Nov 7, 2012

I Blog for World Peace - ஆபாயில்
னி தமிழ் படமே பார்க்க கூடாது என்று கடைபிடித்து வந்த Week end விரதத்தை பீட்சாவுக்காக சற்று தளர்த்தி விட்டு பார்த்தேன். இயக்குனரின் முதல் முயற்சியை பாராட்டலாம். சினிமா கலை இவருக்கு நன்கு கைவசப் படுகிறது. 

பேயோட்டுவதற்க்காக மலையாளத்தில் இருந்து வரவழைக்கப் பட்ட மந்திரவாதி நடிகை ரம்யா நம்பூதரி படத்தின் ஆரம்பத்தில் திகிலாய் பேசி ஹீரோவையும் நம்மையும் பயமுறுத்துகிறார். பீட்சாவை அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு வளர்ந்ததை போல கொழுத்து  காணபடுகிறார் நம்பீசன்.

இதற்கு முன் தாண்டவம், மாற்றான் என யுனிவர்சல் வெற்றி படங்களை பார்த்து தூக்கமின்மை, மன உளைச்சல், மன பிராந்தி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் ரசிகர்களின் உபத்திரம் தீர சரியான மருந்து "பீட்சா".


னந்த விகடனின் வலையோசை பகுதியில் எனது பிளாக்கை ஒளிபரப்ப சொல்லி, சாரி அறிமுகப் படுத்த வேண்டி எனது வலைப்பூ, ஊர், பெயர் தகவல்களை அனுப்பிவிட்டு சோறு தண்ணி இல்லாமல் உண்ணாவிரதம் இருந்து பயங்கர எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

நான் சிறுவயதில் ஆனந்த விகடனை படித்துதான் தமிழ் கற்று கொண்டேன். படிக்கும் போது பசிக்க ஆரம்பித்தால், ஆனந்த விகடனின் பக்கங்களை கிழித்து தான் சாப்பிடுவேன். எனது நண்பர்கள் எல்லாம் செக்ஸ் புத்தகத்தை பாட புத்தகத்தில் வைத்து படித்துக் கொண்டிருக்கும் போது நான் ஆ.வி-யை உள்ளே வைத்து படித்து  இன்பமுருவேன்.

என் படுக்கையில் கூட எப்போதும் நான்கைந்து ஆ.வி புத்தகங்கள் இருக்கும். அதை கட்டியணைத்தே உறங்குவேன். மனைவியை கூட அருகில் வைத்துக் கொண்டதில்லை. ஆ.வி-யுடனான என்னுடைய பந்தத்தை பற்றி "நானும் விகடனும்" என்ற தலைப்பில் பதிவெல்லாம் எழுதி Draft-இல் வைத்திருக்கிறேன். நான் பிரபலமானவுடன் Publish செய்யலாம் என்றிருக்கிறேன்.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம், "உங்களது மட்டமான blog-யை எங்களால் அறிமுகப் படுத்த முடியாது" என திட்டவட்டமாய் கூறி மெயில் அனுப்பிவிட்டார்கள்.

வாழ்க்கைக்கு பயன்படும் நடிகைகளின் கருத்தாழமிக்க  பேட்டிகள், படிப்பவருக்கு புரியாத கவிதைகள், paid விளம்பரங்கள் போன்ற தரமான படைப்புகளை மட்டுமே தாங்கள் பிரசுரிப்பார்களாம்.


வெகு நாள் கழித்து எனது போஸ்டை படிக்கும் உங்களுக்கு தீபாவளிக்கு பம்பர் பரிசு அடித்த மகிழ்ச்சி உண்டாகியிருக்கலாம். செத்தது சனியன் என நிம்மதியாய் இருந்தவர்கள், தற்கொலைக்கு கூட முயற்சி செய்திருக்கலாம்.

ஒரு மாதம் எழுதாமல் விட்டால் உலகம் எப்படியிருக்கிறது என்று பார்க்க விரும்பினேன். Neelam, Sandy ஆகிய புயல் மற்றும் சூறாவளிகளின் சீற்றத்தால் உலகம் அவதி பட்டுவிட்டது. இனி உலகம் அமைதியாய் இயங்க வேண்டியேனும், நான் தொடர்ந்து எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளேன். இந்த வருடம் உலக அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியனுக்கு கொடுத்து விட்டார்கள். அடுத்த வருடமாவது எனக்கு கொடுப்பார்களா?...

