Jun 8, 2012

Nonsense Talking 2 - Beware of realistic movies

ஒவ்வொரு வாரமும் புது படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம், நான் எதிர்பார்த்து போவது "மௌன குரு", "லீலை" போன்று தப்பி தவறி நம்மை ஆச்சர்ய படுத்தும் என்ற நினைப்பில் தான்.

ஆனால் வரும் படங்கள் எல்லாம் AC யின் குளிரிலும் நம்மை வேக வைக்கின்றன. ராட்டினம் படத்தை மொக்கையின் சாம்ராஜ்யம் எனலாம். அதை பலர் அலாவுதீனின் அற்புத விளக்கு அளவுக்கு ஒஸ்தி பாராட்டி எழுதியிருந்தார்கள்.

இந்த ஆங்கில விமர்சனங்கள் அதற்கு மேலே!

'Raatinam' is a movie that is entertaining and is an honest attempt.............. இது IBNLive
We recommend that you give it a shot. Verdict: Good ..........இது Sify

இனி யாருடைய விமர்சனமும் படிப்பதில்லை.

இதற்கு முன் வந்த உலக படம் "வழக்கு எண் : 18/9". ரிலீஸ் ஆன மூன்றாவது நாளே இந்த படத்தை பார்த்து விட்டாலும், விமர்சனம் எழுத நிறைய தயக்கம் இருந்தது. என்னால் இந்த உலக படத்தின் வசூல் பாதிக்க பட கூடாது என்ற காரணம் தான். :-D

இது தமிழ் சினிமாவின் "ஆக சிறந்த" படமும் இல்லை. சாரு சொன்னது போல "ஆக மொக்கை" படமும் இல்லை. ஞாயித்து கிழமை மதியம் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பின், சரியாக செரிக்காமல் போனால், ஒரு முறை போய் உட்கார்ந்து இந்த படத்தை பார்த்து விட்டு வரலாம்.

ஆனால் காலில் விழுந்தது, கட்டி பிடித்து கதறி அழுதது என இவர்கள் செய்ததெல்லாம் காமெடியின் உச்சகட்டம்.

நமது கலாச்சாரம் மெல்ல மெல்ல அடுத்த நிலைக்கு நகரும் இந்த கால கட்டத்தில் இது போன்ற குழப்பமான படங்கள் நிறைய வரலாம்.

ஏழைகளின் வாழ்க்கை, டீன் ஏஜ் பெண்ணின் வயது கோளாறு மற்றும் உணர்வுகளை காண்பித்ததெல்லாம் சரி. ஆனால் திரைக்கதை அதை பிரதிபலிக்க வேண்டும். 

ஒரு பெண்ணின் பாவாடைக்கு கீழே கேமராவை வைத்து அவளுக்கு தெரியாமல் படம் எடுக்கும் எந்த ஒரு கெட்ட பையனும், அதை முதல் சந்திப்பிலே செய்ய மாட்டான். இயக்குனர் இன்றைய பையன்கள் மட்டும் கெட்டவர்கள் போன்று சித்தரித்திருப்பது படு முட்டாள்தனம்.

பெண்களுக்கு தெரிந்தே நிறைய வீடியோக்கள் எடுக்கப் பட்டு நிறைய நெட்டில் குவிந்து கிடக்கிறது. இயக்குனருக்கும் அது கண்டிப்பாய் தெரிந்திருக்கும். இப்போதெல்லாம் பிகர்கள் பக்கத்துக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, பேஸ்புக்கின் மூலம் பழகியே மேட்டரை முடித்து விடுகிறார்கள். பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுப்பது பழைய பேஷன். ஆனால் பெண்களின் நம்பிக்கையை ஆண்கள் எப்போதும் காப்பாற்றுவதில்லை.

பெண்களே! வீடியோ எடுக்கும் எந்த ஒரு ஆணையும் நம்பாதிர்கள்.

படத்தில் ஆசிட் ஊற்றுவதற்கு காரணம் ஒன்றை கண்டிப்பாய் காட்ட வேண்டும் என்று வலிந்து திணிக்கப் பட்டிருக்கிறது. இதையே ஒரு பள்ளி பையனாய் இல்லாமல், ஒரு பணக்கார வீட்டு "படிக்காதவன்" தனுஷ் போல இருக்கும் ஒரு வெட்டி பையன் ஒருவன், இந்த பெண்ணிடம் காதலை சொல்லி, அவள் ஏற்க மறுத்த கோபத்தில் ஆசிட் ஊற்றியது போல காண்பித்திருந்தால் கூட நம்பியிருக்கலாம்.

இப்போது சிட்டியில் இருக்கிற ஸ்கூல், கல்லூரி பையன்கள் படு ஸ்மார்ட். எளிதாய் பெண்களை கரெக்ட் செய்து, கிளைமாக்சை முடித்து விடுவார்கள். கெமிஸ்ட்ரியில் டவுட் கேட்டு தான் கவிழ்க்க வேண்டும் என்றில்லை. இந்த சப்பை காரணம் மேட்டர் படத்திற்கு வேண்டுமானால் சரியாய் இருக்கலாம். ஆனால் படத்தில் நடித்த அந்த பெண்ணின் நடிப்பு மற்றும் வனப்பு தான் எல்லோரையும் கவர்ந்தது.

பிளாட்பார கடைகள் வைத்து வாழ்பவர்கள் வாழ்க்கையை பற்றி சொன்னதிலும் ஒரு உணர்வும் வரவில்லை. எதோ legar பீர் அடிச்சது போல ஒரு பீலிங். பசித்தால் நாம் பிளாட்பார கடைகளில் நின்று, நான்கு இட்லியை உள்ளே தள்ளி தண்ணி குடித்து விட்டு நகர்ந்து விடுவோம்.

அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
எவ்வாறெல்லாம் கஷ்டபடுகிறார்கள்?

என்று சாப்பிடும் வரை யோசிப்போம். ஆனால் கை கழுவியவுடன் ஆபிஸ் பிகரை எப்படி கரெக்ட் செய்வது? என்று யோசிக்கவே நமக்கு நேரம் பற்றாது. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பிரச்சினை!

நல்லவேளை கடைசியில் அந்த வில்லன் போலீஸ்காரரின் முகத்தில் ஆசிட்டை ஊற்றி கொஞ்சமாவது நீதியை நிலை நாட்டினார்கள்.

அதுவும் இல்லையென்றால் கடுப்பாகியிருப்பேன் யூவர் ஆனர்.

சார், அடுத்து மிஸ்கின் சொன்னது போல கதையே இல்லாமல் பயங்கரமான காமெடி படம் ட்ரை பண்ணுங்க சார்.


No comments: