Dec 16, 2011

காதல் Protocol - 1

இரவு பத்து மணி. வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட். 

பஸ்ஸுக்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன். மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. 

நாலைந்து தெரு நாய்கள் முக்கியமான ஏதோ ஒரு விஷயத்தை பற்றி, வட இந்திய நியுஸ் சேனல்களை போல காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தன.

என் பெயர் மனோஜ். எனக்கு ஒரு அமெரிக்க மல்டி நேசனல் கம்பனியில் வேலை. அந்த வாரம் எனக்கு ஆபிஸில் நைட் ஷிப்ட். நைட் ஷிப்ட் என்றாலே எனக்கு எக்ஸாம் பீவர் மாதிரி. அடுத்த வாரம் நைட் ஷிப்டுக்கு இந்த வாரத்திலிருந்தே கவலைப் பட ஆரம்பிச்சிடுவேன். அதிலும் சனி, ஞாயிற்று கிழமை இரவுகளில் ஆபிஸ் போவது உச்ச கட்ட வேதனை.

"எல்லோரும் ஜாலியாக பொண்ணுங்களோடு சுத்தி பொழுதை கழிக்கும் போது தனியாக ஆபிஸில் உட்கார்ந்து வேலை செய்ய முடியுமா?" என்று கேட்டால் கடவுளே கொஞ்சம் யோசிப்பார்.

வேலையும் அதிகமா இருக்காது. நானும் எவ்வளவு நேரம் தான் நெட்டில் ப்ரௌஸ் பண்ணற மாதிரியே நடிக்கறது? அதனால், அந்த வாரம் வெளிவந்த மொக்கை படங்களை ஆன்லைனில் பார்த்து விடுவேன். 

மொக்கைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் என்னை வாழவைக்கும் கம்ப்யூட்டர் மானிட்டர்க்கு தலை வணங்கி அப்படியே கண் அயர்ந்து தூங்கிடுவேன். 

இன்னிக்கு போய் எந்த மொக்கை படத்தை பார்க்கலாம் என்று அதி தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்.

"கோயம்பேடுக்கு frequent ஆக பஸ் இருக்கா?" 

என்று ஒரு குரல் டிஸ்டர்ப் செய்தது. 

அங்கே ஒரு மாடர்ன் மங்கை. 

"எங்கே நம்ம கிட்டதான் கேட்கறாளா?" என்ற சந்தேகத்தோடே பின்னால் திரும்பி பார்த்தேன். அங்கே ஒரு கிழம் அழுக்கு ஆடையுடன் பீடியை புகைத்துக் கொண்டிருக்க,  நம்மிடம் தான் கேட்கிறாள் என்ற தன்னம்பிக்கையோடு,

"ம்.. இருக்கு" என்றபடியே கவனித்தேன் அவளை. 

ரோஸ் நிற டாப்சுடன், நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.

அழகான கண்கள், 
பியுட்டி பார்லர் புருவம்
லிப்ஸ்டிக் அப்பாத இளஞ் சிவப்பு உதடு

அப்படியே கழுத்துக்கு கீழே என் பார்வையை இறக்கும் போது,  மறுபடியும் டிஸ்டர்ப் செய்து,

"அடுத்த பஸ் எப்போ வரும்ன்னு தெரியுமா?" 

"இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும். நீங்க எங்க போகணும்?"

"கோயம்பேடு"

திரும்பவும் பார்வையை கீழே இறக்கி Full Body ஸ்கேன் செய்தேன். கைக்கு அடக்கமான மௌஸ் போல மார்பகம்,  பின்னே போக தூண்டும் பின்னழகு என சரியான உடலமைப்பில் அழகாகவே இருந்தாள்.

நம்மிடம் வந்து பேசிய இந்த பிகரை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடக்கூடாது.

"எந்த கம்பனில வொர்க் பண்றீங்க?" 
"உங்க வீடு எங்க இருக்கு?" 

என்று தொடர்ந்து இன்டெர்வியுவில் கேட்பது போல் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்று கொண்டே இருந்தேன். என்னிடம் பேசுவதில் அவளுக்கும் இன்ட்ரெஸ்ட் இருப்பது போல இருந்தது.

அப்போது நான் அந்த பிகரை பிக்கப் பண்ண முயற்சி செய்வதற்கு ஆப்படிக்க, ஒரு பஸ் ஹார்ன் அடித்துக் கொண்டே வந்து நின்றது.

அவளும் 'சரி' என்றவாறு தலையை ஆட்டி லேசாய் சிரித்து விட்டு நகர ஆரம்பித்தாள்.

நமக்கு கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று மனதிற்குள் உறுதிமொழியை அந்த நொடியில் எடுத்துக் கொண்டேன்.

அவள் ஏறி சென்று உள்ளே அமர்ந்து விட்டாள். பஸ்சின் உள்ளே சென்றேன். பாதி இருக்கைகளுக்கு மேல் காலியாய் இருந்தன. என்ன செய்வது என்று தெரியாமல், சட்டென்று அவள் பக்கத்தில் போய் அமர்ந்து விட்டேன்.

இதை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

"இது பெண்கள் சீட்டு. யாராவது ஏதாவது சொல்லப் போறாங்க." என்றாள்.

உள்ளுக்குள் படபடப்பு அதிகம் இருந்தாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல்  

"உங்களுக்கு ஏதும் பிரச்சினை இல்லைல!" என்றேன்.

அவளும் கஷ்டப்பட்டு புன்னகைத்து 'இல்லை'  என்றாள்.

கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நிமிடத்தில் பஸ் நகர்ந்து காற்று உள்ளே வர ஆரம்பித்தவுடன் தான் மெல்ல மெல்ல படபடப்பு அடங்கி ரிலாக்ஸ் ஆனேன்.

திரும்பவும் அவளிடம் பேச்சு கொடுத்து கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்தேன். அவளும் நன்றாய் பேச, பேச்சு பட்டிமன்றம் போல களைகட்டியது.


நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வருவதற்கு முன், அவளிடம் "உங்களுக்கு ஏதாவது உதவின்னா எனக்கு கால் பண்ணுங்க" என்று சொல்லி என் நம்பரை அவளிடம் அவசரத்தில் தந்து விட்டு என்னுடைய ஸ்டாப்பில் இறங்கி விட்டேன்.

அன்றை நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு சென்று போர்வைக்குள் தலையை விட்டு படுத்தேன். 

"டின் டின்" என்ற என் மொபைல் போன் சத்தம் என் தூக்கத்தை கலைத்தது. ஒரு எரிச்சலோடு போனை எடுத்து பார்த்தேன்."New Message Arrived" என்று இருந்தது. 

Unknown நம்பர்.


Tree leaves do not look green forever,
Roses do not look fresh forever,
But I pray to GOD that
Smile on your lips stay forever.


Good Morning                (???)


                                                                                            To be Continued ...3 comments:

Manikanda kumar said...

இது கதையா இல்லை நிஜமா நடந்ததா? எது எப்படியோ நல்லா இருந்த சரி தான் ;-)

ராஜ் said...

பாஸ்,
கற்பனை கதையா..??? படிச்சதை வச்சு பார்த்த இது கொஞ்சம்,கற்பனை கொஞ்சம் நிஜம் மாதிரி இருக்கு..அடுத்த பாகம் வருமா.??

Katz said...

இது என் நண்பனின் கதை. இதை கதையாக என்னால் மாற்ற முடியுமா என முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் தொடருமா? என்று உறுதியாய் சொல்ல முடியாது.