Jan 18, 2016

பேஸ்புக் பினாத்தல்கள் 1

தின்பண்டங்களின் பெயரை வரிசையாக ஆன்டிராயிடுக்கு வைப்பதில் கூகிளுக்கு முன்னோடி நம் கவுண்டமணி தான்.

ஒவ்வொரு படத்திலும் செந்திலுக்கு,
மாங்கா மடையா, 
பேரிக்கா மண்டையா, 
பணங்கா தலையா, 
பஞ்சு மிட்டாய் தலையா

என்றெல்லாம் பெயர் வைத்த இந்த லிஸ்ட் பெரியது. 


ல்லிக்கட்டுக்கு பர்மிசன் கொடுத்து விட்டார்கள்!

பாகுபலி படத்தில் பல்லால தேவன் காளையை அடுக்கும் காட்சியை ரிப்பீட் மோடில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கரங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

தயார் படுத்தி வையுங்கள் அந்த காளையை.

ஐ அம் வெய்ட்டிங்!!


பேஸ்புக் போராளிகள் கவனத்திற்கு,

ஆளாளுக்கு கருத்து சொல்றாங்கன்னு, சிம்பு மேட்டரில் நாமளும் ஏதாவது சொல்வோம்ன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே, அடுத்து அர்ச்சகர் மேட்டருக்கு வண்டிய விட்டிங்க. சரி அதுலயாவது கருத்து சொல்லலாம்ன்னு பாத்தா, ரைட் இண்டிகேட்டர் போட்டு லெப்டில் இளையராஜாவுக்கு கட் பண்ணி, கொஞ்ச நேரத்தில் யு டர்ன் போட்டு திரும்ப சிம்பு பேட்டிக்கே வந்துட்டீங்க.

டேய் பசங்களா!, மெதுவா போங்கடா. அண்ணன் கொஞ்சம் ஸ்லொவ்.


புத்தாண்டுக்கு பிறகாவது காதலி கிட்டி மாற்றம் முன்னேற்றம் வரும் என்று நம்பி கொண்டிருந்த இளைஞர்களுக்கு, நமக்கு நாமே திட்டம் தான் இன்னமும் கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அட்வான்ஸ் காதலர் தின அனுதாபங்கள்.


ங்கள் மனைவி அனுஷ்க்காவை போல் இருப்பதாக உண்மையை சொல்லி ஐஸ் வைக்கும் பாக்கியம் நிறைய கணவன்மார்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.  ‪#‎இஞ்சி இடுப்பழகி


லோன் போட்டு ஏரிக்குள் வீடு வாங்கி விட்டு,
அடுத்து கார் வாங்க லோன் போடலாமா? என்று யோசித்து கொண்டிருந்தவர்களை, இப்போது படகு வாங்க யோசிக்க வைத்திருக்கிறது சென்னை மழை.


ன்னை தற்போதைய நிலையிலிருந்து இருந்து காப்பாற்றும் யாரையும் கடவுள் என்று ஏற்று கொள்வேன்... உண்மையான கடவுள் வந்து, தன்னை நிரூபித்து கொண்டாலும் சரி... I wont mind it.


ப்பன் முருகனுக்கு அநேக கவலை!

பேஸ்புக்கில் தன் போட்டோவை நம்பி ஷேர் செய்தவனுக்கு எல்லாம், தை ஒன்றுக்குள் நல்ல சேதி அனுப்பியாக வேண்டும்.Today rain is playing "Stop and Start" game in Chennai...

Nature always teaches lesson to us... This is one of the best lesson to every men 


(புரிஞ்சவன் பிஸ்தா!)


ர் மதிய நேரம்... விவேகானந்தர் எழுதிய "எந்திரிசுக்கொ, முழிச்சுக்கோ" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். கண் அயர்ந்து விட்டது.

உண்ட மயக்கமாய் இருக்கலாம். #எழுமின்விழுமின்ன்று திருவான்மியூர் சிக்னலில், ஒரு பைத்தியக்காரன் கிரீன் சிக்னல் விழும் வரை காத்திருந்து, பின் சாலையை கடந்து சென்றான்.

நீதி: இந்தியாவில் சாலை விதிகளை மதிப்பவர்கள், பைத்தியகாரர்கள்."ண்டிய எங்கடி காணோம்?" மனைவியை பார்த்து கேட்டேன்

"அட படுபாவிகளா? தூக்கிட்டு போயிட்டாங்களா?. இங்க தான நிறுத்தி வச்சுருந்தேன்." மிக அதிர்ச்சியுடன் சொன்னாள்.

"சரி விடு. இன்னொரு வண்டிய எடுத்துட்டு வரேன்."

(ஒரு சூப்பர் மார்கெட்டில் எனக்கும் என் மனைவிக்கும் நடந்த உரையாடல்)

கொஞ்சம் அசந்தா ட்ராலிய தூக்கிரானுங்க! :-(