Aug 7, 2016

~ இது தங்கமான உறவு ~ (18+) - ஆபாயில்

பேஸ்புக்கில் எழுதுவது என்பது செக்ஸை போல தான்.

எழுதியது கொஞ்சம் சுமாராக இருப்பது போல் தோன்றியவுடனே, இன்ஸ்டன்ட் லைக்கிற்கு ஆசைப்பட்டு, அவசரத்துடன் பதிவிட்டு விடுவது ஒருவகை. நிறைய பேருக்கு இந்த ப்ரீ எஜாகுலேஷன் (pre-ejaculation) பிரச்சனை இருக்கிறது. தினமும் ஐந்து முதல் பத்து பதிவுகள் எழுதினாலும் நமக்கும், படிப்பவர்களுக்கும் திருப்தி இருக்காது. நம் மேல் இருக்கும் அபிப்பிராயம் போய் விடும். கஸ்டமர்களையும் இழக்க வேண்டி வரும். இவர்கள் ஒரு நல்ல பேஸ்புக் எழுத்தாளரை பார்த்து சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

எழுத ஆரம்பிப்பதற்கு முன் எதை பற்றி எழுத போகிறோம் என்பதை, சிறிது நேரம் செலவழித்து 'போர் பிளே' (fore play) செய்ய வேண்டும். போர் பிளேயுடன் தான் எழுதவே செல்ல வேண்டும். முக்கியமாய் விரலை கீ போர்டில் நிலை நிறுத்தவும். கீபோர்டில் வேலை செய்யும் பொழுது மவுஸின் அருகில் கை செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரல் 'Post' யை அமுக்கி விடும்.

எழுதிய பின் எடுத்தோம் அவிழ்த்தோம் என்று செயல் படாமல், மலையாள படங்களில் வருவது போல 'கீழிருந்து மேலும்', 'மேலிருந்து கீழும்' சிலமுறை படித்து எழுத்து பிழை, இலக்கண பிழைகளை சரி பார்த்துக் கொள்ளவும். வெளியிடும் ஆசையை அடக்கி, தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு  Stop and Start விதிகளை பயன்படுத்தி இன்னும் மெருகேற்றினால் 'கை' Image result for like icon smallமேல் அமோக பலன் கிடைக்கும்.

எழுதியது உங்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில் வரும் "ஆஹா அருமை", "சூப்பர் தல" போன்ற பொய் (Fake) பாராட்டுகளில் ஆறுதல் அடையாமல் அதை தவிர்க்க தீயாய் வேலை செய்யவும். சைஸ் முக்கியமில்லை என்று பொதுவாக சொல்லப் பட்டாலும், ஆவரேஜ் இந்தியன் சைஸாக (ஆறு  வரிகளுக்கு குறையாமல்) இருப்பது இருவருக்குமே நல்ல சுகானுபவமாக இருக்கும். இரண்டு மூன்று வரிகளில் எழுதுவது குயிக் செக்ஸ் போல. திருப்தி இருக்காது.

பதிவு எவ்வளவு பெரிதாய் இருந்தாலும், கன்டென்ட் சிறப்பாய் இருந்தால் வரவேற்பு இருக்கும். தமிழ் பிரபாவுக்கும், முரளி கண்ணனுக்கும் இருக்கும் ரசிக பட்டாளங்களை பார்த்தால் புரியும். 'நுனி' புல் மேய்ந்துவிட்டு எஸ்கேப் ஆகிறவர்களை புறந்தள்ளி விடலாம். எவ்வளவு 'பெரிதாய்' இருந்தாலும், பயப்படாமல் படிப்பவர்கள் தான் நமது இலக்கு.

அதிகபட்சமாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் வெளியிடுவது ஆரோக்கியமான உறவுக்கு வழி வகுக்கும். கவனித்து பாருங்கள் நல்ல திறமையான எழுத்தாளர்கள் அவ்வளவு தான் எழுதுவார்கள். வாசகர்களுக்கும் அந்த இடைவெளி தேவை. அடிக்கடி செய்தால் சர்பிரைஸ் இருக்காது.

யாருமே படிக்காமல் லைக்கே வராமல் சுயஇன்பம் செய்வது போல, நீங்கள் எழுதி நீங்கள் மட்டுமே படித்து கொண்டிருந்தாலும், அதை விடாமல் தொடருங்கள். தற்போது பலன் இல்லையென்றாலும், பின்னாளில் கண்டிப்பாக பெரிய பலன் இருக்கும். கொஞ்சம் பிடித்து விட்டால், புதையல் தோண்டி படிப்பார்கள்.

எழுது கோலை எடுங்கள், உறவை பலப் படுத்துங்கள்பாலி படத்தின் கதை  (பாயிலர் அலர்ட்)

தங்கள் ஆதர்ச கதாநாயகன் நடித்த படத்தின் டிக்கெட் கொள்ளை விலையில் விற்க படுவதால், தலித்துகள் அப்படத்தை பார்க்க முடியாமல் கஷ்டப் படுகின்றனர். ஐ.டி துறை அரை டவுசர் பையன்களும், லெக்கின்ஸ் லேடிகளுமே முக்கால் வாசி டிக்கெட்டுக்களை புக் செய்து விடுகிறார்கள். வேறு வழியின்றி படம் பார்க்க சில நிஜ கபாலிகள், ஏடிஎம் மெஷினை உடைத்து திருடுகிறார்கள். அதை செய்ய முடியாத மற்ற கபாலிகள், ஏடிஎம் கார்டு வைத்திருப்புவர்களை மிரட்டி கொள்ளை அடிக்கின்றனர். அப்பாவிகள் சிலர், அம்மாவின் தாலியையும் பொண்டாட்டியின் தாலியையும் திருடி சென்று விற்கின்றனர்.

இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து போராட வருகிறான், தலித் நாயகன் கபாலி. டிக்கெட் விலையை குறைக்க சொல்லி தியேட்டர் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்துகிறார். பெட்ரோலை தன் மேல் ஊற்றி விட்டு தீப்பெட்டியை கையில் வைத்து கொண்டு பூச்சாண்டி காட்டுகிறார். அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சங்க கூட்டத்தில் இருந்து ஒரு தீக்குச்சி பறந்து வருகிறது. அப்போது கபாலி கப கபவென பற்றி எரிய, "நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம்" பாடல் துவங்குகிறது.

பாடல் முடிந்த பின், பாதி கருகிய பாடியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்கின்றனர். அந்த நிலைமையிலும் "வருவேன்னு சொல்லு, திரும்பி வருவேன்னு சொல்லு" என்று பன்ச் டயலாக் பேசுகிறார். கடைசியில் உயிர் பிழைத்த கபாலி, திரும்பி வந்து மீண்டும் தீக்குளிக்க பெட்ரோல் வாங்க செல்கிறார். அதற்குள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாய் ஏற்றியிருக்கிறது கண்டு, வந்த வழியே திரும்பி விடுகிறார். எதுவும் செய்ய முடியாமல் கடைசியில் "அம்மா தியேட்டருக்கு" அனைவரையும் கூட்டி சென்று படம் பார்க்க வைக்கிறான். அதன் பின் மக்களை அடுத்த தேர்தலில், அம்மாவுக்கே ஓட்டும் போட சொல்லி விட்டு இமயமலைக்கு பயணம் செய்கிறான்.

 

சால்ட் சேது.

ஒரு பெரிய ஹீரோவின் கால்ஷீட் வாங்கி வைத்து கொண்டு படம் பண்ண அந்த புரட்சி இயக்குனரை அழைக்கிறார் அந்த 'கழுதை புலி' தயாரிப்பாளர்.

"என்ன கதை வச்சிருக்கீங்க"

"சார் தலித்தோட உணர்வுகளை சொல்ற மாதிரி ஆண்டைகளுக்கு எதிரான ஒரு கதை இருக்கு"

"அதெல்லாம் வேண்டாம்யா, ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்கணும். போய் கதை ரெடி பண்ணு."

