Jul 15, 2010

ஆபாயிலுக்கு ஆதரவு கொடுங்கள்.


                         ஆபாயில் உதவி: http://oldrecipebook.com/images/eggs-sunnysideup.jpg


இப்படியே இருந்தா எப்படி? நம்மளையும் நாலு பேரு பின் தொடர ஆரம்பிச்சுட்டாங்க (ஆட்டோலையா?). ஆரம்பத்துல ஏதோ சில கவிதைய மட்டும் கிறுக்கிக்கிட்டு இருந்த நாம, இப்பதான் கொஞ்சம் காமெடியையும் ஆரம்பிச்சிடுக்கோம். ஆனா கவிதையை மட்டும் வச்சே காலத்தையும், இந்த ப்ளாகையும் ஓட்ட முடியாது. அது ரொம்ப சிரமம். பள்ளிகூடத்துல பண்ணுன காதல வச்சே எவ்வளவு நாள் சமாளிக்கறது?. அதுக்கு கொஞ்ச பேரையாவது இப்ப காதலிக்கணும். இல்ல, அவங்க நம்மள காதலிக்கணும். நாமளும் எவ்வளவு நாள் தான் காதலிக்கற மாதிரியே நடிச்சு கவிதை எழுதறது

கதை எழுதினா என்ன?
கதையா? அதை எப்படி எழுதறது? சின்ன வயசுல சரோஜா தேவி கதைகள் படிச்சத தவிர வேற எந்த அனுபவமும் இல்லயே. இதுல கதை எழுதறது ரொம்ப கஷ்டம்.

அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆகுறது? இதற்கு இந்த பிரபல பதிவர்கள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னு பார்த்தா புரியலாம். அப்பத்தான் தெரிஞ்சது ரெகுலரா ஏதாவது ஒன்னு எழுதி பதிவா போடணும். 

நம்ம ஜெட்லி அண்ணாத்த உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக போட படுகிற மாதிரியான படங்களை எல்லாம் பார்த்து ஜெட்லிய விட்டு பன்ச் விடறாரு. சில நல்ல படங்களுக்கு நடுவே அதிக மொக்கை படங்களை பார்க்கும் வலிமையை ஆண்டவன் ஒருசேர ஜெட்லியிடமே கொடுத்திருக்கிறார். ஜெட்லி அண்ணே! உங்களுக்கு மக்கள் கூட்டம்னா அலர்ஜியா? கூட்டம் இல்லாத படத்துக்கே அதிகமா போறீங்க.

ஹாலிவுட் பாலா உலக படத்தையெல்லாம் வுட்டு பிரிக்கிறாரு. பாலா அண்ணே, அதுவும் நீங்க சொல்ற 18 + படத்தையெல்லாம் ஒன்னு விடாம பார்த்துட்டு வரேங்க. ஹி! ஹி!
VISA அவர்கள் மிகவும் "உணர்ச்சி"பூர்வமா சூப்பரா கதை எழுதுவாரு. அவரோட கதைக்கு எப்பவுமே நான் ரசிகன்.

இந்த கேபிள் சங்கர் வாரா வாரம் திங்க கிழமை ஆனா கொத்து பரோட்டா போட்டுர்றாரு. நீங்க கடைசில போடுற "அந்த" ஜோக்கு நிறைய பேருக்கு அது நேயர் விருப்பம்.
பரிசல்காரன் அப்பப்ப அவியல் போடறாரு. (பிரபல பதிவர்ன்னு சொன்னதுக்கு தயவு செய்து யாரும் என்னை அடிக்க வராதிங்க அண்ணே)

அப்ப நாமளும் இது மாதிரி ஏதாவது ஒன்னு போடணும். என்ன போடலாம்?. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. (யோசிக்கிறேன்)
ஆப்.. ஆப்..ஆபாயில்...
ரைட்டு... இனிமேல் ஆபாயில் போடலாம்.
இது ஒரு நல்ல முடிவுன்னு தோணுது. ஏன்னா? ஆபாயில்ங்கறது எல்லோரும் அடிக்கடி சாப்பிடறது. நிறைய பேருக்கு புடிக்கும். ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடுவாங்க.

இதற்கு எனக்கு நம்முடைய தமிழ் குடிமகன்களின் ஆதரவு 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் முழுமையாக கிடைக்கும் என நம்புகிறேன். என்னுடைய ஆபாயில் படித்து அளவுக்கு அதிகமாக குடித்து ஆபாயில் போடுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசின் டாஸ்மாக் வருவாயும் கணிசமாக உயரும் என்ற காரணத்தால் தற்போதைய அரசின் ஆதரவும் இதன் மூலமாக எனக்கு கிடைக்க பெறுமென உறுதியாக நம்புகிறேன்.

இதற்கும் மேலாக பல அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், காமெடி நடிகர்கள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைத்துள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கீழே உள்ள படங்களில் யார் அரசியல்வாதி, யார் நடிகர், யார் காமெடி நடிகர் என்று குழம்பினால் அதற்கு ஆபாயில் கட்சி நிர்வாகம் பொறுப்பல்ல.(இப்படிதான் நமீதாவுக்கு வணக்கம் வைக்க தெரியும். கண்டுக்காதீர்கள். நமக்கு ஆதரவு மட்டும் தான் முக்கியம். இப்பதான் மக்கள் ஆதரவு கொஞ்சம் கிடைச்சிருக்கு. அதனால் கவர்ச்சி படம் போட கூடாதுங்கறதுக்காக நானே MS Paint யூஸ் பண்ணி கவர்ச்சிய மறைச்சிட்டேன். ஹி! ஹி!. அப்படி செய்யா விட்டாலும் சில பெண்ணியவாதிகள் வந்து கரிய பூசிடுவாங்க. )


ஒரு வேளை ஒரு சில காரணங்களால் என்னுடைய ஆபாயில் யாருக்கும் பிடிக்காமல் போய், மோசமான விமர்சனங்கள் உண்டாகி என் மேல் முட்டை தாக்குதல் ஏற்பட்டால், அதை கொண்டு நிஜ ஆபாயில் சாப்பிட கூடிய சாத்திய கூறுகளும் உண்டாகலாம்.

