Nov 25, 2016

செவ்வாய்க்கு ஒரு பயணம் - ஆபாயில்

ந்தியர்கள் ஏன் அமெரிக்கர்களை விட திருமணத்திற்கு அதிகம் செலவு செய்கிறார்கள்?

சிம்பிளான காரணம், நாம் வாழ் நாளில் ஒரு முறை தான் திருமணம் செய்கிறோம் அவன் அடுத்த சில கல்யாணத்துக்கும், சில ஜீவனாம்சத்திற்கும் போக, மிச்சத்தை தான் செலவு செய்கிறான். நமக்கு கல்யாணம் என்பது ஒரு வழி பாதை.

இருக்கின்ற எல்லா நகையையும், பணத்தையும் சுங்க வரியாய் கட்டி விட்டு, இல்லறத்தின் உள்ளே நுழைந்து விடுகிறோம். பின்னால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று அங்கேயே கடந்து சாக வேண்டியது தான். திரும்பி வர முடியாது. புல் அடித்து விட்டு வந்து ரவுசு பண்ணும் புருஷனை, கல்லை போட்டு கொன்று விடும் மனைவிமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படி இருந்தாலும் சாவு கன்பார்ம். இந்தியர்களுக்காக தான், ஆங்கிலத்தில் வெட்லாக் (Wedlock) என்று பொருள் படும் படி ஒரு வார்த்தையை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையில், 2024 இல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா பிளான் செய்துள்ள ஒரு வழி ராக்கெட் பயணம் போல தான். அந்த ராக்கெட்டில் அனுப்ப மொத்தமாக 100 பேரை நாசா தேர்வு செய்துள்ளது. அதில் மூன்று பேர் இந்தியர்கள். நாம் நினைத்தது போல அந்த மூன்று பேரும் பேச்சுலர் பார்ட்டிகள். இதில் செல்ல திருமணம் ஆனவர்கள் பெரிதாய் நாட்டம் கொள்ளாத காரணம், அவர்கள் அல்ரெடி அது போல ஒரு கிரகத்தில் மாட்டிக் கொண்டிருப்பது தான்.

நமக்கும் செவ்வாய்க்கும் அதிக ரத்த சம்பந்தம் இருக்கிறது. செவ்வாய் தான் நமது திருமணத்தையே முடிவு செய்கிறது.

"பையனுக்கு செவ்வாய் இருக்கா?"
"இல்லீங்க சிகரெட் குடிச்சு குடிச்சு கருப்பாக்கி வச்சிருக்கான்"
"பெண்ணுக்கு செவ்வாய் இருக்கா?"
"ஆமாங்க தினமும் லிப்ஸ்டிக் போடுறா" என்று ஜோக்கெல்லாம் அடிக்க முடியாது.

எவ்வளவு பெரிய இடம் என்றாலும் செவ்வாய் தோஷம் ஒத்து வர வில்லை என்றால், we move forward. செவ்வாய் தோஷம் தான் நமக்கு aptitude டெஸ்ட்.  அதில் பாஸ் ஆனால் தான் குரூப் டிஸ்கஷன், HR இண்டெர்வியூ எல்லாமே.

செவ்வாய்க்கு போக போட்டி போட்டு கொண்டு 39 அமெரிக்கர்கள் செலக்ட் ஆனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னவென்றால் அவர்களுக்கு இந்தியர்களை போல ஒரு கல்யாணம் மட்டும் செய்து வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை. அனால் இங்கிருக்கும் இந்தியன் அமெரிக்கர்களை போல பல திருமணம் செய்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறான்.

Poor Americans. :-P


டிட் பிட்ஸ்:
----------------

மெடிக்கல் அஸ்ட்ராலாஜியின் படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் மனிதனுடைய உடல் பாகங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதன் படி நம்முடைய ரத்தத்திற்கும் செவ்வாய்க்கும் பெரிய சம்பந்தம் இருக்கிறதாம். நாம் அதனால் தான் திருமணத்திற்கு செவ்வாய் பொருத்தம் பார்க்கிறோம். செவ்வாய் இருந்தால் மைனஸ் ரத்தம் வகை, செவ்வாய் இல்லாதவர்களுக்கு பிளஸ் ரத்தம் வகை என்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. ஆனால் பண்டைய காலத்திலிருந்தே நாம் பிளட் டெஸ்ட் செய்து வந்திருக்கிறோம். வேறு வேறு ரத்த வகை இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால், குழந்தைக்கும் தாய்க்கும் உடல் ரீதியான பிரச்சனைகள் கர்ப்ப காலத்தின் போதும், டெலிவரியின் போதும் வரும் என்று சொல்வார்கள்.

நம்முடைய முன்னோர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என சொல்லும்  டாகுமெண்டரி படங்கள் நிறைய யு-டியூபில் இருக்கிறது. நாமெல்லாம் பூமிக்கு வந்த ஏலியன்கள் தான். மனிதர்கள் ஏலியன்களை வெளியே தேடுகிறார்கள். ஆனால் கடவுளும் ஏலியனும் நமக்குள்ளே தான் இருக்கிறார்கள்.

http://astrobix.com/learn/411-body-parts-and-disease-related-to-different-planets.html

http://sexjothidam.blogspot.in/2016/03/manglik-astrology-what-is-mangal-dosha.html

https://www.youtube.com/watch?v=xSY6on-M9Vw



ம்சை அரசனின் அடுத்த அட்டாக்
------------------------------------------------------

அரசர் மோடி அடுத்ததாய் மிக பெரிய அதிரடி பிளானை வைத்திருக்கிறாராம். தேச பக்தர்கள் எல்லோரும் பரபரப்பாக பேசி திகில் கிளப்புகிறார்கள். அது என்னவென்று வட்ட செயலாளர் வண்டு முருகன் தமக்கு ஒற்றன் மூலம் கிடைத்த தகவலை நமக்கு முன்பே சொல்லி விட்டார். அதற்கு தான் முன்னேற்பாடாக "ஜன் தன் யோஜனா" திட்டத்தின் மூலம் எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உருவாக்கி கொடுக்கப் பட்டு, ஜியோ சிம்மும் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன.

டிசம்பருக்கு பிறகு, இவர்கள் அனைவரும் "ரம்மிசர்க்கிள்.காம்" இணைந்து ஆன்லைனில் ரம்மி விளையாடலாம். இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்களுக்கும், வீட்டில் சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கும், இதன் மூலம் சம்பாத்தியம் உண்டாகும். வருமான வரி TDS யில் பிடித்தம் செய்யப் பட்ட பின்தான், வங்கி கணக்குகளுக்குள் வரவு வைக்க படும்.

ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு மானிய விலையில் ரிலையன்ஸ் கம்பனி மூலம் விற்கப் படும். ரம்மி விளையாட தெரியாதவர்களுக்கு திருபாய் அம்பானி இன்ஸ்டியூட் மூலமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் படும். ஊருக்கு ஒதுக்கு புறம், மரத்தடியில் சாராயம் குடித்து விட்டு கவர்மெண்டை ஏமாற்றி ரம்மி விளையாடி கவர்மென்டுக்கு கப்பம் கட்டாமல் தப்பிப்பவர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைக்கும். இவர்களை பிடிப்பதற்கென்றே போலீசார் ரோந்து வாகனங்களில் சந்து பொந்துகளில் சுற்ற போகிறார்கள்.

தமிழ்நாட்டின் விளையாட்டு என்பதால்,  "மங்காத்தா" தடை செய்ய படும். அதை மீறி விளையாடுபவர்களும், "மங்காத்தாடா" என்று தேவையே இல்லாமல் அடிக்கடி சொல்பவர்களும், தேச விரோத சட்டத்தின் மூலம் சிறையில் அடைக்கப் படுவார்கள்.

ஏக் பாரத், ஏக் கேம்.

இந்தியா வல்லரசு ஆகணும்னா, உங்க மம்மி கூட, ரம்மி ஆடி தான் ஆகணும்.

மோடிடா! ரம்மிடா! ரம்பாடா! ரம்மியா கிருஷ்ணண்டா!


RJ பாலாஜாம்பி
-----------------------

ஹாலிவுட்டில் வெளி வரும் ஜாம்பி, வேம்பயர் வகை படங்களில் வருவது போல, ஜாம்பிகளை எதிர்த்து போராடி அதனை கொல்லும் கதாபாத்திரம் ஒன்று, திடீரென்று அவைகளிடம் கடிபட்டு இன்னுமொரு ஜாம்பியாக மாறி, மற்ற மனிதர்களை துரத்தி பிடித்து கடிக்க விரட்டும்.

ஆர்ஜே பாலாஜி, அப்படி கடி பட்ட ஒரு ஜாம்பி தான். இப்போது அவர் நடிக்கும் மொக்கை படங்களை எல்லாம் நம்மை பார்க்க சொல்லி தொலைக்காட்சிகளில் வந்து தொல்லை படுத்துகிறார். இப்போது அரசியல்வாதிகளுக்கு ஆதரவாய் சாமானிய மக்களுக்கு கிராஸ் டாக்கில் வந்து தேசபக்தியை வேறு தூண்டி விடுகிறார். நாட்டுக்காக கொஞ்சம் ரத்தம் கொடுப்பதில் தப்பு இல்லை என்கிறார்.

ஆனால் சினிமாக்காரர்கள், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள். வழக்கமாய் சினிமாக்காரர்கள் தான் மற்றவர்களுக்கு பாராட்டு விழா வைப்பார்கள். இம்முறை நாம் தான் அவர்களை பாராட்ட வேண்டும். பென்டாஸ்டிக் ஜாப்!

"கடவுள் இருக்கான் குமாரும், நூத்தி இருபது ரூபாயும்" என்று நாம் எழுத வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டது.

Once a Joker. Always a Joker


Journey to the Mars (English version )
-------------------------

The simple reason why Indians spend more money than Americans for marriage is, we do it only one time in our life time whereas they have to keep something for the next one and for the alimony.

For most Indians, the marriage is one way road. Pay everything at the toll and go inside. If something happens wrong, just die there. That is why they invented the word 'Wedlock' for Indians.

Its like the one way trip to MARS that NASA has planned for 2024. Out of 100 people, only 3 in India got selected for the trip and as expected all 3 are single. we married people won't be interested in that as we already on one.

And importantly, the MARS (sevvai) is deciding factor in our marriages. Its an aptitude test for the selection. If you pass that only, you will go to group discussion, HR interview and all. Yes, we have blood relation to the Mars.

No wonder there are 39 Americans in that list. They just want to see how it feel to be an Indian. But every Indian want to see how it feel to be an American.

Poor Americans. :-P

Titbits:
--------

In medical astrology, all the planets represent some or the other part of your body. Mars represent human blood. That's the reason we are checking "sevvai dosha" or "manglik dosha" before doing marriage. Its blood test invented for us by our ancestors. "sevvai dosha" means a negative blood group, otherwise its a positive blood group. If different blood group couple get married, then the mom and baby will have severe health issue during pregnancy and delivery.

There are many documentary movies in You Tube which says our ancestors could have come to earth from Mars. We are all aliens from Mars as per that theory. Humans search aliens outside. But both God and Aliens are inside of us)



