Apr 27, 2012

ஒரு கல் ஒரு பூசணிக்காய் - விமர்சனம்

ஏற்கனவே தமிழ் பிளாகர்கள் இந்த படத்தை உச்சியில் இருந்து கால் வரை @#$@# பாராட்டி விட்டதால் நானும் சம்பிராதைய முறைப்படி பாலோவ் செய்ய வேண்டும் என்ற தேவை இல்லை. இது ஒரு எதிர்மறை விமர்சனமே. விரும்பாதவர்கள் அப்பீட்டு ஆகி கொள்ளலாம். படித்து விட்டு குய்யோ முய்யோ என்று கத்த வேண்டாம்.

இயக்குனரின் பாஸ் என்கிற பாஸ்கரன் சிறந்த பொழுது போக்கு படம். "ஓகே.ஓகே" ஒரு வெறும் காலம் கடத்தக் கூடிய படம். நான்கு அல்லது ஐந்து இடங்களில் மட்டும் தான் வாய் விட்டு சிரிக்க முடிகிறது. கொஞ்சம் செண்டிமெண்டு, கொஞ்சம் காமெடி, நிறைய மொக்கை என இருக்கிறதை வைத்து ஒப்பேத்தி இருக்கிறார் இயக்குனர். 

ஆனால் இந்த படத்திற்கும் அதிகபடியான மக்கள், பற்கள் வந்து வெளியே விழும் அளவுக்கு சிரித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம். ஹாலிவுட்டின் Adam Sandler படங்களில் வருவதை போல சுமாரான ஜோக்கிற்கு கூட நாம் கஷ்டப் பட்டு சிரித்து கொள்ள வேண்டும். காமெடி படங்கள் எடுப்பதில் ஹாலிவுட் கொரியன் படங்களிடம் பிச்சை எடுக்க வேண்டும். ரசனை என்பது எல்லா விதமான படத்திற்கும் பொருந்தும். அதற்காக தற்போது தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கனா காணும் காலங்கள் டைப் காமெடியை எடுத்து, சிரிக்க சொன்னால் தூக்கம் தான் வருகிறது. அதிலும் இரவு ஷோவுக்கு சென்றது மிக பெரிய தவறு. கண்ணை சுழட்டிக்கொண்டு வருகிறது. என் அருகில் இருந்த நண்பன் சிரித்து சிரித்து விழுந்து கொண்டிருக்க, நான் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருந்தேன்.
"இது ஒரு அட்டகாசமான நகைச்சுவை படம். உனக்கு நகைச்சுவை உணர்வே இல்லை" என்று சொன்னால், இஹூம். இந்த காமெடிக்கு சிரிக்க, மெரீனா பீச்சில் அரைக்கால் டவுசர் போட்டு கொண்டு பணக்கார பெரிசுகள் வட்டமாய் நின்று வாய் விட்டு சிரிக்கும் பயிற்சியை, நான் தியேட்டரில் செய்தால் தான் உண்டு.

ஈழம் வாங்கி தந்த பின் தான் என் மூச்சு நிற்கும் என்று சபதம் மேற்கொண்டுள்ள தாத்தாவின் சினிமா கலை ஆர்வம், பேரன்களுக்கும் பொங்கி வழிகிறது. தி.மு.க. ஜால்ராக்கள் உருவி விட அடுத்த தளபதி ரெடி. அந்த வகையில் அருள்நிதி எவ்வளவோ பெட்டர். நடுவில் ஒரு மொக்கை படத்தில் நடித்ததை தவிர வம்சம், மௌன குரு என்று படங்களின் மூலம் அடக்கி வாசித்து பெயரை எடுத்துள்ளார். காசு கொடுத்து சந்தானத்தை "நீ நல்லா வருவ டா" என்று அடிக்கடி உதயநிதியை பார்த்து கூவ சொன்னது எந்த அளவுக்கு உண்மையாகுமோ தெரியவில்லை, ஆனால் அருள் நிதி நன்றாக வர அதிக வாய்ப்புள்ளது. 

எஸ்.வி.சேகர், பாக்யராஜின் மகன்கள் எல்லாம் முதல் படம் ரிலீஸ் ஆகும் போதே ரசிகர் மன்றம் செட்டப் செய்து ஊரை ஏமாற்றுகையில், தி.மு.க. குல விளக்கு, தங்க தளபதி உதயநிதி அவர்கள் "அடுத்த படம் ரிலீஸ் ஆன பின்பு தான் ரசிகர் மன்றம் அமைப்பேன்" என்று சொன்னது அவரது புலனடக்கத்தை காண்பிக்கின்றது. வெள்ளாட்டுக்கு முளைத்த தாடி போல, தாடைக்கு கீழே மட்டும் முளைத்த அவரது தாடி, அவரது நடிப்பை போலவே பார்க்க மிகவும் இம்சிக்கிறது.  

நமீதாவின் ஒன்னு விட்ட சகோதரி போல காட்சி அளிக்கும் ஹன்சிகாவை "கோயம்பேடு மார்கெட்டுக்கு பூசணிக்காய் வாங்க வந்தவள் போல இருக்க" என்றும், "ஆண்டி" என்றும் படத்தில் வரும் ஒரு கேரக்டர் கலாய்த்ததை விட, நம்மால் அதற்கு மேல் கலாய்க்கவே முடியாது. ஷகிலா, ரேஷ்மா வரிசையில் மேட்டர் படத்திற்கு தான் லாயக்கு.

நாயகனின் அப்பா அம்மாவுக்குமான ட்ராக்கோ, நாயகன் நாயக்கிக்குமான ட்ராக்கோ ரொம்பவே சப்பையாய் உள்ளது. அந்த வகையில் சந்தானத்திற்கும் அந்த பல்லில் கிளிப் போட்ட பெண்ணுக்கும் உள்ள சின்ன காதல் கூட ரசிக்கும் படியாய் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

இந்த படத்தை கூட ஒருமுறை பார்த்து விடலாம். ஆனால் டிவியில் இவனுகள் கும்பலாய் வந்து மாறி மாறி தம்பட்டம் அடிப்பதை தான் ஜீரணிக்க முடியாது.1 comment:

Kumaran said...

முதல் பிட்டும் சரி அந்த கீழ நீல கலர் பிட்டும் சரி, ஹன்சிக்காவ விட பெட்டரா அருமையா இருக்குங்க நண்பா//
ரொம்ப நாட்கள் சென்று தங்களது எழுத்தில் நான்..நான் ஒரு விமர்சனம் படிக்கிறேன்.நீங்க ரசித்ததை தெளிவா கரைக்டா பண்ணிருக்கிங்க.மிக்க நன்றி.