Feb 15, 2012

நமீதாவுக்கு ஒரு ஒப்பன் லெட்டர்.

  (யாருப்பா அது, நமீதாவின் பழைய போட்டோவை பார்த்து ஜொள்ளு விடறது?)

அன்புள்ள நமீதாவுக்கு,

அரக்கோணத்தில் இருந்து கொண்டு தமிழே தெரியாத ஒபாமாவுக்கும், பேசவே தெரியாத மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதும் இந்த நல்லுலகில், புயல் போல எங்கேயோ உருவாகி, தமிழ் நாட்டில் மையம் கொண்டு கலையுலகிற்கு தொண்டாற்றி வரும் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுவது பிழையாகாது என்று நினைக்கிறன்.

நீங்கள் கவர்ச்சியான நடிகை என்ற காரணத்தினால் நான் இந்த ஒப்பன் லெட்டரை எழுதவில்லை. இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான்.

நமீதா, 

"பேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல".  இந்த பன்ச் டயலாக் ரஜினியை விட உங்களுக்கே பொருத்தமாய் இருந்திருக்கும். நீங்கள் நடந்தாலும் சும்மா அதிரும்.

எல்லா படத்திலும் உங்களுக்கு "வெயிட்டான" ரோல் கிடைப்பது உங்களின் நடிப்பு திறமைக்கு சான்று.

இந்த காலத்தில் பாரி வாழ்ந்திருந்தால் முல்லைக்கு பதில் உங்கள் "கொடி"யிடைக்கு தேரை கொடுத்திருப்பான். உங்கள் பேரழகில் மயங்கி திருச்சியை சேர்ந்த நம்பர் ஒருவர் உங்களை கடத்த முற்பட்டதாக இந்த விக்கி பீடியா செய்தி கூறுகிறது.

தமிழுக்கு நீங்கள் செய்த தொண்டுகள் அளப்பரியது.

அடுத்த நாள் ஆபிசுக்கு போக வேண்டும் என்ற கவலையை கூட மறந்து ஞாயிற்று கிழமை இரவு உட்கார்ந்து வாரந்தோறும் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் உங்களின் செந்தமிழை கேட்டு களிப்படைந்து உறங்க செல்வேன்.

உங்களின் செந்தமிழை கேட்ட பின் தான் கலைஞருக்கே தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்த வேண்டும் என்ற எண்ணம் சூரியன் போல "உதித்திருக்க" கூடும். அதனாலேயே அப்துல் கலாமை கூட அழைக்காமல் உங்களை அருகில் உட்காரவைத்து கலைஞர் செம்மொழி மாநாடு நடத்தி தமிழை சிறப்பித்தது, தமிழக மக்களுக்கு அம்னீசியா நோய் வந்தாலும் கடைசி வரை "நெஞ்சில் நீங்காத பாடல்களாய்" நினைவில் இருக்கும். 

"அனுஷ்கா என்றால் உதடுகள் ஒட்டாது. 
நமீதா என்றால் தான் உதடுகள் ஓட்டும்"

என்று அதே கலைஞர் உங்களை புகழ்ந்து சொன்ன வாசகம் இந்த அண்டம் அறியும்.

உலகம் முழுதும் உங்களால் பிரபலம் அடைந்த "மச்சான்ஸ்" என்ற வார்த்தையை அடுத்த வருடம் ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்க போகிறார்களாம்.

"லதா Font", "தென்றல் Font" போன்று, உங்களை கவுரவிக்கும் பொருட்டு "நமீதா Font" என்ற தமிழ் Font -ஐ உருவாக்க தமிழ் கணிபொறி வல்லுனர்கள் குழு ஒன்று போராடி வருகிறது.

உங்களின் பெயரை உபயோகித்து புகழ் பெறலாம் என்ற நப்பாசையினால் தான், நானும் "நமீதா விமர்சனம்" என்ற பெயரில் பட விமர்சனங்களை எழுதி வந்தேன். அந்த விமர்சனத்திற்கு "நமீதா டச்" கூட கொடுத்து வந்தேன்.

இவ்வளவையும் ஏன் சொல்கிறேன் என்றால், என் பிரெண்டு ஒருத்தன்

"என்னடா "நமீதா விமர்சனம்" ன்னு அசிங்கமா தலைப்பு வச்சு எழுதற?"

என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்டு விட்டான். மீன் சாப்பிடும் போது தொண்டையில் குத்திய முள்ளாக, அது என்னை வெகுநாளாக உறுத்திக் கொண்டிருக்கிறது.

நானும் "நமீதா விமர்சனம்" என்று போடுவதை விட்டு விடலாமா என்று கூட யோசித்தேன். குழம்பிய குட்டையாய், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

எனக்கு ஒரு நல்ல பதிலை கூறவும்.

கலைஞரின் வழியில் கடிதம் எழுதி விட்டு, உங்களின் பதிலை எதிர்நோக்கி நான்.டிஸ்கி: நமீதாவின் ரசிக பெருமக்களும், கட்சி தொண்டர்களும், மற்றவர்களும் இது பற்றி கருத்துகளை கூறலாம்.


4 comments:

ILA(@)இளா said...

:)) Awesome Letter.

Kumaran said...

நான் நமிதா அக்காவோட ரசிகனே இல்லங்க..

@@ எல்லா படத்திலும் உங்களுக்கு "வெயிட்டான" ரோல் கிடைப்பது உங்களின் நடிப்பு திறமைக்கு சான்று.@@
எனக்கு யோசனை எங்கெங்கயோ போது..நல்லாருக்கு..

சிறப்பான பதிவு..சந்தோஷமாக ரசித்தேன்..
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

Vinoth S said...

"அனுஷ்கா என்றால் உதடுகள் ஒட்டாது.
நமீதா என்றால் தான் உதடுகள் ஓட்டும்"
:) :)

ராஜ் said...

//நானும் "நமீதா விமர்சனம்" என்று போடுவதை விட்டு விடலாமா என்று கூட யோசித்தேன்//

தமிழா, ஏன் இந்த விபரீத எண்ணம். இந்த எண்ணம் உனக்கு வர யார் காரணம் ? துவண்டு கிடந்த தமிழனின் வாழ்வை தூக்கி நிறுத்த தன் வாழ்க்கையை அர்பணித்த தியாக செம்மல் தான் நம்முடைய நமீதா.... அப்படி பட்ட நமீதா அவர்களின் புகழை பரப்பும் "நமீதா விமர்சனத்தை" நிறுத்துவதா.....கூடாது தமிழா. கடல் பொங்கி விடும்.