May 15, 2012

நேர்மை ஜாமீனில் வந்தது.


                             பட உதவி: Faking News

நேர்மைக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால்,


"இனி தர்மம் வெல்லும்."


என எதிர்பார்க்கப் படுகிறது.

இது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என நாணயம் நாளை அறிக்கை வெளியிடும். 

ன்னியத்திற்கு(கனி) விரைவாக கிடைத்த ஜாமீன், நேர்மைக்கு லேட்டாக கிடைத்தாலும் லேட்டஸ்டாக கிடைத்துள்ளது என்பது திருவிழாவை போல இனிப்பு வெட்டி சந்தோசமாக கொண்டாட வேண்டிய விஷயம்.

இந்த திருவிழாவையொட்டி கடமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் நடந்து கொண்டிருக்கும் சகோதர யுத்தம், சிறிது நாளைக்கு நிறுத்தி வைக்கப்படும்.


கோர்ட் நேர்மைக்கு விதித்த நிபந்தனைகள்:

நேர்மை தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
நேர்மை எங்கும் ஓடி விடக் கூடாது என்பதால் 20 லட்ச ரூபாயை பிணைய தொகையாக ஒப்படைக்க வேண்டும். (நேர்மையிடம் அவ்வளவு பணம் இருக்குமா?)
நேர்மை டில்லியில் தங்கியிருக்க வேண்டும்.
நேர்மை சென்னைக்கு செல்ல கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்.

இனி நேர்மையை டில்லியில் மட்டும் தான் பார்க்க முடியும்.

ஆகவே, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு சென்னையில் ஆட்டோகாரர்களிடம் நேர்மையை எதிர்பார்க்காதிர்கள்!

May 13, 2012

கலகலப்பு - மரண மொக்கை @ மசாலா கபேஎவ்வளவு பெரிய மொக்கை படமாய் இருந்தாலும், multiplex -இல் தான் பார்க்க வேண்டும் என்று நான் வழக்கமாய் கடைபிடித்து கொண்டிருந்த கொள்கையை சற்று தளர்த்தி, சைதை ராஜ் என்ற மொக்கை தியேட்டருக்கு அரக்க பரக்க வண்டியை செலுத்தினேன். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தையே விழுந்து விழுந்து பார்த்து சிரித்த என் நண்பன், இந்த படத்தை பார்த்துட்டு "போய்டாத மச்சான், படம் மொக்கை " என்று சொன்னது தான். மொக்கை படத்துக்கு மொக்கை தியேட்டர்.

தன் சாம்பார் தலையை யாருக்கும் பிடிக்கவில்லை போல என்று ஒரு நூற்றாண்டு கழித்து கண்டுணர்ந்து, தன் நடிப்பு திறமைக்கு தற்காலிக முழுக்கு போட்ட சுண்டல்.சி இயக்கிய மகத்தான காவியம் தான் இந்த படம். இந்த மாதிரி படத்தை எடுப்பது தனி கலை. அதற்கு சாம்பார் அண்டாவுக்குள் தலையை விட்டு அரைமணி நேரம் அப்படியே உட்கார்ந்து யோசித்தால் தான் வரும்.

ஆரண்ய காண்டம், மௌனகுரு, லீலை என முதல் படம் எடுக்கறவன் எல்லாம் எப்படி எடுக்கிறான். 25 வது படமாம் இவருக்கு.

சாம்பாரின் வாய்ஸ் ஓவரில் தான் படம் ஆரம்பிக்கிறது. அப்புறம் வரிசையாய் உங்களுக்கு ஆப்பை சொருகி கொண்டே இருக்கிறார்கள்.

அஞ்சலியும், ஓவியாவும் வந்தார்கள், (இடுப்பை) ஆட்டினார்கள், போனார்கள். ஆனா கடைசி வரைக்கும் ஒண்ணுமே காட்ல பாஸு!
இன்னும் இரண்டு படங்கள் சுண்டல்.சி இயக்கத்தில் நடித்தால், @ படங்களில் நடிக்க போக வேண்டியதுதான்.