என அவர் சொல்லிவிட, கோடம்பாக்கத்திலிருந்து மலேசியாவிற்கு பிளைட் புடிக்கிறார் டைரக்டர். அங்கு வாழும் கபாலி என்ற தாத்தாவின் மன்னிக்கவும் தாதாவின் (transliteration mistake) வாழ்க்கையை அலசி ஆராய்ந்து ஸ்கிரிப்ட் ரெடி செய்கிறார். தான் எடுக்க நினைத்த கதையை எடுக்க முடியாமல் போனதற்காக பலி வாங்க எண்ணி, யாருக்கும் தெரியாமல் கதையில் நாயகனை காமெடி பீஸாக்கி படத்தை எடுத்து முடிக்கிறார். அதில் நிறைய காட்சிகள் நடிகரை நடக்க விட்டும், கால் மேல் கால் போட்டு உட்கார வைத்தும் ஸ்டைலாக எடுப்பதாக நடிகரையும் அவரது அல்லக்கைகளையும் நம்ப வைத்து ஏமாற்றுகிறார்.

இது தெரியாமல் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்களையும் மக்களையும் மிரட்டி "சட்டத்தை" உடைத்து டிக்கெட்டை அதிக விலைக்கு விற்கின்றனர். படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த நடிகர் கடுப்பாகி அமெரிக்காவுக்கு பறந்து விடுகிறார். தயாரிப்பாளர் இயக்குனரை தேடி கொண்டிருக்க, அவர் மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு குக்கிராமத்துக்கு ஓடி சென்று ஜிகர்தண்டா குடிக்கிறார். அநேகமாக இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கலாம்.

ஜிகர்தண்டா டா! அசால்ட் சேதுடா!

சில வீட்டு நாய்கள் கூட, தட்டில் வைத்தால் மட்டுமே சாப்பிடும் அளவுக்கு evolve ஆகியுள்ளன.


பிறந்த நாள் ரணகளம்.

பேஸ்புக் எழுத்தாளர்கள், இப்போது எந்த ஒரு சினி செலிபெரிட்டியையும் விடுவதில்லை. யாருக்கு அடுத்து பிறந்த நாள் வருகிறது என்று கூகிள் செய்து பார்த்து விட்டு, அவர்கள் நடித்த படங்களை சிலாகித்து, 'மானே தேனே' இட்டு எதையாவது நிரப்பி கட்டுரை எழுதி தயாராய் வைத்திருக்கிறார்கள். அவர்களின் பிறந்த நாள் அன்றைக்கு வெளியிட்டு, லைக்குகள் சம்பாதித்து, சக பேஸ்புக் எழுத்தாளர்கள் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகிறார்கள். சமீப காலமாய் இந்த போக்கு இளம் எழுத்தாளர்களிடையே மிக பெரிய போட்டியாய் வளர்ந்து வருகிறது.

சமந்தா, ஸ்ரீதிவ்யா , நித்யாமேனன், காஜல் அகர்வால் போன்றவர்களை பற்றி எனக்கு முன்பே எழுதி வெளியிடுவதை கூட சகித்து கொண்டு விடுகிறேன் என்றாலும், 'நாசர்', 'ராதாரவி', 'காந்திமதி', 'சரண்யா பொன்வண்ணன்' போன்ற குணசித்திர நடிகர்களுக்கும் முந்தி கொள்கிறார்கள் எனும் போது பேஸ்புக்கை விட்டு போய் விடலாமா என்று கூட சிந்தனை எழுகிறது.

கடைசி முயற்சியாய், எனக்கு பிடித்த ஒரு நடிகையை பற்றியும், அவரது நடிப்பு இந்திய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தையும் விலாவரியாக எழுதி தயார்நிலையில் வைத்துள்ளேன். பேஸ்புக்கில் என்னுடைய இருப்பை தக்க வைத்து கொள்ளவும், மற்றவர்கள் 'தெரியாமல் எழுதிவிட்டேன்' என்று சல்ஜாப்புகள் சொல்லாமல் இருக்கவும், அவரது பெயரை இப்போதே வெளிப்படையாய் அறிவிக்கிறேன்.

அவர் தான், மே 13 ம் தேதி பிறந்த நாள் கொண்டாட விருக்கும் சாதனை மங்கை "சன்னி லியோன்".

உங்கள் கையை கட்டு படுத்துங்கள். சன்னி லியோனையாவது விட்டு வையுங்கள். பிளீஸ்!


No comments: