Dec 12, 2010

சிக்கு புக்கு - கொரியன் கொத்து பரோட்டா (நமீதா விமர்சனம்)தற்போது சொந்த சரக்கு இல்லாமல் ஜப்பான், கொரியா மொழிகளில் உள்ள படங்களின் கதைகள் லவட்டி படம் எடுக்கறது ரொம்ப பேஷன் ஆகிடுச்சு. நந்தலாலா(ஜப்பான் "Kikujiro"), சிக்கு புக்கு (கொரியன் "The Classic"). மிஸ்கின் சொன்னா மாதிரி இப்ப எல்லோரும் புத்தகம் படிச்சு, DVD பார்த்து தங்களோட கிரியேடிவிட்டிய வளர்த்துக்குறாங்க. இதுல நமக்கு தான் பிரச்சனை. அந்த ஒரிஜினல் படத்த ஏற்கனவே பார்த்ததால, இந்த படத்தோட ஒவ்வொரு சீனையும் பார்க்கும் போது வர்ற பீலிங் இருக்கே, அது ஏதோ கெட்டுபோன ஒன்ன சாப்பிட்டுட்டு வயிறு சரி இல்லாம போய், வருமா வராதா அப்படிங்கற மாதிரி வதை படுகிற அளவுக்கு ரொம்ப கஷ்டம்ங்க. இதுக்கு ஒரே வழி. பார்த்தால் தமிழ் படத்த மட்டும் பார்க்கணும். இல்ல தமிழ் படத்த தவிர மத்த படங்களை மட்டும் பார்க்கணும்.

ஒரு கொரியன் படத்தையோ இல்லை எந்த ஒரு உலக படத்தையோ நாம பார்க்கறதுக்கும், அதே படத்தை ஒரு இயக்குனர் பார்க்கறதுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். நாம படத்த பார்த்து பீல் பண்ணிட்டு போர்வைய இழுத்தி போர்த்தி தூங்கிடுவோம். ஆனா அந்த இயக்குனர் அந்த கதையை எப்படி மாத்தி தன்னோட கைவண்ணத்தை காமிக்கலாம்ன்னு யோசிச்சு படமா எடுத்து தன்னோட திறமையை தமிழ்நாட்டு மக்களுக்கு விளங்க வைப்பார்.

இந்த படத்தோட கதையை சொல்ல சுத்தமா மூடு இல்லைங்க (யார்டா அது? மூடு இல்லைனா மூடிட்டு போய் தூங்க வேண்டியதுதான அப்படின்னு திட்டறது). அதை இங்கே போய் படிங்க.

ஆர்யா இரண்டு கதாபாத்திரம். அப்பாவாகவும், மகனாகவும். படத்தில் பையன் ஆர்யாவின் கதையோடு அப்பாவின் காதல் கதையையும் மாற்றி மாற்றி சொல்கிறார்கள் (கொல்கிறார்கள்).

இந்த படத்தோட இயக்குனர் ஒளிபதிவாளர் ஜீவாவின் "தாம் தூம்" படத்தை ஜீவா விட்டதிலிருந்து எடுத்து முடித்து கொடுத்த பரமாத்மா கே.மணிகண்டன். இதுல டைட்டில்ல ஜீவாவுக்கு நன்றி வேற. கொடுமை.

ஒரிஜினல் படத்துல ஹீரோயினுக்கு டபுள் ஆக்ட். இதுல ஹீரோவுக்கு. இதுலயே இயக்குனரோட திறமை Vim  Bar போட்டு கழுவின குண்டா மாதிரி பளிச்சிடுகிறது. இதுக்கு மேல இயக்குனர் எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சு ஒரிஜினல் படத்துல இருந்து இதை வித்தியாசமாக எடுத்து இருக்கார்ன்னு சொல்ல எனக்கு வார்த்தைகளே கிடைக்கல. படத்தை பார்த்து அனுபவிச்சு உணருங்கள்.

ஹீரோ ஆர்யா டபுள் ஆக்ட் அப்படிங்கறதுனால வித்தியாசம் காமிச்சு நடிக்கனும்ல. அதனால அப்பா ஆர்யாவாக வரும்போது தலைக்கு எண்ணெய் போட்டு வாரி நடிச்சு இருக்கார். மகன் ஆர்யாவாக வரும் போது, லண்டன் பையன் அப்படிங்கறதனால தலைக்கு Hair ஜெல் போட்டு படம் முழுவதும் Spike ஹேர் ஸ்டைலில் வருகிறார். அதுக்காக தூங்கி ஏந்திருக்கும் போது Spike ஓட இருக்கிறது அலம்பல். ஆனா என்ஜாய்(ஹீரோயின்களோடு) பண்ணி நடிச்சு இருக்கார்.அப்பா ஆர்யாவின் ஜோடியாக வரும் நடிகை புது முகம். ஆமா, வெள்ளை வெள்ளையா நல்ல பிரெஷ் பீசு. இந்த இயக்குனர் ரசனையே ரசனைதான். இவருக்கு தாவணி கனவுகள் அதிகம் வரும் போல. தற்போது தமிழ் நாட்டு பொண்ணுங்களே தாவணி கட்ட விரும்பாத நிலையில்,  ஒரு தமிழ் தெரியாத மாடல் பிளஸ் மாடர்ன் பொண்ண புடிச்சுட்டு வந்து அதுக்கு தாவணி கட்டி விட்டு (அவுரா கட்டி விட்டார்ன்னு கேட்காதிங்க) கிராமத்துல வளர்ந்த பொண்ணு மாதிரி நடிக்க வச்சு அழகு பார்க்கறது?, அடடா அற்புதம். தன்னோட தாம் தூம் படத்துலயும் இதே தான். கங்கனா ரவுட்-க்கு தாவணி கொடுத்து சுத்த விட்டிருப்பார்.

இயக்குனர் இந்த நடிகைகளிடம் நடிப்பு திறமைய விட "காமிக்கிற" திறமையை தான் அதிகம் எதிர்பார்க்கிறார். இயக்குனரோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இந்த நடிகையும் நிறைய சீன்களில் லோ கட் நெக்  ஜாக்கெட்டில் தன் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறார். நானும் வச்ச கண்ணு வாங்காம அவங்களோட திறமையை மட்டுமே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தேன். நல்லா வருவாங்க.

ஒரு விஷயம், ஓரளவுக்கு சுமாரான வெள்ளை தோலு உள்ள ஒரு பிகருக்கு தாவணி கட்டினால் பார்க்க ரொம்ப சூப்பரா தான் இருக்கும். ஏன்?? நம்ம மதராசப் பட்டினம் எமி ஜாக்சன் கூட அவ்வளவு அழகாய் இருந்தாங்க. இந்த படத்துல அவங்கள நடிக்க வச்சு இருந்தா கூட கலக்கலா நடிச்சு இருப்பாங்க.


நம்ம அடுத்த ஹீரோயின், எனக்கு பிடித்த ஸ்ரேயா குட்டிக்கு நிறைய சம்பளம் குடுத்தான்களான்னு தெரியல ஆனா பொண்ணு வாங்குன காசுக்கு அதிகமாகவே நடிச்சு இருக்கு. ஓவர் ஆக்டிங். இருந்தாலும் எனக்கு அலுக்கவே இல்ல. படம் புல்லா மாடர்ன் டிரஸ்லயே அதிகம் வந்தாலும் இயக்குனர் இவங்களையும் ஒரு சீன்ல தாவணி கட்ட வச்சுட்டார்.

அடுத்து காமெடி. சந்தானத்தை வச்சு தனி காமெடி ட்ராக் ஒட்டி இருக்காங்க. ஆனா சந்தானம் வர்ற காட்சி எல்லாம் மக்கள் சீட்ட விட்டு கீழே விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அட்டகாசம்.

படத்துல அப்பா ஆர்யாவின் பிரெண்ட் ஆக வருபவர், பார்க்க நல்ல தடிமாடு மாதிரி இருப்பார். அவர பார்த்து ஆர்யா சொல்லுவாரு "ஜிம்முக்கு போய் நல்லா சாப்பிட்டு உடம்பை ஏத்து". இது காமெடிக்காக சொன்னாரா? புரியல. கிழே உள்ள படத்தில் இருப்பவர் தான் அவர். ஒரு வேளை தனுஷ் இந்த கேரக்டர்ல நடிச்சு இருந்தால், அவர் சொன்னது கரெக்டாக இருந்திருக்கும்.இசை கலோனியல் கசின்ஸ். பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பாட்டு தான் தியேட்டர்ல உட்கார்ந்து கேட்க முடியல. சரி பாட்டு தான் கேட்கிற மாதிரி இல்லை. அட்லீஸ்ட் பார்க்கவாவது செய்யலாம்ன்னு பார்த்தா, ரெண்டு பாட்டுக்கு பின்னாடி ஆடுற பாரின் பிகர்கள் எல்லாம் படு மொக்கையாக, என் பிரெண்டு அடிக்கடி பார்க்கிற ஆங்கில நீல படத்துல வர்ற மாதிரி இருந்தாங்க. அதென்னன்னு தெரியல இவனுங்களுக்கு கொரியன் ரீமேக் படங்களாகவே அமையுது. முதலில் மோதிவிளையாடு (100 days with Mr. Arrogant) இப்போ சிக்கு புக்கு.

படத்திற்கு மிகப்பெரிய ஆறுதல் ஒளிப்பதிவு மட்டுமே. படம் முழுவதும் கொரியன் படங்களில் வருவது போலவே ரொம்ப குளுமையாக இருந்துச்சு. நிறைய பிரேம்களை அப்படியே எடுத்து முகத்தோடு ஒத்திக்களாம் போல இருந்துச்சு. குறிப்பாக ஹீரோயினோட இடுப்ப காமிக்கிற பிரேம்கள் எல்லாம். ஹி! ஹி! (ஆர்யா கூட படத்துல ரெண்டு தடவை ஹீரோயினோட இடுப்பை முகத்தோடு வச்சு ஒத்திகுவார்)


ஒரிஜினல் படத்தை படு ரொமாண்டிக் இயல்பான நகைச்சுவை மூலம் மிக அருமையாக கொண்டு போய் இருப்பாங்க. கடைசியா அந்த லவ்வர்ஸ் சேரும் போது நம்ம நமீதா டச் மாதிரி இல்லாமல் படு டச்சிங் ஆக இருக்கும். ஆனா இங்கே, நாம தான் கஷ்டப்பட்டு ஹீரோவையும் ஹீரோயினையும் சேத்து வைக்கணும். அவ்வளவு டெர்ரர் ஆன, எருமை தோலை தொட்ட மாதிரி ஒரு டச்.

நமீதா டச் : சிக்கு புக்கு, காக்கா சுட்ட உளுந்து வடை.

மிக நல்ல படத்துக்கே நான் இவ்வளவு பெரிசா விமர்சனம் போட்டதில்ல. ஆனா இந்த சுமாரான படத்துக்கு இம்மாம் பெரிய (நமீதா சைஸ்) விமர்சனம். ஒருவேளை இதுதான் ஒரிஜினல் நமீதா விமர்சனமோ?

5 comments:

philosophy prabhakaran said...

// அந்த ஒரிஜினல் படத்த ஏற்கனவே பார்த்ததால, இந்த படத்தோட ஒவ்வொரு சீனையும் பார்க்கும் போது வர்ற பீலிங் இருக்கே, அது ஏதோ கெட்டுபோன ஒன்ன சாப்பிட்டுட்டு வயிறு சரி இல்லாம போய், வருமா வராதா அப்படிங்கற மாதிரி வதை படுகிற அளவுக்கு ரொம்ப கஷ்டம்ங்க //

என்ன ஒரு எழுத்து நடை.... கலக்குங்க...

philosophy prabhakaran said...

// எனக்கு பிடித்த ஸ்ரேயா குட்டிக்கு //

அது என்ன நாய்க்குட்டியா குரங்குக்குட்டியா...

வெறும்பய said...

மொக்க படம் பாஸ் .. பத்து நிமசத்துக்கு மேல பாக்க முடியல.. எல்லாம் டி வி டி ல தான்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

பாட்டு ரிலீசாகும் போதே தெரிஞ்சி போச்சு இதுவும் மொக்க தான்னு :)

மதுரை பாண்டி said...

padam romba bore.. shreya kaga parthen...