Sep 13, 2011

தலைவர் திமிங்கலம் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)

து யாரு இடுப்புன்னு தெரியுதா?
சமீபத்தில் காஞ்சனா படத்தின் பாடல் ஒன்றை தொலைகாட்சியில் பார்க்க நேரிட்டது. லாரன்ஸ் அதில் மாற்று திறனாளிகளை அவருடன் ஆட வைத்திருந்தார். லாரன்ஸ் அவர்களின் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களை ஒரு டூயட் பாட்டில் ஆட வைத்து, லட்சுமிராயின் இடுப்பையும் ஒருமுறை தொட்டு தடவ விட்டிருந்தால், அவரை சொக்க தங்கம் என்று பாராட்டி இருக்கலாம்.


ண்மையில் தமிழில் பார்க்க கூடிய அளவுக்கு கூட சுமாரான படங்கள் எதுவும் வரவில்லை. தெய்வ திருமகள் பார்த்த பின் சிறிது நாட்களுக்கு, எனக்கு வாந்தியெடுத்த பிறகு வாயை கழுவாத உணர்வே இருந்தது.

தென்மேற்கு பருவக்காற்று படத்தை திரையில் பார்க்க முடியாமல் போனதற்கும், டவுன்லோடி பார்த்ததற்கும் வருந்துகிறேன். ஒரு கேவலமான படத்தை போட்டு நாறடிக்கும் நாம், ஒரு பார்க்க கூடிய படத்தை வலுவாய் ஆதரிக்க மறந்து விடுகிறோம்.

செல்வராகவன் இந்த வாரம் குங்குமம் இதழில் சொன்னது போல், காப்பி அடிப்பவர்களின் படங்களை மீடியாக்கள் குதறி எடுக்க வேண்டும். அதை அவர் செய்தால் கூட. ஆனால் நம் மீடியாக்கள் அதை செய்ய தவறுகிறது.


முன்பெல்லாம் எப்போதாவது விஜய் தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது சன் டிவிக்கு போட்டியாக, தாய்மார்களின் ஆதரவை பெற, எப்பொழுது அழுகை சீரியல் ஆரம்பித்ததோ, அதிலிருந்து அதை பார்ப்பதில்லை. சூப்பர் சிங்கர் மற்றும் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களின் நாடகத்தனங்கள் ரசிக்க முடியவில்லை.  குடும்பத்திற்குள் சண்டையை மூட்டுவதில் "நீயா நானா" கோபிநாத்தை மிஞ்ச ஆளில்லை.

விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சியே பார்க்க முடியாது. இதில் அவர்கள் மானாட மயிலாட நிகழ்ச்சியை ஓட்டுகிறார்கள். ஆனால் இதை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம். கலா மாஸ்டர் பெர்பார்மன்ஸ் தான் டாப். இன்னும் பார்க்கதவர்களுக்காக வீடியோ கீழே.இதை தவிர, இசை சேனல்களில் நடக்கும் கூத்துகள் அட்டகாசம். கால் செய்து பேசுபவர்களின் குரலை வைத்தே பெயர் கண்டுபிடிப்பார்களாம். என்ன ஒரு திறமை!!

"மேடம், நான் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுல இருந்து பேசறேன்"

"கேட்ட குரல் மாதிரியே இருக்கே. நாம ஏற்கனவே பேசியிருக்கோம் சரியா?"


போங்கடி!


ரு நாள் சேனல்களை மாற்றி கொண்டே வரும் பொது, சுட்டி டிவியில் "தலைவர் திமிங்கலம்" என்ற ஒரு தமிழ் டப்பிங் மூவி ஓடிக்கொண்டு இருந்தது. காமெடியாய் ஸ்கிரிப்ட் எழுதி இருந்தார்கள். ஆச்சனும் அருமை. அதை பார்த்தவுடன் நெட்டில் தேடி, அதன் ஒரிஜினல் இங்கிலீஷ் படத்தையும் (Killer Bean Forever), தமிழ் டப் படத்தையும் பார்த்து விட்டேன். மற்ற தமிழ் சேனல்களுக்கு, சுட்டி டிவியும் சித்திரம் தொலைகாட்சியுமே மேல்.


புதிய தலைமுறை செய்தி சேனல் நம்பிக்கை தருகிறார்கள். தமிழில் ஒரு நல்ல செய்தி சேனலாய் உருவெடுத்தால் நலம்.

ம்பனி கேம்பஸ்க்கு வெளியே நடந்து வந்தால், இந்த மார்கெட்டிங் மக்கள் வரிசையாய் நின்று கையில் ஒரு பேப்பரை திணித்து விடுகிறார்கள். நானும் அவர்களுக்காக வாங்கி கொள்ளுவேன்.

ஆனால் ஒரு பிரச்சினை.

அவர்கள் கொடுப்பதை எல்லாம் வாங்கி கொண்டு வெளியே வெறும் போது, என்னிடம் நிறைய பேப்பர் சேர்ந்து, நான் ஒரு மார்கெட்டிங் employee ஆக மாறிவிடுகிறேன். என்னை மார்கெட்டிங் person ஆக நினைத்து, எதிரில் வரும் மக்கள் விலகி நடக்கிறார்கள். பொழுதுபோக்காய் ஆவது மார்கெட்டிங் வேலையை செய்ய வேண்டும் என் சில நேரம் நான் நினைப்பதுண்டு. அப்போது தான் அவர்கள் கஷ்டம் புரியும்.

5 comments:

Philosophy Prabhakaran said...

மானாவாரியா டிவி பார்த்து இருக்கீங்கன்னு நல்லா தெரியுது...

sarav said...

entha company entha campus boss ?

kobiraj said...

good post .i like it

Katz said...

sarav, கம்பனி பெயரை சொன்னா, ஆள் அனுப்ப போறிங்களா?

நீங்க அஜித் ரசிகர்ன்னு நினைக்கிறேன்.

Nareshkumar said...

Hmm good post.