Nov 26, 2010

லிவிங் டுகெதர் - Revisited & பதிவர் விசாவுக்கு விசாரணை கமிஷன்

இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவோ அல்லது மொக்கைக்காகவோ எழுதப்பட்டது.எந்திரன் படத்துக்கு அடுத்து அதிக வலையுலக வாசிகளால் விமர்சிக்கப் பட்ட படம்  Living Together. சினிமா வியாபாரம் செய்து வரும் பிரபல பதிவரும் இதற்கு கொஞ்சம் லேட்டாக விமர்சனம் எழுதி உள்ளார். போன ஆபாயிலில் லிவிங் டுகெதர் பத்தி நிறைய பிரபலங்களிடம் கருத்து கேட்டோம். கடைசி வரைக்கும் பதில் கிடைக்கவே இல்ல.  முக்கால்வாசி பதிவர்கள் இதை பற்றி எழுதி கருத்து கந்தசாமிகளாக வலையுலகில் வலம்வருகின்ற சூழ்நிலையில், இன்னும் இதை பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் தப்பித்து வரும் பதிவர்கள் முறையாக கண்காணிக்க பட்டு பதிவுகள் போட சொல்லி கட்டாயப் படுத்தப்படுவார்கள். இது கீழ்க்கண்ட அனைவருக்கும் பொருந்தும்.

  • மூளையை கசக்கி கதை எழுதுகிறவர்கள்.
  • அமராவதி ஆற்றங்கரைகளிலோ இல்லை காவிரி ஆற்றங்கரைகளிலோ உட்கார்ந்து, இதயத்தை பிழிந்து  கவிதை எழுதுகிறவர்கள்.
  • கவலை படாமல் Right கிளிக் செய்து காப்பி பேஸ்ட் செய்பவர்கள்.
  • மொக்கையில் ஊறி திளைத்து படிப்பவர்களை பதற வைப்பவர்கள்.
  • சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகத்தின் மீது ஆர்வம் இல்லாதவர்கள்.
  • இட்லிவடை சாப்பிட்டு விட்டு அரசியல் பேசுபவர்கள்.

ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களுக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு. மன்னிக்கவும், விதிவிலக்கு உண்டு.

அப்படி பதிவு போடாத பதிவர்களின் வலைப்பூ முகவரியை நீங்கள் சீட்டில் எழுதி பின்னூட்டத்தில் கட்டி விட்டு அப்படியே இந்த பதிவுக்கு ஓட்டு போட்டு விட்டு போய் விட்டால், கருத்து கந்தசாமியான நான் சேவல் கெட்டப்பில் வந்து மற்ற கந்தசாமிகளுக்கும் அறை'கூவல்' கொடுத்து, பொதுக்குழு கூட்டி விதிமுறையை மீறியவர்களின் வலைபதிவர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்து, அவர்களது வலைப்பூவும் ஹேக் (Hack) செய்யப் படும்.

நீங்கள் எழுதும் பதிவுகள் ISI தர சான்றிதழ் பெறக்கூடிய தரத்தில் இருக்க தேவை இல்லை. அரைவேக்காடு தனமாக "ஆபாயில்" மாதிரி இருந்தாலே போதுமானது.இட்லிய சாப்பிட்டுட்டு நாக்கு வறண்டு அடிக்கடி தண்ணிய குடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி, நாம கஷ்டப்பட்டு ஏதோ ஒரு கருத்தை சொல்லி பதிவை இன்ட்லில இணைச்சிட்டு நாக்கு வறண்டு போக ஓட்டு வருமா? கமெண்ட்டு வருமா? ன்னு கண் மூடாம பார்த்துகிட்டு இருக்கோம். ஆனா இப்படி எழுதுற நம்மள மாதிரியான ஆபாயில் பதிவர்களை எல்லாம் சாதாரணமா கிண்டல் பண்ணி, நம்ம பதிவை எல்லாம் கிழிச்சு கிளி ஜோசியம் சீட்டு மாதிரி போட்டுட்டார் விசா என்கிற பதிவர் அவரது டையிங் டுகெதர் என்ற பதிவின் மூலம். "நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது." அப்படின்னு இவரு சொல்லறாரு. அதாவது வடையும், சுடுசோறும் தான் முக்கியம் அப்படிங்கறாரு. ம.தி.சுதா கவனிக்கவும் (இவருக்கு மட்டும் எப்படிதான் எங்க போனாலும் சுடுசோறு கிடைக்குதோ தெரியல?).


