Apr 25, 2012

ஆன்டி வைரஸ் - ஆபாயில் (18+)


னி நான் மொக்கை பதிவுகளை விடுத்து, இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் சீரியஸாக எழுதலாம் என்று இருக்கிறேன்.

ப்ளீஸ்!! சிரிக்காதிங்க.சரி, நான் சீரியஸாக இதுவரை எழுதியதில்லை என்றாலும், அந்த அளவுக்கு அசிங்கமாகவும், அசைவமாகவும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவ்வபோது சில அதிரடி மச்சான்கள் "ஆன்டியை மடக்குவது எப்படி?" என்பது மாதிரியான ஏடாகூட தலைப்புகளில் கூகுளில் தேடி, நம்ம சைட்டுக்கு விசிட் அடிக்கிறார்கள். நம் போஸ்டில் எங்கேயாவது "ஆன்டி" என்று ஒரு வார்த்தை மேட்ச் ஆனால் கூட, கூகிள் நம்ம சைட்டை தேடல் வரிசையில் காண்பித்து விடுகிறது. நம்ம சைட்டோ, முட்டையை(ஆபாயில்) மட்டுமே சேர்த்து சாப்பிடும் சைவம். 

பாவம்! ஏமாற்றத்தில் கடுப்பாகி, ப்ரௌசரையே மூடி இருப்பான். எனக்கே இப்படி என்றால், கலீஜாக எழுதுபவர்களுக்கு எக்கச்சக்க ஹிட்டு வருமென்று நினைக்கிறேன். என்னுடைய இந்த போஸ்டும் சிவாஜியின் "கர்ணன்" பட அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று நினைக்கிறேன். அதற்கு காரணம் கடைசியாக வரும் ஒரு 'A' மாதிரியான ஜோக்கும் தான்.

 

.blogspot.com -லிருந்து .com -க்கு மாறி விட்டேன். இனி www.iamstranger.com தான் நம்ம சைட். நான் எழுதுவதால் ஐம்பது பைசா கூட கிடைப்பதில்லை. இந்த ஊரில் எழுத்தாளனுக்கு மதிப்பே இல்லை. எங்கு போனாலும், எது செய்தாலும் சொந்த காசையே செலவழிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் தான் என் எழுத்தை அதிகம் மதிக்கிறார்கள். என்னை கொண்டாடுகிறார்கள். கேரளா பெண்ணை ஒருத்தி திருமணம் செய்து அங்கேயே குடிபெயர போகிறேன். தன் சொந்த காசை செலவு செய்து, இந்த டொமைன் வாங்கி தந்த என் வாசக நண்பன் இ.வா. நடேஷ்குமாருக்கு நன்றிகள் பல.

.com -ற்கு மாற்றும் போது நாம் நினைத்த URL கிடைப்பதில்லை. ப்ளாக் URL, panty -யை போல சின்னதாகவும் பார்ப்பவர்களை Attract செய்வதாகவும் இருக்க வேண்டும். முக்கியமாய் தமிழில் இருக்கக் கூடாது. நினைவில் வைத்துக்கொள்ள, ல(la), ழ(zha) பிரச்சினைகள் வரும்.ன் உயிரினும் மேலான தமிழ் பிளாகர்ஸ்களே! 
பிட்டு படம் பார்த்தாலும் அதை கண்ணியமாய் புட்டு லாஜிக் பார்த்து விமர்சிக்கும் சிங்கங்களே!
கில்மாவான தலைப்பு வைத்து சமூக விழிப்'புணர்ச்சி' உண்டாக்கும் சீர்திருத்த செம்மல்களே!

நடிகைகளின் செக்சியான இமேஜை உங்க பிளாக்கில் போடாதிங்க மக்களே. ஆபிசில் திறந்து படித்து ரொம்பவே அசிங்க பட வேண்டி இருக்கின்றது. அதிலும் ஒரு பெண் நம் மானிட்டரை பார்த்துவிட்டால், நம்மை "சிம்பு" ரேஞ்சுக்கு "கெட்டவனாக" பார்க்க ஆரம்பித்து விடுவாள். இந்த பதிவால் என்னுடைய பிளாகையே என்னால் கூட ஓபன் பண்ணி எத்தனை கமெண்ட்டு வந்திருக்கு என்று ஆபிசில் செக் பண்ண முடியாது என்பது தான் யதார்த்தம்.

இந்த பிளாக்கை படித்து விட்டு கேவலமாக திட்ட விரும்பினால், உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் மூலமாக அதை செய்தால் நலம். "லைக்" செய்ய வசதியாய் இருக்கும். ஜிமெயில் அக்கௌன்ட் மூலம் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் சொல்வதில் சோம்பேறித்தனம் தான்.ப்போதெல்லாம் என்ன எழுதுவதே என்றே தெரியவில்லை. என்னிடம் இருக்கும் சரக்கு தீர்ந்தது போல இருக்கு. இந்த பதிவை முழுதும் படித்தாலே உங்களுக்கு புரியும். எனக்கு ஜெயமோகன், சாருவை போன்ற உலகத்தர இலக்கியவாதிகளை படிக்கவும் அறிவு இல்லை. சமூகத்தை கலாய்த்து எழுதுவதே பிழைப்பாய் மாறிவிட்டது. இந்த பிழைப்பால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

எழுத சரக்கு தீர்ந்து விட்டாலும், இப்போது சரக்கு அடிப்பது மட்டுமே எனக்கு ஆறுதல். சரக்கு அடித்த பின் நிறைய சித்தாந்தங்கள் தோன்றும். ஆனால் சரக்கு அடித்த பின் எழுத மாட்டேன். சரக்கு அடிச்சுட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்தால், 3D கண்ணாடி போடாமல் 3D படம் பார்ப்பது போல இருக்கும்.

நான் வழக்கமாய் தமிழ் புத்தாண்டில் தான் சபதம் போடுவேன். இந்த புத்தாண்டுக்கு, "இனி டாஸ்மாக்கில் சரக்கை வாங்கி குடிப்பதில்லை" என்று தெளிவாக ஒரு சபதம் போட்டுள்ளேன். தமிழ் புத்தாண்டு என்றைக்கு என்பதில் ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை இருந்தாலும், சராசரி தமிழனுக்கு அது சப்ப மேட்டர். அவனுக்கு தேவை அன்னிக்கு லீவு, ஒரு எழவு புது ரிலீசு படம், ஒரு பாட்டில் சரக்கு. 


 


இந்த நிதியாண்டில் டாஸ்மாக் துறைக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று தெரியவில்லை. விலைக்கு ஏற்ற தரம் இருப்பதில்லை. தரத்திற்கு ஏற்ற விலையும் இருப்பதில்லை. ISI மாதிரி சான்றிதழ் ஒன்று கொடுத்தால் தேவலை. அங்கே கொடுக்கின்ற சரக்கு எல்லாம் மட்டமாக இருக்கிறது. கூலிங் சுத்தமாக இல்லை. பாதி பாட்டில் யூரின் நிரப்பி, "அண்ணே புல் பெப்சி"னே என்று சொல்லி விற்றாலும், அங்கே தான் வாங்க வேண்டிய நிலைமை. இந்த அநியாயத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் நாக்கை மடித்து கேள்வி கேட்க, கிடைத்த நமக்கான ஒரு தலைவர் தான், கருப்பு எம்.ஜி.யார். சென்னையில் அங்காங்கே தே.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தலை வைத்ததற்கு பதில், நன்கு கூலிங்காக பீர் பந்தல் மலிவு விலையில் வைத்தால், அடுத்த இடை தேர்தலில் குடிமகன்களின் ஓட்டுகளை பெற்று டெபாசிட் இழக்காமல் தப்பிக்கலாம்.

முப்பது ரூபாய் போட்டு மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் இந்த ஊரில், அந்த மண் பானையை ஓபன் பண்ணி யார் குடிக்க போகிறார்கள்? கற்களை நிரப்பி காக்காய்கள் குடித்தால் தான் உண்டு.

இந்த போஸ்ட்டுக்கு கமெண்டு யாரும் போட வேண்டாம். அதை வச்சு ஒரு ஊறுகாய் பாக்கெட்டு கூட வாங்க முடியாது. சென்னையில் சுமாரான விலையில் சரக்கு எந்த பாரில் வாங்கலாம் என்று சொன்னால், அந்த கர்த்தரின் அருள் உங்களுக்கு கிட்டும்.

சில பேரை பார்த்தால் அவனுடைய பேருக்கும் அவனுக்கும் சம்பந்தமே இருக்காது. பார்க்க கொக்கி குமாரு மாதிரி இருப்பான். ஆனால் அவன் பெயர் டேனியல் துரை என்று இருக்கும். ஆபிஸ் மீட்டிங்கில் வெள்ளைக்காரன் பேசும் போது ஒன்னும் புரியாமல், நயன்தாரா போல "pardon", "pardon" என்று திரும்ப திரும்ப கேட்டு, வெள்ளைக்காரனை இம்சை செய்வான்.


னக்கு தினமும் மதியம் தான் ஆபிஸ் ஆரம்பம். அன்று நான் வழக்கத்திற்கு மாறாக படு ஸ்மார்ட்டாக டிரஸ் செய்து கொண்டு கிளம்பினேன். சென்னையில் அன்று தான் பூகம்பம் வந்தது. நான் நன்கு டிரஸ் செய்து கொண்டு போனதற்கும், பூகம்பத்திற்கும், எந்த ஒரு பட்டர் பிளை எபெக்ட்டும் காரணம் இல்லையென்று நினைக்கிறேன். 

முதல் முறை அதிரும்போது நான் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். வழியில் நிறைய பள்ளங்கள் இருந்ததால், அப்போது எனக்கு எந்த அதிர்வும் தெரியவில்லை. சென்னையில் இன்னும் பல ரோடுகள் சரிசெய்ய படாமலே இருக்கின்றன. வேளச்சேரி தண்டீஸ்வரம் வழியாக தரமணி சாலையில் இணையும் ரோடு படு மோசம். இன்னும் மழைக்காலம் முடியவில்லையா? அடிக்கிற வெயிலில் பைக் சீட் சுட்டு, சூ** பழுத்து மருதாணி வைத்தது போல சிவந்து விடுகிறது. மேயர் இந்த பதிவை மேய்ந்து விட்டு நடவடிக்கை எடுப்பாரா? பார்ப்போம்!இரண்டாம் முறை பூமி அதிரும் போது நான் ஆபிசில் தான் இருந்தேன். அப்போது மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தேன் என்றால் நம்பியே ஆக வேண்டும். அன்றைக்கு முழுவதும் "பில்டிங் ஆடுது" "பில்டிங் ஆடுது" என்று அனைவரும் "அலர்ட்" ஆறுமுகமாய் அடிக்கடி எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருந்தார்கள். மெதுவாய் பின்னே சென்று லேசாக அவர்கள் உட்கார்ந்திருக்கும் சீட்டை ஆட்டினாலே போதும், திரும்பி பார்க்காமல் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். நானும் வேகமாக கீழே இறங்கி ஓடினேன். உயிருக்கு பயந்து அல்ல. பில்டிங் ஆடாமல் கையால் தாங்கி பிடிக்க. 

பூகம்பத்தை தான் உணர முடியவில்லை, சுனாமியிலாவது ஸ்விம்மிங் போடலாம் என்று மெரினாவுக்கு சென்றேன். அதுவும் ஏமாற்றிவிட்டது. பீடி பாடி தனுசும் ஸ்விம்மிங் சூட்டில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

ஜாக்கெட் தத்துவம்:

ஜாக்கெட்டின் முதல் கொக்கியை
தவறாய் போட்டால்
பின் வரும் எல்லா கொக்கியும்
தவறாகவே இருக்கும்.

Great lines said by,

முக்கு கடை டெய்லர் "முருகன்" 


பாவாடை ஜோக்:

பாவாடையை தூக்கி 
அவள் அதை 
அவனுக்கு காட்டினாள்.
அவன் அதை பார்த்து மிரண்டு போனான்.

--
--
--
--
--
--
ஒரு பாவாடையின் விலை. Rs. 2599.90
No comments: