Dec 14, 2010

சிலையான விஜய் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)


ம்ம தளபதிக்கு (அரசியல் தளபதி அல்ல சினிமா தளபதி) கேரளாவில சிலை வச்சு இருக்காங்களாம். இதற்கு பின்னாளால் கேரள அரசியல்வாதிகளின் பிண்ணனி இருக்க கூடும் என்று யூகிக்க படுகிறது. எப்படியும் நம்ம டாக்டரு தான் தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்றபோகும் அடுத்த முதலமைச்சராய் வருவார் என்பதை தெரிந்து கொண்டு, பின்னாளில் தமிழகதிற்கு தண்ணீர் திறந்து விடுதல் விவகாரத்திற்கு தளபதியால் எந்த விவகாரமும் வந்துவிட கூடாது என்று அவர்கள் யோசித்து வைத்த பிளான் ஆகவே இருக்க கூடும் இந்த சிலை மேட்டர்.

இல்லையெனில் பத்து கேரக்டரில் பயங்கரமாக மைதாமாவு அப்பி நடித்து, தான்தான் உலகமகா நடிகர் என்று ஊரையே நம்ப வைத்த நடிகரெல்லாம் இருக்க, எங்கே விக் வைத்து நடித்தால் தன் ஹேர் ஸ்டைல் களைந்து விடும் என்று 3 Idiots என்ற படத்தின் பேருக்கு லேட்டாக அர்த்தம் புரிந்து எஸ்கேப் ஆன நம்ம "குருவி" மண்டையருக்கு சிலை வைப்பார்களா? இருந்தாலும் கேரள மக்களே, நீங்க சிலை மட்டும் தான் வைக்க முடியும். ஆனால் நாங்கள் சிலை வைக்காமல் சாதாரண போஸ்டருக்கே பால் அபிசேகம் பண்ணி பால் குடம் எடுத்து அழகு குத்தி சாமியாக நினைத்து வழிபடுவோம் தினந்தோறும்.


னக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு ரொம்ப நாளா சோகமாக சுத்திகிட்டு இருக்கு. வீட்ல என்ன பிரச்சனைன்னு தெரியல. அதனால அந்த பொண்ண மாயாஜால் தியேட்டரில் நாலாவது நாளாக வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நம்ம தமிழ்நாட்டின் அடுத்த டாக்டர் விஜயகாந்த் நடித்த விருத்தகிரி படத்துக்கு கூட்டிட்டு போய் "குஜால்" படுத்தலாம்ன்னு இருக்கேன். ஏதோ நம்மால முடிஞ்சது.


ந்த மொபைல் போன்ல இருக்கிற டிக்ஸ்னரில, ஆங்கில படத்துல அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தைகள் எதுவுமே இருக்க மாட்டேன்குது. முக்கியமாக அந்த நாலு எழுத்து வார்த்தை. அத டைப் பண்றதுக்குள்ள வர்ற டென்சன்ல, என்னோட வாயில இருந்து ஏகப்பட்ட செந்தமிழ் வார்த்தைகள் வெளி வந்துடுது (..த்தா). இந்தியால மட்டும் தான் இப்படியா? இல்லை வெளிநாட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா?


நான் எப்பவுமே ரெகுலரா டீ குடிக்கிற கடைக்கு பிரெண்ட்ஸ்களோடு ஒருநாள் போயிருந்தேன். நாலு டீ போட சொன்னோம். அந்த டீ மாஸ்டரு எல்லோருக்கும் டீ கொடுத்துட்டு எனக்கு மட்டும் பால் கொடுத்தாரு. நான் டீ தான் வேணும்ன்னு கேட்க, அவரு "நீ கொழந்த பையன் தான? பால் குடிக்க மாட்டியா?" அப்படின்னாரு. உடனே நான் டென்சன் ஆகி "நாங்கெல்லாம் பஸ்ட்(First) நைட்ல மட்டும் தான் பால் குடிப்போம்" ன்னு ஒரு பன்ச் விட, அதை கேட்டு அந்த மாஸ்டர் பஸ்ட் நைட்டுக்கு கதவ சாத்திட்டு உள்ள வரும்  பெண்  மாதிரி வெட்கப்பட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்.


ஒரு கசப்பான உண்மை மற்றும் தத்துவம்:
"மானே", "தேனே", "தேவதை" அப்படின்னு கவிதை எழுதி சுத்துறவனை விட காண்டம் பாக்கெட் வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு சுத்துறவனுக்கு தான் காதலும் காதலியும் ரொம்ப ஈசியா கிடைக்குது.

அதனால உங்க பாக்கெட்ல கவிதைய வச்சுக்காதிங்க. காண்டத்தை வைத்து கொள்ளுங்கள்.

காண்டம் வச்சு இருக்கறவனெல்லாம் ராவணனும் இல்லை. காண்டம் வச்சகாதவனேல்லாம் ராமனும் இல்லை. -- சுந்தர காண்டத்திலிருந்து (கம்பராமாயணம்)


ரி அடுத்த சமீபத்தில் வெளிவந்த டாப் 4 டப்பா படங்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

1. கனிமொழி - நாயகி ஒரு கவிஞராக இருந்தும் பாடல்கள் எதுவும் இல்லாமல்/எழுதாமல் அதிரடியான வசனங்கள் மூலமாக மட்டுமே பரபரப்பை ஏற்படுத்திய படம். குறிப்பாக படத்தில் நாயகிக்கும், நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையேயான வசனங்கள் நாயகியின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் "எவ்வளோ நல்லவங்க" என்பதை ஒளிவுமறைவு இல்லாமல் காட்டுகிறது . ஒரிஜினாலிடி கருதி படத்தின் வசனங்கள் முழுவதும் ரியல் டைம் ரெகார்ட்டிங் செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் வெளியான கனிமொழி ஒலிநாடா மிக பெரும் ஹிட் ஆன போதிலும் வெள்ளித்திரையில் வெளியான கனிமொழி திரைப்படம் மிக பெரும் பிளாப் ஆனது மிகப்பெரும் வருத்தமே.

2. உத்தமபுத்திரன் - ஆ. ராஜா அவர்களின்  ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் இந்தியாவின் அனைத்து மக்களையும் "கொள்ளை" கொண்ட படம். இந்த வருட சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்குதான் என்று பார்லிமெண்டில் பரவலாக கருத்து நிலவுகிறது.

3. நந்தலாலா - தன் பிள்ளை மற்றும் பேரன்களுக்காக அன்னையை தேடி அடிக்கடி டெல்லி போகும் ஒரு கலைஞரின் (பாசத் தலைவனின்) பாசப் போராட்டம்.

4 மைனா - தன் குஞ்சுக்காக போராடும் ஒரு மைனாவின்(வனிதா விஜயகுமார்) வெளியே சொல்லமுடியாத கதை.


3 comments:

வெறும்பய said...

@ விஜய்
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..

@விருதகிரி
போயும் போயும் இந்த படமா கிடச்சுது.. பார்த்து அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்க போகுது..

@ மொபைல்
என்ன வார்த்தைன்னு சொன்னா தானே தெரியும்..

@ டீ கடை..
அவனா நீ...

@ சுந்தர காண்டம்..
தத்துவமோ தத்துவம்...

@ விமர்சனம்
எல்லாமே குடும்ப படங்கள்

Anonymous said...

அப்படியே.. விஜய் சிலைக்கு கீழே ஒரு உண்டியல் வைத்து பிச்சை எடுப்பார்களே? உள்நோக்கம் புரியாமல் விஜய் பாராட்டியது தவறு...

Katz said...

@ Verumpaya...


@விருதகிரி
போயும் போயும் இந்த படமா கிடச்சுது.. பார்த்து அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்க போகுது..
// எந்த படத்தையும் நாம எப்படி பார்க்கிறோம் அப்படிங்கறத பொறுத்து தான் இருக்கு. காமெடிய காமெடியாதான் பார்க்கணும்.

//@ மொபைல்
என்ன வார்த்தைன்னு சொன்னா தானே தெரியும்..//
சும்மா நல்லவன் மாதிரி நடிக்காதிங்க பாஸ்.

@ டீ கடை..
அவனா நீ... // இதுக்கு என்ன அர்த்தம்?

@ சுந்தர காண்டம்..
தத்துவமோ தத்துவம்... // நன்றி பாஸ். ஏதோ நம்மளால முடிச்சது. நாலு பேருக்கு நல்லது நடந்தா சரி.