இதனால் இவரது வன்மையான போக்கை கண்டித்து, விசா அவர்களை எந்த நாட்டின் மூலையில் இருந்தாலும் உடனே விசா எடுத்து சென்னை கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக்கு வரவைத்து, மொட்டை வெயிலில் நிறுத்தி விசாரணை கமிஷன் வைத்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சூடான காரமான மிளகாய் பஜ்ஜியோடு அங்கேயே நமது அடுத்த வலை பதிவர்கள் சந்திப்பையும் வைத்து கொள்ளலாம்.  விசாவுக்கு மட்டும் தொட்டு கொள்ள சட்னி கிடையாது. கூடுதலாக, கரு பழனியப்பனின் "மந்திரப் புன்னகை" படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க முடியாமல் வருத்தப் பட்டு கொண்டிருப்பவர்களுக்காகவும், மீண்டும் அண்ணன் உண்மை தமிழனின் உதவியால் மந்திரப் புன்னகை மறுஒளிபரப்பு செய்யப்படும்.


இது வரைக்கும் லிவிங் டுகெதர்க்கு ஆதரவாகவும் எதிர்த்தும் நாம எல்லோரும் எழுதுன பதிவை எல்லாம் தொகுத்து "லிவிங் டுகெதர் ஆச்சாரமா? அ(வி)பச்சாரமா?" அப்படின்னு தனி புத்தகமாக கிழக்கு  பதிப்பகத்தில் வெளியிட்டால், அதை வாங்கி படித்து விட்டு, லிவிங் டுகெதரில் வாழ்பவர்கள் எல்லாம் திருந்தி கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்வார்கள். கல்யாணம் ஆனவர்கள் எல்லாம் டைவர்ஸ் செய்துவிட்டு லிவிங் டுகெதராக மனதிற்கு பிடித்த மற்றவர்களோடு சந்தோசமாக வாழ்வார்கள். அப்படியே இதே தலைப்பில் விஜய் டி.வியில் கோபிநாத்துடன் நீயா? நானா? நிகழ்ச்சியை நடத்த சொல்லி, அதில் நாமெல்லாம் கலந்து கொண்டு கூதுகலமாய் பேசி கும்மி எடுக்கலாம் (யாரை?).

கீழே உள்ள காமெடியில் வருகின்ற வடிவேலுக்கும், லிவிங் டுகெதர்க்கும் எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லை.
 
கடைசியாக ஒரு பன்ச்.


ஒரு சீரியசான மேட்டர் அப்படிங்கறது அழுக்கு துணி மாதிரி. அதை அலசி ஆராயலாம். ஆனா, துவைக்காம அலசி ஆராய கூடாது.

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்...
Nov 23, 2010

Living Together, குவார்ட்டர், பேஸ்புக் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 23 Nov 2010வலையுலகில் ஏகப்பட்ட பேரு கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. என்கவுண்டர், லிவிங் டுகெதர் போன்ற சீரியஸ் ஆன செய்திகளை பற்றி சூடான வார்த்தைகளை உபயோகித்து அவங்கவங்க கருத்துகளை சொல்றாங்க. ஆனா, அப்படி எழுதும் போது 15 மார்க் கொஸ்டினுக்கு 2 மார்க் மட்டுமே போடுற அளவுக்கு சின்னதா, கடனுக்கு அதை பத்தி கொஞ்சம் எழுதிட்டு, அந்த பதிவ போஸ்ட் பண்ணி அதுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல, நன்றாக நான்வெஜ் சாப்டுட்டு ரெடி ஆகிடறாங்க. எனக்கு ஏன் இது மாதிரி எல்லாம் தோண மாட்டேங்குது?


சரி, நம்ம பிரபலங்களை கேட்போம்.


கமல் சார், இந்த Living Together நல்லதா? கெட்டதா?


நல்லவேளை நாயகன் கமல்ங்கிறதனால, தெரியலன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டரு. ஆனா விருமாண்டி கமல்கிட்ட கேட்டிருந்தால், புரியாதமாதிரி பதில் சொல்லி நாம கேட்ட கேள்வியவே குழப்பி இருப்பாரு.


வடிவேலு சார், இந்த Living Together நல்லதா? கெட்டதா? 
 
 
சார், இது கரெக்டா? தப்பா?
 ரைட்டு...

நாட்டாமை சார், நீங்க பதில் சொல்லுங்க.சுகாசினி மேடம், நீங்களாவது சொல்லுங்க.

காய்கறி கடை வச்சுக்கிட்டு இருக்கிறவ கிட்டே எல்லாம் கருத்து கேட்டா இப்படிதான்.
ன்னுடன் கூட வேலை செய்த தோழி ஒருத்தர், ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தாங்க.

We know Taj Mahal as a symbol of love.
But do you know ..
1. Mumtaz was Shahjahan's 4th Wife, out of his 7 wives.
2. Shahjahan killed Mumtaz's husband to marry her.
3. Mumtaz died in her 14th Delivery.
4. He then married Mumtaz's sister.
Now my question is, What is LOVE?


I replied her, " LOVE  is PLURAL".


நான் போன மாசம் நிறைய அயிட்டங்கள் (பொருள்கள்) பிராண்டேடு அயிட்டம் ஆக வாங்கினேன். "Peter England" சர்ட், "Lee" ஜீன்ஸ், "Jocky" ஜட்டி, "Nike" செருப்பு. உடனே கூட இருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் "பிராட் மேன்" மாதிரி, என்னை "பிராண்ட் மேன்" ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.


இந்த பசங்க, எங்க பார்த்தாலும் அந்த சங்கம் இந்த சங்கம் ன்னு ஒவ்வொருத்தரும் ஒரு சங்கம் வளர்க்கரானுங்க.

கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கருத்தாய் படிப்போர் சங்கம்.
குப்புற படுத்துக்கொண்டு யோசிப்போர் சங்கம்.
உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்.


இப்படி ஏகப்பட்ட சங்கங்கள். நாமளும் சும்மா இருந்தா சரிபடாது. அதனால நானும் ஒரு சங்க வளர்க்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இப்ப யார் யாரு என்னோட சங்கத்துக்கு ஆதரவு தரப் போறிங்கன்னு கைதூக்குங்க பார்க்கலாம். ஆனா ஒன்னு என்னோட சங்கத்துல சேர்றதுக்கு, இப்ப கை தூக்கின எல்லோரும் உங்க ரெண்டு காலையும் கொஞ்சம் தூக்கணும். புரியல? நம்ம சங்கம் "ஜாக்கி ஜட்டி போடுவோர்கள் சங்கம்".
நான் ரசித்த ஒரு ஜோக்:


Height of Addiction:
Just before Hanging,
Judge asked the prisoner "Any last Wish?"
Prisoner: Yes, I want to update my FACEBOOK status as "DEAD"

இப்படிதான் சில பேரு கண் முழிக்கிறதும் சரி, மூடறதும் சரி பேஸ்புக்ல தான்.

புதுசா ரிலீஸ் ஆகி உள்ள மந்திர புன்னகை படத்துல இப்படி ஒரு டயலாக் வருதாம். உடம்ப கெடுக்கிற குவார்ட்டர நல்லா சத்தம் போட்டு வாங்கறோம். ஆனா பாதுகாப்பா இருக்கிற காண்டத்த கூச்சபட்டுகிட்டு வாங்குறோம். இவரு என்ன சொல்ல வர்றாருன்னா? காண்டம் வாங்கும் போது கம்பீரமா, கம்பீரம் சரத்குமார் மாதிரி நெஞ்ச வெடைச்சுகிட்டு தைரியமா சத்தம் போட்டு கேட்கணும். புரிஞ்சுதா?... ( மச்சி, ஒரு காண்டம் சொல்லேன்! )
ந்தியன் கிரிக்கெட் டீம் நியூஸ்லாந்து கூட விளையாண்ட ரெண்டு டெஸ்ட் மேட்ச்சையும் பஜ்ஜியின் புண்ணியத்தில் டிரா பண்ணிடுச்சு. இதுக்கு என்ன காரணம்ன்னு பார்த்தால், 'வ குவார்ட்டர் கட்டிங்' படத்துல வர்ற காமெடி மாதிரி "நம்மகிட்ட இருக்கிறது மொக்க பௌலேர்ஸ், அவங்ககிட்ட இருக்கிறது நம்மளவிட மொக்க பௌலேர்ஸ்"எனது இந்த வார ட்வீட்ஸ்:

1. Newly joined colleague asked me " Can I open Face-book in Office? ". I Replied her " Open FaceBook, FaceProblem "

 2. இந்திய வல்லரசு ஆகுறதுக்குள்ளேயாவது நம்ம வல்லரசு (விஜயகாந்த்)  தமிழ் நாட்டுல ஆட்சிய பிடிப்பாரா?


3. நம்ம வல்லரசு ஆட்சிய பிடித்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வல்லரசு போக்குவரத்து கழகம் என்று பெயர் மாறுமா?
Nov 21, 2010

கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்.
இன்று ஒரு நாள் மட்டும்
நிலவை விட்டுவிட்டு
பூமியில் நட்சத்திரங்கள்.டிஸ்கி: ஏன் இந்த தலைப்பு அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒன்னும் இல்லீங்க. என் அக்கா பையன் கார்த்திகை தீபத்தை இப்படிதான் சொல்றான். பையனுக்கு கன்னி ராசி அதனாலதான். ஹி! ஹி!Nov 18, 2010

மழையும் மழை சார்ந்த இடங்களும் (சென்னை ஸ்பெஷல்)வறட்சி காலத்தில் 
வற்றிப்போன ஆற்றின் உள்ளே
படகு போல ஒவ்வொன்றாய்
ஆக்கிரமித்து குடியேறிய 
வீடுகளில் வசிக்கும் குழந்தைகள்
ஒவ்வொரு மழை காலத்திலும்
காகித கப்பல் செய்து விளையாட அவசியமில்லை.
அவர்கள் வீடுகளே கப்பலாய் மிதக்கும்
ஆற்றின் பதில் ஆக்கிரமிப்பில்.

------------------------------------------------------------------

காளான் டிஷ் மழைவிட்ட பின்
அபார்ட்மென்ட் மொட்டை மாடியில்
சென்று பார்த்தால்
எண்ணற்ற டிஷ் காளான்கள்.

------------------------------------------------------------------

ஒவ்வொரு மழைக்கு பின்னும்
போடப்படும் தார் ரோடுகள்
தார் ஏடுகளாய்
அடுத்த மழையில்.

------------------------------------------------------------------

போகும் வழியெல்லாம்
சாலையெங்கும்
நிரம்பி வழிகிறது 
மாநகராட்சியின் 
மழைநீர் சேகரிப்பு திட்ட குழிகள்.

Nov 16, 2010

என் தூரத்து காதலிஅழகான ஆண்களே
உன் அருகில் நிற்கத் தயங்கி
தள்ளி நிற்க,
பல அடி தூரத்தில் நான்.

தூரத்தில் இருந்தாலும்   
குறி தவறாமல்
உன் கண்கள் நடத்தும்
இரட்டை ஏவுகணை தாக்குதல்.

விலகவும் முடியவில்லை
நெருங்கவும் திரணியில்லை 
சிக்கித் தவிக்கிறேன்
தப்ப முடியாத  மாய வலையில்.Nov 14, 2010

ஒபாமா, அஜீத், த்ரிஷா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) 14 Nov 2010

ஆபாயிலே சின்னதாத்தான் இருக்கும் இதுல என்ன மினி ஆபாயில் அப்படின்னு கேள்வி கேட்காம படிங்க. ஏன்னா, இருக்கறதே அவ்வளவு தான்.ஒபாமா புயல் இந்தியாவில் மூன்று நாட்களாக மையம் கொண்டுவிட்டு இந்தோனேசியாவில் கரை ஒதுங்கி விட்டது. இனி துரத்தி அடிக்கப்பட்ட பிச்சைகாரர்கள் நிம்மதியாக மீண்டும் தலைநகர் திரும்புவார்கள். அவர் இந்தியாவுக்கு வந்த நாள்ல இருந்து நியூஸ் பேப்பர், டீ.வி எதுல பார்த்தாலும் ஒரே  ஒபாமா மந்திரம் தான். அவர் ஒன்னுக்கு போனத தவிர்த்து எல்லாமே நியூஸ் ஆக வந்திடுச்சு. ஓம் ஒபாமா யாம நமக.


இந்த புயலுக்கேலாம் எவன் பேரு வெக்கறான்? 'ஜல்'லு ஜில்லுன்னு சூப்பரா வெக்கராங்கப்பா. பொறந்து அஞ்சு மாசம் ஆன என் தங்கச்சி பையனுக்கு பேரு செலக்ட் பண்ண முடியாம என் மாமா ரொம்ப கஷ்ட படுறாரு. இவனுங்க பேஸ்புக் அட்ரஸ் அல்லது போன் நம்பர் உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன். கொஞ்சம் கஷ்டப் பட்டாதான் நல்ல பேரு வாங்கமுடியும். அது மாதிரி நல்ல பேரு வைக்கறதுக்கும் கொஞ்சம் கஷ்டப் படனும் போல.

Strictly no moves...

 Nov 9, 2010

வ-குவார்ட்டர் கட்டிங் - நமீதா திரை விமர்சனம்

இந்த தீபாவளிக்காவது சரக்கு அடிக்காம இறேண்டான்னு எங்கம்மா கேட்டு கொண்டதால, பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து வ-குவார்ட்டர் கட்டிங் படத்துக்கு போனேன். படம் பார்த்து கொஞ்சமாவது மப்பு ஏறுச்சா? பார்ப்போம்.சவுதிக்கு அடுத்தநாள் அதிகாலை சென்னைல இருந்து பிளைட் ஏற போற நம்ம ஹீரோ சிவாவுக்கு அன்னிக்கு சாயங்காலம் தான் தெரியுது, சவுதிக்கு போனா சரக்கு அடிக்கமுடியாது பொண்ணுங்களோடு மஜா பண்ண முடியாதுன்னு. இதனால கடைசியா இங்க ஒரு சரக்கு அடிச்சிட்டு தான் போகணும்னு முடிவு பண்ணி டாஸ்மாக் டாஸ்மாக்கா அலையும்போது தான் தெரிய வருது தேர்தல் வரும் காரணத்தினால் டாஸ்மாக் மூணு நாளைக்கு அடைப்பு. சரக்கையும் உலக அழகி ஐஸ்வர்யாவையும் காமித்து ரெண்டுல எது வேணும்ன்னு கேட்டா கூட சரக்கு தான் வேணும் சொல்ற அளவுக்கு பைத்தியம். இன்னிக்கு நைட்டுக்குள்ள எப்படியாவது சரக்கு அடிச்சே ஆகணும்ன்னு தன் அக்காவின் புருசனாக போகும் சரணை இழுத்து கொண்டு ஓடி நாயாய் அலைந்து குவார்ட்டர் அடிச்சு மட்டையாகி எப்படி சவுதிக்கு பேக்கப் ஆகிறார் அப்படிங்கறது தான் கதை.

கதாநாயகன் சிவா இந்த கதைக்கு சரியான தேர்வு. ஏன்னா அவரு சாதாரணமா பேசும் போதே நாக்கு குளறி குளறி சரக்கு அடிச்சு மாதிரி தான் பேசுவாரு. இதில் கோவை பாஷையை குளறி எடுக்கிறார். குண்டு சரணுக்கு இது தான் கடைசி படம். காரணம் இப்போ ரீசெண்டா ஒரு பேட்டியில பார்க்கும் போது ரொம்ப ட்ரிம் ஆகிவிட்டார். நல்ல நடிப்பு. என் சார் ஒல்லி ஆனிங்க? ஹீரோவா நடிக்கிற ஆசை வந்துடுச்சா? (பசு மாடு பல்லியா மாறிடுச்சு.)

எஸ்.எஸ் மியூசிக் லேகாவுக்கு படு லூசுதனமான, படிப்பு ஏறாத மக்கு பொண்ணு கேரக்டர். அதை ரொம்ப சிறப்பா செய்து இருக்கார். படம் ஆரம்பிக்கும் போது கற்பூரம் காமிக்கிற மாதிரி இவர சில சீன்ல காமிச்சிட்டு அப்புறம் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி தான் திரும்பவும் கொண்டு வர்றாங்க. காமெடி படம் அப்படிங்கறதால வில்லன்களும் காமெடிதான் பண்றாங்க.


இசை ஓகே ரகம். ஜி.வி பிரகாஷ் அவர்கள் Step Up ட்ராக் மியூசிக் ஒன்றை உருவி பின்னணி இசையில் கோர்த்துள்ளார்.

படம் ஆரம்பித்து பத்து நிமிசத்திற்கும் மேலாக படு மொக்கையாக ஆரம்பித்தாலும் போக போக தம் கட்டி விடுகிறது. குறும் படமாக எடுக்க பட வேண்டிய ஸ்டோரி லைன் என்றாலும் இன்னும் கொஞ்சம் நேரம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை இன்னும் நிறைய சேர்த்து இருக்கலாம். படத்திற்கு பலமே டயலாக்ஸ், ஒளிபதிவு மற்றும் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புமே.

சரக்கு அடிக்காத பல "உத்தமபுத்திரர்களுக்கு"  இந்த படம் பிடிக்காமல் போயிருந்தாலும், குவார்ட்டர் அடித்து பழக்கம் இல்லாத எனக்கு (ஒன்லி பியர்) ஓரளவுக்கு பிடித்திருந்தது. ஒரு தடவை தியேட்டரில் பார்த்து டைம் பாஸ் பண்ண கூடிய படம்.


நமீதா டச் : வ-குவார்ட்டர் கட்டிங் : மப்பு ஏறுச்சா? லைட்டா....

Nov 2, 2010

ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - தீபாவளி ஸ்பெஷல் 18+போனவாரம் ஞாயிற்று கிழமை வாரமலர் நடுப்பக்க செய்தியை புரட்டி பார்த்த என்னை அப்படியே கீழே புரட்டி போட்டது அந்த துணுக்கு. நம்ம தலைவி நமீதா "இ.பி.கோ., 376" என்ற படத்தின் மூலமாக புலன் ஆய்வு செய்யும் கடமை மற்றும் "உடை"மை தவறாத  ஸ்ட்ரிக்ட் ஆன சி.ஐ.டி போலீஸாக நடிக்கிறாராம். இதற்காக தனது பெருத்த உடற்கட்டை சீக்கிரம் குறைக்க பில்லாவிடம் ஐடியா கேட்டுவருகிறாராம். இதை தயாரிப்பது டூயட் மூவிஸ் தான் என்றாலும் இதில் நமீதாவுக்கு டூயட் ஏதும் இல்லையாம்.மக்கள் எல்லோருக்கும் தீபாவளி வரப்போகுது அப்படிங்கறத விட  எந்திரன் படம் முக்கால் வாசி(?) தியேட்டர விட்டு போக போகுது அப்படிங்கரதுதல தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இருந்தாலும் வரலாற்று படமான இப்படத்தை பார்த்து ஜென்ம சாப விமோசனம் அடைந்து விடுங்கள் அல்லது அவர்கள் விமோசனம் கொடுத்து விடுவார்கள். புது படம் எப்படா வரும்? எப்போ நமீதாவ போடலாம், சாரி எப்போ நமீதா விமர்சனத்தை போடலாம் அப்படின்னு என்னை மாதிரி நிறைய பேரு காத்துகிட்டு இருக்காங்க. சரி எந்திரனுக்கு அடுத்து இந்த தீபாவளிக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிற படம் எதுன்னு பார்த்தால், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெற போகும் தொட்டுப்பார் படத்தின் ஹீரோவும், சமூக விழிப்புணர்வு படமான சிந்து சமவெளி ஹீரோயினும் இணைந்து கத்தும் மைனா!

அமெரிக்க எஜமான் ஒபாமா மும்பை வரப்போறதை அடுத்து மும்பை மாநகராட்சி பரபரப்பா மும்பையோட சாலை, தெருக்களை எல்லாம் சுத்தம் செய்து, பிச்சைகாரர்களை எல்லாம் அப்புறபடுத்தி, அழகாய் பராமரிப்பு செய்து வருகிறார்களாம். நல்லதுதான். ஆனால் ஒபாமாவை அப்படியே சென்னைக்கு வர சொல்லி அடையாறு, திருவான்மியூர்,  தரமணி to தாம்பரம் சாலை வழியாக வேளச்சேரியில் கட் எடுத்து அப்படியே சைதாபேட்டை டாஸ்மாக்கில் ஒரு ரவுண்டு சரக்கை ஏத்திவிட்டு இன்னும் எந்தெந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதோ அந்த வழியெல்லாம் சுறாவளி பயணத்தை மேற்கொள்ள செய்து  கூவத்தையும் சிறிது பார்வையிட சொல்லுங்கள். தமிழ் செம்மையாகுதோ இல்லையோ சென்னை கொஞ்சம் செம்மையாக வாய்ப்பு உள்ளது. ஓரம்போ... ஓரம்போ...ஒபாமா வண்டி வருது.
 

வேளச்சேரில இருக்கிற ஹோண்டா ஷோரூம்ல இருந்து புது Shine பைக் வாங்கி இருக்கான்  என் பிரெண்டு. ஆனா அந்த ஷோரூம்ல கஸ்டமர் சர்வீஸ் சரி இல்லையாமாப்பாம். பயங்கர டென்சன் ஆகி அத பத்தி என்னோட ப்ளாக்குல போட சொன்னான். தினமும் ஒரு ஆயிரம் பேரு வந்து நம்ம ப்ளாக் படிக்க, நாம என்ன பெரிய கேபிள் சங்கரா? இருந்தாலும் என்னோட பிளாக்கையும் மதிச்சு அதை போட சொன்னான் பார்த்திங்கல்ல? நண்பேண்டா!
ஒருநாள் காலைல வீட்டுல குளிச்சிட்டு, கொடியில ஜட்டி காய போடும் போது பார்த்தால், பக்கத்துல காய்ந்து கொண்டு இருந்த என் பிரெண்டோட ஜட்டியில ஓசோன் படலம் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைகள். காலை சூரியனோட ஒளி அப்படியே எல்லா ஓட்டைகளின் வழியாகவும் புகுந்து லேசர் லைட் ஷோ மாதிரி அப்படி ஒரு பிரமாண்டம். என்னடா காரணம்ன்னு கேட்டால், அதிகபடியான நச்சுத்தன்மை கலந்த காற்றும், இரு புவி கோளங்களின் மிகுந்த வெப்பமும் தானாம்.


இந்தவார சோக செய்தி : உலக கோப்பைல எந்தெந்த நாடு ஜெயிக்கும் அப்படின்னு சரியா ஆருடம் சொல்லி கால்பந்து ரசிகர்கள் வயித்துல பால் வார்த்த ஆக்டோபஸ் Paul-க்கு பால் ஊத்திடாங்க. இந்த ஆக்டோபச வச்சு நானும் ஒன்னு ரெண்டு கவிதை எழுதி பொழப்ப ஓட்டியாச்சு.


அனைவருக்கும் ஆபாயிலின் சார்பாகவும், நமீதா விமர்சனத்தின் சார்பாகவும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.