Oct 31, 2011

ஏழரை அறிவு - நமீதா விமர்சனம்ஏழாம் அறிவு இசை வெளியிட்டு விழாவில் அதன் இயக்குனர் முருகதாஸ்,

"இந்த படம் வந்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு கர்வம் வரும். அந்த கர்வம் தலைக்கேறி நீங்கள் இறந்து விடவும் வாய்ப்புண்டு" என சொன்னார்.

அப்போதே என் நரம்புகள் எல்லாம் புடைத்து லேசாய் ஒரு கர்வம் என் மனதுக்குள் நெளிந்தது.

அதனால் தீபாவளி அன்று குளித்து முடித்ததும் அம்மா செய்த லட்டுகளில் இரண்டை எடுத்து அவசர அவசரமாய் வாயில் போட்டு கொண்டு சத்யம் தியேட்டரை நோக்கி ஓடினேன். தமிழர் மறந்த பெருமையை அறிய பத்து ரூபாய் டிக்கெட் ஒன்றை வாங்கி கொண்டு உள்ளே சென்றேன்.

படம் ஆரம்பித்தது. போதி தர்மரை பற்றி விளக்கி கொண்டே ஒரு டாகுமெண்டரி ஓடியது. சூர்யா காவி வேட்டியை கட்டி கொண்டு பாவாடை சாமியார் போன்ற தோற்றத்தில் எதோ சித்து வேலைகளை செய்து கொண்டிருந்தார்.  தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு சொக்கியது. முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தால், ஜடையை எல்லாம் கட் செய்துவிட்டு தாடியை ட்ரிம் செய்து பேண்ட் சர்ட் அணிந்து, வாரணம் ஆயிரம் கெட்டப்பில் சூர்யா ஒரு டிவி சேனலுக்கு, தான் தினமும் மஞ்சள் போடுவதால்தான் தன் முக அழகு கூடியது என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

சரி எதோ சொல்ல வர்றார்ன்னு நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்தால் படத்தை முடிச்சிட்டாங்க. ரொம்ப நேரம் தூங்கி எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டோமா? தமிழர் பெருமையை பற்றி தெரியாம இன்னிக்கு வீட்டுக்கு போக கூடாதுன்னுட்டு அடுத்த ஷோவில் ஒரு டிக்கெட் எடுத்து மறுபடியும் வந்து உட்கார்ந்தேன்.

இந்த தடவையும் தூங்கிட கூடாதுன்னு பக்கத்தில் இருக்கிறவரிடம் சொல்லி அடிக்கடி என்னை கிள்ளிக் கொண்டே இருக்க சொன்னேன்.

டாகுமெண்டரி முடிந்து அயன் பாதியாகவும் வாரணம் ஆயிரம் பாதியாகவும் படம் போனது. நடுநடுவில் மானே, தேனே, டி.என்.ஏ என்று ஷ்ருதி உளறி கொண்டிருந்தார்.

ஒரு Genre விலிருந்து இன்னொரு Genre விற்கு திடீர் திடீரென தாவுவது நம் ஆட்களால் மட்டும் முடியும் காரியம்.

கொஞ்ச நேரம் வரலாற்று படம்
கொஞ்ச நேரம் விஜய் படம்.
கொஞ்ச நேரம் Sci - Fi


எல்லா பாடல்களிலும் நாயகி ஷ்ருதியை விட சூர்யாவே திறந்த மார்புடன் அதிகம் கவர்ச்சி காட்டுகிறார். பெண் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க "சூர்யாவின் அதிரடி கவர்ச்சியில் ஏழாம் அறிவு" என்று நாளிதழில் விளம்பரம் கொடுக்கலாம். சோகப் பாட்டுக்கெல்லாம் நன்றாக விஜய் மாதிரி டான்ஸ் ஆடுகிறார்.

இன்னும் இருபத்தி நாலு மணி நேரங்களில் 
இன்னும் நாலு மணி நேரங்களில்
இன்னும் இரண்டு நொடிகளில் 

என்று ஏழாம் அறிவு படத்திற்கு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுவது போல இவர்கள் Count Down போட்ட அலம்பல்கள் சாதாரண பாமரனால் கூட ஜீரணிக்க முடியாது.

அவனவன் அவதார் போன்ற படங்களை எடுத்து அமைதியாக வெளியிடுகிறான். ஆனால் இந்த கொசுக்கள் ஒரு படத்தை எடுத்து விட்டு வந்து நம் காதில் போடும் சத்தங்கள் தாள முடியவில்லை.

முருகதாஸை ராக்கெட்டுடன் கட்டி செவ்வாய்க்கு அனுப்பி, அங்கு வாழும் வேற்றுகிரக வாசிகளுக்கு (?) தமிழரின் பெருமையை உணர்த்த செய்யலாம்.

நமீதா டச்: ஏழாம் அறிவு - தமிழர்களுக்கு ஏழரை.

இப்படத்தின் மூலம் இயக்குனர் நோக்கு வர்மம் செய்து நம்மை கொல்கிறார்.

அவசியம் மிஸ் பண்ணாமல் இந்த படத்தை பாருங்கள். நாம் மறந்து போன தமிழ் உணர்வை நம்முடைய டி.என்.ஏ வை தூண்டி விடுவதன் மூலம் மீண்டும் கொண்டு வந்து இயக்குனரும் தயாரிப்பாளரும் கல்லா கட்டுகின்றனர்.9 comments:

*anishj* said...

கரெக்டா சொன்னீங்க தலிவா...

Anonymous said...

//முருகதாஸை ராக்கெட்டுடன் கட்டி செவ்வாய்க்கு அனுப்பி, அங்கு வாழும் வேற்றுகிரக வாசிகளுக்கு (?) தமிழரின் பெருமையை உணர்த்த செய்யலாம்.///


:) :) :) :)

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப கோபமாய் இருக்கீங்க போல...

ramachandran said...

நண்பா விமர்சனம் மிகவும் சூப்பர்
ராமசந்திரன்

ramachandran said...

நண்பா ரூம் போட்டு யோசிபீங்கள சூப்பர் விமர்சனம்
ராமசந்திரன்

Katz said...

//அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப கோபமாய் இருக்கீங்க போல...
//

கோபம் எல்லாம் இல்லை. ஆனா நோக்கு வர்மம் தெரிந்தால் பரவாயில்லை. உபயோகமாக இருக்கும்.

//ramachandran said...

நண்பா ரூம் போட்டு யோசிபீங்கள சூப்பர் விமர்சனம் //

யோசிக்கவெல்லாம் ரூம் போட மாட்டேன். ;-)யோசிச்சா ரூம் போட மாட்டேன். ரூம் போட்டுட்டா யோசிக்க மாட்டேன்.

ஹீ ஹீ ! பன்ச் எப்படி?

சதீஸ் கண்ணன் said...

செம கமெண்ட்..

Anonymous said...

stupit post.போங்கடா நீங்களும் உங்கட ரசணையும்.

Shima Blogspot said...

தங்களைப் போன்று நானும் கருதுகிறேன்.
http://shimarao.blogspot.com/2011/11/blog-post_02.html