அட்டையை பார்க்கும் போதே, புரட்சி உணர்வு தூண்டப் பட வேண்டும்.

பள்ளிக்கூடம் படிக்கையில், எனக்கு அடுத்த வகுப்பில் படிக்கும் எனது சகோதரியின் பாட புத்தகத்தையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்த நேரிடும். பெரும்பாலும் அட்டையே இருக்காது. சில முறை, பொருளடக்கமும். அதனால் அறிவியல் தேர்வுக்கு, வரலாற்று புத்தகத்தை எடுத்து சென்று பெயிலான துயர வரலாற்றுச் சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன.

அதனால் தான் சொல்கிறேன், அட்டைப்படம் முக்கியம். அட்டை அதை விட முக்கியம்.