Mar 17, 2016

சமந்தாவுக்கு உதவி பண்ணுங்க!எல்லாம் சமந்தாவின் விருப்பபடியே சுதந்திரமாய் அவளை வளர்த்த தந்தை, கல்யாண விசயத்தில் மட்டும் அந்த சுதந்திரம் குடுக்க வில்லை.

சமந்தாவுக்கு மே 16-ஆம் தேதி கல்யாணம் செய்து வைக்க போகிறார். ஐந்து வருட அக்ரிமெண்ட் மேரேஜ். சமந்தாவிடம் தனக்கு பிடித்த சில மாப்பிள்ளைகளின் போட்டோக்களை கொடுத்து இருக்கிறார். அதில் இருந்து ஒரு மாப்பிள்ளையை தான், சமந்தா செலக்ட் செய்தாக வேண்டும். (காதலன் சித்தார்த் போட்டோ அதில் இல்லை).

அந்த மாப்பிள்ளைகள் லிஸ்ட்:

1) கோட்டா சீனிவாசராவ்.
2) பொன்னம்பலம்.
3) மன்சூர் அலிகான்.
4) 'தில்' ஆஷிஷ் வித்யார்த்தி.
5) மொட்ட தல ராஜேந்திரன்
6) 'தூள்' சொர்ணாக்கா

இதில் யாரை, சமந்தா கல்யாணம் செய்ய வேண்டும்?

சமந்தாவுக்கு கால் பண்ணி உதவி செய்யுங்க. "ஏன் நீங்கள் சொல்கின்ற நபரை சமந்தா கல்யாணம் செய்ய வேண்டும்?" என சரியான காரணம் சொல்லி சமந்தாவுக்கு நம்பிக்கை கொடுத்தால், அவர் கல்யாணத்தில் தாலி எடுத்து கொடுக்கும் பொன்னான வாய்ப்பு, உங்களுக்கு காத்து கொண்டிருக்கிறது.

சமந்தா, ஹமாம் சோப் போடுவதற்க்கெல்லாம் கால் செய்து நம்பிக்கை கொடுத்த பொது ஜனங்கள், அவரின் வாழ்க்கை பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து, உதவி செய்ய கேட்டு கொள்கிறோம்.

கால் பண்ணுங்க! நம்பிக்கை கொடுங்க!

(பின்குறிப்பு: "வயசாகிட்டே போது, இன்னும் த்ரிஷா அக்காக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குதே" என கவலைப்படும் தம்பிகள் கால் பண்ண வேண்டாம். விஷாலை த்ரிஷாவுக்கு கேட்டு பாருங்கள்)

இன்னமும் புரியாத வாக்காள பெருமக்களுக்கு,

சமந்தா தான் நாம்.
தேர்தல் ஆணையம் தான், அப்பா.
அந்த மாப்பிள்ளைகள் தான், நம் அரசியல்வாதிகள்.

நமக்கு வாய்ச்சது அவ்ளோதான்!


Mar 2, 2016

இளைய தளபதி டிகாஃப்ரியோடிகாஃப்ரியோவுக்கு ஆஸ்கார் கெடைச்சிடுச்சு பாத்தியாடா? என்று குதுகலித்த நண்பன், எனக்கு தெரிந்து கடைசியாய் ரசித்து பார்த்தது டைட்டானிக்.

இன்றும் அவனது பேஸ்புக் புரபைலில், பார்த்த ஆங்கில பட வரிசையில் ஜுராசிக் பார்க், அனகோண்டாவுக்கு அடுத்து டைட்டனிக் மட்டும் தான்.

அதிலும் ஹீரோ, கேட் வின்ச்லேட்டை அரை நிர்வாணமாய் வரையும் காட்சியை pause செய்து அவள் முலைகளை பார்த்து, பல மணிநேரம் பரவசம் அடைந்திருக்கிறான். அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து வால் பேப்பராக வைத்து தினமும் பயபக்தியுடன் வழிப்பட்டு வந்தான்.

கனவில் கேட் வின்ஸ்லெட் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு தினமும் மானிட்டரை பார்த்து கொண்டே படுத்தாலும், டைனோசர்களும் அனகோண்டாக்களுமே வந்து அவனை விடாது பயமுறுத்தின.

தன் காதலி ஆசைப்பட்ட காரணத்தால், தன் காதலை தியாகம் செய்து, வேறு ஒருவருடன் அவளை சேர்த்து வைத்த "பூவே உனக்காக" படம் பார்த்து  விஜய்க்கு Die Hard பேனாக மாறியிருந்த சமயம், அடுத்த வருடத்தில் வெளியான டைட்டானிக்கிலும் காதலியை காப்பாற்ற  குளிர் நீரில் விதைப்பை விறைத்து செத்து போன டிகாஃப்ரியோவும் அவன் நெஞ்சில் இடம் பிடித்து அவனுக்கு இன்னொரு தளபதியாய் மாறினார்.

இவனிடம் லவ் பெயிலியர் கேஸ்கள் மாட்டினால்,

"மச்சி, காதல்ன்றது பனிக்கட்டி பாற மாதிரி, எவ்ளோ பெரிய கப்பலா இருந்தாலும் தொப்பலா நனைய வச்சு முழுக்கிடும்."

என்று பன்ச்சு சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவான்.

அதிலிருந்து ஒரு தளபதிக்காவது ஆஸ்கார் கிடைத்துவிடாதா? என்று வருடா வருடம் எதிர்ப்பார்த்து கிடந்தான். பிரண்ட்ஸ் பட கிளைமேக்சில் தலைவனின் நடிப்பை பார்த்து மிரண்டு, கண்டிப்பாக ஆஸ்கார் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த போது அதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்காமல் வஞ்சம் செய்த இந்திய அரசை எதிர்த்து அப்போதே தேசிய கொடியை எரித்தவன்.

லோக்கல் தளபதி கரும்புலியிடம் கடி வாங்கி கஷ்டப்பட்டு சண்டை போட்ட புலி படம் வழக்கம் போல ஆஸ்காருக்கு போகா விட்டாலும், பாரின் தளபதி கரடியுடன் சண்டை போட்டு ஆஸ்கர் வாங்கியதில் அவனுக்கு ஆத்ம திருப்தி.

"ஆமா மச்சி, தல க்கு எப்ப ஆஸ்கார் கெடைக்கும்?" என்று கொஞ்சம் சொரிந்து விட்டால், நக்கலாய் சொல்வான்,

"அவரு ரேஸ்கார் வேணா வாங்கலாம், ஆஸ்கார்லாம் வாங்க முடியாது"