Oct 29, 2010

புறாவை புறக்கணிப்போம்

"புறாவை புறக்கணிப்போம்" என்பதை யாரும் தூக்கத்துலயோ, மப்புலையோ "பிராவை புறக்கணிப்போம்" ன்னு தப்பா படிச்சுறாதிங்க. அதுவும் பெண்கள்.அபார்ட்மென்ட்ல வசித்து கொண்டிருக்கும் எல்லோரும் எதிர்கொள்ளும்  ஒரு சாதாரண பிரச்சனை தான் இது.  வேலைக்கு போயிட்டு வந்து வண்டிய வெளிய விட்டுட்டு காலையில் வந்து பார்த்தால் நமது பைக், கார்களின் மீது தங்களது காலைக்கடனை கச்சிதமாய் முடித்துவிட்டு போயிருக்கும் அபார்ட்மென்ட் புறாக்கள். இந்த பிரச்சனை எனக்கும், என்னோட பைக்குக்கும் ரொம்பவே பழகி போச்சு.


ஆனா, போன வாரம் என்னோட தங்கி இருக்கிற பிரெண்டு புதுசா ஒரு "ஹோண்டா சைன்" பைக் வாங்கி சீட் கவர், டேங்க்  கவர் எல்லாம் போட்டு அழகா நிறுத்தி வச்சிருந்தான். முதல் நாள் மதியம் ஆபிஸ் போறதுக்காக வண்டிய எடுக்க போனாவன், கொளுத்துற வெயில்ல அப்படியே ப்ரீஜ் (Freeze) ஆகி நின்னுட்டான். அப்பொழுது தான் ஒரு புறா தன் காலைக்கடனை ரொம்ப லேட்டா முடிச்சிட்டு போயிருக்கு. சாதாரணமா அவன் சீட்டுல, தான் உட்காரும் இடத்தை மட்டும் தான் துடைப்பான். அன்னிக்கு முழு சீட்டையும் தண்ணி போட்டு மெதுவா ரொம்ப பொறுமையா துடைச்சுக்கிட்டு இருந்தான்


அடுத்த நாள் ஒரு அரை டஜன் புறாக்கள் சீட் கவர், டேங்க்  கவர் எல்லாத்தையும் சேர்த்து முழு வண்டியையும் கவர் பண்ணிட்டு போயிருந்தது. "மச்சான் இங்க வாங்கடா, இங்க ஒரு புது பைக் நிக்குது" அப்படின்னு ஒரு புறா கால் பண்ணி மத்த எல்லா புறாவையும் கூப்பிட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்.


வண்டிய வாங்குறதுக்கு முன்னாடி "புது வண்டிய வாங்குனதுக்கு அப்புறம் உங்க எவனையுமே பின்னால வச்சு ஓட்ட மாட்டேன். ஏதாவது ஒரு அழகான பெண் புறாவ (பிகரு) வச்சு ஒட்டுனதுக்கு அப்புறம் தான் உங்களை வண்டியில த்துவேன்" அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ஆனா கடவுள் உண்மையான பெண் புறாவையே உட்கார வச்சு அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்திட்டார்.

என் ப்ரெண்டுக்காக நான் எழுதிய சிச்சுவேசன் கவிதை.

வண்ண வண்ணமாய் 
அழகிய  நிறங்களில்
எங்கள் அபார்ட்மென்ட்டில்
வசிக்கும் புறாக்கள் 
அதன் அத்துணை வண்ணங்களையும்(shit)
கொட்டி விட்டு சென்றிருந்தது 
என் புது பைக் சீட்டில்.


ஒவ்வொரு அபார்ட்மென்ட்லயும் மாசாமாசம் மீட்டிங் போடுற மாதிரி, சில சமயம் எல்லா புறாவும் ஒரே பைக் மேல மீட்டிங் போட்டு சமோசா சாப்பிட்டுட்டு, பீட்சா டெலிவரி பண்ற மாதிரி மேட்டர டெலிவரி பண்ணிட்டு போய்டும். அதுவும் ஏதோ ஒரு நாள் மறந்து வீட்டு ஜன்னல் கதவை சாத்தாமல் விட்டு விட்டால், உள்ளே புகுந்து கிச்சன் இருக்கிற பாத்திரங்களை எல்லாம் தள்ளி புட்பால் மேட்ச் ஆடிட்டு போய்டுது.


சென்னை சிட்டியில் காக்காக்களை விட புறாக்கள் தான் அதிகமாய் இருக்கும் போல. பக்கத்துல இருக்கிற வேடந்தாங்கல்ல இருந்து வழி மாறி வந்திருக்கலாம். சரி இதெல்லாம்  எப்படி சாப்பிட்டு உயிர் வாழ்கிறது என்று பார்த்தால்,  இங்கிருக்கும் மக்கள் காக்காவுக்கு பதில் புறாவுக்கு தான் சோறு வைக்கிறார்கள். ஒருவேளை சிட்டியில் இருக்கிறவங்க தங்கள் இறந்து போன சொந்தக்காரர்கள் புறாக்களாய் தான் பிறக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ என்னவோ?


நாம இப்படி வண்டிய அசிங்கம் பண்ற புறாக்களை புறக்கணிக்கிறதை பத்தி பேசிகிட்டு இருக்கும் போது, புறாக்கள் அடுத்த லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சு. எப்படி நம்ம மேலயே ஷிட் பண்றதுன்னு புக் வாங்கி படிக்குதுங்க.


படிச்சுட்டு ஒன்னு உடனே பிராக்டிகலா செய்தும் பார்த்திடுச்சு.


இன்னொன்னு ஒரு படி மேலே போய், சாவகாசமா தலையில உட்காந்து வேலைய முடிச்சு Distinction -ல பாஸ் ஆகிடுச்சு.
இரண்டு  நாட்டுக்கு இடையில் உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர சமாதான புறாவை பறக்க விடுவாங்க. ஆனா இங்க புறாவே சமாதானத்துக்கு பிரச்சனையா இருக்கு. அதுக்கு ரெண்டு வழி தான் இருக்கு. சிட்டியில சுத்துற எல்லா புறாக்களையும் புடிச்சு, சமைச்சு சாப்பிடலாம் (அல்லது) ஜட்டி போட்டு விடலாம்.


Oct 27, 2010

ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி - ஒரு இனிய அனுபவம்ரங்கூஸ்கியுடன் ஒரு ராத்திரி அப்படிங்கற தலைப்ப பார்த்த உடனே நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரியாம அவசர அவசரமா லிங்க்க கிளிக் பண்ணி உள்ள வந்திருந்திங்கன்னா, நீங்க

  • உலக படமான எந்திரனை இன்னும் பார்க்கவில்லை. (இது மட்டும் கலாநிதி மாறனுக்கு தெரிஞ்சுது, இதுக்கு தனியா உங்க மேல கேசு போட்டு லீகலா நடவடிக்கை எடுப்பார்)
(அல்லது)
  • ஆறாவது படிக்கும் போதே செக்ஸ் புக்கை தமிழ் புக்குக்கு நடுவுல வச்சு படிச்சு சங்க தமிழ் வளர்த்த சங்க பிரபுவாக இருக்கலாம். (எந்திரன் படத்தை பார்த்தும் உலக அழகி ஐஸ்வர்யாவை கடித்த ரங்கூஸ்கியையும் சுத்தமாய் மறந்து, குஜாலான மேட்டருன்னு நினைச்சு தெரியாம உள்ள பூந்துட்டிங்க)

இது ரெண்டுல எது உண்மைன்னு பின்னூட்டத்துல மரியாதையா சொல்லிடுங்க. இல்ல நானா கண்டு பிடிச்சேன், அப்புறம் ரங்கூஸ்கிய ஏவி விட்டு, கடிச்சு கடிச்சு விளையாட சொல்லுவேன்.

சரி மேட்டருக்கு வர்றேன். (ஹைய்! உண்மையாலுமே மேட்டரு தானா?)

நைட்டு ஆனா, படுத்து கண்ணா மூடினாலும் தூங்க முடியல. முழிச்சி இருந்தாலும் தூக்கம் வரல. என்னது, யாருமேலாவது லவ்வு வந்திருச்சான்னு கேட்கிறிங்களா? அதுதான் நமக்கு காலைல எந்திருச்சா வர்ற உச்சா மாதிரி அடிக்கடி வருதே. அப்புறம் வேறென்ன?

சென்னைல இந்த ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்க முடியல. உலக அழகிய கடிச்சுட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான. அத விட்டுட்டு நீயும் ஒரு உலக அழகன்தான் அப்படின்னு என் காதுல வந்து கொய்யுன்னு கத்திகிட்டே கடிச்சு டார்ச்சர் பண்ணுதுங்க. இதுல அடிக்கடி நீங்க ரொம்ப நல்லவர்ன்னு வேற பாராட்டு. சரி, நானும் என்னை உலக அழகன்னு சொன்னதுக்காக எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?

பொருத்தது போதும்ன்னு பொங்கி எழுந்து போர்த்தினாலும், "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்துல ஜெனிலியாவுக்கு போடுறமாதிரி ஒரு பெரிய ஊசியா போட்டு மறுபடியும் ஒரே பாராட்டு தான். நானும் கலைஞர் வீட்டுக்கு வழி காமிச்சு, "அவுர போய் பாராட்டுங்க. உங்க கூட்டத்துக்குன்னு தனியா ஒரு இடம் பரிசா கொடுத்து, பட்டாவும் போட்டு கொடுப்பாரு" அப்படின்னு சொன்னாலும் காதுலையே வாங்க மாட்டேன்குதுங்க. மார்கழி மாசமே இன்னும் வரல அதுக்குள்ள தினமும் காதுல ஏகப்பட்ட பஜனை. இனிமேல் கொசுக்கடிய பத்தி இந்த மாதிரி கவிதை எல்லாம் சத்தியமா எழுத மாட்டேன்.

சரி மேல மொட்டை மாடில போய் தூங்கலாமன்னு யோசிக்கும் போது, வீட்டுல படுத்தாவே ஜன்னல் வழியா தூக்கி கீழ போட்டு கொன்னுரும். மொட்டை மாடின்னா சும்மா விடுமா? அழகா தூக்கிட்டு போய் கீழ தள்ளி முட்டைய உடைச்சு ஆபாயில் போடுற மாதிரி, மண்டைய உடைச்சு இருக்கிற எல்லா ரத்தத்தையும் குடிச்சிட்டு போயிடும்.

பகல்ல கடிக்கிற கொசுவினால் தான் சிக்கன் குனியா வருது அப்படின்னுட்டு  (அப்போ, சிக்கன் அதிகமா சாப்பிடரதனால இல்லையா?) நீ என்னை நல்லா கடிச்சுக்கோ சொல்லி காலை விரிச்சு படுக்க முடியுமா என்ன?

சென்னைல இது மழை சீசன்னு சொல்லாம, ரங்கூஸ்கி சீசன்னு சொல்லலாம். பல்லி, பாம்புன்னு வச்சு அனகோண்டா மாதிரி பெரிய பெரிய ஹாலிவுட் படமெல்லாம் எடுக்கறாங்களே, இந்த கொசுவ வச்சு யாரும் படம் எடுக்க மாட்டாங்களா? ரங்கூஸ்கி மாதிரி பெரிய சைஸ் கொசுவெல்லாம் சேர்ந்து மனுசங்கள கடிச்சு நிமிசத்துல கொல்ற மாதிரியும், கடைசியா ஹீரோ வந்து காட்ஸிலா படத்துல வர்ற மாதிரி, கொசு முட்டை இடற இடத்தை கண்டு பிடிச்சு எல்லா கொசுவையும் குட்டியோடு சேர்த்து கொல்ற மாதிரி படம் எடுத்தாலாவது நமக்கெல்லாம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கும்.

அப்படி ஒரு படம் கொசுவ வச்சு மிகவும் பிருமாண்டமா கொஞ்சம் காமெடி கலந்து எடுக்க, நம்ம சங்கர தவிர எனக்கு யாரும் தெரியல. எந்திரன்ல வந்த அந்த சின்ன கொசு சீனை பார்த்த, பக்கத்துல இருந்த ஒரு மூணு வயசு குழந்தை சிரிச்சு சிரிச்சு அதுக்கு கண்ணுல தண்ணியே வந்திடுச்சு (ஒருவேளை அது அழுதுகிட்டு இருந்ததோ?).


டிஸ்கி: 
இந்த பதிவு ரங்கூஸ்கிகளின் தொல்லை தாங்காமல் இரவு இரண்டு மணிக்கு எழுந்து எழுதப்பட்டு, அனைத்து ரங்கூஸ்கிகளுக்காகவும் டெடிகேட் செய்யப்பட்டது.
இந்த பதிவு எழுதிகிட்டு இருக்கும் போது பக்கத்துல படுத்திருந்த என் பிரெண்டு கேட்டார் "ஏசி இருந்தா கொசு வராதுல?" ஆமாய்யா, கொசுக்கு குளிர் அடிச்சு போய் போர்வை போர்த்தி படுத்து தூங்கிடும். போய்யா யோய்!

Oct 24, 2010

சுந்தர் சி in பில்லா 2 - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) - 24 Oct 2010

தற்போது பெரிய படம் ஏதும் ரிலீஸ் ஆகாததனால் சினிமா ரசிகர்களும், வலைபதிவர்களும் ரொம்பவே கஷ்ட படுகிறார்கள். தீபாவளிக்காவது ரிலீஸ் பண்ண விடுவீங்களா? அய்யா, கலாநிதி மாறன் அவர்களே! என்னோட பிரெண்டு ஒருத்தன் எந்திரன் படத்த நிறைய தடவ பார்த்து சலிச்சு போய், இப்ப "தொட்டு பார்" படத்தை அஞ்சு தடவையும், கொசுவர்த்தி சுருள் தலையர் சுந்தர்.சி படம் "வாடா" - வை ஆறு தடவையும் தியேட்டர்லயே போய் பார்த்து  விட்டான். கடைசி தடவை பார்க்கும் போது கூட்டம் இல்லாத காரணத்தினால், ஆபரேட்டர் படத்தை ஓட்ட மறுக்க, இவனே படத்தை ஒட்டி பார்த்துள்ளான்.

தற்போது எனக்கும் பதிவு போட எந்த மேட்டரும் கிடைக்கவில்லை என்றாலும் இந்த மாதிரியான படங்களை பார்த்து நமீதா விமர்சனமாக போட்டால், அது நமீதாவின் பெயருக்கு களங்கமாக அமைந்து விடும் என்கிற காரணத்தால், அது அப்படியே நிராகரிக்க பட்டது.மேலே உள்ள இந்த ஸ்டில்லை தற்செயலாக ஒருமுறை பார்த்த விஷ்ணுவர்த்தன், சுந்தர்.சி யின் Gun பிடித்திருக்கும் ஸ்டைலையும், கோட் போட்டிருக்கும் அழகையும் பார்த்து பில்லாவின் அடுத்த பார்ட்டில் இவரை போடலாம் என்று முடிவு எடுத்திருப்பதாக நம்ப தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தல அவர்களுக்கு புதிய தலவலியாக சுந்தர்.சி அவர்கள் உருவெடுத்துள்ளார்.ஜினிய நிறைய பேரு கடவுள் என்கிற ரேஞ்சுக்கும் அவரு படம் ஓடுற தியேட்டர கோவில் ஆகவும் பாவித்து பாலபிசேகம் செய்து வணங்கி வருகிறார்கள். இந்தியா முழுதும் ஊர்வலத்த முடிச்சுட்டு, சாமி இப்போ மலை ஏறிடுச்சு, இமய மலை. அதனால பக்த கோடிகள் எல்லோரும் உங்கள் பால் கலசங்களை எல்லாம் எடுத்து கொண்டு, தியேட்டரை விட்டுவிட்டு இமயமலைக்கு நடை பயணத்தை மேற்கொள்ளுங்கள். வைகோவை வேண்டுமானால் கேட்டுபாருங்கள். நடை பயணம் என்றால், அவர் துணைக்கு வந்தாலும் வருவார்.
                                              

ன்னோட ஆபிசுல புதுசா சேர்ந்து இருக்கிற ஒரு ஹிந்தி பிகரு என்னை பார்த்து அடிக்கடி லுக்கு விட்டு லேசா சிரிக்குது. நாமளும் எத்தனை நாளைக்கு அச்சா அச்சான்னு சொல்லியே சமாளிக்கறது. அதனால நானும் அந்த பிகர கணக்கு பண்ணலாம்ன்னு கணக்கு டியூசன் சாரி, ஹிந்தி டியூசன்க்கு வேளச்சேரில இருக்கிற ஒரு டீச்சர் வீட்டுக்கு போய் கத்துக்கிட்டு இருக்கேன். இப்பதான் உயிர் எழுத்து மெய் எழுத்துன்னு கொஞ்சம் கொஞ்சம் எழுத ஆரம்பிச்சிருக்கேன். ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போய் காலிங் பெல் அடிச்சிட்டு உள்ள போனேன். அப்போது மேடம் "கிளாஸ் ரூம்ல போய் வெயிட் பண்ணுங்க வந்துடறேன்னு" சொல்வதற்கு பதிலாக "பெட் ரூம்ல போய் உட்காருங்க வந்துடறேன்" ன்னு வாய் தவறி சொல்லிட்டாங்க. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!. இருந்தாலும் என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லாததால் நான் நேராக போய் கிளாஸ் ரூமில் உட்காந்துட்டேன். ஆனா இந்த கவனிக்க பட கூடாத விஷயத்தை, அந்த டீச்சரோட புருஷன் கவனிச்சுட்டார்.

Oct 14, 2010

எமியும், அக்டோபசும்

அடுத்த ஜென்மத்திலாவது
நீ என்னை காதலிப்பாய் என்று
ஆக்டோபஸ் பால்(Paul)
ஆருடம் சொன்னால்
சற்றும் நேரம் தாழ்த்தாமல் 
இப்போதே தற்கொலை செய்து கொள்வேன்
அவசர அவசரமாய்.