ஆகவே என்னுடைய ஆபாயிலுக்கு நாலாபுறமும் உங்களுடைய பேராதரவை தந்து ஆபாயிலை வெற்றி பெற செய்யும்மாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.                  டேய்! ஒழுங்கா படிங்க ஆபாயில்               
                      இல்ல குறைச்சிடுவேன் உனக்கு Half ஆயுள்.  
                       ஆபாயில் சாப்பிடு கண்ணு! 


அசின் : இதற்கு மேலும் யாராவது ஆதரவு கொடுக்கல, அப்புறம் மிராண்டா குடிச்சிட்டு வந்து மெர்சலாக்கிடுவேன். ஜாக்கிரதை!

14 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//எனக்கு நம்முடைய தமிழ் குடிமகன்களின் ஆதரவு 234 தொகுதிகளிலும் முழுமையாக கிடைக்கும் என நம்புகிறேன்//

கோவில்ப‌ட்டி ச‌ட்ட‌ம‌ன்ற தொகுதி ஆத‌ர‌வு உங்க‌ளுக்குத்தான்

Riyas said...

இப்படியும் ஒரு பதிவா...?

இப்படி மொக்க மொக்கயா
போட்டா சீக்கிரம் பிரபல பதிவராகிடலாம்..

Riyas said...

ஆப்பாயில் எப்படி போடுறதுன்னு சொல்லித்தருவிங்கன்னு பார்த்தா ஆதரவு கேட்கிறிங்க..ஹி ஹி.
"அப்பாயில் போச்சே"

Riyas said...

ஆப்பாயில் எப்படி போடுறதுன்னு சொல்லித்தருவிங்கன்னு பார்த்தா ஆதரவு கேட்கிறிங்க..ஹி ஹி.
"அப்பாயில் போச்சே"

கல்லாதவன் said...

எவளோ பெரிய மொக்கை!!
//டேய்! ஒழுங்கா படிங்க ஆபாயில்
இல்ல பண்ணிடுவேன் உனக்கு Half ஆயில்//

Half ஆயுள் or Half ஆயில்

VISA said...

அண்ணே வணக்கம். ஆப்பாயில் தலைப்பு நல்லா இருக்கு.

வழிப்போக்கன் said...

@ க‌ரிச‌ல்கார‌ன் - உங்க தொகுதிக்கு கண்டிப்பா நிறைய நல்லது பண்ணுவேன்.

@ Riyas - கவலைபடாதீங்க. உங்களுக்காக ஆபாயில் இனிமேல் அதிகமாக போடப்படும்.

@ கல்லாதவன் - நன்றி! திருத்திவிட்டேன்.

@ VISA - நன்றி அண்ணே! உங்கள் ஆதரவிற்கு

ஹாலிவுட் பாலா said...

////எனக்கு நம்முடைய தமிழ் குடிமகன்களின் ஆதரவு 234 தொகுதிகளிலும் முழுமையாக கிடைக்கும் என நம்புகிறேன்//

234 இல்லண்ணே..!

235!!! டூவால் கவுண்டி தொகுதியின் ஆதரவும் உங்களுக்கே!!!!!!

(எப்பங்க உலகபடம் எழுதினேன்? முச்சிங்கத்தையா சொல்லுறீங்க??)

LK said...

aappu ready appu unakku

ஜாக்கி சேகர் said...

யப்பா ஒட்டு போட்டுவிட்டேன்... ஆனால் மரியாதையா போட்டேனான்னு தெரியலை..

வழிப்போக்கன் said...

@ ஹாலிவுட் பாலா - என்னங்க அண்ணே! தொகுதி பேரே புதுசா இருக்கு. இந்த தொகுதி இங்கிலாந்துல (கவுண்டி) கீது இருக்கா? நான் உலக படம்ன்னு குறிப்பிடறது ஜேம்ஸ் பாண்டேல்லாம் நடிப்பாரே அந்த மாதிரி படம். ஆனா ஒரு சிங்கத்தை பத்தியாவது நீங்க விமர்சனம் பண்ணாதது மிகவும் ஆதங்கமாக உள்ளது. மீரா ஜாஸ்மினுக்காவது பெண் சிங்கத பத்தி ஒரு நாலு வரி எழுதி இருக்கலாம்.


@ LK - கம்முனு இருங்க அண்ணே! நீங்களே காசு கொடுத்து ஆட்டோ அனுப்பீருவிங்க போல.


@ ஜாக்கி சேகர் - நன்றி அண்ணே! நம்மளுக்கு ஓட்டு தான் முக்கியம். அது எப்படி இருந்தா என்ன. உங்களுக்கு புடிச்சா கள்ள ஓட்டு கூட போடலாம். ஹி! ஹி!

Cable Sankar said...

ஆப்பாயில் நல்லாருக்கு

ராசராசசோழன் said...

அப்படி இப்படின்னு வழிய கண்டுபிடுச்சுடீங்க...வாழ்த்துக்கள்...

Altruist said...

உங்க ப்ளாக் லேயௌட் & கலர் ரொம்ப நல்லா இருக்கு...