Oct 12, 2011

Blogger's Life - ஆபாயில்


ன்போசிஸ் நாராயணமூர்த்தி IIT மாணவர்களில் 80% பேர்கள் திறமையானவர்கள் இல்லை என்று சொல்லியதிற்கு, முன்னாள் IIT மாணவரான சேத்தன் பகத், இன்போசிஸ் கம்பெனி ஒரு Body Shop கம்பெனி என்று பதிலடி கொடுத்துள்ளார். அந்த 80% இல் தானும் ஒருவர் என்ற குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். 

ஆனால் இந்தியாவின் 90% மேலான .டி கம்பனிகள் body shop வேலைகளை தான் செய்கின்றன. இதில் செய்யப் படும் வேலைகளை என்ட்ரி லெவல் என்ஜினியர்களே செய்ய முடியும். Geeks தேவையில்லை. இருவர்கள் சொன்னதும் உண்மை. 

காலேஜ் இறுதி ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியுவில் செலக்ட் செய்ய வரும் சில முன்னணி .டி நிறுவனங்கள் அழகான பெண்களை அள்ளி சென்று விடுவார்கள். திறமை என்பது தேவை இல்லை. எங்கள் காலேஜில் ஒரு பெண் தனக்கு எதுவும் தெரியாது என்று இன்டர்வியு செய்தவரின் தலையிலேயே சூடம் ஏத்தி சத்தியம் செய்த பிறகும், அந்த அறிஞர் பெருந்தகை அப்பெண்ணை செலக்ட் செய்தார். Of course she had good academic records. 

அவர் அப்படி செய்தது அந்த பெண்ணை கரெக்ட் செய்யலாம் என்ற சுயநலம் இல்லை. அழகான பெண்கள் கம்பெனியில் இருந்தால் தான் பையன்கள் சரியாய் வேலை செய்கிறார்கள். திங்கட்கிழமை கஷ்டப்பட்டு ஆபிஸ் வருகிறார்கள் என்றால் அது நல்ல பிகர்களிடம் பேசி மொக்கை போடலாம் என்பதற்காகத்தான். 

நான் தினசரி சாப்பிட செல்லும் உணவகத்தில் ஒருநாள் நியூ Recruit ஆக ஒரு பெண்ணை சேர்த்திருந்தார்கள். இதற்கு முன்னே மெதுவாய் சுரத்தை இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்த சர்வர்கள் சந்தோசமாய் சிரித்து பேசி கொண்டு அரக்க பரக்க ஓடி, வேலை செய்து கொண்டிருந்தார்கள். 

ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருக்கிறார்கள். எப்போதும் இருப்பார்கள்.பி ளாக்(blog) எழுதும் நிறைய பேர் தங்கள் பிளாகை தன் காதலியை போலவோ, பொண்டாட்டியை போலவோ எண்ணி புலம்புவதை அதிகம் காணலாம். அப்படி பார்த்தால் எனக்கு நிறைய பொண்டாட்டிகள். 

பிளாகும் மனைவியும் ஒன்றுதான். ஒன்றுக்கு மேல் கட்டி மேய்ப்பது சிரமம். பிளாகர்களின் வாழ்கையும் சொல்லமுடியா துயரமானது.
  • சரியாய் வேலை செய்யாமல் மனைவியிடம் திட்டு வாங்கி தூக்கம் கெட்டு பதிவு எழுதுவது.
  • கமெண்ட் வந்திருக்கான்னு பார்க்க, refresh பட்டனை தொடர்ந்து அழுத்தி செயலிழக்க வைப்பது.
  • காலைல எந்திருச்சு followers யாராவது add ஆகி இருக்காங்களா? என்று பார்த்து விட்டு பல் விலக்க செல்வது.
  • பார்க்கிறவங்க கிட்டே எல்லாம் ப்ளாகை படிக்கச் சொல்லி தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்துவது.
இக்காலத்தில் பிளாகராக இருப்பவர்கள் முற்காலத்தில் எதோ ஒரு முனிவரின் தவத்தை கலைத்து கடும் சாபத்திற்கு உள்ளாகி இருக்கலாம். 

"அடுத்த ஜென்மத்திலும் நீ பிளாகராக பிறக்க" என்று யாரும் என்னை சபித்து விடாதிர்கள்.
"ர்டெல் சூப்பர் சிங்கர் பட்டம் இவருக்கு தான் கொடுத்திருக்கணும் இவருக்கு கொடுத்திருக்க கூடாது" என்று மக்கள் கொஞ்ச நாள் முன்னே அடித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் தரப் படும் பரிசு தான் முக்கியம். பட்டம் முக்கியம் இல்லை. 

போன வருடம் பட்டம் வாங்கிய அஜீஸ் கோவா படத்தில் "முதல் முறை உண்டான உணர்விது" பாடலை தவிர வேறு எந்த பாடலையும் பாடியதாக எனக்கு தெரியவில்லை. ஏன்? அந்த பாடலை நம்ம தனுஷையோ செல்வராகவனையோ கூட பாட வைத்திருப்பார்கள். 

நம் தமிழ் சினிமாவில் காலங்காலமாய் ஒரு சீன் வைத்திருப்பார்கள். ஒரு கைதியிடம் அல்லது சாட்சியிடம் விசாரணை செய்யும் போது, மேஜை மீது தண்ணீர் வைத்திருப்பார்கள். அவர்கள் பயந்து திக்கி திணறி பேசும் போது, "மெதுவா தண்ணி சாப்டுட்டு பதட்டப் படாம பேசுங்க" என்று சொல்வார்கள். அதுபோல இன்று தண்ணி குடித்து விட்டு நிறுத்தி நிறுத்தி பாடும் அளவுக்கு டெக்னாலஜி முன்னேறி உள்ளது. 

உன்னி கிருஷ்ணன் குரல் மட்டும் இனிமை இல்லை. "உம்மேல ஆசதான்" என்ற தனுஷின் குரல் கூட கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. சில சமயம் இரைச்சல் கூட இசையாகிவிடும். வகுப்பறையில் லெக்சர் முடிந்து வெளியே கேட்கும் மக்களின் பேச்சு சலசலப்பு கூட நமக்கு இனிமையாக கேட்கிறது. 

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் "உள்ள ஜெஸி ஜெஸின்னு சொல்லுதா?" என்று சரியாக அலைவரிசை செட் ஆகாத AM சேனல் போல ஒருவர் பேசியதும் ஹிட் ஆகவில்லையா?
வெகுநாள் கழித்து ஒரு அருமையான படம் பார்த்த அனுபவம் "வாகை சூட வா" படத்தின் மூலம் கிடைத்தது. இரண்டாவது முறை அந்த படத்திற்கு செல்ல எண்ணியிருக்கிறேன். 

அதில் வரும் பாடல்கள் எல்லாம் அருமை. "செங்க சூளக்காரா" பாட்டில் ஒரு வரி வரும். 

"சொரண கேட்ட சாமி, சோத்த தான கேட்டோம்."

நச் வரிகள் பாடல் முழுதும். 

நாம் ஒவ்வொருவரும் என்னென்ன வேண்டுகிறோம் சாமியிடம்.
  • ஸ்கூலில் பர்ஸ்ட் ரேங் எடுக்கணும். (அதுக்கு நீ படிக்கணும்)
  • பையனுக்கு கல்யாணம் ஆகணும். (இப்போதெல்லாம் பொண்ணுங்களுக்கு எளிதாய் கல்யாணம் ஆகி விடுகிறது)
  • Weekend ஜாலியாக ஊர் சுற்ற ஒரு பிகர்
  • ஒரு "சின்ன வீடு" கட்டனும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை.

விஜயகாந்த இப்போது தான் உண்மையான எதிர்க்கட்சி தலைவராக மாறி உள்ளார். அதையும் தங்கத் தாரகை ஜெயலலிதாவே செய்ய வேண்டியுள்ளது. இவரை இன்னும் கூட்டணியில் வைத்திருந்தால் பிடித்து வைத்த களிமண் பிள்ளையாரைப் போல கம்மென்றே இருந்திருப்பார்.

உள்ளாட்சி தேர்தலில் தனியே கழட்டி விட்ட பின்தான் தலைவரின் தன்மானம் துடி துடித்து எழுந்துள்ளது.
துவரை பேருந்தில் சந்தோசமாக தொலைதூர பயணம் செய்து  கொண்டிருந்த வெகுஜன மக்களுக்கு இன்னுமொரு ஆப்பு. 

SETC அரசு பஸ் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்துவிட்டது தமிழக அரசு. பேருந்தின் பாதி இருக்கைகள் மட்டும் ரிசர்வேசனுக்கு என்றாலாவது பரவாயில்லை. டிரைவர் சீட்டை தவிர அத்தனையும் புக் செய்யலாம்.

இனி IT துறை மக்கள் இதிலும் தங்கள் தனித்திறமையை காண்பிப்பார்கள்.


9 comments:

தமிழ்கிழம் said...

ப்ளாகர் பற்றி என் மனசில் உள்ளத புட்டு புட்டு வெச்சிட்டீங்க மகராசா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

excellent , good post . .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

Manikanda kumar said...

"சொரண கேட்ட சாமி, சோத்த தான கேட்டோம்."

>>> எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்..

செங்க சூளக்காரா பாடிய அனிதா கூட சூப்பர் சிங்கரில் பங்கு பெற்றவர் தான்.

அமுதா கிருஷ்ணா said...

ஆபாயில் பிடிக்காது.ஆனால் இந்த ஆபாயில் ரொம்ப நல்லாயிருக்கு.நிறைய விஷயங்கள்.

சமுத்ரா said...

GOOD ONE

Katz said...

thanks for all your comments.

மணி, தகவலுக்கு நன்றி. அனிதா குரல் அருமை.

அமுதா, எனக்கும் ஆபாயில் கொஞ்சம் கூட புடிக்காது. ஆனா ஒரு கிண்டலுக்குகாக இந்த பெயர் வைத்தது. அப்படியே தொடர்கிறேன்.

ராஜ் said...

ரொம்ப நல்ல எழுத்து நடை......நிறுத்தாமல் படித்தேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

Simply Superb........!