Nov 23, 2016

பேஸ்புக் பினாத்தல்கள் 2

மோடியின் இந்தியா
-----------------------------------

மோடியின் கனவே ஒவ்வொரு ஏழையையும் பெரிய பெரிய மால்களில் நுழைய வைத்து தாங்கள் எடுக்கும் 2000 ரூபாயில் பிக் பஜாரிலேயே ஷாப்பிங் செய்ய வைப்பதும், பீட்சா ஹட்டுக்கு சென்று பீட்சா சாப்பிட வைப்பதும் தான். பிச்சைக்காரனை பார்த்து இன்ஸ்பைர் ஆகி நம்மை பிச்சைக்காரர்கள் ஆக்கியது போதாதென்று, இப்போது காக்கா முட்டையை பார்த்து இன்ஸ்பைர் ஆகி இருக்கிறார். தினமும் வரிசையாய் தேடி தேடி தமிழ் படங்களை பார்க்கிறார். அடுத்து என்ன படம் பார்த்து இன்ஸ்பைர் ஆக போகிறார் என்று நமக்கு திக் திக்கென்று அடித்து கொள்கிறது. ஆண்டவரே! பரதேசி படத்தை மட்டும் அவர் கண்ணில் பட்டு விடமால் பார்த்து கொள். அப்புறம் தமிழர்கள் அகதிகளாய் மூட்டை முடிச்சுகளோடு இலங்கைக்கு புறப்பட வேண்டும். முடிவு பாலா பட கிளைமாக்ஸை விட கொடூரமாய் இருக்கும்.

ஆனால் அடுத்து தமிழ் நாட்டுக்கு வந்து மாநாட்டில் "என் இனிய தமிழ் மக்களே" என்று பாரதிராஜாவை போல கை கூப்பினாலும் ஆச்சர்ய பட வேண்டாம்.

அல்லுலேயா! Hope for the best.


ரட்டை பச்சை மிளகாய்
---------------------------------------

குழம்பில் தெரியாமல் சேர்த்து போட்ட இரண்டு பச்சை மிளகாயினால், காரம் தலைக்கேறி "புரட்சி கலைஞர்" விஜயகாந்த் போல கண்கள் சிவந்து விடுகிறது. பேச முற்பட்டால் "புரட்சி தலைவர்" எம்ஜியார் போல வாய் குளறுகிறது.

காரத்துக்கும், புரட்சிக்கும் பெரிய சம்பந்தம் இருக்கிறது. அதனால் தான் காரம் சாப்பிட்டு புரட்சி செய்தே, தெலுங்கர்கள் ஆந்திராவை இரண்டாக பிரித்து விட்டார்கள். தமிழர்கள் மொண்ணையாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அறிவும் மங்கி அடிமையாய் கிடக்கிறோம்.

இனியாவது குழம்பில் தினசரி இரண்டு பச்சை மிளகாயை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். முக்கியமாக, கைரேகை, கையெழுத்து அறிக்கையை வைத்தே தலைவி நலமுடன் இருக்கிறார் என நம்பும்  இரட்டை இலை அடிமைகள் அவற்றை பச்சையாக வெறும் வயிற்றில்  சாப்பிட வேண்டும். அப்போது தான் பித்தம் தெளியும். புரட்சி வெடிக்கும்.


ண்டவன்கிட்ட வாய காட்டி, வயித்துல அடிச்சு கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்துக்கு 40% கமிஷன் கேக்கறானுங்க பாவி பசங்க. உருப்புடுவானுங்களா? அடுக்குமா?
பேங்குல போய் வரிசையில் நின்னா, கூட்டம் அதிகம் ஆகி சாமானிய மக்கள் கஷ்டப் படுவாங்கன்னு யோசிச்சது ஒரு தப்பா?
கொள்ளை அடிச்சதுல பங்கு பிரிச்சு, லட்சம் லட்சமா போய் சாமிக்கு உண்டியல்ல கொட்டுனேன், இப்ப அந்த சாமி கூட செல்லாம போய்டுச்சே!
ஹமாம் சோப்பு போட்டு குளிச்சு, இப்படி நேர்மையா வாழ்ந்ததுக்கு இது தான் தண்டனையா?

ஒரு சாமானிய ஊழல்வாதிய இப்படி புலம்ப விடலாமா?


"பிளாக் மணியை ஒயிட்டா மாத்தணும். காண்டாக்ட் இருந்தா சொல்லு" என்பவர்களை விட, "பிளாக் மணியை ஒயிட்டா மாத்தி தரேன். நம்மகிட்ட காண்டாக்ட் இருக்கு. யாராவது இருந்தா சொல்லு" என்பவர்கள் தான் அதிகம் சுற்றுகிறார்கள்.

னைவிக்கு நகை வாங்க சென்றிருந்தோம். ஈரோடு கல்யாண் ஜூவல்லர்ஸ்.