Lets Write and See...

ஒரு மாதம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் என்னை கேட்க வில்லையென்றால் கூட தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.

ஒபாமா ISD போட்டு கேட்டு கொண்டதால், அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய அமெரிக்கா சென்றிருந்தேன். தினம் சோறு போடும் அமெரிக்க தேசத்திற்காக, என்னாலான ஒரு சிறு உதவி. தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு அவுட் சோர்சிங் அதிகமாய் பண்ணுவதாய் வாக்குறுதி அளித்தார் என்பதும் ஒரு காரணம்.

உண்மையில் நான் எழுதாமல் இருந்ததிற்கு வேலை பளு தான் காரணம். என்னுடைய வேலை, 50 Kg, 100 Kg எடையுள்ள கம்ப்யுட்டர்களையும், மெகா சைஸ் சர்வர்களையும் ஒரு இடத்தில இருந்து, இன்னொரு இடத்தில் கொண்டு போய் வைப்பது தான். இந்த வேலையை நான் திறம்பட செய்யும் பட்சத்தில், எடையை இறக்கி வைத்த இடத்திற்கே வந்து, Spot Excellency Award எல்லாம் கொடுப்பார்கள். இதனால் நான் எனது புஜங்களை வலுவாய் வைத்துக் கொள்ள தினமும் ஜிம்மிற்கு போய், அதிக எடைகளை போட்டு Chest, Wings, Squat, Bench Press, Wrist, Abs என வரிசையாய் எல்லா எக்ஸ்சைஸ்களையும் செய்ய வேண்டியதாய் உள்ளது. இப்போதே வயிற்றில் மூன்று pack கிரியேட் ஆகிவிட்டது. நான்காவது லேசாய் உப்பி கொண்டு தெரிகிறது. அடுத்த மாதம் டெலிவரி ஆகிவிடும். அதிக பளுவை தூக்கியதால் கை தசைகள் சுளுக்கி, அதனால் ஏற்பட்ட வலியால் கீ போர்டில் டைப் செய்ய முடியவில்லை.

இதையும் நீங்கள் நம்பவில்லையெனில்,

மறுபடியும் உண்மையை சொல்கிறேன் My lord.

போன மாதம் சப்போர்ட் ப்ராஜெக்டில் இருந்து Development project-ற்கு மாற்றி விட்டார்கள். இது எனது வளர்ச்சியை பிடிக்காத பிரபல பதிவர்களின் திட்டமிட்ட சதியாய் இருக்கலாம். தற்போது Code அடிப்பதற்கே நேரம் பற்றாமல் இருப்பதால், பிளாக் எழுதுவது என்பது Mission Impossible ஆகி விட்டது. யாராவது டாலர் கணக்கில் காசு கொடுத்தால் மட்டுமே, பிளாக் எழுத உத்தேசம்.அதனால் தினந்தினம்  பிளாகிற்கு வந்து ஏமாந்து போகாதிர்கள். நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தால், கண்டிப்பாக ஹிந்து ஆங்கில நாளிதழின் Front Page-இல் முழு பக்க விளம்பரம் கொடுப்பேன். அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பிரிவு எனக்கே வருத்தமாய் தான் இருக்கிறது. என்னை விட அதிகமாய் வருத்தப் படும் உங்களுக்கு, நான் எப்படி ஆறுதல் சொல்வது?

"ட்விட்டரில் ஆவது எழுதுவீர்களா?" என இந்த இக்கட்டான தருணத்தில் கேட்டால்,

இப்பதான் ரெண்டு பேரு ஜாமின்ல வெளி வந்திருக்காங்க.

ஏன் அவசரம்??

ஆனால் இந்த கைது பிரச்சனையின் பின்னணியில் இருப்பது அமெரிக்கா தான் என விக்கி லீக்சின் ஓனர், ஜூலியன் அசாஞ்சே அவர்கள் BBC-க்கு அளித்த பேட்டியில் கருத்து கூறியுள்ளார்.

நம்மை காப்பாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.

அல்லேலுயா!!


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ பகிர்ந்து கொண்டு விட்டீர்கள்... நன்றி...