Feb 17, 2012

"பவர் கட்" நல்லது - ஆபாயில்


சுஜாதா சுகமில்லை

சுஜாதா இறந்து போனது கலையுலகிற்கு பேரிழப்பு என்றாலும் வளரும் தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஒரு விதத்தில் நல்லது தான்.

என்னுடைய எழுத்து சுஜாதாவின் எழுத்தை போல் உள்ளதாக என் Die Hard வாசகர்கள் கூறுகின்றனர். சுஜாதாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை. அவரும் என் எழுத்தை படிக்கவில்லை.

சுஜாதா பரலோகத்தில் "நிம்மதியாய்" இருக்கட்டும்.

என் எழுத்து சுஜாதாவை போல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? சுஜாதா சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கையில் தன் கைப்பட எழுதிய கோடு போட்ட அறிவியல் நோட்டு கால ஓட்டத்தில் என்னிடம் சேர்ந்தது. அதை பார்த்து அவரை போலவே தொடர்ந்து எழுதி விடாமுயற்சி செய்து விஸ்வரூப வெற்றி கண்டுள்ளேன்.

இந்தியாவில் கல்யாணம் செய்து புள்ளைகளை பெற்று போடுவது போல், யார் பார்த்தாலும் எதோ ஒன்றை கிறுக்கி புத்தகம் போட்டு, புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்கள்.

அது போல உங்களில் யாருக்காவது உங்களுடைய எழுத்தை புத்தகமாய் பார்க்க வேண்டும் என்ற அல்ப ஆசை இருந்தால்,  இந்த சைட்டுக்கு போய் உங்கள் பிளாக் அட்ரஸ்ஸை கொடுத்து, உங்க புத்தகத்தின் Soft Copy யை பார்த்து பரவசம் அடைந்து, அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். அதிக பணம் செலவழித்தால் உங்க வீட்டுக்கே Hard Copy அனுப்பி வைப்பார்கள்.


தமிழ் நாடு ஒளிர்கிறது!
சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சார தட்டுபாடு எக்கச்சக்கமாய் அதிகரித்து விட்டது. சொந்தகாரங்க வீட்டுக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ போகும் முன் கரண்ட் இருக்கா? என்று கால் செய்து கேட்டு விட்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நம் முன்னோர்கள் குடும்ப கட்டுப்பாடு பண்ணாமல் விளையாடிய வினையால், ஜனத்தொகை அதிகரித்து இப்போது மின்சார தட்டுபாடு உருவாகிவிட்டது.

இதனால் மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். பெண்கள் சீரியல் பார்க்க முடிவதில்லை. அதனால் சும்மாவே இருக்கும் மாமியாரும் மருமகளும் சீரியலின் அடுத்த எபிசோட்டை வீட்டில் தொடரலாம். கரண்ட் கட், கணவர்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்கலாம். டைவர்ஸ், கொலை போன்றவை சாதாரணமாய் நடக்கலாம். அதனால் கரண்ட் போய் விட்டால் கணவர்கள் வெளியே சென்று விடுதல் நலம்.

கரண்ட் இல்லாமல் மாணவர்கள் எக்ஸாமுக்கு முன்தினம் கூட படிக்க முடிவதில்லை. அதனால் கண்டிப்பாக பெயில் ஆகி விடுவார்கள். மாணவிகள் தினமும் படிக்க முடியாததால், அவர்களும் பெயிலாகி விடுவார்கள்.
இந்த பிரச்சினை அதிகரித்தால் நிலைமை இன்னும் மோசம் ஆகும். குறிப்பாக, வருகின்ற கோடை மாதங்களில் கல்யாண சீசன் அதிகம் இருப்பதால், திருமணம் செய்யும் ஒவ்வொரு ஜோடியும் முதலிரவு கொண்டாட வேண்டும் என்றால் ஜெனரேட்டர் வாங்கி தான் ஓட்ட வேண்டும். எப்போது கரண்ட் கட் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. பூவெல்லாம் தூவி, புது பொண்டாட்டியை அருகில் உட்கார வைத்து, தட்டு தடுமாறி ஆரம்பித்த பின், பாதியில் திடீரென்று கரண்ட் போனால் எத்தனை கஷ்டமாய் இருக்கும்? எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் மறுபடியும் கஷ்டப் பட்டு,....யப்பா!! நினைத்து பார்க்கவே முடியவில்லை. மாமனாரிடம் இருந்து வாங்குகின்ற வரதட்சணையில் ஒரு பெரிய பவர் ஜெனரேட்டரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்யாணம் செய்யப் போகும் மாப்பிள்ளைகள் கவனம் தேவை.

ஒரு விதத்தில் இந்த பவர் கட் தற்போது ஜனத்தொகை உருவாவதை கட்டுப்படுத்தும் என்பதால், இந்த பவர் கட், பல கஷ்டத்தில் ஒரு நல்லது.

"அடுப்பும் பற்ற வைக்க கூடாது, சாப்பாடும் வேணும்" என்றால், என்ன செய்வது?

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடுபவர்களுக்கு பண மூட்டை, ஐரோப்பாவிலிருந்தோ, அன்டார்டிக்காவிலிருந்தோ வரட்டும். கவர்மென்ட் அதை கட் செய்வதற்கு பதில், எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு கரண்ட்டை 24 மணி நேரமும் கட் செய்தால் போதும்.

"அம்மாவுக்கு ஒட்டு போட்டால் இப்படிதான்" என்று வலையுலக திமுக கண்மணிகள் வேகமாக ரன்னிங் ரேஸில் ஓடி வர வேண்டாம்.

இந்த வருடம் தாத்தாவே வென்றிருந்தால், இதே நிலைமை தான் இருந்திருக்கும். கூடவே, ஒவ்வொரு மாதமும் என் வீட்டு வாடகையை தாத்தாவிடம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். இந்நேரம் தமிழ்நாட்டில் எல்லோருடைய நிலம், பெரிய வீடு, "சின்ன வீடு" எல்லாத்தையும் அடித்து பிடுங்கியிருப்பார்கள். மீண்டும் மன்னர் ஆட்சி மலர்ந்திருக்கும். தாத்தா தமிழ் நாட்டை மூன்றாய் பிரித்து சோழநாட்டை ஸ்டாலினுக்கும், பாண்டிய நாட்டை அழகிரிக்கும், சேர நாட்டை கனிமொழிக்கும் கொடுத்து விட்டு, நண்பன் விஜய் போல All izz Well என்று சொல்லியிருப்பார்.


பவர் கட் special தத்துவம்:

விளக்கேற்ற ஒரு பெண்ணை
தேடி அலைவதை விட,
கிடைத்த பெண்ணை வைத்து
விளக்கை அணைப்பதே
சிறந்தது.

- ஜல புல ஜங் சுவாமிகள்.
Feb 15, 2012

நமீதாவுக்கு ஒரு ஒப்பன் லெட்டர்.

  (யாருப்பா அது, நமீதாவின் பழைய போட்டோவை பார்த்து ஜொள்ளு விடறது?)

அன்புள்ள நமீதாவுக்கு,

அரக்கோணத்தில் இருந்து கொண்டு தமிழே தெரியாத ஒபாமாவுக்கும், பேசவே தெரியாத மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதும் இந்த நல்லுலகில், புயல் போல எங்கேயோ உருவாகி, தமிழ் நாட்டில் மையம் கொண்டு கலையுலகிற்கு தொண்டாற்றி வரும் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுவது பிழையாகாது என்று நினைக்கிறன்.

நீங்கள் கவர்ச்சியான நடிகை என்ற காரணத்தினால் நான் இந்த ஒப்பன் லெட்டரை எழுதவில்லை. இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான்.

நமீதா, 

"பேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல".  இந்த பன்ச் டயலாக் ரஜினியை விட உங்களுக்கே பொருத்தமாய் இருந்திருக்கும். நீங்கள் நடந்தாலும் சும்மா அதிரும்.

எல்லா படத்திலும் உங்களுக்கு "வெயிட்டான" ரோல் கிடைப்பது உங்களின் நடிப்பு திறமைக்கு சான்று.

இந்த காலத்தில் பாரி வாழ்ந்திருந்தால் முல்லைக்கு பதில் உங்கள் "கொடி"யிடைக்கு தேரை கொடுத்திருப்பான். உங்கள் பேரழகில் மயங்கி திருச்சியை சேர்ந்த நம்பர் ஒருவர் உங்களை கடத்த முற்பட்டதாக இந்த விக்கி பீடியா செய்தி கூறுகிறது.

தமிழுக்கு நீங்கள் செய்த தொண்டுகள் அளப்பரியது.

அடுத்த நாள் ஆபிசுக்கு போக வேண்டும் என்ற கவலையை கூட மறந்து ஞாயிற்று கிழமை இரவு உட்கார்ந்து வாரந்தோறும் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் உங்களின் செந்தமிழை கேட்டு களிப்படைந்து உறங்க செல்வேன்.

உங்களின் செந்தமிழை கேட்ட பின் தான் கலைஞருக்கே தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்த வேண்டும் என்ற எண்ணம் சூரியன் போல "உதித்திருக்க" கூடும். அதனாலேயே அப்துல் கலாமை கூட அழைக்காமல் உங்களை அருகில் உட்காரவைத்து கலைஞர் செம்மொழி மாநாடு நடத்தி தமிழை சிறப்பித்தது, தமிழக மக்களுக்கு அம்னீசியா நோய் வந்தாலும் கடைசி வரை "நெஞ்சில் நீங்காத பாடல்களாய்" நினைவில் இருக்கும். 

"அனுஷ்கா என்றால் உதடுகள் ஒட்டாது. 
நமீதா என்றால் தான் உதடுகள் ஓட்டும்"

என்று அதே கலைஞர் உங்களை புகழ்ந்து சொன்ன வாசகம் இந்த அண்டம் அறியும்.

உலகம் முழுதும் உங்களால் பிரபலம் அடைந்த "மச்சான்ஸ்" என்ற வார்த்தையை அடுத்த வருடம் ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்க போகிறார்களாம்.

"லதா Font", "தென்றல் Font" போன்று, உங்களை கவுரவிக்கும் பொருட்டு "நமீதா Font" என்ற தமிழ் Font -ஐ உருவாக்க தமிழ் கணிபொறி வல்லுனர்கள் குழு ஒன்று போராடி வருகிறது.

உங்களின் பெயரை உபயோகித்து புகழ் பெறலாம் என்ற நப்பாசையினால் தான், நானும் "நமீதா விமர்சனம்" என்ற பெயரில் பட விமர்சனங்களை எழுதி வந்தேன். அந்த விமர்சனத்திற்கு "நமீதா டச்" கூட கொடுத்து வந்தேன்.

இவ்வளவையும் ஏன் சொல்கிறேன் என்றால், என் பிரெண்டு ஒருத்தன்

"என்னடா "நமீதா விமர்சனம்" ன்னு அசிங்கமா தலைப்பு வச்சு எழுதற?"

என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்டு விட்டான். மீன் சாப்பிடும் போது தொண்டையில் குத்திய முள்ளாக, அது என்னை வெகுநாளாக உறுத்திக் கொண்டிருக்கிறது.

நானும் "நமீதா விமர்சனம்" என்று போடுவதை விட்டு விடலாமா என்று கூட யோசித்தேன். குழம்பிய குட்டையாய், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

எனக்கு ஒரு நல்ல பதிலை கூறவும்.

கலைஞரின் வழியில் கடிதம் எழுதி விட்டு, உங்களின் பதிலை எதிர்நோக்கி நான்.டிஸ்கி: நமீதாவின் ரசிக பெருமக்களும், கட்சி தொண்டர்களும், மற்றவர்களும் இது பற்றி கருத்துகளை கூறலாம்.


Feb 9, 2012

உங்களில் யார் அடுத்த நயன்டாரா? - ஆபாயில்

நான் தற்போது அதிகமாக எழுதாதை கண்டித்து என் வீட்டு முன்னால் மா.மு கட்சி ஆர்பாட்டம் நடத்தியது. அதனால் நான் மாதம் ஒரு போஸ்ட் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினம் ஒரு போஸ்ட் போடலைன்னா உன்னால் அரசியல் செய்ய முடியாது என்று என் அப்பா சொல்கிறார். என்ன எழவோ! எனக்கு அரசியல் வரவே மாட்டேங்குது. தினம் ஒரு அறிக்கை, அரசுக்கு ஒரு கண்டனம், ஒரு புரட்சி என்று எப்படித்தான் பண்றாங்களோ?சென்னை, திருப்பூர் கண்காட்சியை மிஸ் செய்து விட்டேன். தினமும் புத்தக கண்காட்சிக்கு சென்று போண்டா சாப்பிட்டு விட்டு மகாபாரதம் போர் போல ஒன்றாம் நாள், இரண்டாம் நாள் என்று பதிவு போடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. சாரு சாபம் விட்டிருப்பார் என்று நினைக்கிறன்.

சரி, "லவாசாவில் பல ராத்திரிகள்" என்று நான் ஒரு புத்தகம் எழுதினேன். யாராவது என்னுடைய புத்தகத்தை வாங்கினீர்களா? மொத்தம் 116 பாலோவர்ஸ் இருக்கிறீர்கள். ஒருத்தர் ஒரு புத்தகம் வாங்கியிருந்தால் கூட 116 புத்தகம் வியாபாரம் ஆகியிருக்கும். 116 பேரில் எத்தனை பேர் முழிச்சிருக்காங்கன்னு தெரியல. சைடில் ஒரு vote box வச்சு எல்லோரையும் ஒரு attendance போட சொல்லணும்.

நேற்றைக்கு புத்தக பதிப்பகத்தில் இருந்து போன் செய்து அச்சடித்த ஐநூறு புத்தகத்தில் இதுவரை ஐந்து புத்தகம் மட்டும் தான் சேல்ஸ் ஆனது என்று சொன்னார்கள். அதில் இரண்டு புத்தகத்தை என்னை Encourage பண்ண என் நண்பர்கள் வாங்கியது. மிச்சம் மூன்றை கிளுகிளுப்பான தலைப்பை பார்த்து வாங்கியிருப்பார்கள். இன்றைக்கு இன்னொரு பதிப்பகம் போன் செய்து இன்னும் விக்காமல் 200 புத்தகங்கள் இருக்கிறதென்று சொன்னது கூடுதல் செய்தி.

ரஜினி இல்லையென்றாலும் அட்லீஸ்ட் கொலைவெறி நாயகனை வைத்தாவது புத்தகத்தை ரிலீஸ் செய்திருக்கலாம். கொஞ்சமாவது விற்றிருக்கும். யாருக்காவது புத்தகம் வேண்டும் என்றால், no1writter@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

அடுத்த பதிவில் என் புத்தகம் பற்றிய, முந்தைய பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.


நான் எவ்வளவு தண்ணி அடிச்சாலும் ரொம்ப ஸ்டெடியாகவே இருப்பேன். வடிவேலு மாதிரி பஸ்ஸில் கூட கம்பியை பிடிக்காமல் தான் நின்று கொண்டு போவேன். தண்ணி அடித்து விட்டு இதுவரை ஆம்லேட் போட்டதே இல்லை என்பதை என் வரலாற்றை புரட்டி பார்த்தால் அறிய முடியும்.

ஆனால் ஒரு வெப்சைட் இருக்கிறது. அதை ஓபன் பண்ணி பார்த்தாலே போதும் அந்த நாற்றத்தில் எனக்கு வாந்தி குபீரென வந்து விடும். நல்லவேளை நான் ஆணாக இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால், "யாருக்கிட்ட போய்டி ஏமாந்த?" என்று கேட்டு அம்மா அடித்து துவைத்திருப்பாள்.

அது என்ன சைட்? அந்த "மணம்" என்ன?
அது Blog படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியலாம். தெரியாதவங்களுக்கு, Sorry... 


சுமார் மசாலா படமான ஒரிஜினல் 3 Idiots -யை நெட்டில் டவுன்லோட் பண்ணி பார்த்தது தப்பு தான். பகிரங்கமாய் ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதையே சிலவருடம் கழித்து தமிழில் பார்க்க வைத்து தண்டனை கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் எம்பெருமானே?

ஆனால் இதை விட ஒரு பெரிய தண்டனை இருக்கிறது தெரியுமா? அது நரகத்தில் கூட கிடைக்காது. 

"இந்த படத்தை திருட்டு டி.வி.டி வாங்கி பார்ப்பதுதான்"

தெய்வம் நின்று சாகடிக்கும். ஆனால் விஜய் நடித்து சாகடிக்கறார். முகத்தில் Expression, Syntax என்பது துளியும் இல்லை. இன்னும் நடிப்பில் சங்கவியின் முதுகில் சோப் போடும் லெவலில் தான் இருக்கிறார்.

இதில் சங்கர் படம் என்றால் பிரமாண்டமாய் இருக்குமாம். அடுத்த படத்தில் பெரிய அண்டாவுக்கு பெயின்ட் அடித்து பிரமாண்டமாய் எடுக்க இருக்கிறார்களாம்.

விஜய் சார், சங்கர் சார் எங்கேயாவது ஓடிருங்க சார்.

இவ்வளவு நாளாக நடித்து டான்ஸ் மட்டுமே ஆட வரும் என்றால், அதற்கு "உங்களில் யார் அடுத்த பெரபுதேவா?" நிகழ்ச்சியில் போய் கலந்து கொள்ளலாம். நயன்டாராவால் கழட்டி விடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நடன பொயல் பெரபுதேவாவிற்கு எந்த சேனலாவது நல்லது செய்ய விரும்பினால் "உங்களில் யார் அடுத்த நயன்டாரா?" என்ற நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெறும் மங்கையை அவருடன் வாழ வைக்கலாம். நயனமும் நடனமும் சேராதது கலையுலகின் மிகப் பெரிய இழப்பு.


காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் சாலை ஓரங்களில் நடந்து செல்வது அசாதாரண காரியம். அதிலும் பெண்கள் தங்கள் மேனி கறுக்காமல் இருக்க ஒரு கையில் குடையையும், இன்னொரு கையில் உயிரையும் பிடித்து கொண்டு செல்ல வேண்டும்.

வாகனங்கள் செல்லும் திசையில் கையை வீசிக் கொண்டு ஹாயாக நடந்து சென்றால் உங்கள் வலது தோள்பட்டையை ஆபரேசன் செய்யாமல் அகற்றிவிடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

ஒன்று, வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் நடப்பதுதான். இரண்டாவது, சைடு mirror தலையில் செட் பண்ணி கொள்வது.

பிளாட்பாரத்தில் ஏறி நடந்து சென்றாலும் பைக்கில் பின்னாலே வந்து பின்புறத்தில் இடித்து படுக்க வைத்து, உங்கள் பின்புறத்தை வேகத்தடையாக மாற்றி விடுவார்கள் (படம் கீழே).அதேபோல் சென்னையில் பைக் ஓட்டுவதும் சவாலான விஷயம். 70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ரோட்டின் குறுக்கே ஸ்டைலாக Cat Walk போவார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் நின்று பொறுமையாய் அந்த Cat Walk ஷோவை ரசித்து விட்டு செல்லலாம். இன்னும் சில பேர் Planet of the Aps படத்தில் பாலத்தில் இருந்து குதிக்கும் மனித குரங்குகள் போல திடீர் திடீரென ரோட்டின் நடுவே இருக்கும் டிவைடரில் ஏறி குதித்து நம்மை பயமுறுத்துவார்கள். நாமும் மனித குரங்குகள் தானே!

உங்களுக்கு முன்னாள் ஆட்டோ சென்று கொண்டிருந்தால் கவனம் தேவை. அவைகள் சாக்கடையில் இருந்து எழுந்து செல்லும் பன்றிகள் போல. பக்கவாட்டில் ஐந்து அடி distance விட்டு செல்ல வேண்டும். எந்த பக்கம் வேண்டுமானாலும் திடீரென திரும்பி நம்மை மண் சோறு சாப்பிட வைத்து விடுவார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் ஆட்டோவுக்கு side indicator இருக்கா?