உள்ள நுழைஞ்சதும், சின்ன குழந்தை மாதிரி கடைய முழிச்சு முழிச்சு பார்த்துட்டே இருந்தா. "ஏய் லூசு! பாக்க வரல, வாங்க வந்திருக்கோம்ன்னு சொன்னதும் திகைச்சு போயிட்டடா". நம்மள வித விதமா அலங்கரிச்சு பாத்த மனைவியை நாம அலங்கரிச்சு பாக்க வேண்டாமா? தோடு, வளையல் அட்டிகைன்னு வைரத்திலே இழைச்சுட்டேன். அதற்கு இடையில் அங்கு வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணி, என் மனைவியை பார்த்து "அக்கா, இந்த டிசைனை பாருங்க, அக்கா இது உங்களுக்கு நல்லாருக்கும்" என மூச்சுக்கு மூச்சு அக்கா என்றே அழைத்தது. அதுவரை கோபப்படாமல் அமைதியாய் இருந்த என் மனைவி, கடைசியில் கிளம்பும் போது அந்த பெண் என்னை பார்த்து "தம்பி, கீழ போய் பில் கட்டிட்டு வாங்கிக்கோங்க" என்று சொன்னதும் கடுப்பாகி "என்னை எப்படி அவங்க அக்கான்னு கூப்பிடலாம்? உன்ன தம்பின்னு கூப்பிடுது" என்று சொல்லி அங்கேயே குழந்தை மாதிரி அழ ஆரம்பித்து விட்டாள். "அசடாட்டம் அழாதேடி, எல்லாரும் பாக்கறா" ன்னேன். "ஹ்ம்ம் ஹம்ம்ன்னு" மண்டையாட்டிகிட்டே அவ என் கண்ண தொடச்சு விட்டா.

"கல்யாணல" நான் தம்பியா மாறினேன். அவ  என் அக்காவா மாறினா. என்னை பொறுத்த வரைக்கும் ஜுவல்லரிங்கறது ஒரு ஆர்னமெண்ட் இல்ல, ஒரு செண்டிமெண்ட்.

இது விலை கொடுத்து வாங்கற சந்தோசம் இல்ல. beyond that

அதுக்கும் மேல.


நாய் வளர்க்கும் வீட்டுக்கு வாடகைக்கு போக கூடாது.
ஒவ்வொரு முறை அந்த நாய் என்னை பார்த்து குழைக்கும் போதும், "டபி, இது நம்ம அண்ணன்டா, அடையாளம் தெரில?" என்று வீட்டு ஓனரம்மா, நாயை பார்த்து செல்லமாய் கோபித்து கொள்கிறார்.


ரு மாதத்திற்கு முன்பு "அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர்" என்று போஸ்டரில் பல்லை காட்டி கொண்டிருந்த அடிமைகள், இப்போது அம்மாவுக்கு ஆசி கொடுக்க கடவுளிடம் கருணை மனுவை கொடுத்து விட்டு தினமும் பல்லை விலக்காமல் 'அப்பா'லோவின் வாயை பார்த்த படி இருக்கின்றன.

நாம செத்து போனா இந்த மண்ணு தான் நம்ம உடம்ப சாப்பிடுது. அதுக்கு முன்ன நாம அந்த மண்ணை சாப்பிட்டு விடலாம் என விவரமாய் யோசிக்கிறார்கள். இதில் வீட்டில் பொண்டாட்டி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து வாய்க்கு அலகு குத்தியவர்கள் பல பேர்.

அம்மா நலம் பெற வேண்டி இலவசமாக அம்மா உணவங்களில் நாளை முதல் மண் சோறும், அம்மா கிளினிக்கில் வாய்க்கு அலகும் குத்தப்பட வேண்டும். இதுவே நம் எதிர்பார்ப்பும். அப்புறம் பாருங்கள் நகை கடைகள், துணி கடைகளில் கூடும் கூட்டத்தை மிஞ்சி விடும் அடிமைகள் கூட்டம்.