May 13, 2012

கலகலப்பு - மரண மொக்கை @ மசாலா கபே



எவ்வளவு பெரிய மொக்கை படமாய் இருந்தாலும், multiplex -இல் தான் பார்க்க வேண்டும் என்று நான் வழக்கமாய் கடைபிடித்து கொண்டிருந்த கொள்கையை சற்று தளர்த்தி, சைதை ராஜ் என்ற மொக்கை தியேட்டருக்கு அரக்க பரக்க வண்டியை செலுத்தினேன். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தையே விழுந்து விழுந்து பார்த்து சிரித்த என் நண்பன், இந்த படத்தை பார்த்துட்டு "போய்டாத மச்சான், படம் மொக்கை " என்று சொன்னது தான். மொக்கை படத்துக்கு மொக்கை தியேட்டர்.

தன் சாம்பார் தலையை யாருக்கும் பிடிக்கவில்லை போல என்று ஒரு நூற்றாண்டு கழித்து கண்டுணர்ந்து, தன் நடிப்பு திறமைக்கு தற்காலிக முழுக்கு போட்ட சுண்டல்.சி இயக்கிய மகத்தான காவியம் தான் இந்த படம். இந்த மாதிரி படத்தை எடுப்பது தனி கலை. அதற்கு சாம்பார் அண்டாவுக்குள் தலையை விட்டு அரைமணி நேரம் அப்படியே உட்கார்ந்து யோசித்தால் தான் வரும்.

ஆரண்ய காண்டம், மௌனகுரு, லீலை என முதல் படம் எடுக்கறவன் எல்லாம் எப்படி எடுக்கிறான். 25 வது படமாம் இவருக்கு.

சாம்பாரின் வாய்ஸ் ஓவரில் தான் படம் ஆரம்பிக்கிறது. அப்புறம் வரிசையாய் உங்களுக்கு ஆப்பை சொருகி கொண்டே இருக்கிறார்கள்.

அஞ்சலியும், ஓவியாவும் வந்தார்கள், (இடுப்பை) ஆட்டினார்கள், போனார்கள். ஆனா கடைசி வரைக்கும் ஒண்ணுமே காட்ல பாஸு!
இன்னும் இரண்டு படங்கள் சுண்டல்.சி இயக்கத்தில் நடித்தால், @ படங்களில் நடிக்க போக வேண்டியதுதான்.

பாடல்கள் எல்லாம் பாண்டியராஜன் படங்களில் வரும் மஜா பாடல்களை போலவே இருக்கிறது. விமலுக்கும் சிவாவுக்கும் கடைசியில் மட்டும் ஒரு சண்டை காட்சி வருகிறது. ஆனால் பாடல் காட்சிகளில் அதை விட அதிகமாய் அஞ்சலியையும், ஒவியாவையும் போட்டு அடித்து, உருட்டி, பிசைகிறார்கள்.

சந்தானம் தான் கொஞ்சம் ஆறுதல். இவர் இருப்பதால் செகண்ட் half கொஞ்சம் சுமாரா போகுது. ஆனாலும் இன்னமும் டபுள் மீனிங்கில் நெஞ்சு-குஞ்சு, சட்டை-கொட்டை என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காமெடி பண்ணுவது, மத்தவன் பெர்சானலிட்டியை நக்கல் செய்வது,  திருநங்கைகளை கலாய்ப்பது என செய்து கொண்டிருந்தால் கஷ்டம்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் இளவரசுவை விட அதிகம் அடி வாங்குகிறது.

அட இவனுங்க இம்ச தாங்க முடியல!

இந்த படத்திற்கு வசன உதவியாய் வேலை செய்த கேபிள் சங்கரின் கையையும் வாயையும் யாரோ கட்டி வைத்து விட்டார்கள் என நம்புவோம். ஆனாலும் மிக பெரிய இயக்குனர், "டிஸ்கசன்", அது இதுன்னு கொடுத்த பில்டப்பு ரொம்பவே ஓவர்ப்பா!


2 comments:

மைந்தன் சிவா said...

என் விமர்சனமும் இதே பாஸ்!!
ஓவரா பில்ட் அப் கொடுத்து நாரடிச்சிட்டாணுக!

Katz said...

//மைந்தன் சிவா said...

என் விமர்சனமும் இதே பாஸ்!!
ஓவரா பில்ட் அப் கொடுத்து நாரடிச்சிட்டாணுக!//

yes boss. 100%