பாடல்கள் எல்லாம் பாண்டியராஜன் படங்களில் வரும் மஜா பாடல்களை போலவே இருக்கிறது. விமலுக்கும் சிவாவுக்கும் கடைசியில் மட்டும் ஒரு சண்டை காட்சி வருகிறது. ஆனால் பாடல் காட்சிகளில் அதை விட அதிகமாய் அஞ்சலியையும், ஒவியாவையும் போட்டு அடித்து, உருட்டி, பிசைகிறார்கள்.

சந்தானம் தான் கொஞ்சம் ஆறுதல். இவர் இருப்பதால் செகண்ட் half கொஞ்சம் சுமாரா போகுது. ஆனாலும் இன்னமும் டபுள் மீனிங்கில் நெஞ்சு-குஞ்சு, சட்டை-கொட்டை என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காமெடி பண்ணுவது, மத்தவன் பெர்சானலிட்டியை நக்கல் செய்வது,  திருநங்கைகளை கலாய்ப்பது என செய்து கொண்டிருந்தால் கஷ்டம்.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் இளவரசுவை விட அதிகம் அடி வாங்குகிறது.

அட இவனுங்க இம்ச தாங்க முடியல!

இந்த படத்திற்கு வசன உதவியாய் வேலை செய்த கேபிள் சங்கரின் கையையும் வாயையும் யாரோ கட்டி வைத்து விட்டார்கள் என நம்புவோம். ஆனாலும் மிக பெரிய இயக்குனர், "டிஸ்கசன்", அது இதுன்னு கொடுத்த பில்டப்பு ரொம்பவே ஓவர்ப்பா!


May 10, 2012

கமெண்ட் எட்டிகுட்


"What is எட்டிகுட்?" என்று Confuse ஆகாதீர்கள். 

"Etiquette" என்பதை தமிழில் எழுதியுள்ளேன். Etiquette என்றால் தமிழில் "பண்பாடு", "நாகரிகம்", "வரைமுறை" என்றெல்லாம் சொல்லலாம்.

நம்மாட்கள் கூகுளின் Tamil Transliteration -யை ஓவராக பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் உள்ள Internet, Bus என்பவற்றை இன்டர்நெட், பஸ் என்று எழுதுவதில் தப்பில்லை. ஏனென்றால் இன்டர்நெட் என்றால் என்னவென்று, காமன்மேனுக்கு தெரியும். அட "காமன்மேன்"ன்னா கமல் இல்லப்பா! 
ஆனால் அவர்களிடம் இன்டர்நெட் என்பதற்கு தமிழில் என்ன என்று கேட்டால், "பேந்த பேந்த" முழிப்பார்கள்.

அதிகமாய் வழக்கத்தில் இல்லாத, உதாரணத்திற்கு "Flirt" என்பதை அப்படியே transliterate செய்து "ப்ளிர்ட்" என்று எழுதுவார்கள். படிக்கும் போது, டர்ச்சு ஆகி விடும். நமக்கு தெரிந்த அரைகுறை இங்கிலீசுக்கும் ஆப்பு. அவர்களுக்கு தமிழின் மீது உண்மையான பற்றா? இல்லை அவர்கள் தி.மு.க பீரங்கியா? அதை அப்படியே "Flirt" என்று எழுதினாலாவது, ஆன்லைன் டிக்ஸ்னரியை பார்த்து அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். முடிந்தால் முழுவதையும் தமிழில் translate செய்து எழுதுங்கள்.

போன ஆட்சியில் தி.மு.க தலைவர் கடைகளின் பெயரை எல்லாம் தமிழில் எழுத வேண்டும் என்று அசிங்கமான சட்டம் போட்டவுடன் எல்லோரும் அதை கஷ்டப்பட்டு மாற்றினார்கள். சிலது படிக்கவே பயங்கர காமெடியாய் இருந்தது. சிலது பச்சை தமிழனுக்கே புரியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். அவை என்னவென்று எனக்கும் மறந்து விட்டது. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி சப்ஜெக்ட்டுக்கு வருவோம்.

நீங்கள் ஒரு பிளாகர். நீங்கள் இன்னொரு பிளாக்கில் சென்று கமென்ட் எழுதும் போது, எப்படி எழுத வேண்டும்?, எப்படி எழுதக்கூடாது கூடாது? என்பதற்கு சில etiquette இருக்கிறது. அதை எல்லோரும் பின்பற்றினால் blogosphere சுபிட்சமாய் இருக்கும்.

