Feb 24, 2016

கேப்டனும், கஜேந்திராவும்

(picture courtesy: tamil hindu)

ஒரு டிவி சேனலில் ரமணா படத்தின் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. மூச்சு விடாமல் லஞ்சம் வாங்கியவர்களின் புள்ளி விவரங்களை துல்லியமாக நிமிட கணக்கில் வசனங்களாய் பேசி தள்ளுகிறார்.

அந்த ரமணாவையும், கோர்வையாக இரண்டு வார்த்தையை சேர்த்து பேசவே தடுமாறும் தற்போதைய ரமணாவையும் நினைத்து பார்க்கும் போது, அவருடைய பிந்தைய படங்களுக்கெல்லாம் விஜயகாந்தை போலவே பேசும் மிமிக்ரி கலைஞர்களை வைத்து டப்பிங் கொடுத்திருப்பார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது. என்னதான் பீல்ட் அவுட் ஆனாலும், எல்லா பந்துகளுக்குமா டக் அவுட் ஆவது?

கேப்டனை சந்தேகிப்பதாக சக ரசிக வெறியர்கள் கண்ணை சிவக்க வேண்டாம்.

கொச்சடையான் படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளை எடுப்பதற்கு தலைவரை போலவே இமிடேட் செய்யும் கலைஞர்களை வைத்து நடிக்க வைத்தார்கள் என்ற வதந்தி பரவியதும், என் எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியை தூர எறிந்து விட்டு, பாகிஸ்தான் தீவிரவாதிக்கே தமிழில் ஆக்ரோஷ்யமாய் அறிவுரை கூறி திருத்திய கேப்டனின் படங்களை எல்லாம் விடாமல் பார்த்த, Hard Core விசிறி என்ற முறையில், தற்போதை கேப்டனின் நிலைமையையும், அதை அசிங்கபடுத்தி அவமானப்படுத்தி மீம் (meme) செய்து கேலி செய்யப் படுவதையும் பார்க்கையில், என் கண்கள் வேர்க்கிறது.

நீ திரும்ப சினிமாவுக்கே, வந்திடு கஜேந்திரா!

கபாலியே கத்தி பிடிக்கும் போது, உனக்கென்ன? உன் கஜாயுதத்தை எடுத்து கொண்டு புறப்படு! பிறகு நீ தான் கிங்!

அது நடந்தால் தமிழ் நாடு இல்ல, இந்தியா இல்ல, உலகமே உங்களை ரசிக்கும்.

தூக்கியடி தலைவா! ஜெய்கிந்த்!


Feb 12, 2016

இறுதிச் சுற்று (இது விமர்சனம் அல்ல சொந்த கதை)

"காக்கா முட்டை"க்கு பிறகு, குடும்ப உறவுகளுக்காக "உப்பு கருவாடு" பார்த்து ராதா மோகனிடம் உப்பு கண்டமாகி போனாலும், இந்த படத்திற்கு போக முக்கிய காரணம், 
"பொண்டாட்டிய படத்துக்கே கூட்டி போகாம கொடும படுத்தறான், பாவி பய!. பாவம் அந்த பொண்ணு" என்று பேசி என்னை வில்லனாய் உருவக படுத்தி கொண்டிருந்த ஊர் வாயை, கொஞ்ச நாளைக்காவது அடைச்சி வைக்க தான். இன்னும் எத்தன காலத்துக்கு தான் பொண்டாட்டிய படத்துக்கு கூட்டிட்டு போகாததையே புருசனோட ஆக பெரிய குற்றம்ன்னு சொல்லிகிட்டு இருப்பீங்க கைய்ஸ்! காம்ப்ளான் குடிச்சு வளருங்கப்பா. இறுதிச் சுற்று - தமிழில் இப்படியெல்லாம் ஒரு ஸ்போர்ட்ஸ் (குத்து சண்டை) படம் எடுக்கிறார்கள் என்பதே ஆச்சர்யம் தான். ஆஹா ஓஹோன்னு இல்லைனாலும் "பரவாலப்பா" என்று முதுகில் தட்டி கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது.

குத்துசண்டை மேடையை சுத்தி ஒப்பாரி வைத்து ஓவென்று அழுது, பின் ஹீரோ தங்கச்சிக்காக விட்டு கொடுத்து, நெஞ்சை லிக் செய்து நெகிழ வைத்த "எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி" கிளைமாக்ஸ் காட்சியை எல்லாம் நினைத்து பார்த்தால், இந்த பட இயக்குனருக்கு கோவில் கூட கட்டலாம்.

ஹீரோயின் ரித்திகா சிங்கை பார்த்து இன்ஸ்பைர் ஆகி, வீட்டிற்க்கு வந்ததும் நான் ஒற்றை கையில் புஸ்-அப் (push-up) எடுக்க முயற்சித்ததே இந்த படத்திற்கு பெரும் வெற்றி எனலாம். பாடல்கள் நன்றாக இருந்தாலும், எல்லாமே தேவையில்லாத ஆணிகள் தான்.படம் பார்த்த அன்னைய நைட்ல இருந்து, தூங்கும் போது அடுத்த ரூம்ல இருந்து "டொம் டொம்" ன்னு சத்தம் வந்து கொண்டிருந்தது. பக்கத்துல இருந்த என் பொண்டாட்டியும் காணாம போயிடறா. அடுத்த நாள் காலைல எழுந்து பார்த்தா, அழுக்கு மூட்டையில் இருந்த துணி எல்லாம் வெளியே பிதுங்கிட்டு இருக்கு, என்னோட தம்புள்ஸ் ரெண்டும் எடம் மாறி கெடக்கு.
படம் பார்த்த இன்னொருத்தரும், ஹீரோயினை பார்த்து இன்ஸ்பைர் ஆகி இருக்காங்கறது தான் இந்த கதையில பெரிய ட்விஸ்ட்டு. ஆனால் படம் பார்த்த நாலு நாள்லயே முழு ரித்திகா சிங்கா மாறியிருக்கிற என் பொண்டாட்டிய பார்த்தா தான் அல்லு கிளம்புகிறது. "படத்துக்கு கூட்டிட்டு போக மாட்டியா? படத்துக்கு கூட்டிட்டு போக மாட்டியா?" என்று சொல்லி இந்த வேட்டையனை தெனமும் நாக்-அவுட் செய்றா. இனி எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதணும் போலயே!

எப்படி இந்த சந்திரமுகியை வெளிய ஓட்றது? :-( frown emoticon