Jul 25, 2010

தில்லாலங்கடி - நமீதா திரை விமர்சனம்.
படத்துக்கு போறதுக்கு போறதுக்கு முன்னாடியே, அரசு டாஸ்மாக்ல போய் ஒரு கட்டிங் போட்டுட்டு ஒரு கிக்கோடா போனிங்கன்னா நலம். நீங்க அடிச்ச சரக்குல ஏதும் கிக்கு ஏறலைனாலும் கவலை படாதிங்க. சில ஆங்கில படத்துல F ..K ங்குற வார்த்தைய அடிக்கடி யூஸ் பண்ற மாதிரி, படம் பூரா கிக்கு கிக்குன்னு சொல்லியே உங்களுக்கு கிக்கு வரவச்சுடுவாங்க. சில பேருக்கு ஏறுன கிக்கு இறங்க கூட வாய்புகள் உண்டு. அதற்கு ஜெயம் கம்பெனி தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆபீஸ்ல இருக்கற தெலுங்கு பிரெண்டு சொன்னான்னு தெலுங்கு கிக் படத்த டவுன்லோட் பண்ணினேன். ஆனா ஹீரோ ரவி தேஜாவ பார்த்த வுடனே டெர்ரர் ஆகி பிளேயர கூட close பண்ணாம நேரடியா UPS-இன் பவர் ஆப் பண்ணிட்டேன். ஏற்கனவே M குமரன் சன் ஆப் மகாலக்ஸ்மி படத்தோட தெலுங்கு ஒரிஜினல் படத்துல இவர் நடித்த சில காட்சிகள் பார்த்து இருந்தனால வந்த பயம் தான் காரணம். அதிகமாக தென் இந்திய படங்களில் மட்டும் தான், எவ்வளவு வயசாயிருந்தாலும் சரி ஹீரோவா இளவயசு பையனாவே நினைச்சு படத்த பாருங்க என்று மக்களை டார்ச்சர் பண்ணுவாங்க (எ.க சிவாஜி). பாவம் மக்கள்!!!.

Back to தில்லாலங்கடி.

படத்தோட ஹீரோ கிக்குகாக என்ன வேணா பண்ற கேரக்டர். அந்த கிக்குகாக அவர் நாயகியையும் மத்தவங்களையும் எப்படி வதைக்கிறார் அப்படிங்கறத பயங்கர காமெடியா சொல்லியிருக்காங்க.

படம் ஆரம்பிக்கும் போது எல்லாரும் கொஞ்சம் ஓவர் அக்டிங் பண்ணி காமெடில மொக்க போட்டாலும் வடிவேல், மன்சூர் அலிகான் வந்ததுக்கபுறம் படம் பயங்கர காமெடிய போகுது. சந்தானம் வந்தாலே சரவெடி தான்.

இத்தனை நாளா இலியானவுட இடுப்ப பத்தி ஏன் எல்லோரும் ரொம்ப பேசிக்கிட்டு இருக்காங்க அப்படின்னு யோசிச்சிருக்கேன். ஆனா இலியானா இடுப்ப பார்த்துட்டு தமனா இடுப்ப பார்க்கும் போது தான் வித்தியாசம் தெரியுது. இலியானாவுடது சூப்பர் (ஹி! ஹி!). தமனா அழகாதான் இருக்காங்க. ஆனா நிறைய படத்துல பார்த்து போரடிச்சுடுச்சு. தமனா என்னதான் எக்ஸ்ப்ரசன் கொடுத்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கு. தங்கச்சியா வர்ற பொண்ணு கொஞ்சூண்டு டிரஸ் போட்டுட்டு நடிச்சு இருந்தாலும் அதிகமாகவே நல்லா நடிச்ச மாதிரி இருந்துச்சு.


யுவனோட பாட்டு படத்துக்கு விடற இன்டர்வெல் அப்படின்னே சொல்லலாம். மியூசிக்கும் பெரிய அளவுல இல்ல. வார்த்தையும் ஒன்னும் கேட்கல. யுவன் தான் அடுத்த A R ரகுமான் அப்படின்னு சில பேர் சொல்றாங்க. ரகுமான் பாட்டு மாதிரி கேட்க கேட்க தான் புடிக்குமோ? அப்படின்னுட்டு படம் பார்த்துட்டு வீட்டுல போய் கேட்டாலும், சுத்தம். இலங்கைல எப்ப குண்டு போடுவாங்களோ மக்கள் பயந்து கிட்டே வாழ்ந்த மாதிரி, எப்ப பாட்ட போடுவாங்கன்னு மக்கள் பயந்து கொண்டே படம் பார்த்தாங்க.

டைரக்டர்? எப்பவுமே பரிட்சையில் காப்பி அடிச்சு எழுதுற பையன என்னிக்காவது அவன் காப்பி அடிச்சு எழுதாத இருக்கும் போது தான் விமர்சிக்க முடியும்.
ஆனால், டைரக்டர்க்கு ஒரு வேண்டுகோள். கொரியன் மொழில நிறைய நல்லா படம் இருக்கு. அதை கொஞ்சம் ரீமேக் பண்ணுங்களேன். உங்களால மட்டும் தான் scene by scene நல்லா காப்பி அடிக்க முடியும்.


மக்களே, உங்க லாஜிக் எல்லாம் கழட்டி எங்கியாவது தொங்க விட்டுட்டு, பாட்டுக்கு மட்டும் பக்கத்துல இருக்கிற பிகர நோட்டம் விட்டுகிட்டு, படத்த பார்த்திங்கன்னா கண்டிப்பா ஒரு ஜாலியான படத்த குடும்பத்தோட பார்க்கலாம்.

படம் பார்த்துட்டு கிளம்பும் போது என் பைக்கு கூட நிறைய கிக்கு இருந்தாதான் ஸ்டார்ட் ஆகுவேன்னு சொல்லிடுச்சு.

நானும் திங்க கிழமை ஆபீஸ்க்கு போய் வேலைய resign பண்ணலாம்னு இருக்கேன். வாழ்க்கைல ஒரு கிக் வேணும்ல.
நீங்களும் படம் பார்த்துட்டு உங்க வேலைய resign பண்ணிடுங்க.

நமீதா டச் : தில்லாலங்கடி, சரக்கு அடிச்சுட்டு கிக்கோடா போறவங்களுக்கு மட்டும்.


டிஸ்கி: நமீதா பெயரை ஹிட்ஸ்க்காக மட்டுமே உபயோக படுத்தியுள்ளேன். நமீதான்னு பேரை கேட்டாலே சும்மா கிக்கு ஏறுதுல்ல!


 


1 comment:

Balaji saravana said...

:)) ரைட்டு..
நூறு ரூபாய் மிச்சம்..
மீ த பர்ஸ்ட்?