Nov 16, 2010

என் தூரத்து காதலி



அழகான ஆண்களே
உன் அருகில் நிற்கத் தயங்கி
தள்ளி நிற்க,
பல அடி தூரத்தில் நான்.

தூரத்தில் இருந்தாலும்   
குறி தவறாமல்
உன் கண்கள் நடத்தும்
இரட்டை ஏவுகணை தாக்குதல்.

விலகவும் முடியவில்லை
நெருங்கவும் திரணியில்லை 
சிக்கித் தவிக்கிறேன்
தப்ப முடியாத  மாய வலையில்.



3 comments:

வெறும்பய said...

cute..

Balaji saravana said...

//தப்ப முடியாத மாய வலையில். //
ரைட்டு..விக்கெட்டு மாட்டிக்கிச்சு ;)

பாரத்... பாரதி... said...

//விலகவும் முடியவில்லை
நெருங்கவும் திரணியில்லை
சிக்கித் தவிக்கிறேன்//

உங்களுக்கு தவிப்பு...
எங்களுக்கு கவிதை...
இது லாபக்கணக்கு..