Apr 30, 2012

லீலை - விமர்சனம்

போன வாரம் பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி சுத்தமாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. ஆனால் சுத்தமாய் எதிர்பார்க்காமல் சென்ற இப்படம், எனக்கு ஒரு பெரிய சர்பிரைஸ்.

இந்த கதையின் ஒன் லைனரை சொல்லியிருந்தால், எந்த ஒரு தயாரிப்பாளர் மட்டும் அல்ல, நீங்களே என்னடா கதை இது? என்று சொல்லி அடித்து துரத்தி இருப்பீர்கள். ஆனால் அம்சமான திரைக்கதையும், கிளாமரான வசனங்களையும் வைத்து லீலை செய்திருக்கிறார் இயக்குனர் Andrew Louis. நிச்சயமாய் கொரியன் படத்திற்கு இணையான ரொமாண்டிக் காமெடி வகை.

சும்மாவா! இடுப்பை பார்த்ததால் பிரிந்த காதலை ட்விஸ்ட்டாக வைத்து படம் செய்து வெற்றி பெற்ற இயக்குனரிடம் வேலை செய்தவர் ஆயிற்றே! ஆம் லூயிஸ், எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்திருக்கிறார்.


நாயகி "கருணை மலர்". கல்லூரி படித்துக் கொண்டிருக்கையில், இவர் கருணையுடன் எச்சரித்தும், அவரது தோழிகள் ஒருவனை காதலித்து, அவனால் கழட்டி விடப்படுகிறார்கள்.

அந்த ஒருத்தன் தான், நாயகன் "கார்த்திக்". ஒரு handsome இளைஞன். நல்ல அழகான, அறிவான காதலியை தேடும் முயற்சியில், நாயகியின் தோழிகள் இருவரையும் பெயில் மார்க் போட்டு ரிஜெக்ட் செய்ய, அதனால் நாயகிக்கும் இவருக்கும் பிரச்சினை வர, முகம் தெரியாமலே போனிலியே திட்டி கொண்டு சண்டை போட்டு கொள்கிறார்கள். 

சில வருடத்திற்கு பின், நாயகி HCL சாப்ட்வேர் கம்பெனியில் HR டிபார்ட்மெண்டில் வேலைக்கு சேர, கார்த்திக் அதே கம்பெனியில் Developer ஆக இருக்கிறார். கம்பெனியில் ஒருமுறை கார்த்திக் செய்யும் போன், தவறுதலாய் மலருக்கு போய் விட, இங்கும் போனிலியே அவர்கள் விட்ட சண்டை தொடருகிறது. 

ஒருமுறை கார்த்திக் மலரை நேரில் பார்க்க, "கருணை மலர் என்ற மொக்கை பெயருடைய நாயகியும், மொக்கை பிகராய் தான் இருப்பாள்" என்று எண்ணி வந்த அவரது நினைப்பில் மண் விழ, வேறென்ன? உடனே அவருக்கு "மலர்" மேல் "உண்மையான" லவ் வருகிறது. கருணை மலர் என்ற பெயரும் இப்போது அவருக்கு அழகானதாகவே தோன்றுகிறது. பின், கார்த்திக் என்ற பெயரை மறைத்து, சுந்தர் என்ற பெயரில் நாயகியை காதலிக்கிறார். 

நாயகிக்கு சுந்தரின் உண்மையான பெயர் தெரிந்ததா? அவரது உண்மையான காதல் புரிந்ததா? மிஸ் பண்ணாமல் தியேட்டருக்கு போய் பாருங்கப்பா!நாயகன் ஷிவ் பண்டிட். உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏர்டெல் விளம்பரத்தில் நடித்தவர்.
இந்த கேரட்டரில் நன்கு பொருந்துகிறார். பெண்களுக்கு அதிகம் பிடிக்கலாம்.
நாயகி மானசி பரேக். இவரையும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். முக்கியமாய் பெண்களுக்கு. இவர் stayfree விளம்பரத்தில் நடித்தவர். மேலும் ஒரு சிங்கர். ரியாலிட்டி ஷோவில் பட்டம் வென்றவர். லேசாய் த்ரிஷா முகஜாடை இருந்தாலும், முதல் படத்திலேயே த்ரிஷாவை விட எக்கசக்க பெர்பார்மன்ஸ். ஒவ்வொருமுறையும் நாயகனிடம் போனில் பேசி சண்டை போடும் போதெல்லாம், ரிசீவரை இரண்டு கையிலும் மாற்றி மாற்றி பேசுவது அழகு. I love her.

சந்தானம் நன்கு சிரிக்க வைக்கிறார். He is also a software engineer. கேட்கவா வேணும்?
நடுநடுவில் இந்திய சினிமாவின் சம்பிராதாயமான புல்வெளியில், கோவில்களில் ஆடும் பாடல்கள், இதெல்லாம் தவிர்த்திருக்கலாம். "ஜில்லென்று ஒரு கலவரம்" பாடல் கொள்ளை கொள்கிறது. ரிங்டோன் ஆக செட் செய்யலாம்.

இயக்குனரின் முதல் படம் நன்றாகவே செய்திருக்கிறார். ரொம்ப நீட்டான லவ் ஸ்டோரி. சின்ன சின்ன, அழகான, சுவாரஸ்யமான் ட்விஸ்ட்கள். 

"என்ன பொறுத்த வரையிலும் பசங்க ஒரு விசயத்தில மட்டும் ஒரே மாதிரி. கண்ணுக்கு அழகா தெரியிற பொண்ணுங்ககிட்ட அவங்கனால ஒரு பிரெண்டா மட்டும் பழக முடியாது. ஒன்னு லவ் பண்ணனும்ன்னு நினைப்பாங்க. இல்ல, கை வைக்கணும்ன்னு நினைப்பாங்க" என்பது போல படம் நெடுகிலும் ரசிக்கக்கூடிய நச் வசனங்கள் மற்றும் நகைச்சுவை.

படம் ஒருமுறை சூப்பராய் பார்க்கலாம். ஒரு கல் ஒரு கண்ணாடியைவிட ரொம்பவே பெட்டர். இன்னும் நன்றாக விளம்பர படுத்தினால், சூப்பர் ஹிட்டாகலாம்.
இதற்கு மேல் எழுத தோணவில்லை. தூக்கம் வருகிறது. மூன்று மணிநேரம் இந்த கோடை வெயிலின் கொடுமையில் சந்தோசமாய் ஏசியில் கரண்ட் கட் பிரச்சினை இல்லாமலும், சிரித்துக் கொண்டும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.

இயக்குனரின் பேட்டி:     
 

No comments: