Mar 8, 2012

அரவான் - நமீதா விமர்சனம்





இது பட விமர்சனம் இல்லை. சுய புலம்பல்.

நாலைந்து இங்கிலீஷ் படங்களை பார்த்துவிட்டு வரலாற்று பேண்டசி படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் செல்வராகவன் போன்ற ஜென்மங்களிடம் இருந்து தமிழ் சினிமாவை மீட்டு, கொஞ்சமாவது சரியான வழியில் கொண்டு செல்லும் முயற்சி தான் வசந்த பாலனின் "அரவான்".

"தமிழர் வரலாறு", "தமிழர் பெருமை" என்ற வார்த்தைகளை பயன்படுத்த முடியாததில் எனக்கு வருத்தமே! எல்லாம் "ஏழாம் அறிவு" செய்த மாயம்.

முழு படமும் சுவாரஸ்யமாகவே சென்றது. சில பல குறைகள், லாஜிக்  மீறல்கள் இருந்தாலும், இப்போது இருக்கும் தமிழ் சினிமா சூழலில், இது போல இன்னொரு படம், சினிமாவை மற்றும் தன் கலாசாரத்தை காதலிக்கும் வசந்த பாலனை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது.

அவர் நினைத்ததை 100% படத்தில் கொண்டு வர முடியாமல் போயிருக்கலாம். இதை போல படமெடுக்க தயாரிப்பாளர்களும், அதற்கான சூழ்நிலைகளும், மக்களின் ரசிப்பு தன்மை, அவர்களின் வாழ்க்கை மேம்பாடு, இங்கே துளியும் இல்லை. அதையும் மீறி ஒரு நம்பிக்கையில் எடுக்கும் முயற்சியையும் அங்காங்கே முளைக்கும் அறிவுஜீவிகள் உடைத்து நசுக்கி விடுவார்கள். இவற்றுக்கு மத்தியில் இதை போல் ஒரு படமெடுத்து, அதில் வெற்றியும் பெறலாம் என்று மிகுந்த நம்பிக்கை கொண்ட இயக்குனர் மேல் அதீத பரிதாபமே மிஞ்சுகிறது. நல்ல படங்கள் எல்லாம் "ஆரண்ய காண்டம்", "வாகை சூட வா" போன்ற படங்களை போல, கடைசியில் ஓரிரு தேசிய விருதுகளை மட்டும் வாங்கிவிட்டு மூலையில் போய்  முடங்கி கொள்ளும்.

நமீதா டச்: அரவான், Misborn.

வடிவேலுவின் பின்புறத்தை சிங்கம்புலி கடிப்பது. 
செத்து  போகின்ற வயதில் பாலைவனத்தில், தன்னில் 1/3 வயதுள்ள நாயகியை கட்டிபிடித்து டூயட் ஆடுவது.
ஹாலிவுட் "அச்சு அசல்" படங்கள்.
தலதளபதிகள்.
"அச்சு அசல்" இசையமைப்பாளர்கள்.
மேக்கிங்கை மட்டுமே வைத்து ஊரை ஏமாற்றும் விஷ்ணுவர்த்தன்கள்.
மனநோயாளி கேரக்டரில் தன் திறமையால் அண்டத்தை கதிகலங்க வைக்கும் நாயகர்கள்.
எய்ட்ஸ் வந்த நாயகன். 

இன்னும் இருநூறு வருடங்களுக்கு மேல் இதை மட்டுமே ரசித்துக் கொண்டிருப்போம்.

வாழ்க தமிழ் சினிமா!

Fuck off.


No comments: