Sep 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - நமீதா திரை விமர்சனம்

என்னன்னே தெரியல இப்ப நான் போய் பார்க்கிற படமெல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கு. தமிழ் சினிமா இப்போ சிரிப்பு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாக நிறைய நகைச்சுவை படங்களாக வர துவங்கி இருக்கு. அந்த வரிசையில் சிவா மனசுல சக்தி படத்தோட இயக்குனரோட அடுத்த படம் "பாஸ் என்கிற பாஸ்கரன்."ஹீரோ ஆர்யா, இவரை "பாஸ்" என்று எல்லோரும் கூப்பிட்டாலும், அரசு கலை கல்லூரில படிச்சப்ப எழுதுன நிறைய பரிட்சையில் "பாஸ்" ஆகாததனால் ஏகப்பட்ட அரியர்ஸ் வச்சுக்கிட்டு ஒவ்வொரு வருசமும் கஷ்ட(பிட்டு வச்சு) பெயிலாகி பெயிலாகி எழுதறார். (பெயில் என்கிற பெயில்கரன்).
இப்படியே எந்த வேலைக்கும் போகாம வேலை வெட்டி இல்லாம ஊரை சுத்திகிட்டு இருந்தாலும், சலூன் கடை வச்சு மத்தவங்களுக்கு முடி வெட்டி வேலை செய்து கிட்டு இருக்கிற தன்னோட நண்பன் சந்தானத்தை டார்ச்சர் பண்ணி படுத்தி எடுக்கிறார். ஆர்யாவோட அண்ணனுக்கு கல்யாணம் ஆக, அவருக்கு வர்ற பொண்டாட்டியோட தங்கையான ஹீரோயின் நயன்தாரா மேல இவருக்கு காதல் பச்சக்குன்னு வந்துடுது.

உடனே போய் தன்னோட அண்ணிகிட்ட நயனதாராவ பொண்ணு கேட்க, தண்டச்சோறா இருக்கிற உனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முடியும்ன்னு சொல்லி மூஞ்சில காரி துப்பாம அசிங்க படுத்திடறாங்க. தன்னோட அண்ணன், நயன்தாராவோட அப்பா, இப்படி எல்லோருமா சேர்ந்து மேலும் அவமான படுத்த, இவரும் ஆவேசத்தோட வீட்டை விட்டு வெளிய போய் அண்ணாமலை ரஜினி மாதிரி சீக்கிரம் பணக்காரனாகும் 'முடி'வோடு சந்தானதோட சலூன்ல செட்டில் ஆகிறார். என்ன பண்ணி பெரிய ஆள் ஆகலாம் அப்படின்னு யோசிக்கும் போது, தன்னை மாதிரி பிட்டு வச்சு பெயில் ஆன பத்தாம் வகுப்பு பசங்களுக்கு எல்லாம் டுடோரியல் சென்டர் ஆரம்பிச்சு அவர்களை பாஸாக்கி தானும் எப்படி வாழ்க்கைல முன்னேறுகிறார் என்பது தான் கதை.

ஆர்யா நடிப்பில் அசத்துகிறார். காமெடியும் இயல்பாய் வருகிறது. ஆனாலும் கிளைமாக்ஸ்ல வர்ற ஜீவா காமெடில இவரையும் மிஞ்சி விடுகிறார். ஹீரோயின் நயன்தாரா எப்பவும் போல ஏதோ ஒரு பவுடர மூஞ்சில பூசிகிட்டு ஏதோ நடிக்கிறார். இவங்கள பார்த்தாலும் ஏதும் மூடு வரல. இவங்கள பத்தி எழுதவும் மூடு வரல.ஆனா படத்துல ஆர்யாவில் இருந்து ஜீவா வரைக்கும் சூப்பர் பிகருன்னு அடிக்கடி சொல்றாங்க. ஒருவேளை அவங்க பிகருன்னு சொல்றது முகத்தை பார்த்து இல்லையோ?"தலதளபதி" சந்தானத்துக்கு போஸ்டர் விளம்பரத்துல அதிகமாக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி படத்துலயும் ஹீரோயின விட அதிகமான காட்சிகளில் வருகிறார். நன்கு வயிறு வலிக்க  சிரிக்கவும் வைக்கிறார். கூட நடிக்கிற ஹீரோவையே பயங்கரமாக கிண்டல் பண்றது கவுண்டமணிக்கு அப்புறம் சந்தானம் தான். இவர் வர்ற சீன் எல்லாமே கைதட்டல் தான். படத்துல வர்ற அந்த கடன்காரனோட மகனா வர்ற குண்டு பையனும் நல்ல நடிச்சிருந்தான். கமல், பரத், விஜய் இப்படி படத்தில் நிறைய நடிகர்களை கிண்டல் பண்ணி இருக்காங்க.

இசை யுவன். "யார் அந்த பெண் தான்" பாட்டு மற்றும் பின்னணி ஓசை ஓகே. மத்தபடி பெரிய அளவுக்கு ஏதும் இல்ல. இது இயக்குனருக்கு ஒரு நல்ல படமாக அமைந்திருக்கலாம். யுவனுக்கு அல்ல.

படத்தோட ஆரம்பத்துல ஆர்யா அரிவால எடுத்துகிட்டு வில்லன தொறத்துவார். அதுக்கு கடைசில ஏன்னு காமிச்சு இருப்பாங்க. சான்சே இல்ல.
கண்டிப்பாக சந்தோசமா குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

நமீதா டச் : பாஸ், Pass ஆகிட்டான்.
3 comments:

பிரியமுடன் ரமேஷ் said...

Nalla vimarsanam. Pathidarom padaththa

வெறும்பய said...

எதிர்பாத்துகிட்டிருந்த ஒரு படம் இது...

நாளைக்கே பாத்திர வேண்டியது தான்.. நல்ல விமர்சனம்... தேங்க்ஸ் தல...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நாளக்கி பாக்கப் போறேன் :)

அப்பரம் சொல்றேன்