உங்களது ஒரு பதிவுக்கு இரண்டு புதிய கமெண்ட்கள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். 

"அருமையான பதிவு. என்னுடைய வலைப்பூவுக்கும் வந்து பாருங்கள்"

"நீங்கள் சொல்வது முட்டாள்தனமாய் உள்ளது. ஒன்றுமே தெரியாமல் பிதற்றாதிர்கள்"

இரண்டில் எதை மதிப்பீர்கள்?

சந்தேகமே இல்லாமல் அது இரண்டாவது தான். ஏனென்றால் அந்த முதல் ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்தாரா? என்பது சந்தேகம். ஆனால் இரண்டாவது ஆள் உங்கள் பதிவை முழுதும் படித்துள்ளான். மேலும் தன்னுடைய ப்ளாகை விளம்பர படுத்த வரவில்லை.

Be Specific:

            ஒரு பதிவை படித்தால் அது உங்களுக்கு பிடித்திருக்கா? இல்லையா? காதலை சொல்வது போல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லுங்கள். அவர் கருத்துக்கு மாறுபடும் பட்சத்தில் எதிர் கருத்துகளை சொல்லுங்கள். அல்லது சிம்பிளாக facebook லைக் செய்து விட்டு போய்விடுங்கள். அதை விடுத்து "அருமை! பகிர்வுக்கு நன்றி!" என்று கமென்ட் போட வேண்டாம். சில பேர் படிக்காமலே வந்து கமென்ட் போடுவார்கள். Indiblogger தளத்தில் கூட இதே கதைதான். இதில் கடுப்பாகிற விஷயம் என்னவென்றால், அவன் ஹிந்தி பிளாக் வைத்துக் கொண்டு தமிழே தெரியாமல், நம்முடையதை "லைக்" செய்வான்.

Don't leave a link to your Blog:

         கமெண்டில் உங்கள் பிளாக்கின் லிங்கை விட்டு செல்வது உங்கள் மீதான மதிப்பை குறைக்கிறது. உங்கள் கமென்ட் நன்றாக இருக்கும் பட்சத்தில், வாசகர்கள் Profile வழியாக உங்கள் பிளாகிற்கு வந்து படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நன்றாக எழுதும் பட்சத்தில் (அ) நீங்கள் சூப்பர் பிகராக இருக்கும் பட்சத்தில், பசங்க எப்படியேனும் அட்ரஸ் கண்டுபிடித்து வந்தே தீருவார்கள். உங்ககிட்ட மேட்டர் கும்மென்று இருந்தால் போதும், வழக்கு எண்  18/9 படத்தில் வருவது போல கெமிஸ்ட்ரியில் எதோ ஒரு டவுட் என்று சொல்லியாவது உள்ளே நுழைந்து விடுவார்கள்.

அதனால், வடிவேலு பாஷையில் சொல்வதென்றால், "போ போ போகும் போது பொருள (content) விட்டுட்டு போ. உசுர (link) விட்டுட்டு போகாத".


Stay on Topic:

        பதிவில் என்ன உள்ளதோ, அதற்கு சம்பந்தமாய் கமென்ட் எழுத வேண்டும். ஒபாமாவின் அக்கா வீட்டு திருமண சம்பந்தமான பதிவில், ஒசாமா செத்து போனதை பற்றி ஒப்பேரி வைக்கக் கூடாது. ஹிமாச்சல் ட்ரெக்கிங் பற்றி எழுதிய பதிவில் நான் எழுதிய ஒரு வரியை வைத்துக் கொண்டு, ஒருத்தர் கமென்ட்டில் சண்டைக்கு வந்து விட்டார்.

Be Nice:

       கமென்ட் எழுதும் போது மோசமான வார்த்தைகள் பயன் படுத்தக் கூடாது. அனானிமஸ் option என்பது அசிங்கமாக எழுதுவதற்கு தான் இருக்கிறது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிளாக் படிப்பவர்களில் நிறைய பேர் Rough ஆன சாப்ட்வேர் எஞ்சினியர்களாக இருக்கிறார்கள். சாப்ட்வேர் எஞ்சினியர் என்றால் படு டீசண்டாக இருப்பான் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவனுக்குள்ளும் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கும்.


Keep it Brief: 

     நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை சுருக்கமாய் சொல்ல வேண்டும். பதிவு எருமையை போல இருந்தால், கமெண்டு கன்று குட்டியை போல தான் இருக்க வேண்டும். எருமையை விட பெரிதாய் இருக்க கூடாது.

சில பேர் ஒரு paragraph-யை, சிக்கன் பீஸ் போல துண்டு துண்டாக கட் பண்ணி, நாற்பது கமெண்டுகளாக போட்டிருப்பார்கள். இது என்ன ரேசன் கார்டா? எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சர்க்கரை அதிகமாக போடுவார்கள் என்பதற்கு.ந்த பிரச்சினை தமிழனுக்கு மட்டும் தான் இருக்கிறது என்றில்லை, இங்கிலீஸ்காரிக்கும் இருக்கிறது. "எரிக்கா" என்ற வெள்ளரிக்கா, சாரி வெள்ளைக்காரி அக்கா புலம்புவதை கொஞ்சம் படித்து பாருங்கள். இதை தான் தமிழில் கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்.


May 3, 2012

Proud Father - ட்வீட்ஸ்

ஆண்கள் அதிகம் இருக்கும் லிப்டில் ஏற மாட்டாள் ஒரு உண்மையான பெண்ணியவாதி. #ஆணாதிக்க எதிர்ப்பு


தன் பெயருக்கு முன்னே தன் மனைவியின் பெயரை போட்ட ஆண்கள், 
பேஸ்புக்கில் அதிகம் மதிக்கப் படுகிறார்கள். #ஜொள்ளு

தி.மு.க.வும், டிவிட்டர் மற்றும் பிளாக்கில் உலவும் பெண்களும் தங்களை காப்பாற்றி கொள்ள அதிகம் பயன்படுத்தும் வார்த்தை "அண்ணா".

தமிழ் சினிமாவுக்கு அடுத்து "அண்ணன் தங்கச்சி" சென்டிமென்ட் வலை தளத்தில் தான் அதிகம் காணக் கிடைக்கிறது.தமிழக மக்கள் அனைவராலும் "செல்ல பெயர்" வைத்து கூப்பிடும் அளவுக்கு மிக பிரபலமான இரு சின்னஞ் சிறு குழந்தைகள், "நித்தி" மற்றும் "ரஞ்சி".


If you became a father, please don't tell me. I already hate India's population.


எனக்கு "கடவுள் இல்லை" என்ற எண்ணம் வலுத்துக் கொண்டே போகிறது. 
இதுவரை எனக்கு காதலி ஏதும் கிட்டவில்லை.


மக்களை ஏமாற்றி பணத்தை பிடுங்குவதில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது "மா.போ.க" கட்சி. (மாநகர போக்குவரத்து கழகம்)


உ.பி யில் மாயாவதிக்கு தோல்வி. #யானை சிலைக்கும் அடி சறுக்கும்.


என் பிரெண்டு ஒரு காஸ்ட்லி கேமரா வாங்கி இருக்கான்.  
நான்: "டேய்! கேமரா சூப்பரா இருக்கு.கேர்புல்லா Handle பண்ணு.என்னை தவிர யாருக்கும் கொடுத்திராத"


I saw a status. "I never ever stop even at the top". My reply: "You have to stop sometime when you are on top of someone"


மேசை தட்டுவதில் மின்சாரம் எடுக்கமுடியும் என்றால்...
மின்சார உற்பத்தியில் நாம் தான் முதலிடம் பெறுவோம் #ரசித்தது.


மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் 
பார்த்து சிலர் 
உதவி செய்வார்கள். 
சிலர் கவிதை எழுதுவார்கள். #கடுப்பு 


எப்போதும் உயரத்திலேயே இருப்பதற்கான ஒரு சிறந்த வழி, 
ஏறிய ஏணியை எட்டி உதைப்பதுதான். #வாழ்க்கை தத்துவம்.


கடற்கரையில் ஜோடி ஜோடியாய் கால்களை பார்க்கும்போதெல்லாம் 
"சீய், நமக்கு ரெண்டு லெக் பீஸ் கிடைக்க மாட்டேன்குதே!" என்ற வருத்தம் மேலோங்குகிறது. 

சட்டம் ஒழுங்கு சரி இல்லாத நாட்டில், சட்டத்தை மதித்து நடப்பது முட்டாள் தனமான காரியம்.