Jul 13, 2010

கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுத பட்ட பதிவு இது.
நாங்கள் ஐந்து பேர் ஒரு அப்பார்ட்மென்ல தங்கி இருக்கிறோம். 


போன வாரம் வெள்ளி கிழமை என் பிரெண்ட் குடிபிரகாஷ் என்னோட வண்டி வேணும்னு கேட்டு எடுத்துட்டு போயிட்டதால், என் இன்னொரு ப்ரெண்டு "மொட்டை"கிட்ட அவனோட வண்டிய கேட்டேன். 

அவனும் எடுத்துக்கோன்னு சொன்னான். பையன் கணக்கில் பெரிய ஆள். அதுக்காக அவன் maths நல்லா பண்ணுவான்னு அர்த்தம் இல்லை. எல்லாத்துக்கும் அவன் கணக்கு பார்ப்பான்.

இது வரைக்கும் அவனோட வண்டிய ஒட்டுனதில்லை.
போய் வண்டியை பார்த்தால் Egmore Exhibition -இல் வைக்கற ரேஞ்சில் தான் இருந்தது. சரின்னு வண்டிய எடுத்து ஸ்டார்ட் பண்ணினேன். கர கரன்னு ஹெலிகாப்டோர் மாதிரி பயங்கர சவுண்டு. இறக்கை மட்டும் தான் இல்ல. சத்தம் கேட்டு அப்பார்ட்மென்டே வெளிய வந்து எட்டி பார்த்தது. நல்லவேளை வண்டியில் இருந்து வந்த புகை மண்டலத்தால் என்னை யாரும் பார்க்க வில்லை.

ஓகே. பரவாயில்லைன்னு வண்டிய கெளப்பிக்கிட்டு போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது Hand brake-க்கு ஒன்னு, "நானும் இருக்கேன்னு" வெறும் பெயருக்கு மட்டும் தான் இருக்கிறதென்று. 


நானும் என்னோட புது வண்டியை ஓட்டுகிற நினைப்பில் எடுத்தவுடனே முறுக்கிட்டேன். சுத்தமா கண்ட்ரோலே இல்லை. கால் ப்ரேக் மட்டும் என்மேல் பரிதாப்பட்டு கொஞ்சமாக பிடித்தது. நானும் சீட்டை விட்டு எந்திரிச்சு கால் ப்ரேக் மேல ஏறி நின்னு கிட்டே போறேன். ஓரமாக போகிற புல்டவுசர் வண்டிகாரனெல்லாம் என்னை திரும்பி பார்த்துட்டு போனான். அவனோட வண்டியை விட அதிகம் வந்ததால் ஆச்சர்யம் அவனுக்கு.

எந்த கார் மேலேயோ, பஸ் மேலேயோ அடிச்சு ஹெலிகாப்டர்ல பறக்கற மாதிரி பறந்துடுவோமான்னு ஒரே பயம் எனக்கு. ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர் ரெட்டிக்கு அடுத்து ஹெலிகாப்டர் விபத்துல சாக போறது நான்தானோ என்று நிறைய Daymare ல்லாம் வந்து விட்டு போனது. 

எதிர்ல வர்ற பல்சர் பைக்கை பார்க்கும் போதெல்லாம் எமதர்ம ராசா எருமைல வர்ற மாதிரியே ஒரு பிரம்மை. "பயணங்களில் எச்சரிக்கை அவசியம். எமன் எந்த வாகனத்திலும் வரலாம்"  என்று போன வாரம் ராசி பலன்லயே போட்டு இருந்தது.


கடைசியாக எப்படியோ எந்த அடியும் படாமல் எங்க அபார்ட்மென்ட்ல வந்து ஹெலிகாப்ட்டரை நிறுத்திட்டு சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டேன். "இனிமேல் நம் வாழ்நாளில் இந்த வண்டியை எடுக்க கூடாது"

டேய் மொட்டை! உன் வண்டிய கூட மன்னிச்சுடலாம். ஆனா வண்டிய குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு வாக்கியம் சொன்னியேடா. அது இன்னிக்கு வீட்டுல இருந்த Sprite பாட்டில் பெப்சி பாட்டில் ரெண்டையும் மாத்தி மாத்தி குடிச்சும் இன்னும் ஜீரணம் ஆகலைடா. அந்த வார்த்தை என்னன்னா?


"வண்டிய நீ மட்டும் ஓட்டு. வேற யாருக்கும் கொடுத்துடாத."

 
அவனை கெட்ட வார்த்தையில் திட்டுறேன் என்றோ, கொடுமையாக அவனை ஓட்டுகிறேன் என்றோ என்மேல் அவன் கோபத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரம், இதை அவன் "செத்தா ஒருத்தன் மட்டும் தான் சாகனும் வேற யாரும் சாக கூடாது" என்ற ஒரு நல்லெண்ணத்தில் கூட சொல்லியிருக்கலாம்.அடுத்த நாள் சனி கிழமை "கொஞ்சம் தேனீர், நிறைய வானம்" ன்னு ஒரு கருத்தரங்கு அண்ணா யுனிவர்சிட்டி Alumni கிளப்பில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நானும் அதுக்காக ரெடி ஆகி கொண்டிருந்தேன். வெள்ளி கிழமைதான் அந்த கதைன்னா, சனி கிழமை நம்ம பொய் புலவர் குடிபிரகாஷ் வந்து அவனோட கேர்ள் பிரெண்டுடன் ஊர் சுற்ற என்னோடைய வண்டியை வாங்கி கொண்டு, அவனோட பிரெண்டு வண்டின்னு சொல்லிட்டு ஒரு பழைய பைக்கை கொடுத்தான். என்ன இதுல வித்தியாசம்னா, கை பிரேக் கொஞ்சமா இருந்துச்சு. கால் ப்ரேக் கொஞ்சம் கூட இல்ல. 

ஆனால் இந்த முறை நான் கொஞ்சம் முன்னாடியே பிரேக் இல்லன்னு தெரிஞ்சு சுதாரிசுக்கிட்டு ரொம்ப மெதுவாவே ஓட்டிட்டு போனேன். ஆனா என்ன, சைக்கிள்ல போறவன்னேல்லாம் சைடு வாங்கிட்டு போய்கிட்டு இருந்தான். நானும் ஏதோ வண்டிய ஓரம்கட்டி நிறுத்தற மாதிரியே பாவ்லா பண்ணிக்கிட்டு நாப்பது கிலோமீட்டர் போய்ட்டு வந்துட்டேன். 


"கொஞ்சம் பிரேக், நிறைய கிலோ மீட்டர்" 

இதுல ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லிவைக்காம என்ன பண்ணுனாங்கன்னா? என்னோட பிறந்த நாளுக்கு ஏதோ சர்பிரைஸா கிப்ட் கொடுக்கற மாதிரி, பைக்க பத்தி எதுவுமே சொல்லாம என்கிட்ட பைக்க கொடுத்துட்டானுன்ங்க. பாவி பசங்க.

What a Scary weak end!
 


4 comments:

தனி காட்டு ராஜா said...

:-)

Riyas said...

ம்ம்ம்ம்
//எதுவா இருந்தாலும் நேரா பேசிக்கலாம்// ஆமா ஆமா..

Vinoth S said...

அருமை நண்பரே //ஆனா வண்டிய குடுக்கறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தைய சொன்னியேடா. அது இன்னிக்கு வீட்டுல இருந்த Sprite பாட்டில் பெப்சி பாட்டில் ரெண்டையும் மாத்தி மாத்தி குடிச்சும் இன்னும் ஜீரணம் ஆகலைடா. அந்த வார்த்தை என்னன்னா?
"வண்டிய நீ மட்டும் ஓட்டு. வேற யாருக்கும் கொடுத்துடாத."// :-)

அக்கினிக்குஞ்சு said...

வண்டிய யாருக்கும் குடுகலயே?