Dec 28, 2011

Your Highness - ஹாலிவுட் சினிமா விமர்சனம் (18+)

2012. புது வருடம் வரப் போகிறது.

இந்த நியூ Year-ஐ எப்படி கொண்டாடலாம்ன்னு பரபரன்னு நகத்தை கடிச்சிகிட்டு சந்தோசமாய் காத்திருக்கீங்களா?

"நியூ இயர்ன்னா என்ன புதுசாக இருக்க போகுது? எப்பவும் போல அடுத்த நாள் காலையில் எந்திரிச்சு பல் விலக்கி தான் ஆகணும்" அப்படின்னு வாழ்க்கையையே போராக பீல் பண்ணி பேசி சோகமாக இருக்கீங்களா?

எப்படி இருந்தாலும், நீங்கள் பார்க்க வேண்டிய படம் இது. 


 
ராஜா, ராணி மற்றும் பயங்கரமான மந்திரவாதி போன்ற கேரக்டர்களை வைத்து சீரியசாய் எடுக்கப்பட்ட பேண்டசி படங்களை கொடுமையாய் கலாய்ப்பதற்கென்றே வந்த goofy வகை படம்.

இதை போல தமிழில், சிம்பு தேவனால் எடுக்கப்பட்ட ஒரு மோசமான முயற்சி "இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி"

படத்தின் கதை,

ஒரு வயதான அரசன். அவனுக்கு பிறந்த இரண்டு இளவரசர்கள். மூத்தவன் Fabious வீர தீரங்களில் சாகசம் புரிந்து, அடிக்கடி நிறைய quest களை வெற்றிகரமாக முடித்து நாட்டு மக்களின் அன்பை பெறுகிறான். ஆனால் இளையவன் Thadeous, ஒரு திறமையும் இல்லாமல் ஊரை சுற்றி, பொழுதை கழிக்கும் உதவாக்கரை இளவரசன்.

ஒருமுறை இளவரசன் ஒரு மந்திரவாதியிடம் சிக்கி கொண்டிருந்த ஒரு அழகான Virgin (கற்பு கலையாத) பெண்ணை காப்பாற்றி கொண்டு வந்து திருமணம் செய்து கொள்ள இருக்கையில் மீண்டும் அந்த மந்திரவாதி வந்து அந்த பெண்ணை தூக்கி கொண்டு போய் விடுகிறான். இரண்டு நிலவுகள் சங்கமிக்கும் நேரத்தில் அவளை புணர்ந்து, அதனால் பிறக்க போகும் ஒரு டிராகன் மூலம் உலகையே ஆட்டி படைக்கலாம் என்பது மந்திரவாதியின் திட்டம்.

இந்த முறை உதவாக்கரை இளவரசனும், அவனுடைய அண்ணனுடன் இந்த quest-ற்கு வலுக்காட்டாயமாய் அனுப்பி வைக்கப் படுகிறான். இருவரும் வெற்றிகரமாய் சென்று மந்திரவாதியை அழித்து, அந்த Virgin பெண்ணை காப்பாற்றி கூட்டி வந்தார்களா? அவள் தன் virginity -யை யாரிடம் இழந்தாள்? என்பதே படம்.


படம் முழுதும் வாய் வலிக்க சிரித்து கொண்டே இருக்க வைக்கிறார்கள். இதில் burst out laughing சீன்கள் அதிகம். fuck என்ற வார்த்தையை Thadeous அடிக்கடி மந்திரம் போல அசால்ட்டாய் உச்சரிக்கிறான். 

சில vulgar ஆன காட்சிகளும், நிறைய வசனங்களும் இருப்பதால் வயதுக்கு வராத ஆண்களும், பெண்களும் இதை தவிர்த்து விட்டு, பேஸ்புக்கில் போய் Angry Birds விளையாடுங்கள்.  

Its Definitely for Matured

ஒய் திஸ் கொலைவெறி டி? பாடலைப் போல, இந்த படம் வெளிவந்த போது சீப்பான படம், மொக்கை காமெடி என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை மீடியாக்கள் வைத்தன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இதை பாருங்கள், சில மணிநேரம் இனிமையாய் கழியும். 

Be Ready to ROFL ...டோர்ரன்ட் டவுன்லோட் லிங்க்

http://extratorrent.com/torrent/2471463/Your+Highness%5B2011%5DUNRATED+BRRip+XviD-ExtraTorrentRG.html3 comments:

Kumaran said...

நல்ல விமர்சனம்..கலக்கிட்டிங்க போங்க..
// வயதுக்கு வராத ஆண்களும், பெண்களும் இதை தவிர்த்து விட்டு, பேஸ்புக்கில் போய் Angry Birds விளையாடுங்கள்//
நான் பார்க்குறதா இல்லையான்னு கொஞ்ச நேரம் யோசிக்கனும்..அப்புறமா ஆங்க்ரி பேர்ட்ஸ்..
தங்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இதை போல தமிழில், சிம்பு தேவனால் எடுக்கப்பட்ட ஒரு மோசமான முயற்சி "இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி"
--- don't say like this

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம். கட்டாயம் பார்ப்பேன்.